இடுகைகள்

சீரியல் கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திகட்ட திகட்ட கொலை - இரு சகோதரர்களின் அட்டூழியம்!

படம்
அசுரகுலம் கென்னத் பியான்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மலையில் திடீரென 12 முதல் 28 வயதுள்ள பெண்களின் பிணங்கள் கண்டெடுக்கப்படத் தொடங்கின. இருவர் இக்கொலைகளுக்கு காரணம் என போலீஸ் கண்டுபிடித்தது. அதில் ஒருவர்தான் கென்னத்.  மேற்சொன்ன மலையருகே நிறைய பெண்களின் பிணங்களை காவல்துறை கர்மசிரத்தையாக எடுத்து மார்ச்சுவரியில் அடுக்கியது. பின்னர் கிடைத்த விஷயங்களை வைத்து ஆராய்ந்தபோது, பெண்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு குறிப்பாக வல்லுறவுக்கு பின்னரே கொல்லப்பட்டிருந்தனர்.  அங்கு செய்த கொலைகளைக் காட்டிக் கொடுத்து போலீஸ் விசாரணை செய்ய விசில் ஊதியவன் ஓர் சிறுவன்தான். அவன் அந்த இடத்திற்கு புதையல் கண்டுபிடிப்போம் என்ற விளையாட்டிற்காக வந்தான். அங்கு வந்தபின்தான், அவனது பதினான்கு வயதிற்கு ஒத்த இரு சிறுமிகள் நிர்வாணமாக கட்டிவைக்கப்பட்டிருப்பதை பார்த்தான். அருகில் போய் பார்த்தபோது, இருவரின் உடலின் சதைகளும் கெட்டு புழுக்கள் வெளிவந்துகொண்டிருப்பதை பார்த்து திகைத்துப் போனான். பின்னர் இக்காரியத்தை செய்த இருவரையும் போலீசில் காட்டிக்கொடுத்தான்.  கென்னத், அவரது சகோ

சாத்தான் சொல்லித்தான் சுட்டேன்! - டேவிட் பெர்கோவிட்ஸ்

படம்
அசுரகுலம் டேவிட் பெர்கோவிட்ஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள மக்களை கொலை பீதியில் ஆழ்த்தியவர் டேவிட். சன் ஆஃப் சாம் கொலைகாரர், .44 காலிபர் கொலைகாரர் என்று அழைக்கப்பட்ட சீரியல் கொலைகார ர். நியூயார்க்கில் ப்ரூக்ளின் நகரில் 1953ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பிறந்தார். இவரது பெற்றோருக்கு இவர் பிறந்தபோது மணமாகவில்லை. அது அவர்கள் மனமுறிவால் பிரிந்துபோக உதவியது. குழந்தையாக இருந்த டேவிட், தம்பதி ஒருவருக்கு த த்து கொடுக்கப்பட்டார். சிறுவயதில் இருந்தே டேவிட்டுக்கு வன்முறையான எண்ணங்கள் இருந்தன. பெரியளவு யாருடனும் கலந்துபேசாத ஆள். திருட்டில் வல்லவர். ஏதாவது ஓரு இடத்தில் நெருப்பு எரிந்தால் அங்கேயே அதை ரசித்துக் கொண்டு நின்றுவிடுவார். இதனை பைரோமேனியா என்று கூறுகிறார்கள். நெருப்பை ரசிப்பது, ஓர் இடத்தை தீக்கிரையாக்கி மகிழ்வதை உளவியல் மருத்துவர்கள் முக்கியமான சீரியல் கொலைகார ர்களுக்கான அறிகுறியாக சொல்கிறார்கள். அத்தனையும் அப்படியே டேவிட்டுக்கு பொருந்திப்போனது.  பதினான்கு வயதிலேயே பள்ளியில் ஏராளமான ஒழுக்கம், நடத்தை தொடர்பான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டார் டேவிட். அந்நேரத்தில் அவர

எனக்கென தனி கொலை உலகம் - டீன் கோரல் கோரதாண்டவம்!

படம்
ராணுவத்தில் டீன் கோரல் அசுரகுலம் டீன் கோரல் இளைஞர்களை செக்சுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்த டீன் கோரல், மொத்தம் 27 பேரை வைகுண்டம் அனுப்பி வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார். பிள்ளைகள் காணாமல் போனால் போலீஸ் என்ன செய்கிறது என்று கேள்வி வருகிறதா? அங்கிருந்த போலீஸ் எண்ணிக்கை மிக குறைவு. இருபது லட்சம் மக்களுக்கு 2,200 போலீசார்தான். எனவே,  காணவில்லையா கண்பிடிப்போம் என எதிர்கால வார்த்தைகளைப் போட்டு பதில் சொல்லி பெற்றோர்களை அனுப்பிவிட்டு ரெகுலர் வேலைகளைப் பார்த்தனர். அவர்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், முதலிலேயே ஹென்லியை பிடித்திருக்கலாம். நிறைய பேர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலியாகி இருக்கவும் மாட்டார்கள். இப்போது நாம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? கோரலின் கதையைப் பார்ப்போம். டெக்சாசின் மேற்குப்பகுதியிலுள்ள ஹூஸ்டனில் வாழ்ந்த டீன் கோரல் நேர்த்தியான ஆள். தனது தாய் நடத்தி வந்த மிட்டாய்கடையில் மிட்டாய்களை தயாரித்து பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பான். இதனால் மிட்டாய்காரன் என அப்பகுதியில் கோரலுக்குப் பெயர். 1973 ஆம் ஆண்ட

சீரியல் கொலைகாரர்களுக்கான வரையறை!

படம்
unspalsh.com அசுரகுலம் ரத்த தடங்களைத் தேடி சீரியல் கொலைகார ர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன தொடர்பு என முதலில் நாம் தெளிவாக வேண்டும். குடும்பத்திலுள்ள உள்ளவர், தன்னுடைய ரத்த சொந்தத்தைக் கொல்கிறார். என்ன காரணம், சொத்து என போலீஸ் முடிவு செய்து உள்வட்ட விசாரணையில் கேசை மூடிவிடும். ஆனால் சைக்கோ கொலைகாரர்கள் விஷயத்தில் யோசிப்பதே வேறுவிதமாக இருக்கவேண்டும். அமெரிக்க அரசின் எஃப்பிஐ, சீரியல் கொலைகார ர்களுக்கு மூன்று கொலைகள் செய்யவேண்டும் என்ற வரையறையை வைத்திருக்கிறது. இன்று அவை மாறிவிட்டன என்றாலும், குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று கொலைகள்  என்பது சீரியல் கொலைக்காரர் என அடையாளப்படுத்துவதற்கான முதல் பாய்ன்ட். பின்னர் கொலை எப்படி நடந்தது, பாலியல் வல்லுறவு, சித்திரவதை ஆகியவை இதில் சேர்க்கப்பட்டன. அமெரிக்காவில் இப்போது இனவெறி தூண்டுதலாக துப்பாக்கியை எடுத்து பள்ளிகளிலோ, தியேட்டர்களிலோ சென்று சுடும் பழக்கம் இருக்கிறது. அதனை திரள் கொலைகள் என வகைப்படுத்தலாம். இதில் சீரியல் கொலை என்ற பதம் உதவாது. ஒருவருக்கு மனநலம் பாதித்து அதன் விளைவாக நிறையப் பேரை கொல்கிறார். தனக்கு சரியான சமயத்தில் உதவாத