இடுகைகள்

கட்டுப்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மியான்மரில் தொடங்கியுள்ளது இளைஞர்களின் தெரு நடனம்!

படம்
இந்தியில் இப்போதுதான் ஸ்ட்ரீட் டான்ஸர் படம் ட்ரெய்லர் பார்த்து முடித்திருப்பீர்கள். இங்கு தேசி ராப், கானா என பாடல், இசையில் உயரே பறக்கிறோம். ஆனால் ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் நிலைமை இப்போதுதான் பரவாயில்லை. இங்கு நடனம், தெருநடனம், பாடல்களை அனைவரும் கேட்கும் நிலை இப்போது வந்திருக்கிறது. இப்போதுதான் சிம்கார்டுகளின் விலையே குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி, தெரு நடனங்கள் அங்கு பிரபலமாகத் தொடங்கின. இன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஹிப் ஹாப் நடனங்களை அங்கு ஆடி வருகின்றனர்.இதில் கிடைக்கும் புகழ் அங்குள்ள இளைஞர்களுக்கு பணத்தை விட முக்கியமாகப் படுகிறது. 2014இல் இருந்துதான் ஹிப் ஹாப் இசை வடிவம், நடனம் அங்கு பகிரப்பட்டு வருகிறது. இதன்காரணமாக யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும் இசை வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன. மியான்மரின் யாங்கூனிலுள்ள நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாலையில் அடிக்கடி தெரு நடனங்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். "தாய்லாந்துக்கு வேலைக்கு போன இடத்தில்தான் இந்த டான்சைப் பார்த்தேன். கிடைச்

மக்கள்தொகை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறதா?

படம்
மக்கள்தொகை கட்டுப்பாடு! பிரதமர் மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய தன் கவலையை சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இதைப்பற்றி நாளிதழில் படிக்கும்போது, அருகிலிருந்தவர்கள் நாடோடி மனிதர்கள் எப்படி இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என விவாதித்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களது பேச்சில் இருந்தது பேராசையா, பொறாமையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் பேட்டி பச்சாவோ திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டு ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி என்பது 2001-2011 வரையில் 1.64 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2011 சென்சஸ் படி குறிப்பிடப்பட்ட அறிக்கை. உலகவங்கியின் அறிக்கைப்படி 2001 முதல் 2018 வரை 1.04 என மக்கள் தொகை குறைந்தே வந்திருக்கிறது. பொருளாதார அறிக்கை 2018-19 படி, பனிரெண்டு மாநிலங்களில் மக்கள்தொகை சதவீதம் 1 எனவே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உ.பி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் குறைந்து காணப்படுகிறது. தகவல்கள் வட இந்தியாவில்தான் மக்கள்தொகை சதவீதம் அதிகம் என காட்டுகிறது. இந்