இடுகைகள்

கடிதங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புங்கமர நிழலாக பூக்கும் காதல்- கடிதங்கள் - கதிரவன்

படம்
  வெயிலுக்கு புங்க மர நிழல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலம் . மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது . வேலை செய்தே ஆகவேண்டும் . நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும் . ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது . அதுதான் இருப்பதிலேயே கடினமானது . இனிய உதயம் பத்திரிகை படித்தேன் . இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார் . அதாவது மொழிபெயர்த்து தமிழில் எழுதியிருக்கிறார் . பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை . சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை . அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே . பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள் . இதனால் சுகுமாரனின் மீது அம்முக்குட்டிக்கு காதல் பிறக்கிறது . அவரைப் பார்க்கும்போது கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது . அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள் . அதற்குப் பிறகு , அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை . நன்றி ! அன்பரசு 30.11.2021 மயிலாப்பூர் -----------------

சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  நேருவை மறக்கும் ஊடகங்கள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும் . இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது . மழை காரணமாக ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டுப்போகும் . ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது . நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன் . வெ . சாமிநாதசர்மா எழுதிய நூல் . நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார் . இந்த ஆண்டு நேருவின் 132 ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது . இந்துத்துவ அரசு தாக்குதல் , மிரட்டல் காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர் . சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர் . இந்து ஆங்கிலம் நாளிதழ் , தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது . அதைப் படித்தேன் . நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை . நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை . இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்கள் அ

பழைய நண்பரோடு நடந்த உரையாடல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பழைய நண்பரோடு பேச்சு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள் . நான் இன்றுதான் நெல்சனின் டாக்டர் தமிழ்ப்படம் பார்த்தேன் . சீரியசான பிரச்னை தான் ; அதை அணுகுகிற முறை காமெடியாக இருந்தது . நிறைய இடங்களில் வசனமாக இல்லாமல் காட்சி ரீதியாகவே காமெடி செய்திருக்கிறார்கள் . நடித்த எஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே புதிய அனுபவத்தை படம் தருகிறது . இதை எழுதும்போது நீங்கள் ஜெய்பீம் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . சூர்யா தனது தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் சமூக சேவைகளில் திரைப்படங்களையும் புதிதாக இணைத்திருக்கிறார் . துணிச்சலான முயற்சி . தியேட்டரை விட ஓடிடி இதற்கு சரியான தளம் . இப்போதைக்கு தமிழில் அமேசான் நிறுவனத்திற்கு சூர்யா மட்டுமே அம்பாசிடராக இருக்கிறார் . அந்திமழையில் பெண்கள் மனதைப் புரிந்துகொள்வது பற்றி பலரும் தங்கள் கருத்தை எழுதியிருந்தனர் . சிறப்பிதழ் வாசிக்க நன்றாகவே இருந்தது . தீபாவளி அன்றும் இங்கு மழை பெய்தது . துவைத்துப் போட்ட துணிகள் முழுமையாக காயவில்லை . நாளை அலுவலக வேலை உள்ளது . உடுத்திச்செல்ல த

வெப்பத்தால் உருகும் உடல், மனம்!

படம்
  அரசு சொத்தை விற்பது சுலபம் ! அன்புள்ள கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் பள்ளி , கல்லூரிகள் தொடங்கிவிட்டதால் வேலை பரபரப்பாக நகர்கிறது . புத்தக பதிப்பு என்பது அனைவருக்கும் ஏற்ற வேலை அல்ல . எனவே வேலைநேரம் மெதுவாக நகர்வது போலவே தெரிகிறது . அரசின் பொதுச்சொத்துகளை நிறுவனங்களை அடகு வைத்து பணம் பெறுவதைப் பற்றிய கட்டுரையை இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன் . எனக்கு இது சரியான கொள்கையாக படவில்லை . குறிப்பிட்ட நாட்களுக்கு சொத்துகளை தனியாருக்கு கொடுத்து அடிப்படை கட்டமைப்புக்கான நிதியைப் பெறுவது என்பது புத்திசாலித்தனமாக முடிவல்ல . இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது . குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது . நாளிதழ் பணியில் இருந்து உதவி ஆசிரியர் , எழுத்தாளர் பாலபாரதி விலகிக்கொண்டுவிட்டார் . வேறு ஏதோ அரசு இதழுக்கு ஆசிரியராகி வெளியேறுகிறார் . இவர் பொறுப்பேற்று பார்த்து வந்த பக்கங்கள் எனக்கு வரும் என நினைக்கிறேன் . நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய சமூக பொறுப்புணர்வு பற்றிய நூல் ஒன்

பின்தங்கும் ஆங்கில நூல்கள் வாசிப்பு!

படம்
  திறமைக்கான வாய்ப்பு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? மருத்துவர் முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம் . அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும் . அதில் சாதித்து வெல்ல முடியும் . நான் வேலை செய்யும் இதழின் பொறுப்பாசிரியர் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர் . இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம் . எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது . ஆனால் , நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது . இதுவரையிலும் பிறரிடம் நான் செய்த வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது . இப்போது முழங்கால் வலி மட்டுப்பட்டுள்ளது . இதனால் நடக்க முடிகிறது . உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன் . இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன் . அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதால் ஏற்படும் ஆற்றல் இழப்பை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம் எனத் தோன்றுகிறது . அன்பரசு 13.8.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------ டிஜிட்டல் வடிவில் மாறும் வாசிப்பு