இடுகைகள்

திருட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறவுகளையும் உணர்ச்சிகளையும் நிலப்பரப்பு வழியாக இணைக்கும் சிறுகதைகள்! - உறவுப்பாலம் - இலங்கை சிறுகதைகள்(சிங்களம், ஆங்கிலம்)

படம்
                    உறவுப்பாலம் இலங்கை சிறுகதைகள் மொழிபெயர்ப்பு கண்ணையன் தட்சிணாமூர்த்தி நேஷனல் புக் டிரஸ்ட் விலை 150 பக்கம் 254 நூலில் மூன்று பகுதிகள் உள்ளன சிங்களச் சிறுகதைகள் , தமிழ் சிறுகதைகள் , ஆங்கிலச் சிறுகதைகள் . இதில் உருப்படியாக இருக்கும் கதைகள் அனைத்தும் சிங்களம் , ஆங்கிலத்தில்தான் உள்ளன என்பதை கவனிப்பது அவசியம் . மொத்த கதைகள் இருபத்தைந்து அதில் , 18 கதைகளை நம்பிக்கையோடு படிக்கலாம் . மோசமில்லை . சிங்களச் சிறுகதைகளில் மறுபடியும் , இன்று என் மகன் வீடு திரும்புகிறான் , அக்கா ஆகிய கதைகள் சிறப்பாக உள்ளன . முதல்கதையான மறுபடியும் எழுத்தாளர் குணதாச அமரசேகர எழுதியது . பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆசிரியை ஒருவர் தனது பள்ளியை சென்று மீண்டும் பார்ப்பதுதான் கதை . இதற்குள் , அங்கு நடைபெறும் பிரச்னைகள் , அதனை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள் , உணர்ச்சிப்பூர்வமாக பள்ளி என்பதை பார்க்கும் ஆசிரியையின் கோணம் என பல்வேறு உணர்ச்சிகளின் கதம்பமாக கதை ரசிக்க வைக்கிறது . இன்று என் மகன் வீடு வருகிறான் - கருணா பெரைரா எழுதியது . இக்கதையை அங்கு நட

திருடப்படும் பைக்குகள் எங்கு செல்கின்றன? - அலசல் ரிப்போர்ட்

படம்
  சென்னை பெருநகரில் மாதம்தோறும் அறுபது பைக்குகள் திருடப்படுகின்றன. இதனை பதிவு செய்வதில் காவல்துறை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இப்படி திருடப்படும் பைக்குள் என்னாவாகின்றன என்று அந்த உலகைப் பார்க்க உள்ளே நுழைந்தால் பொல்லாதவன் பட அனுபவம் இன்னும் பெரிய கான்வாஸில் கிடைக்கிறது.  குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் பைக்குளை திருடர்கள் நோட்டமிட்டு பார்த்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர், அதன் லாக்கை லாவகமாக உடைத்து திறந்து விடுகின்றனர். இதற்கு மாஸ்டர் கீ உதவுகிறது. இந்த நேரத்தில் காவல்துறை ரோந்து வருமே, அதற்கு சமாளிக்க அருகிலுள்ள தியேட்டரில் சினிமா டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பிரச்னையாக இருக்கும் கேமராக்களிடமிருந்தும் தப்பித்தான் பைக்கை திருடி கொண்டு செல்கிறார்கள்.  இந்த வியாபாரம் இரண்டு வகையில் நடைபெறுகிறது. ஒன்று, பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். எனக்கு பைக் வேண்டும் என்று சொல்லும் கல்லூரி மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு முக்கியமான ஆட்கள்.  இந்த பிராண்ட் பைக் வேண்டும் என ஏஜெண்டுகளிடம் சொல்லி சிலர் வாங்குகிறார்கள். இந்த வியாபாரம் நம்பகமானது. இ

மென்பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை உருவாக்கிய முன்னோடி! - பில்கேட்ஸ் - சாப்ட்வேர் சுல்தான்

படம்
        பில்கேட்ஸ் சாப்ட்வேர் சுல்தான் என் சொக்கன் பில்கேட்ஸ் கிராப் இன்றுவரை உயரத்தில்தான் இருக்கிறது . இந்த நூலில் அவர் எப்படி உழைத்து ்வளர்ந்தார் , சாப்ட்வேர் துறையில் என்ன செய்தார் , அதற்கு என்ன வழிமுறைகளை கடைபிடித்தார் , அவர் மீதான புகார்கள் , ஒப்பந்தங்கள் , நட்பு , விண்டோஸின் வெற்றி , சர்ச்சைகள் , மென்பொருட்கள் விற்பனை , புகார்கள் , அதற்கான எதிர்வினைகள் , சந்தையில் அவர் ஏற்படுத்திய விளைவுகள் என பல்வேறு விஷயங்களையும் பாரபட்சமின்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் . அனைவருக்கும் தனி கம்ப்யூட்டர் என்ற லட்சியத்தை முன்வைத்து பில்கேட்ஸ் விண்டோஸ் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார் . அந்த வழியில் அவர் சந்தித்த சவால்கள்ளளை தாண்டி வர தெளிவான வணிகத்திட்டம் அவருக்கு உதவியது . ஆரம்பத்தில் அவர் மென்பொருட்களை எழுதினாலும் பின்னாளில் அவர் முழுக்க மார்க்கெட்டிங் செய்து விண்டோஸ் பொருட்கைள விற்பனை செய்பவராகவே இருந்தார் . அவரது இளமைக்காலம் பற்றி படிப்பது சிறப்பாக உள்ளது . இனிமேல் பில்கேட்ஸ் என்று ஒருவர் வரமுடியாது . அவரின் காலம் முடிந்துவிட்டது . கணினி தொழில்நுட்ப உல

சிசிடிவி மூலம் குற்றவாளிகளை ஸ்மார்ட்டாக பிடிக்கும் காவல்துறை! எப்படி குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள்?

படம்
        சிசிடிவி கேமரா மூலம் திருடர்களை பிடிக்க முடியுமா? சென்னை பெருநகரத்தில் காவல்துறையினர் 2.9 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதில் 1.5 லட்சம் கேமராக்கள் தனியார் வீடுகள், கடைகளுக்கானவை. இதன்மூலம் கடைகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு ஆகியவற்றில் தொடர்புடையவர்களையும் காவல்துறையினர் ஸ்மார்ட்டாக பிடித்து வருகின்றனர். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற 14 கொலைக்குற்றங்களில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் சிசிடிவி மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதில் முக்கியமான உதவி சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 60 வழிப்பறி கொள்ளையர்கள் இம்முறையில் பிடிபட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இம்முறையில் அண்மையில் புல்லட்டுகளை திருடி நகருக்கு வெளியில் விற்கும் திருட்டு கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். எப்படி பிடிக்கிறார்கள்? நகரத்தின் பாதைகள், ஸ்மார்ட்போன், சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை இணைத்து யோசிக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் இதில் வெற்றி பெறுகின்றனர். அனைவரும் இதனை கவனித்து புரிந்துகொள்ள முடியாது.முதலில் குற்றம் நடந்த இடத்திலிருந்து 50 முதல் 50

காலிங்பெல் டேட்டா தெரிந்துகொள்ளுங்கள்!

படம்
காலிங்பெல் டேட்டா! 2018 ஆம் ஆண்டு மட்டும் விற்றுப்போன வீடியோ காலிங்பெல்களின் எண்ணிக்கை 3.4 மில்லியன்கள். 2017 ஆம் ஆண்டு ஆய்வுப்படி 26 மில்லியன் அமெரிக்கர்களின் வாசல்படியில் வைக்கப்பட்ட டெலிவரி பார்சல்கள் திருடுபோயுள்ளனவாம். வீடியோ காலிங்பெல்கள் அமைக்கப்பட்ட பின்பு 50 சதவீத திருட்டுகள் குறைந்துள்ளன. சொன்னது யார்? லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் துறை. அப்ப எதுக்கு போலீஸ்? சங்கத்தை உடனே கலைங்க ப்ரோ. 2023 ஆம் ஆண்டு வீடியோ காலிங்பெல்களுக்கான மார்க்கெட் மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள். 2017 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த வைரம் பதித்த வீடியோ காலிங்பெல்லின் மதிப்பு ஒரு லட்சம் டாலர்கள். கலிஃபோர்னியாவில் காலிங்பெல்லை குவாலிட்டி ஐஸ்க்ரீம் போல நினைத்து நக்கிக்கொண்டிருந்த மனிதரை போலீஸ் கேமரா மூலம் பார்த்து கைது செய்தது. நன்றி: க்வார்ட்ஸ்