இடுகைகள்

ஹிண்டன்பர்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் இன்னொரு நிறுவனம் - மோசடி மன்னன் அதானி - பகுதி 6

படம்
  பகுதி ஐந்தில் விடுபட்டு போன மின்னஞ்சல்  ஓபல் நிறுவனம் குருநால் நிறுவனம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதானி பவர் நிறுவனத்தில் 4.69% பங்குகள் அல்லது பத்தொன்பது சதவீத பங்குகளை ஓபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பரிவர்த்தனை கூட மொரிஷியஸிலுள்ள பிற நிதி நிறுவனங்களைப் போலவே சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஓபல் இன்வெஸ்ட்மென்ட் என்பது மொரிஷியஸைச் சேர்ந்த போலி நிறுவனம். அங்குள்ள, பெருநிறுவன ஆவணங்களை ஆராய்ந்ததில் ஓபலின் நிறுவனத் தலைவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஓபல் நிதி நிறுவனம் பற்றிய செய்திக்கட்டுரைகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஊடகங்கள் இந்த நிதி நிறுவனம் எப்படி அதானி பவர் நிறுவனத்தின் பங்குகளை அதிகளவு வாங்கியது என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை. ஓபல் நிதி நிறுவனத்திற்கு எந்த வலைத்தளமும் இல்லை. அதன் பணியாளர்கள் பற்றிய தகவல்களும் கூட லிங்க்டு இன் தளத்தில் இடம்பெறவில்லை. முதலீடு தொடர்பான மாநாட்டில் நிறுவனம் பங்கேற்றதிற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஓபல் நிறுவனம், பன்மைத்தன்மையோடு பல்வேறு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய

துணிவிருந்தால் எளிதாக செய்யலாம் மோசடியை.. மோசடி மன்னன் அதானி - பகுதி 4

படம்
  தேசப்பற்றும் மோசடியும்இணையும்போது.. ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை - அதானி மோசடி  மோசடி மன்னன் அதானி - பகுதி 4 மான்டேரோஸா முதலீட்டு நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநரின் பெயர், அலஸ்டர் குகென்புஹ்ல் ஈவன். இவருக்கு இந்தியாவில் வணிகத் தொழிலில் மோசடிகளைச் செய்த தொழிலதிபரான ஜதின் மேத்தாவுடன் தொடர்புண்டு. ஸ்விட்சர்லாந்தில் வாழும் அலஸ்டர், தொண்ணூறுகள் தொடங்கி இந்திய துணைக்கண்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இதைப்பற்றிய குறிப்பு அவரின் தொழில் சார்ந்த குறிப்பு பக்கங்களில் உள்ளது. ஜதின் மேத்தா, அமெரிக்காவில் வைரத் தொழில் செய்தபோது வங்கிகளில் ஒரு பில்லியன் டாலரை மோசடி செய்தார். பிறகு வரிகள் இலகுவான நாடுகளுக்கு தப்பிச்சென்றார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்படிப்பட்ட குற்றவரலாறு கொண்டவரின் மகனுக்கு, வினோத் அதானி தனது மகள் கிருபாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதன்மூலம் இவர்கள் நெருக்கமான தொழில் கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர். 2002ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தில் குடாமி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் முதலீடு செய்தது. இந்த ந

உண்மை மதிப்பை விட பலமடங்கு பங்கு மதிப்பு உயர்ந்தால்.. - அதானி மோசடி - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

படம்
      1 மோசடி மன்னன் – அதானி ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 – தமிழாக்கம்   இந்தியாவில் திறமை வாய்ந்த தொழிலதிபர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் உண்டு. இந்த அம்சங்கள்தான்   உலகளவில்   இந்தியாவை வலிமை வாய்ந்த நாடாக மாற்றி வருகிறது. இந்தியப்   பொருளாதாரம், அதன் தொழில் வளத்திற்கு முதலீடுகள் பெருமளவு கிடைக்கும் ஆதாரமாக பங்குச்சந்தையைப் நம்பியிருக்கிறது. மக்கள், பங்குச்சந்தையில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளை நாளிதழ்களிலும், டிவி சேனல்களின் வழியாகக் கூட அறிவது குறைவே. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின் தலைவர், இயக்குநர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்   பற்றி நேர்மையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் உடனே சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது படுகொலை செய்யப்படுகிறார்கள். தொழில் நிறுவனங்கள் பற்றி எதிர்மறையாகப் பேசும், விமர்சிக்கும் பங்குச்சந்தை ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இப்படி பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலும் நெருக்கடியும் உள்ள சூழ்நிலையில் பங்குச் சந்தையில் நடக்கும் பெருநிறுவன மோசடிகள் பற்றி மக்க

கௌதம் அதானி செய்த மோசடிகள் - ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் அம்சங்கள்

படம்
    கௌதம் அதானி, சமையல் பொருட்கள், மின்சாரம், கட்டுமானம், என ஏராளமான தொழில்களை நடத்தும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர். 2013ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருபத்தி இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால் இன்று ராக்கெட் வேகத்தில் வளர்ந்து உலகளவில் மூன்றாவது பெரும் பணக்காரராக மாறி நிற்கிறார். தொழிலதிபர், அவர் செய்யும் தொழில்கள், ஈட்டும் வருமானம் பற்றி சாமானிய மக்கள் ஆர்வம் கொள்ளவோ, பெருமைப்படவோ,   கவலைப்படவோ ஏதுமில்லை. ஆனால் அதானி குழுமம் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன் தொகையைப் பெற்றுள்ளளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின்(எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி) நிதி முதலீட்டையும் தனது அதானி குழும பங்குகள் மூலம் ஈர்த்துள்ளது. அதானி நிறுவனம் கடன் தொகையை கட்டாதபோது, அல்லது அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்தால் மக்களே அதன் விளைவுகளை ஏற்று சிலுவையை சுமக்க நேரிடும். அதானி குழுமம் இந்திய வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை 81,234.70 கோடி. இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 17.8 ட்ரில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனம் பத்தாண்டுகளுக்கும் மே