இடுகைகள்

கணினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டீப் லேர்னிங் தொழில்நுட்பத்தை நம்பலாமா?

படம்
            செயற்கை நுண்ணறிவை நம்பலாமா ?   டீப் லேர்னிங் என்பதில் இல்லாத அம்சங்களே கிடையாது . இதில் முகமறியும் தொழில்நுட்பம் , மொழிபெயர்ப்பு வசதி , விளையாட்டுகளை விளையாடுவது ஆகியவையும் உள்ளது . இதன் அடிப்படையில்தான் செயற்கை நுண்ணறிவு என்பது கடந்த பத்தாண்டுகாக தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது . டீப் லேர்னிங்கில் நிறைய சாதகமான அம்சங்கள் இருந்தாலும் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது , அப்ளிகேஷன்கள் முதல் தானியங்கி கார்கள் வரை இந்த அமைப்பில் இயங்குவது பாதுகாப்பானதுதானா ? கணினியில் இயங்கும் அல்காரிதம்கள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என பலரும் நினைக்கிறோம் . ஆனால் டீப் லேர்னிங்கில் இது சாத்தியமில்லை . கணினி குறிப்பிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் முறையை இப்போது மாற்றியுள்ளனர் . இதனை ஆர்ட்டிபிஷியல் நியூரல் நெட்வொர்க்ஸ் என்று அழைக்கின்றனர் . நமது மூளையில் நியூரான்கள் செய்யும் வேலைகளையே இந்த அமைப்பும் செய்கிறது . நியூரான்கள் எப்படி மூளையில் செய்கிறதோ அந்த முறை இன்னும் எளிமையாக்கி செயல்படுகிறது என கூறலாம் . 1950 களில் நியூரல் நெட்வொர்க்ஸ் பற்றிய ஆராய்ச்

நியூராலிங்க் சிப் மூலம் கணினியையும் மூளையையும் இணைக்க முடியுமா?

படம்
              நியூராலிங்க் ' சிப் ' ! நவீன தொழிலதிபர் எலன் மஸ்க்கின் நிறுவனம் , நியூராலிங்க் . இந்த நிறுவனம் , ஒருவரின் தலையில் சிப் பொருத்தி அவரின் மூளையிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்க்க முயலுகிறது . சிப் மூலம் மூளையில் நடக்கும் பல்வேறு தகவல் தொடர்புகளை கண்காணித்து அவற்றை முழுமையாக அறிவது , இந்த நிறுவனத்தின் முக்கியமான நோக்கம் ஆகும் . ஐடியா , ஆங்கில அறிவியல் திரைப்படம் போல இருந்தாலும் சாத்தியம் என அடித்துச் சொல்கிறார் நிறுவனத்தின் இயக்குநர் எலன் மஸ்க் . மூளையில் 3,072 மின்முனைகளை தலைமுடியை விட மெல்லிய வயர்களில் பிணைத்து மூளையில் நியூரான்களில் நடக்கும் தகவல்தொடர்புகளை நாம் பெறுவதுதான் இதில் முக்கியமான கட்டம் . இதனை லிங்க் என்று குறிப்பிடுகின்றனர் . மூளையில் நடைபெறும் தகவல்தொடர்பை அறி்வதன் மூலம் , மூளையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை துல்லியமாக அறியமுடியும் . தற்போது வயர்கள் இருந்தாலும் , எதிர்காலத்தில் வயர்லெஸ் முறையில் இந்த அமைப்பு செயல்படும் என நியூராலிங்க் நிறுவனம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது . மூளையில் மிக சிக்கலான அறுவை

தானியங்கி கார் ஆராய்ச்சி உண்மையில் நிஜமாகும் வாய்ப்புள்ளதா?

படம்
              தானியங்கி கார் ஆராய்ச்சியில் தேக்கம் ! டெஸ்லா கார் நிறுவனம் அண்மையில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது . தானியங்கி முறையில் இயங்கும் டெஸ்லா காரில் எச்சரிக்கை வாசகம் ஊடகங்களில் கவனிக்கப்பட்டது . ’’’ தானியங்கி முறையில் இயங்கும் காரில் , தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது . எனவே ஸ்டீரியங் வீலில் கைவைத்து வண்டியை இயக்குங்கள் . கவனமாக இருங்கள்’ ' என்று பொறுப்பு துறப்பு வாசகங்கள் கூறப்பட்டிருந்தன . தற்போதைய வாகனங்களில் டெஸ்லா நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகிக்கிறது . ஆனாலும் முழுமையாக தானியங்கி முறையில் கார்களை இயக்கும் முறையில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது . சில ஆண்டுகளுக்கு முன்னர் தானியங்கி கார்கள்தான் எதிர்காலம் என உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறின . தானியங்கி கார்கள் தயாரிப்புக்கான காலக்கெடுவை விதித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கின . ஆனாலும் இன்றுவரை ஒரு நிறுவனம் கூட முழுமையான ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை . இதற்கு தடையாக இருக்கும் காரணங்கள் என்ன ? தானியங்கி

தவளையில் செல் மூலம் செயல்படும் பயோபாட்! - பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்களின் முயற்சி!

படம்
              பரிணாம வளர்ச்சியை காட்டும் பயோபாட் ! டஃப்ட் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தவளையின் செல்களை வைத்து பயோபாட் என்ற உயிருள்ள கணினி ஒன்றை உருவாக்கியுள்ளனர் . அறிவியலாளர்கள் இன்று தங்கள் சிந்தனையை கணினிக்கு அளித்து அதன் மூலம் வாழ்க்கையை வடிவமைக்க முயன்று வருகிறார்கள் . இயற்கையிலுள்ள பல்வேறு உயிரினங்கள் கைகள் , கால்கள் இல்லாமல் வினோதமான உடல் அமைப்பைக் கொண்டு வாழ்கின்றன . இவற்றை கண்காணித்து ஆராய்ச்சி செய்வது கடினம் . இதற்காகவே இந்த உயிரினங்களின் செல்களைக் கொண்டு பயோபாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் . இதன்மூலம் அவற்றின் பரிணாம வளர்ச்சியைக் கணிக்கலாம் . இவற்றால் என்ற பயன் என்று கேள்விகள் எழலாம் . இவற்றின் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் , அணுஆயுதக் கழிவுகள் பிரச்னையைக் கூட தீர்க்க முடியும் . இவை கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட உயிரிகள் (CDO) என்று அழைக்கப்படுகின்றன . இந்த உயிரிகளுக்கு மூளையோ , அறிவுத்திறனோ கிடையாது . இவை உலகின் நடைமுறைப் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு , செல்களுக்கு இடையிலான தகவல்தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் அற

உணர்ச்சிகள் வழியாக ஒருவரை எளிதாக புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு! - பரபரக்கும் ஏஐ ஆராய்ச்சி உலகம்

படம்
  உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு ! செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி , மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி வருகிறது . செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் வளர்ச்சிபெற்று வருகிறது . பல்வேறு இணையத்தளங்களில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதும் ஏ . ஐ நுட்பம்தான் . புகைப்படங்களை பயிற்சி செய்து விலங்குகளை எளிதில் அடையாளம் காண கற்பதோடு மனிதர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவுத்துறை பயணிக்கிறது . எப்படியிருக்கிறீர்கள் , சாப்பிட்டீர்களா ? என்ற வார்த்தைகளை இன்று பலரும் வீடியோ அழைப்புகளிலும் , குறுஞ்செய்திகளிலும்தான் கேட்டு வருகிறார்கள் . இந்த அழைப்புகள் நேருக்கு நேர் பேசுவது போல இருக்காது . இதில் ஒருவரின் உணர்வைப் புரிந்துகொண்டு பேசினால் எப்படியிருக்கும் ? எல் கலியோபி என்ற பெண்மணி , அஃபெக்டிவா என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் . வண்டி ஓட்டும்போது , மின்னஞ்சல் அனுப்பும்போது ஒருவரின் உணர்வுகளை எளிதாக அடையாளம் காணமுடியும் என இந்நிறுவனம் கூறுக

அடுத்த ஆண்டில் 50ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சி புரோகிராமிங் மொழி! - மீண்டும் பிரபலமாவது எப்படி?

படம்
                  கணினிமொழி சி ! அடுத்த ஆண்டு சி மொழி , கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றது . இன்று நாம் பயன்படுத்தும் டிவி , வாஷிங்மெஷின் , மைக்ரோவேவ் ஓவன் , ஸ்மார்ட் பல்புகள் , காரின் டாஷ்போ்ர்டு ஐஓஎஸ் , ஆண்ட்ராய்ட் ஓஎஸ்கள் அனைத்துக்குமே அடிப்படை சி மொழிதான் . 2015 ஆம் ஆண்டு ஜாவா மொழியிடம் தனது பிரபலத்தை சி மொழி பறிகொடுத்து தற்போது மீண்டிருக்கிறது . இணையம் சார்ந்த கருவிகளின் விளைவாக 2017 வாக்கில் சி மொழி முன்னுக்கு வந்திருக்கிறது . 1972 ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த டென்னிஸ் ரிட்சி என்பவர் சி மொழியைக் கண்டுபிடித்தார் . 1980 வாக்கில் சி மொழி வணிகத்திற்கு கூட பயன்படத் தொடங்கிவிட்டது . இதனை லோலெவல் லாங்குவேஜ் என்று கூறுகிறார்கள் . அப்போது ஹை லெவல் என்றால் ஜாவா , பைத்தான் ஆகியவை வரும் . கணினியின் கெர்னல் எனும் பகுதி சி மொழியால் எழுதப்பட்டு வருகிறது . இன்று ரஸ்ட் , சி பிளஸ் பிளஸ் மொழியில் பல்வேற பரிசோதனை முயற்சிகளை புரோகிராமர்கள் செய்து வருகிறார்கள் . ஆனாலும் கூட சி மொழியின் எளிமையும் திறனு்ம் அதற்கு கைகூடவில்லை . ஒரு செயலை செய்வதற்கான கோடிங்கை சி மொழி

சிறந்த கணினி பொருட்கள் 2020!

படம்
                கம்ப்யூட்டர் கேமிற்கான டிவிக்கள் சாம்சங் க்யூஎல்இடி க்யூ 80 டி நல்ல பெரிய வீட்டை கட்டிவிட்டீர்கள் என்றால் அதில் செமையாக விளையாட இந்த டிவி உதவும் . பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் எக்ஸ் ஆகிய விளையாட்டு சாதனங்களுக்கு ஏற்றது . 65 இன்ச் அளவு கொண்டது . அசத்தும் க்யூஎல்இடி திரை உங்களுக்கு விளையாட்டு அனுபவத்தை பரவசமாக்கும் . சோனி எக்ஸ் 90 ஹெச் ஹெச்டிஎம்ஐ 2.1 அப்டேட் இல்லாமல் வந்துள்ள டிவி . பிளேஸ்டேஷன் விளையாட்டுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் டிவி என்பதால் விளையாட்டு பற்றி கவலைப் படாதீர்கள் . மற்ற அம்சங்கள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளன . எல்ஜி சிஎக்ஸ் அடுத்த தலைமுறை டிவி என்ற விளம்பரத்தோடு 55 இன்ச்சில் வெளிவந்துள்ளது எல்ஜி . எக்ஸ்பாக்ஸ் விளையாட்டை ஸ்மூத்தாக விளையாடலா்ம் என்று கூறப்பட்டுள்ளது . ஹெச்டிஎம்ஐ 2.1, 4 கே , நொடிக்கு 120 பிரேம்கள் என விளையாட்டி்ற் கு ஏற்றபடி தயாரித்திருக்கிறார்கள் . ஆபீஸூக்கு போகலாமா ? கிரியேட்டிவ் லைவ் கேம் சின்க் 1080 பி அனைத்து லேப்டாப்களிலும் வெப்கேம் உள்ளது . ஆனால் மீட்டிங்குகளில் சரியாக