இடுகைகள்

வலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுவயது தோழிக்காக ஆளுமை பிறழ்வில் சிக்கிக்கொள்ளும் தொழிலதிபர்! கில் மீ, ஹீல் மீ - கொரிய டிவி தொடர்

படம்
            கில் மீ ஹீல் மீ கொரியத் தொடர் யூட்யூப் டாக்டர் சா தொடருக்கு பிறகு லீ சங் நடித்துள்ள தொடர் இது . மனிதர் எப்படி சவாலான கதைகளை தேடிப்பிடிக்கிறார் என்று தெரியவில்லை . இத்தனைக்கும் டிவி தொடருக்கு ஆறு பாத்திரங்களாக மாறி நடிக்கவேண்டுமென்றால் எவ்வளவு கஷ்டம் ? எதையு்ம் முகத்தில் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டு முழுத்தொடரையும் பார்க்க வைப்பது லீ சங்தான் . சிறுவயதில் குழந்தைகளை துன்புறுத்தினால் அந்த பாதிப்பு அவர்களின் உளவியலை எப்படி பாதிக்கிறது என்பதை செய்தியாக சொன்னதற்கு உண்மையாகவே இயக்குநரை பாராட்டவேண்டும் . பாலியல் ரீதியான குழந்தையை கொடுமை செய்யும்படி காட்சிகள் இல்லையென்பது ஆறுதல் சியூஜின் என்ற நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் போகும் ஒருவர் , சா டியூ ஹியூன் . இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட மோசமான சம்பவம் ஒன்றால் ஆளுமை பிறழ்வு கொண்டவராக இருக்கிறார் . இதனை ஆங்கிலத்தில் முதலில் மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்று சொன்னார்கள் . இப்போது அதனை டிஸ் அசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிஸார்டர் என்று கூறுகின்றனர் . அமெரிக்காவில் இருந்து படித்துவிட்டு திரு

மூளையில் நினைவுகள் எப்படி பதிவாகின்றன?

படம்
            நீண்டகால நினைவுகள் நமது மூளையில் நீண்ட காலத்திற்கு நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம் . கவன ஈர்ப்பு பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும்போது நம்மை கவனிக்க வைக்கும் சில அம்சங்கள் இருக்கும் . பெண்களின் லோஹிப் ஜீன்ஸ் , தொட்டிச்செடி கட்டிங் , உடைகள் , ஒருவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம் . இவற்றின் ஆயுள் காலம் 0.2 நொடிகள்தான் . இவை முக்கியம் என நீங்கள் நினைத்தால் , அது மூளையிலுள்ள நியூரான்களை தூண்டுகிறது . தொடர்ச்சியாக இந்த தூண்டுதல் நடந்தால் அதுவே நீண்டகால நினைவாக சேகரிக்கப்படுகிறது . உணர்ச்சிகர ஈர்ப்பு உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையதாக இருந்தால்அது மூளையிலுள்ள அமிக்டலாவில் பதிவாகி நீ்ண்டகால நினைவாக வாய்ப்புள்ளது . நீங்கள் சோகமாக இருக்கும்போது இசைக்கப்படும் இளையராஜாவின் ஆறுதல் பாட்டு , தந்தையைப் போன்ற ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு , நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் , மகிழ்ச்சியாக இருக்கும்போது பெய்யும் மழை என பலவிஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .

குளிரான குளத்தில் ஏரியில் குளித்தால் ஆபத்தா?

படம்
                ஜில்லென்ற குளத்தில் குளிக்கலாமா ? இன்று உலகம் முழுக்க உள்ள வினோதமான துணிச்சல் கொண்ட மனிர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா ? மிகவும் குளிர்ச்சி கொண்ட குளத்தில் ஏரியில் குதித்து குளித்து மகிழ்ச்சியுடன் ஏறி வருகிறார்கள் . எதற்கு இப்படி செய்கிறார்கள் என்றால் அப்படி செய்யும்போது எனது மூளை அமைதியாக உள்ளது . நான் எனது உடல் மீது கவனம் செலுத்த முடிகிறது என்று கூறுகிறார்கள் . புதிதாக விளக்கம் இருக்கிறதல்லவா ? இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்டில்டன் இந்த வினோதமான பழக்கத்தை செய்பவர்தான் . இவர் , அன்டார்டிக் பகுதியில் கடந்த ஆண்டு ஒரு கி . மீ . தூரம் ரத்தத்தை உறைய வைக்கும் நீரில் நீந்தியுள்ளார் . இதற்கு ப்ரீசரில் தினசரி உட்கார்ந்து பயிற்சி வேறு எடுத்துள்ளார் . இன்று கொரோனா பிரச்னை காரணமாக உலகமெங்கும் உள்ள பல்வேறு ஏரி குளங்களில் செல்லுவதற்கு மக்களுக்கு அனுமதி கிடையாது . சரியான டைம் கிடைச்சிருச்சேய் என பல லட்சம் மக்கள் ஜில் குளங்களுக்கு குளிக்க சென்று வருகிறார் . அதிலும் இந்த எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகம் . இதற்கென வின்டர் ஸ்விம்மிங் அசோசியேஷனும் கூட உண்டு . சீனா

தொன்மைக்காலத்தில் நோயாளிகளை சித்திரவதை செய்த அறுவைசிகிச்சை கருவிகள்!

படம்
            பீதியூட்டும் பண்டைய அறுவை சிகிச்சை உபகரணங்கள் ! நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் பார்க்க அழகாக இருந்தாலும் , தொடக்கத்தில் அப்படி இல்லை . கரடுமுரடாக இருந்த ஆயுதங்களை டிரிம்மிங் செய்து செதுக்கியது போலவேதான் இருக்கும் . அதனைப் பார்த்தே வைத்தியம் செய்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்கள் உண்டு . ஆனாலும் சிகிச்சை செய்யாவிட்டால் எப்படி அரைவைத்தியன் லெவலுக்கு வருவது ? எனவே நோயாளிகளை பிடித்து கட்டி வைத்து மண்டையில் ஓட்டை போட்டு சூடுபோட்டு என பண்ணாத சித்திரவதைகள் கிடையாது . ஆனாலும் இதற்காக நீங்கள் கவலைப்பட்டு ஐ . நாவில் புகார் கொடுக்கவேண்டியதில்லை . அதனால்தான் , புதிய கருவிகள் உருவாக்கப்பட்டன . டிரெபான் இன்று நமக்கு காலையில் ஹேங்ஓவரால் தலைவலிக்கிறது என்றால் உடனே ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றை எடுத்து போட்டால் போதும் . ஆமாங்க ஆமாம் என தலைவலி தலையாட்டிக்கொண்டே ஓடிவிடும் . ஆனால் கி . பி .6500 காலகட்டத்தில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் தலைவலி பிரச்னையை கொடூரமாக இயக்குநர் பாலா ஸ்டைலில் அணுகியிருக்கிறார்கள் . அதற்கான கருவிதான் டிரெபான் . தலைவலிக்கு தீர்வு எப்படி கருவி எ

காமம் ஓர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகள்! - மொபியஸ் - கிம் கி டுக்

படம்
            மொபியஸ் கிம் கி டுக் ஒரு குடும்பத்தில் நடக்கும் மனைவியைத் தாண்டிய செக்ஸ் உறவு அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை படமாக எடுத்துள்ளார் . காமம் எப்படி பல்வேறு உறவுகளை குலைக்கிறது . வாழ்வில் மறக்கமுடியாத வேதனையையும் , குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை பெரும்பாலும் வசன்ங்களே இல்லாமல் கிம் கி டுக் படமாக எடுத்துள்ளார் . நிறைய இடங்களில் இந்த இடத்தில் வசனங்கள் இருந்திருக்கலாமே என நாடகமயமாக படம் பார்த்த அனைவருக்கும் தோன்றும் . ஆனால் அப்படி நினைக்கும் காட்சிகளில் உடல்மொழியான நடிப்பு மட்டுமே நம்மை கலங்க வைக்கிறது . ஆண்குறியை வெட்டுவது , அதை வாயில் இட்டு மெல்லுவது , இன்னொரு இடத்தில் ஆண் குறி மீது வாகனங்கள் நசுக்கியபடி செல்வது , காமத்தை அனுபவிக்கும்போது வலியை இன்பத்துடன் ஏற்று மார்பகங்களை தடவுவது , காதுகளை நாக்கில் உரசுவது என பல்வேறு காட்சிகள் மிரட்டலாகவே உள்ளது . தந்தை தான் செய்த காரியத்தால் மகன் தண்டனை ஏற்பதை அறிந்து கண்ணீர் விடுவது , அதன் பிறகான அதற்கு பரிகாரமாக அவர் உதவி செய்யும் காட்சிகள் குற்ற உணர்வின் வெளிப்பாட

அனஸ்தீசியா எப்படி பயன்படுகிறது?

படம்
            பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ அனஸ்தீசியா எப்படி பயன்படுகிறது ? அறுவை சிகிச்சை செய்யப்படும்போது ஒருவருக்கு ஏற்படும் வலியைக் குறைக்க அனஸ்தீசியா பயன்படுகிறது . இதில் லோக்கல் , ஜெனரல் என இருவகைகள் உண்டு . இதில் லோக்கல் எனும் சிகிச்சை முறையில் க்ரீம் முறையில் உடல் பாகத்தில் தடவப்படுகிறது , ஊசிமுறையில் மருந்து செலுத்தப்படுகிறது . குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உணர்வுகள் மழுங்கும் . அந்த இடத்தில் கத்தியால் அறுக்கப்படும்போது வலி தெரியாது . மற்றபடி நோயாளிக்கு முழு உணர்வு நிலை இருக்கும் . ஜெனரல் முறையில் வழங்கப்படும் அனஸ்தீசியா மூளை , முதுகெலும்பை செயலற்றுபோக வைக்கிறது . மூளை முழுக்க முடக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது . இதிலும் நரம்பு செல்கள் ஒன்றையொன்றை தொடர்புகொண்டு தகவல் பரிமாற்றம் செய்வதை மருந்து தடை செய்கிறது . இதனால் அறுவை சிகிச்சை செய்பவருக்கு சுயநினைவு இருக்காது . அனஸ்தீசியா கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு வலி குறைவது மட்டுமன்றி , தசைகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக மாறும் . இந்த மருந்தை ஒருவர் எடுத்துக்கொள்ளும்போது அவருக்கு குமட்டல் உணர்வு ஏற்ப

வலியை உணரமுடியாத மரபணு கொண்ட மருத்துவர் பிறரின் வலியை தீர்க்க நினைக்கிறார், சாதிக்க முடிந்ததா? - டாக்டர் ஜான் - கொரிய டிவி தொடர்

படம்
         டாக்டர் ஜான் கொரிய டிவி தொடர் 16 அத்தியாயங்கள்  it is based on the Japanese novel On Hand of God by Yo Kusakabe and aired on SBS from July 19 to September 7, 2019. Genre: Medical drama Written by: Kim Ji-woon Directed by: 64px     வலியை உணர முடியாத மருத்துவர், பெரிய மருத்துவமனையில் வலிநிவாரண மையத்தின் இன்சார்ஜாக இருக்க முடியுமா? என்பதுதான் டாக்டர் ஜான் தொடரின் மையக்கதை கதை, சிறைச்சாலையில் தொடங்குகிறது. கைதி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு பிரச்னையை சரி செய்ய போலீஸ் கேட்க, மருத்துவர் என்ன செய்வது என்று தெரியாமல் பதறி ஓடுகிறார். அப்போது அங்கு அறையை சுத்தம் செய்ய வரும் 6328 என்ற கைதி, அந்த நோயாளிக்கு முதலுதவி செய்து பிழைக்க வைக்கிறார். அவசர கால உதவி என்றால் உதவி செய்யும் அந்த் கைதி தான் யார் என்பதை அங்குள்ள யாருக்கும் கூறுவதில்லை. அங்கு பயிற்சி மருத்து prison scene வராக வரும் காங் ஷிக்கும் அந்த கைதி ஒருவரைக் காப்பாற்ற உதவுகிறார். நோய்க்கு எப்படி சிகிச்சை செய்யவேண்டுமென கூறுகிறார். குணப்படுத்தமுடியாத பேப்ரி நோய் என்ற அரிய நோய் பற்றி கூற, இதன் காரணமாக காங் ஷி என்ற அந்த பெண்ணுக்கு அந்

பதற்றம் போக்கும் மாத்திரை! - பிளாசிபோ செய்யும் உளவியல் தந்திரம்!

படம்
      cc பதற்றம் போக்கும் மாத்திரை ! மனநலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் மனநல மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பிளாசிபோ எனும் போலி மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் . இந்த மாத்திரைகளில் சர்க்கரை மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதால் , இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது . இதில் முக்கியமான அம்சம் , நீங்கள் சாப்பிடும் மாத்திரைகள் போலியானவை என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கூறமாட்டார்கள் என்பதுதான் . அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் , பிளாசிபோ மாத்திரைகளால் நோயாளிகளின் மன அழுத்தம் குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர் . இது புதிய செய்தி அல்ல ஆனால் நீங்கள் சாப்பிடுவது பிளாசிபோ மாத்திரைகள் என்று சொல்லிக்கொடுத்தும் கூட நோயாளிகளுக்கு மன அழுத்தம் , பதற்றம் சார்ந்த சிக்கல்கள் குறைந்துள்ளன என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது . உளவியல் ஆராய்ச்சியாளர் டார்வின் குவாரா தலைமையிலான குழுவினர் , இப்பரிசோதனைகளை செய்தனர் . மனநிலையை பாதிக்கும் படங்களை முதலில் 62 பேருக்கும் , பின்னர் 198 பேருக்கும் காட்டி பிளாசிபோ மாத்திரைகளை சாப்பிடக் கூறினர் . பின்ன

நேற்று இன்று நாளை - நாஸ்டாலஜியா நல்லதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாஸ்டாலஜியா நல்லதா கெட்டதா? பொதுவாக நாம் கடந்த காலத்தில் செய்த தில்லுமுல்லுகள், போக்கிரித்தனங்கள், கோமாளித்தனங்கள் இவைதானே இன்று நம்மை வடிவமைத்துள்ளன. அதனால்தான் ஜென் இசட், மில்லினிய இளைஞர்களைக்கூட இறந்த காலத்திற்குள் சென்று பார்க்கும்படி திரைப்படங்கள் எடுக்கிறார்கள். இதன்மூலம் கடந்த காலத்தில் நடந்த சமாச்சாரங்களை சற்று கண்கொண்டு பார்க்கலாம். இன்றும் காமெடி என்றால் வடிவேலுவை பேசுபவர்கள் அடுத்து சபாபதி படத்து காமெடியில் சென்று முடிப்பார்கள். காரணம், அந்த பட கலைஞர்கள் இன்றைய கலைஞர்களுக்கு ஊக்குமூட்டுபவர்களாக இருந்திருப்பார்கள். பொதுவாகவே வரலாறு தெரிந்தால்தானே வரலாறு படைக்க முடியும் என்று கூறுவார்கள். அதுதான் விஷயம். இதில் எதிர்மறையான விஷயங்களை விட நேர்மறையான சங்கதிகள் நிறைய உள்ளன. எனவே நாஸ்டாலஜியாவுக்கு சென்று வருவது உங்களை புத்துணர்வாக்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி