இடுகைகள்

தண்டனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றங்களை ஆவணப்படுத்துபவருக்கும் போலீசாருக்குமான வேறுபாடு!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துதல் காவல்துறை குழு, சிறந்த குழுவை கொண்டிருக்கவேண்டியது அவசியம். அதாவது, விருப்பு வெறுப்பு ஈகோ இல்லாமல் கொலை நடந்த இடத்தில் உள்ள விஷயங்களை காரண காரியத்தோடு ஆராயும் தன்மை  தேவை. அப்போதுதான் அவர்கள் குற்றங்களை ஆவணப்படுத்துவர் சொல்லும் தகவல்களை சரியாக உள்வாங்கி வேலை செய்யவேண்டும்.  குற்றங்களை ஆவணப்படுத்துபவர் பல்வேறு தகவல்களை சேகரிப்பார். அவற்றில் காவல்துறைக்கு எது பயன்படுமோ அதை மட்டுமே அவர்களுக்கு கோப்பாக எழுதி கொடுப்பார். அதை வைத்து உடனே குற்றவாளியை  பிடித்து வந்துவிட முடியாது. காவல்குழு துடிப்பான ஆட்களை கொண்டிருந்தால் குற்றவாளியை செவுளிலேயே போட்டு இழுத்து வந்துவிட முடியும். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், கொலை, கொலைக்கான காரண காரியங்கள் ஆகியவற்றை வைத்து விசாரணைக்கு உதவும்படியான விஷயங்களை தொகுத்து வைத்திருப்பவர் என்று கூறலாம்.அவர் சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டே உடனே குற்றவாளியின் வீடு தேடி போலீஸ் பேட்ரோல் காரை அனுப்பி வைக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  குற்ற ஆவணப்படுத்தல் வல்லுநருக்கும் காவல்துறையினருக்குமான வேறுபாடு இன்ஸ்பெக்டர், குற்றங்களை ஆவணப்

கொலையாளியின் இடத்தை கண்டுபிடிக்கும் நுட்பம்!

படம்
  ஒரு கொலையை சீரியல் கொலைகாரர் செய்துள்ளார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்..... மூளையைக் கொஞ்சம் யூஸ் பண்ணுங்க என ஹெக்கிமோக்ளு டிவி தொடரில் டாக்டர் அட்டீஸ் அடிக்கடி சொல்லுவார். அதே பஞ்ச்தான்.கொலை செய்யப்பட்டவர், கொலையான விதம், அதில் கிடைக்கும் தகவல்கள் என ஆராய்ந்து பார்த்துத்தான் முடிவுக்கு வரவேண்டும்.  இதனை சரியாக உணராமல் ஒருவர் முடிவெடுத்தால், கொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். போலீசாரும் வலையை வீசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். குற்றவாளியை பிடிப்பது கடினம்.  கொலைசெய்யப்பட்டவர் கூடுதல் போனஸாக வல்லுறவு செய்யப்பட்டிருந்தால் அதனை சீரியல் கொலைகார ர் செய்துள்ளார் என தீர்மானிக்கலாம். அல்லது கொல்லப்பட்டவரின் உடலில் ஏதாவது குறிப்பிட்ட அடையாளத்தை விட்டுச்செல்லலாம். குறிப்பிட்ட காவல்நிலைய  எல்லை தாண்டிக் கூட இதுபோல கொலை சம்பவங்கள் நடந்திருக்கலாம். எனவே, வேறு காவல் நிலையங்களில் நடந்துள்ள கொலை சம்பவங்களின் வரலாற்றையும் ஆராய வேண்டும். இதெல்லாம் சந்தேகத்தில்தான் செய்யவேண்டும். அடுத்த கொலை நடக்கும் வரை காத்திருந்தால் எளிதாக குற்றவாளியை பிடித்து விடலாம்.  கொலையாளியின் வசிப்ப

குற்றவாளியைப் பற்றிய தகவல்களை சேகரிப்பது எப்படி?

படம்
  நீதி கிடைக்குமா? தனிப்பட்டவருக்கு, சமூகத்திற்கு என நீதி கிடைக்க கொலை வழக்குகளில் தாமதமாகும். குறிப்பிட்ட வழக்குக்கு என சில மாதங்களை ஒதுக்கி வேலை செய்வார்கள். மற்றபடி ஏராளமான வழக்குகள், குற்றங்கள் நகரத்தில் நடக்கும்போது குறிப்பிட்ட வழக்கில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது கடினம். பா.ரா சொல்வது போல பல்வேறு வழக்குகளைக் கூட இன்ஸ்பெக்டர் கையாள முடியும். அந்த நேரத்தில் அந்த வழக்கு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினம். சாட்சிகள் பிறழ்வு , சாட்சிகளே இல்லாமல் இருப்பது, ஆதாரங்களில் அழிவது, பல்வேறு வழக்குகளை இணைத்து பார்க்காமல் வழக்குகளை பதிவது என நிறைய பிரச்னைகள் உள்ளன. குற்றவாளியைப் பற்றிய தடயங்கள் 1940-1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நியூயார்க் நகரத்தில் வெடிகுண்டு பீதி நிலவியது. அங்கு தி மேட் பாமர் என்ற மர்ம நபர், மரப்பெட்டியில் குண்டுகளை நிரப்பி கூடவே குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தார். காவல்துறை வேகமாக செயல்பட்டு குண்டுகளை வெடிப்பதற்கு முன்பே கையகப்படுத்தியது. குறிப்பில் கான் எடிசன் க்ரூக்ஸ் இது உனக்காகவே என்று எழுதியிருந்தது. இதில் ஒரு

கொலையாளியை பிடிக்க உதவும் டிஎன்ஏ!

படம்
  சீரியல் கொலைகாரர்களை  பிடிக்க முடியாதா? பிடிக்க முடியாது என்று இல்லை. ஒருவர் செய்தாரா என்று உறுதி செய்தால்தானே அவரைப் பிடிக்க முடியும். இதனால் மதிப்புக்குரிய காவல்துறையினர் சீரியல் கொலைகார ர்களை உடனே வலைவீசி பிடிக்க முடிவதில்லை.  ஒருவர் கொலை செய்திருக்கிறார் என்றால் குறைந்தபட்சம் அவரை சந்தேகப்படக்கூட சில காரணங்கள் ஏதாவது தேவை. எதுவுமே இல்லாமல் ஒருவரை எப்படி சந்தேகப்பட்டு கைது செய்யமுடியும். இதில் சீரியல் கொலைகார ர்கள் சற்று புத்திசாலிகள்தான். முந்தைய பகுதியில் போலீஸ்காரர் வேலைக்கு போகும் வழியில் பெண்களை பிடித்து கட்டி வைத்துவிட்டு மாலையில் வந்து வல்லுறவு செய்வதை கூறியிருந்தோம் அல்லவா? இதனை அலிபி என்பார்கள். நான் இந்த கடத்தல், கொலை நடந்த நேரம் இங்கு இருந்தேன் என ஆதாரத்தை அவர்கள் பதிவு செய்துவிட்டால் அவர்களை நாம் சந்தேகப்படமுடியாது.  இப்படிப்பட்டவர்களை சந்தேகப்பட்டாலும் கூட அவர்கள், விசாரணையில் நல்லவர்களாகவே நடிப்பார்கள். உடல்களை மறைத்து வைப்பவர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றமுடியாது. நெடுங்காலம் உடல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதில் உள்ள தடயங்கள் அழிந

கொலை செய்யும்போது தங்களின் அடையாளங்களை கொலைகாரர்கள் விட்டுசெல்வது உண்மையா?

படம்
        ஒரே மாதிரியான முறையில் கொலை சீரியல் கொலைகாரர்கள், ஒரே மாதிரியான முறையில் கொலைகளை செய்கிறார்கள் என திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் காட்டுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒரே மாதிரியான வேலையை செய்துகொண்டிருந்தால் யாருக்குமே போரடிக்கும்தானே? அது சீரியல் கொலைகாரர்களுக்கும்  பொருந்தும். முதலில் செய்யும் கொலைகளை ஒரு மாதிரி செய்து முடிப்பார்கள். பிறகு, அதனை அடுத்தடுத்த தாக்குதல்களில் நிறைவு செய்வார்கள்.  கொலையை எப்படி எத்தனை ஆயுதங்களை வைத்து செய்வது, சித்திரவதையை எப்படி நீட்டிப்பது என யோசித்து அதனை கற்பனை உதவியுடன் பிரைம் ஃபோகஸ் சிஜி போல மேம்படுத்துவார்கள். பிறகுதான் கொலைக்கான திட்டமிடல் தயாராகும். இப்படி செய்யும்போதுதான் கொலையை அனுபவித்து செய்ய முடியும் என சீரியல் கொலைகாரர்கள் நம்புகிறார்கள்.  இதற்கு உதாரணமாக சீரியல் கொலைகார ர் ஒருவரைப் பார்ப்போம்.  கேரி டெய்லர் என்ற சீரியல் கொலைகாரர், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களை மண்டையில் அடித்து மயங்க வைத்து தூக்கிச் சென்று கொல்பவர். இந்த முறை சலித்துப் போக அடுத்து துப்பாக்கியை கையில் எடுத்தார். பெண்களின் அறைப்பக்கம் சென்று படுக்கை அறையை குறிபார்த

தோல்வியால் நிலைகுலையும் சீரியல் கொலைகாரர்கள்!

படம்
  தோல்வி கொலைகளை தடுக்குமா? சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை படத்தில் வருவது போலவே டன் கணக்கில் ஈகோ கொண்டவர்கள். இதனால் தோல்வி என்று வந்தால் கவலையில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிடுவார்கள். எப்போதும் செய்யும் விஷயத்தில் தோற்கவே கூடாது என நினைத்து அனைத்து விஷயங்களையும் செய்வார்கள். ஆனால் எப்படி அனைத்தும் வெற்றியடையும்? பெண்கள், பணம், வேலை என அனைத்தும் சுபமாக அவர்களிடம் இருந்தால்தான் விஷயங்களை கொஞ்சமேனும் திட்டமிட்டு செய்வார்கள். இல்லையெனில் எல்லாமே கஷ்டம்தான்.  நான் அவர்களை காயப்படுத்த நினைக்கவில்லை. கொல்லவே நினைத்தேன் என்று சீரியல் கொலைகாரர் டேவிட் பெர்கோவிட்ஸ் சொன்னதை திரும்ப திரும்ப படியுங்கள். அதில் அவரின் தொனி என்னவாக இருக்கிறது? அதேதான். இப்படித்தான் அவர்களின் மனநிலை இருக்கும். பிறரைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதுதான் இவர்களின் கொலைகளுக்கும், தாக்குதலுக்கும், வல்லுறவுக்கும் பின்னாலுள்ள ஒரே எண்ணம்.  ஒரு கி.மீக்குள் ஒரு கொலை இப்படி வீடு உள்ள இடத்திலிருந்து ஒரு கி.மீ. குள் கொலைகளை செய்வது வசதி. அதிக பேரின் கண்களில் படவேண்டியதில்லை. பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியே வீடு வந்து

பெற்றோரைக் கொன்ற கொலைகாரரை பின்தொடரும் தடயவியல் வல்லுநர்! டாக்டர் ஷின் சீனத் தொடர்

படம்
                டாக்டர் ஷின் சீன தொடர் தடயவியல் வல்லுநர்களை கதாநாயகர்களாக்கும் படைப்பு . இதற்காகவே தடயவியல் வல்லுநரை விட புத்தியில் குறைந்த கேப்டனாக பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . தடயவியல் தொடர்பான இரண்டாவது சீனதொடரை இங்கு எழுதுகிறோம் . இரண்டிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன . குடும்பம் சார்ந்த மர்மமான பிரச்னைகள் தடயவியல் வல்லுநருக்கு இருக்கிறது . அதாவது தடயவியல் பிரிவின் தலைவருக்கு… அந்த பிரச்னைகளோடு பிற வழக்குகளையும் இணைத்து அவர் தடயங்களை சேகரிக்கிறார் . குற்றவாளிகளை பிடிக்க கேப்டனுக்கு உதவுகிறார் . இதோடு தலைவரின் கீழ் உதவியாளராக இருக்கும் பெண்ணை காலம் கடந்தேனும் நம்பிக்கை இழக்காமல் காதலிக்கிறார் . இவை மாறாது நடக்கின்றன . டாக்டர் ஷின் தொடரில் புதுமை என்னவென்றால் , வன்முறையைக் குறைத்து காதலையும் இருக்கிறதா இல்லையா என பார்வையாளர்களை தேட வைத்திருக்கிறார்கள் . ஷின்னை நாயகனாக்குவது சரிதான் . ஆனால் அதற்கான போலீஸ் குழுவை வழிநடத்தும் கேப்டனை காஸனோவா அளவுக்கு காட்டி , புத்தியில்லாதவராக மாற்றிருக்க வேண்டுமா ? கதையில் சுவாரசியமான இடம் எதுவ

சீரியல் கொலைகாரர்களுக்கான கலாசாரம், அறிகுறிகள், குணங்கள் !

படம்
                      சைக்கோ கொலைகாரர்களின் கலாசாரம் சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய அறிமுகத்தை நான் முன்னமே உங்களுக்கு அசுரகுலம் நூலில் தந்துவிட்டேன் . இந்த இரண்டாம் பாகத்தில் குற்றவாளிகளின் உருவாக்கம் , காலத்தின் பங்கு , அதைச்சார்ந்து இயங்கும் மனிதர்கள் , ஊடகங்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி பேசலாம் . ஹிட்லர் , முசோலினி ஆகியோர் கொடுங்கோலர்கள் , அவர்கள் குறிப்பிட்ட மக்களின் மீது வெறுப்பைத் தூண்டினார்கள் , மக்களை அழித்தொழித்தார்கள் என்று ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன . அவை உண்மைதான் . அதேசமயம் அதற்கு தூண்டுதலாக இருந்த காலம் , நாட்டில் நிலவிய வறுமை , பொதுநலனை குலைத்த சுயநலம் , யார் மீது குற்றம்சாட்டுவது என பரிதவித்த மக்களின் மனநிலை ஆகியவையும் சர்வாதிகாரிகள் உருவாகுவதற்கு காரணம் . வரலாற்றில் கொடூரமான ஆட்சியாளர்களை மக்களேதான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள் என்பது நகைமுரணாக தோன்றலாம் . ஆனால் ஜனநாயகம் இப்படித்தான் இயங்குகிறது . சீரியல் கொலைகாரர்கள் என்பது எப்போதும் ஊடகங்களுக்கு தனி கலாசாரம் போல , சுவாரசியமான விஷயமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது

குற்றம் செய்யும் சாகச உணர்வை அழுத்தி வைக்க முடியாது!

படம்
                  குற்றவாளிகள் ஒரே விதமான குற்றங்களை திரும்ப செய்கிறார்கள் ? இதனை குடிநோய் போல குணப்படுத்த முடியுமா ? தொடர்ச்சியாக குற்றங்களைச் செய்பவர்கள் , குறிப்பிட்ட விதிகளுக்குள் அடங்குவதில்லை . இவர்களுக்கு பணம் , அதிகாரம் கட்டுப்பாடு ஆகியவை தேவைப்படுகிறது . எனவே கொலை , கொள்ளை , வல்லுறவு ஆகியவற்றை செய்கிறார்கள் . குடிநோய் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கும் உண்டு . இவர்களும் பிறர் போலவே வாழ விரும்புவர்கள்தான் . கொலைக்குற்றம் செயதவர்களை அதிலிருந்து மீ்ட்க வாழ்க்கைக்கல்வியை அளிக்கலாம் . சீரியல் கொலைகாரர்கள் , குற்றத்திற்கு அடிமையானவர்களா ? ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி வருகிறவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் . கொலை செய்தவர்களை ஆராயும்போது முன்னர் அவர்கள் கொள்ளை அடித்தவர்களாக இருக்கிறார்கள் . அல்லது குழந்தைகளை வல்லுறவு செய்தவர்கள் , ஆபாச புகைப்படங்களை எடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் . எனவே இவர்களை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூட ஒருவகையில் குறிப்பிடலாம்தான் . இந்த குற்றவாளிக்கு இடையில் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா ? பெரும்பாலான குற்றவாளிகளுக்கு