இடுகைகள்

மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
தியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர்ச்சியான காட்சிகள் என்பவை படத்தினை வேறு ஒரு தன்மையில் மாற்றுகின்றதா?        அதனை செயற்கையாக உருவாக்கும் தன்மையில் அது போன்று நிகழ்வதில்லை. மான்டேஜ் முறையிலான காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு அதன்வழியே சினிமாவின் மதிப்பு ஓர் ஆணை போல வெளிப்படுத்தப்படுவது என்னை எரிச்சல்படுத்துகிறது. உதாரணத்திற்கு – ஒருவன் அறைக்குள் நுழைந்து காத்திருக்கிருக்கிறான். இதனை சினிமாவில் மான்டேஜ் காட்சியாக காட்டப்படலாம். என்னுடைய படத்தில் இது மான்டேஜாக இல்லாமல் சினிமா குறித்தபடி அதன் மதிப்பினை வீணாக்காமல் குறிப்பிட்ட நேர அளவுகோல்படி அதனை வேறு ஒரு தன்மையாக்க முயலுவேன். இங்கு கருவியாக வலுவான தன்மையில் பயன்படுவது நேரமே ஆகும். உண்மையான காலம் வெளிப்படுத்தப்படும் காலம் அல்ல. என்னுடைய படங்களில் ‘இறந்துபோன காலம் ’ உருவாக்கப்பட்டு உள்ளார்ந்த தன்மையோடு படத்தின் சூழலோடு இணைந்திருக்கும்.  இசை என்பது ஒலி மற்றும் மௌனத்திற்கும் இடையில் இணைப்பாக இருப்பது போல, ‘இறந்துபோன காலம் ’ என்னுடைய படங்களில் ஒரு லயம் கொண்டதாக, இசை சார்ந்த அமெரிக்க படங்களின் சினிமா தன்மையிலான ந

மெக்அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
அண்மையில் ஒரு நேர்காணலில் மற்ற இயக்குநர்களோடு அதிக தொடர்பு இல்லாமல் கிரேக்க சினிமா துறையில் நான் தனியாக இருப்பதாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறீர்களே?        மற்ற கிரேக்க இயக்குநர்களுக்கு இதே போன்று எனக்குத் தோன்றுபவை அவர்களுக்கும் பொதுவானது என்று கூறவில்லை. நான் கிரேக்க சினிமாவின் உள்ளூர் சார்ந்த மாகாண தன்மையை படத்தில் காட்டவில்லை. என்னுடைய பாணி என்பதைத் தாண்டி அந்த தன்மையை படம் சந்திக்கும் இடங்கள் மிகவும் குறைவு. 1979 இல் தெஸ்ஸ்லோனிக்கி திரைப்பட விழாவில் ‘ஏஞ்சலோ பவுலோஸ் மரணம் வரை ’ என்றொரு வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சலுகை பெற்ற நன்கு அறியப்பெற்ற தன்மை மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்றாலும் எதிரெதிரான தன்மையில் அல்ல. கிரேக்க சினிமா துறையோடு அன்பு – வெறுப்பு போன்றவற்றோடும் தந்தை – மகன் போன்ற உறவை அகவயமான முறையில் கொண்டிருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. கிரேக்க இடதுசாரி கட்சிகள் இறந்துபோன மொழியில் உரையாடிக்கொண்டிருப்பதைக் கண்டதால்தான் அதுபோன்ற எவ்வித முயற்சிகளையும் நான் மேற்கொள்ளவில்லை. கிரீஸ் படை

மெக்அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இதன் அர்த்தம் பயணிக்கும் வீரர்கள் படத்தினைக் காட்டிலும் இது யதார்த்தமான படம் என்று கொள்ளலாமா?        இப்படம் பயணிக்கும் வீரர்களுக்கு மிகவும் எதிரிடையான தன்மை கொண்ட சர்ரியலிசம் கொண்டது. இப்படம் உண்மைச் சம்பவங்களை குறிப்பிடுவதில்லை என்றாலும் அரசியல், பாலியல் சார்ந்த விஷயங்களின் அடர்த்தியான தன்மை கொண்டுள்ளது. பயணிக்கும் வீரர்கள் படத்தின் வலுவான தன்மையோடு இப்படத்தை ஒப்பிட்டால் இது பெரிதும் கவித்துவமான படம் என்று கூறலாம். ஈவா கோடமனிடோ இன் கதாபாத்திரம் மிகவும் சிக்கலானதாக உருவாக்கப்பட்டுள்ளது. அவள் அலெக்ஸாண்டரின் சகோதரி, மகள், மற்றும் மனைவி....        மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அவளின் கதாபாத்திரமாகும். இதில் இடையூறாக பல புராண கற்பனைகள்ஃ உள்ளன. உ.தா: ஒடிபஸ் போல ஆனால் இவை தவிர்த்தும் வேறு பெயர்களும் உள்ளன. படம் பின் தொடரும் புகழ்பெற்ற மனிதனான அலெக்ஸாண்டரின் பிறப்பு ஒரு மர்மமாக உள்ளது. அவன் அதிர்ஷ்டத்தின் குழந்தை என்று அழைக்கப்படுகிறான். எனவே அவன் நகரத்தில் உள்ள ஒரு பெண்ணை தன் தாயாக தத்தெடுக்கிறான். எனவே அவளின் மகள் அவனுக்கு

நூல்வெளி2: பன்றித்தீனி

படம்
புதிய கலாச்சாரத்தின் சிறுவெளியீடான பன்றித்தீனி நூல் நாம் நடைமுறை வாழ்வில் உண்டுகொண்டு இருக்கும் நெஸ்லே பொருட்கள், கோககோலா, பெப்ஸி உள்ளிட்ட பொருட்களின் பின்னேயுள்ள அரசியல் முதற்கொண்டு அதனால் நமது உடல் என்னமாதிரியான பாதிப்புகளுக்கு ஆட்படுகிறது என்பது வரையிலும் தெளிவாக எடுத்துரைக்கிற நூலாக உள்ளது.                நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸ் வகைக்கு அரசு தடை விதித்துள்ளதைக் குறித்து தொடங்கும் கட்டுரை, அந்நிறுவனம் தனது பால் விற்பனைக்காக தென்னாப்பிரிக்காவில் புட்டிப்பால் சிறந்தது என்று கூறி பல லட்சம் மக்களை கொன்றழித்தது பற்றியும், அந்நிறுவனத்தில் நீர் வணிகம் எப்படி அப்பட்டமான நுகர்வுச்சூழலை உருவாக்கி ஏழை அடித்தட்டு மக்களை மெல்லக் கொல்லுகிறது என்பதையும் விரிவாகப் பேசுகிறது.             கோலா பானங்கள் குறித்த கட்டுரை அவற்றின் அரசியல் லாபிகள் குறித்தும் தாராளமயமாக்கல் சூழலில் உள்ளே நுழைந்து இந்திய நிறுவனமான பார்லே நிறுவனத்தில் வியாபாரத்தை முற்றிலும் ஒடுக்கியதோடு அந்நிறுவனத்தின் குளிர்பானப் பிரிவையும் அடிமாட்டு விலைக்கு தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்தது குறித்தும் விரிவாக ஆழம

மெக் அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
மரணத்தின் இடம் மற்றும் இறந்த காலத்தின் இயக்கம்: மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் டோனி மிட்செல் – 1980 ஆங்கிலத்தில் - டான் ஃபைனாரு தமிழில் - லாய்ட்டர் லூன் கிரேகத்தின் செவ்வியல்தன்மை கொண்ட காலத்தை மக்கள் நினைவில் வைத்திருக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்கிறீர்கள். ஓ மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் இல் பயன்படுத்தப்படும் விஷயங்கள் அதன் புனைவு என்ற தன்மையில்தானா?        கிரேக்கர்கள் நடுகற்களை வழிபட்டு அதன் பெருமை பேசி வளர்ந்த பாரம்பரியம் கொண்டவர்கள். புனைவுகளை மேலிரிருந்து கீழாக மக்களிடம் கொண்டு வந்து பேச, பயணிக்கும் வீரர்கள் படத்தின் மூலம் முயற்சித்தேன்.  படத்தில் தலைப்பு மிகச்சிறந்த அலெக்ஸாண்டர் என்று வைக்கப்படவில்லை. ஆனால் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் அறியாத பல வீரர்கள் போல கற்பனையான கதைகளில் வாழும் புகழ்பெற்ற ஒரு வீரர் ஒருவராவார். வரலாற்று அலெக்ஸாண்டரோடு ஒப்பிடுகையில் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை என்றாலும் இவர் வேறுபட்ட முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட முக்கியமான பிரபலமான ஒருவர் என்று கூறமுடியும்.        1453 ஆம் ஆண்டில் துருக்கியரின் ஆதிக்கத்தில் நாடு இருந்தபோது உருவான ஒரு ப

வேட்டைக்காரர்கள் அத்தியாயம் நிறைவு: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இரண்டாவது கேள்வி பயணிக்கும் வீரர்கள் உள்ள கதாபாத்திரங்கள் பெற்றோர்கள், குழந்தைகள், நண்பர்கள், காதலர்கள் என முன்பே தெரிந்த சூழல் போன்றே இருக்கிறது மேலும் இங்கு...        இங்கு அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். கதாபாத்திரங்கள் தம்பதிகளாக பிரிக்கப்பட்டு ஆண் / பெண், ஆண் / பெண் கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள். இந்த பாத்திரங்களிடையே தெளிவான உறவு இல்லாததால் பார்வையாளர்கள் இவர்களை நம்புவது சிரமமானதாக இருக்கும். ஆனால் கதாபாத்திரங்களிலே இருக்கும் தொடர்பு அவசியம் குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. இவை அனைத்தையும் ஒரு மனிதனின் முகங்களாகவே இருக்கமுடியும். மீண்டும் அழுத்தமாக கூற விரும்புவது படமானது ஒற்றை மனசாட்சியை பல்வேறு கோணங்களுக்கு கொண்டு செல்வதேயாகும்.        அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மர்மமான மையத்தில் ஒன்றாக இணைந்துள்ளது போல் இருந்தாலும், அதன் இயற்கையான தன்மை வெளிப்படுத்தப்படுவதில்லையே?        நேரம் குறித்த விஷயங்கள், இறந்து கால நிகழ்வுகள் ஆகியவற்றை விரிவாக கூறாததினால் ஹிட்ச்சாக்கின் ‘ஹாரியினால் சிக்கல் ’ எனும் படம், ஒரு சவம் ஒன்றினை விடுவிக்க பல கதாபா

வேட்டைக்காரர்கள்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
பயணிக்கும் வீரர்கள் படத்தினை வெம்மை கொண்டது என்று குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்டுச் சொல்லுமாறு தன்னகத்தே ஒரு அழகை அது கொண்டுள்ளது. வேட்டைக்காரர்கள் படத்தில் ஒவ்வொரு நிகழ்வும் அதற்கான தனித்த ஒரு தொனியைக் கொண்டிருக்கிறது உதாரணத்திற்கு? உதாரணமாக, நீங்கள் இதுவரை எப்போதும் பயன்படுத்தாத கிளாப்போர்டு ஒன்றினை முன் கூறப்பட்ட பாடகி மற்றும் நடிகை குறித்த காட்சியில் பயன்படுத்தியிருப்பது. அல்லது காதல் காட்சி ஒன்றினை முற்றிலும் வேறுபட்ட முறையில் காட்சிபடுத்தியிருப்பது குறித்தும் கூறமுடியும்.        அது சரியானதே. நான் அவற்றை குறிப்பிட்ட லயம் மற்றும் குறிப்பிட்ட மையம் என்பதை உடைக்கப் பயன்படுத்தினேன். இரண்டாவது காட்சி, இருவர் காதல் செய்வது தொடர்பான காட்சியில் குழுவாக மக்கள் மேசையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, அமெரிக்கப் பெண் நடந்து வந்து எதை வேண்டுமானாலும் வாங்க தயக்கமில்லாமல் கூறுவாள். அரசியல்வாதி அங்கே சாதாரண உடையில் அமர்ந்திருப்பார். ஒருவரிலிருந்து மற்றொருவர் என்று விரிந்து செல்லும் கேமரா இயக்கம் அந்தக் காட்சியின் மைய முக்கியத்துவத்தை நமக்குப் புரிய

வேட்டைக்காரர்கள்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
லயம் மற்றும் மௌனம் அலறலை அடிக்கோடிட்டு காட்ட உதவுகிறது வேட்டைக்காரர்கள் ப்ரான்சிஸ்கோ கேசட்டி – 1977 ஆங்கில மூலம் -  டான் பைனாரு தமிழில் - லாய்ட்டர் லூன் இந்தப்படத்திற்கு எப்படி என்ன முறையில் உங்களை தயார்படுத்திக்கொண்டீர்கள்?        படத்தினைத் தொடங்கும்போது திரைக்கதையின் வடிவம் என்பது வரைபடம் என்பதைத்தாண்டி குறிப்புகள் போல உருவாகி இருந்தது. பிறகு படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடி கண்டறிய முயலும்போது கிரீஸ் முழுக்க அலைய வேண்டியிருந்தது. பயணிக்கும் வீரர்கள் படத்தோடு இதை ஒப்பிட்டால் அது எவ்வளவோ எளிதானது என்றுதான் கூறுவேன். வேட்டைக்காரர்கள் கதையின் அமைப்பே பல்வேறு இடங்களுக்கு மாறிச்செல்வதுதான் எனும்போது ஒரு இடத்திற்கு சென்று விடுதியில் தங்குவது என்பது பெரும் சவாலாக இருந்தது.        இடம் கிடைத்துவிட்டால் நான் அங்கே அமர்ந்து படப்பிடிப்பு குறிப்புகளை இன்னும் செம்மையாக எழுதியிருக்கக்கூடும். காட்சியை படப்பிடிப்பில்  மேம்படுத்துவதற்கான இடத்தையும் காலியாக விட்டுவிட்டு பிறவற்றை எழுதுவேன். படப்பிடிப்பில் காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இந்தப்படத்தில்

பயணிக்கும் வீரர்கள் அத்தியாயத்தின் நிறைவுப்பகுதி

படம்
தொடர்ச்சியான காட்சிகள் மரபான தொகுக்கும் எளிய தன்மையை தருகிறதா?        இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். மிகவும் அந்தரங்கமானது என்றுகூட சொல்லலாம். தொடர்ச்சியான காட்சியினை படமாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை பெரும் சுதந்திரத்தைத் தருகிறது. ஆனால் பார்வையாளர்கள் அதில் ஆழ்ந்து கவனம் கொண்டு இணைந்திருக்க வேண்டியது அவசியம் என்பது உண்மைதான். மரபான தொகுக்கும் முறையில் தொடர்ச்சியான காட்சிகளை தொகுப்பது சிரமம்தான். காலியாக இருக்கும் திரையில் இயக்கம் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். தொடர்ச்சியான காட்சி என்பது மான்டேஜ் எனும் கருத்தினை உள்ளே கொண்டதாக உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக மரபான தொகுக்கும் முறை என்பது பல்வேறு விஷயங்களை ஒரு காட்சியில் சொல்ல உதவுகிறது. கேமராவின் இயக்கத்தினோடு பார்வையாளர்களிடம் வேறு இடத்தை காணக்கூறுவது போல. நடுவில் உள்ள காட்சியினை வெட்ட மறுப்பது, அக்காட்சியினை பார்வையாளர்களை ஆழமாக கவனிக்க வைத்து அவர்களது கண்ணில் படும் விஷயங்களை குறிப்பிடத் தகுந்ததாக மாற்றிவிட முடியும். படத்தின் தயாரிப்பின் போது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன? முதல் சிக்கலாக நான் நினைப்ப