மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;
மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல; - சீதாராம் யெச்சூரி ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துக்களை இணைக்கும் புள்ளியாக உள்ள முக்கியமான தலைவரான சீதாராம் யெச்சூரி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளவர் ஆவார். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. (எம்) கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியின் சாதனைகள் குறித்தும் உண்மையில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குகின்றனவா என்பதைக் குறித்தும் விரிவாக நம்மிடையே உரையாடுகிறார். ஆங்கிலத்தில்: உஷினார் மஜூம்தார் தமிழில்: அன்பரசு சண்முகம் கடந்த 18 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்? மோடி அரசு தாராளமயமான எப்டிஐ வணிகம் மற்றும் வெளிநாட்டு மூலதனங்கள் மிக எளிதில் தடையில்லாமல் நம் நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் மலிவான தொழிலாளர் சக்திகளையும் பயன்படுத்தி