இடுகைகள்

காந்திக்கும், அம்பேத்கருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு! ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay அன்பிற்கினிய தோழர் ராமுவுக்கு , வணக்கம் . நீங்கள் பேசும்போதெல்லாம் போனின் பின்னணியில் தீவிரமான டிவி விவாத நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன . நீங்கள் இன்னும் அரட்டை அரங்க கொதிநிலை மனநிலையை விட்டு வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன் . நாம் அம்பேத்கர்கரின் நூல்களில் சாதி ஒழிப்பு மட்டுமே படித்துள்ளேன் . நீங்கள் நிறைய நூல்களைப் படித்திருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது . காந்தி , சாதி வேண்டும் , தீண்டாமை கூடாது என பாலீஷாக பேசினார் என்று சொன்னீர்கள் . இடதுசாரிகள் கோட்சேயின் வன்முறையைப் பேசும்போது , பகத்சிங்கின் வன்முறையான பாதையைப் போற்றுகிறார்கள் . திரும்பத் திரும்ப அவரை காந்தி காப்பாற்றி இருக்கலாம் என்கிறார்கள் . இப்படி பேசுவது வலதுசாரிகளுக்கு பலமேற்றும் என்பதையும் , அகிம்சை பாதையை மக்கள் பலவீனமாக அறிய வழிவகுக்கும் என்பதை அறிவதில்லை . மயிலாப்பூரில் உள்ள ஹாஸ்டலை லீசுகு எடுத்து மாணவர்கள் விடுதியாக நடத்தி வந்தனர் போல . இப்போது அந்த செட்டப்புகளை உடைத்து எடுத்து வருகின்றனர் . எங்கள் அறையில் கதவு மட்டுமே பிரிக்கப்படாமல் இருக்கிறது . விரைவில் அதனையும் பிரித்து எடுப்ப

சிலை உடைப்புகளை மக்கள்தான் தடுக்க வேண்டும்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay அன்புள்ள தோழர் ராமமுர்த்திக்கு , வணக்கம் . எப்படி இருக்கிறீர்கள் ? ராமராஜ்ய யாத்திரைக்கு நிதி வசூலித்து வருகிறார்கள் . உங்களுக்கு நிதி தரும் எண்ணம் இருக்கிறதா ? புதிய இந்தியாவை இந்த நிதியில்தான் எழுப்ப போகிறார்கள் போல . இந்து தமிழ் நாளிதழின் காமதேனு வார இதழ் திங்கள்தோறும் வெளியாகிறது . படித்துப்பார்த்தேன் . அதன் எழுத்துரு படிக்க இணக்கமாக இல்லை . அதன் பகுதிகளும் , செய்திகளும் இலக்கிய காலாண்டிதழ் போன்று இருக்கிறது . மிகவும் கடினமான மொழியைக் கையாள்கிறார்கள் . இதழில் மாநில சுய உரிமைக்குரல் எழுப்பும் சித்தராமையா கட்டுரை நன்றாக இருக்கிறது . அதை அட்டைப்படமாக போடாமால் அனுஷ்காவை அட்டைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் . பிரியாணிதான் செய்கிறார்கள் . ஆனால் நிறைய செஃப்கள் செய்வார்கள் போல . அகோரமாக இருக்கிறது . எங்கள் வார இதழின் பொறுப்பாசிரியர் நா . கதிர்வேலனிடம் , எடிட்டர் . இதழ் எப்படி என்று கேட்டார் . அதற்கு , ஒரே வரியில் இறந்தே பிறந்த குழந்தை என்று சொன்னது என்னை அதிர வைத்துவிட்டது . இலக்கிய வாதிகள் மட்டுமே இப்படி நறுக்கென்ற லொள்ளு பேச முடியும் . இந்துவின் வார இதழ் பொங்கல்

பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறதா குடும்ப அமைப்பு? பந்தம் - பவித்ரம் - எண்டமூரி வீரேந்திரநாத்

படம்
பந்தம் பவித்திரம் எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில்: கௌரி கிருபானந்தன் 270 பக்கமுள்ள நாவல் முழுதும் இரண்டு பெண்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. அடிப்படையான கதையின் மையம், பெண்களுக்கான சுதந்திரம் என்றால் என்ன? அதனைக் கட்டுப்படுத்தும் விஷயங்கள் என்ன? என்பதை நாவல் தீவிரமாக எடுத்துக்கொண்டு பேசுகிறது. இதில் வரும் பெண் மைய உரையாடல்களையும் மூளையையே கலங்க வைக்க கூடியது. எந்த கதாபாத்திரம் எப்படி சூழல்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதை ஊகிக்க முடியாதபடி எழுதியுள்ளார் வீரேந்திரநாத். லண்டனில் புத்தகம் ஒன்றை தடை செய்வதற்கான வழக்கு ஒன்று நடைபெறுகிறது. அதில் சியாமளா, சுரேஷ் என்ற இரு தோழன், தோழி எதிரெதிர் பக்கத்தில் வழக்குரைஞர்களாக வாதிடுகின்றனர். ஜெயிப்போம் என்று சியாமளா நினைத்தாலும் பலவீனமான வாதங்களால் தோற்றுப்போகிறாள். சுரேஷ் வழக்கில் வெல்கிறான். தோற்றுப்போனதை சியாமளா சுலபமாக எடுத்துக்கொள்வதில்லை. இத்தனைக்கும் இருவரும் சில மாதங்களில் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறார்கள். அந்த திருமணம் நடக்காது. நீ ஒரு ஆணாதிக்கவாதி என்று கூறிவிட்டு சியாமளா அங்கிருந்து வெளியேறுகிறாள். அப்போது பிரகாஷ் என்ற தனது தம்பிய

மனநல குறைபாடுகளுக்கான பல்வேறு சிகிச்சை முறைகள்!

படம்
pixabay சைகோடைனமிக் தெரபி ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃப்ராய்டின் விழிப்புற்ற மனம், விழிப்புணர்வற்ற மனம் எனும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது இந்த தெரபி. நோயாளியின் விழிப்புணர்வற்ற மனநிலையில் அவரின் குழந்தைப் பருவ, பள்ளிப்பருவ நினைவுகள் இருக்கும். ஆனால் இவற்றில் நடந்த ஏதாவது விஷயங்கள் தற்கால வாழ்க்கையை வாழவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும். அந்த சம்பவம் சார்ந்த கோபம், ஆற்றாமை, விரக்தி, துயரம், வலி, வேதனை மனதில் இருப்பது ஒருவரின் நிகழ்காலத்தை நாசமாக்கும் திறன் பெற்றது. எனவே உளவியல் வல்லுநர்கள் தெரபியில் நோயாளியை பேச வைத்து அவரின் மனதிலுள்ள வலியை துல்லியமாக தெரிந்துகொண்டு, அந்நினைவுகள் அவரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதை பேசி புரிய வைக்கின்றனர். தெரபி வகுப்பை உளவியல் வல்லுநர் ஒருவர் நடத்துவர். ஒருவரை மட்டுமே அவர் சந்தித்து பேசுவார். அவருக்காக ஒதுக்கும் நேரம் ஒரு மணிநேரம். நோயாளி தனக்கு வரும் கனவுகளைப் பற்றி சொல்லவேண்டும். இதன் விளைவாக, அவர் மனதில் உள்ள எண்ணங்களை உளவியலாளர் குறிப்புகள் எடுத்துக்கொள்வார். கனவுகள் உணர்ச்சிகளின் குறியீடு என்பது ஃப