இடுகைகள்

தெரிஞ்சுக்கோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை சக்தியில் இந்தியாவின் இடம் என்ன?

படம்
பசுமை சக்தி உலகம் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள், மின் வாகனங்கள் என போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் அதுதொடர்பான சட்டங்கள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பெட்ரோல் டீசல் என ஊற்றி ஓட்டினாலும் வருங்காலம் என்பது ஹைட்ரஜன், லித்தியன் அயன் பேட்டரி வண்டிகளாகவே இருக்கும் என்பது உறுதி. அத்துறை சார்ந்த நிறுவனங்களும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சந்தையை விட்டுவிடாது. தற்போது வரை உலகளவில் அதிகளவு கார்பன் வெளியிடும் நாடுகளில் சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2030க்குள் தனது கார்பன் வெளியீட்டு அளவை பெருமளவு குறைத்துக்கொள்வதாக இந்தியா கூறியுள்ளது. எவ்வளவு தெரியுமா 30-35 சதவீதம். தொண்ணூறுகளிலிருந்து 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வெளியேறிய கார்பன் அளவு 147 சதவீதம் என்கிறது சூழல் அமைப்புகளின் அறிக்கை. உலகளவில் இந்தியா வெளியேற்றும் கார்பன் அளவு 6.55 சதவீதம்தான். தனிநபர் வெளியேற்றும் கார்பன் அளவில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் மூலம் 250 பே

தெரிஞ்சுக்கோ! கப்பல் உடைப்பு - டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ! உலகில் தொண்ணூறு சதவீத வர்த்தகம் கப்பல் வழியாக நீர்நிலைகளில் நடைபெறுகிறது. பயன்படுத்திய கப்பல்கள்தெற்காசியப் பகுதிகளில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. இத்தொழிற்சாலைகள் இங்கு அதிகமாக உள்ளன. ஒரு கப்பலை முழுமையாக உடைத்து எடுக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகின்றன. கப்பலிலிருந்து பெறும் இரும்பில் 90 சதவீதம் கட்டுமானத்துறையில் பயன்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கப்பலை உடைக்கும் தொழிலாளர் ஒருவருக்கு தரப்பட்ட கூலி ஆறு டாலர். உலகிலுள்ள கப்பல்களில் 33 சதவீத கப்பல்கள் இந்தியாவிலுள்ள ஆலங் பகுதியில் உடைக்கப்படுகின்றன. இப்பகுதியில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம். வங்கதேசத்தில் கப்பல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் அளவு 25 %. ஒரு கப்பலை உடைத்தால் அதிலிருந்து கழிவாக பெறும் ஆஸ்பெஸ்டாசின் அளவு 6,800 கி.கி. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இறந்த கப்பல் உடைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1200. 1504 அடி நீளம் கொண்ட கப்பல், இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது. நன்றி - க்வார்ட்ஸ் 

சாவுக்கு ஆகும் செலவு! - புதைக்கவா, எரிக்கவா?

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது இறப்பு ஊருக்குச் செல்லும். அதில்தான் சில அசிங்கங்களும் நடக்கும். பொதுவாக துறவிகளை புதைத்து சமாதி  எழுப்புவார்கள். இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களை எரித்து சாம்பலை ஆற்றில் கரைப்பது இந்து மரபு. பற்றுகளிலிருந்து விடுதலை பெறுகிறார் என்று பொருள். மனித உடல் முற்றாக மண்ணோடு மண்ணாக 12- 20 ஆண்டுகள் வரை ஆகும். பிணங்களை எத்தனை அடி கீழே வைக்க வேண்டும் தெரியுமா? நான்கு அடி போதும் என்கிறார்கள். ஆனால் நாய், நரி என இழுத்து போட்டு அவமானம் செய்யாமல் இருக்க, 61 செ.மீ நீளத்திற்கு ஏதாவது சிறிய தடைகள்  வைப்பது சிறப்பு. முள் அல்லது பலகை வடிவிலான கற்கள். 54 சதவீத அமெரிக்கர்கள் இறந்தவுடன் உடலை புதைப்பதையே விரும்புகின்றனர். 72 சதவீத கல்லறைகளில் புதைப்பதற்கான தேவை அதிகரித்து வருவதை பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் இறந்தவர்களுக்கான சடங்கு சேவைகளுக்கான துறை மதிப்பு 20 பில்லியனாக உள்ளது. தோராயமான இறப்புச் சேவை கட்டணம் - அமெரிக்காவில் எவ்வளவு தெரியுமா - 8500 டாலர்கள். செல்லப்பிராணிகளை புதைத்து மரியாதை  செய்ய வேண்டாமா? அதற்கு ஆ

தெரிஞ்சுக்கோ - பாத்டப் குளியல்!

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! ஆங்கிலப்படங்களில் குளியலறைத் தொட்டியில் நாயகி படுத்து குளிப்பதை தரிசித்திருப்பீர்கள். படம் பார்ப்பதே அதற்குத்தானே? பாத்லப்பில் லக்ஸ் சோப்பு போட்டு நுரைக்க நுரைக்க குளித்து எழுவது, அசப்பில் எருமை குளத்தில், வாய்க்காலில் சுகமாக குளித்து பின் மேய்ச்சலுக்கு செல்லுவது போலவே இருக்கும். பாத்டப் குளியல் என்பது நிதானமாக குளிப்பது. குளித்த பிறகு அத்தண்ணீரை கொட்டிவிட்டு புது தண்ணீரை பிடித்து வைத்தால் அடுத்த வேளை குளியல் ரெடி. அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். குளியலறை கலை என்ற பெயரில் மட்டும் 4,54,000 இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாத் பாம் நிறுவனம் ஆண்டுதோறும் சம்பாதிக்கும் தொகை 20 மில்லியன் டாலர்கள். கிளாசியர் அழகு கம்பெனி நிறுவனர் எமிலி வெய்ஸ், தினசரி 45 நிமிடம் வெந்நீர் குளியல் போட்டால்தான் சுகம் கிடைக்கிறது என்கிறார். அதுவும் இரவில் இப்படி குளியல் போடுகிறாராம். பாத்டப்பில் 8.4 அவுன்ஸ் அளவு கொண்ட 55 டாலர் விலைகொண்ட சோப்புக்குமிழ்களை உருவாக்கும் திரவத்தை வெய்ஸ் பயன்படுத்துகிறார். குளியல் பொருட்களுக்கா

நிறுவனங்களில் பெண்கள் தோற்பது ஏன்?

படம்
தெரிஞ்சுக்கோ! பொதுவாகவே பெண்களிடம் ஒரு நிறுவனத்தைக் கொடுத்தால் அதனை தங்களது குழந்தை போலவே பார்த்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு நட்புறவாக நடந்துகொள்கிறார்களா என்று பார்த்தால் கஷ்டம். அதுவே ஆண்கள் இருந்தால் சகஜ மனநிலையை எளிதில் உருவாக்கிவிட முடிகிறது. இதற்கு அர்த்தம் இருபாலினத்தவரிடமும் சில பலம், பலவீனம் இருக்கிறது என்பதுதான். பெண்களை நம்பி நிறுவனத்தை ஒப்படைப்பது மிஷினரி, கோவில் என்று மட்டுமே நடக்கிறது. இதனை ஆங்கிலத்தில் கிளாஸ் கிளிஃப் என்கிறார்கள். அதற்கான டேட்டாவைப் பார்த்துவிடுவோம். ஒரு கம்பெனி சிறப்பாக நடந்து வருகிறது என்றால், ஆண், பெண் இரு பாலினத்தவரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆண்களைத்தான் இயக்குநர் பதவிக்கு பலரும் தேர்ந்தெடுத்தனர். 62 சதவீதம் பேர் ஆண்களே தகுதியானவர்கள் என்று நினைத்தனர். கம்பெனி இன்னைக்கோ நாளைக்கோ என கோமாவில் கிடக்கிறது. இப்போது ஆண், பெண் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் உடனே பெண் என கைதூக்கினார்கள். இம்முறை 69 சதவீதம் பேர் பெண்களுக்கு ஓட்டு குத்தினார்கள். யாஹூவின் கரோல் பர்ட்ஸ் வேலையை விட்டு நீங்கியபோது,

தகவல் சுருக்கம் - டேட்டா கம்ப்ரஸ்ஸன் - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! தகவல் சுருக்கம் என்பது இன்று பழைய வார்த்தை போல தோன்றும். ஒன்றுமில்லை. நாம் பயன்படுத்தும் சொற்களில் தேவையில்லாதவற்றை நீக்கினால் அதுதான் தகவல் சுருக்கம். இதுபற்றி தி நியூ கைண்ட் ஆஃப் சயின்ஸ் என்ற நூலில்,  மோர்ஸ் கோட்  எனும் தகவல் சுருக்க முறை 1838 ஆம் ஆண்டு தோன்றியது. இதில் e மற்றும் t  என்ற எழுத்துகளைத் தவிர்த்து எழுதும் முறையை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்தன. தகவல் தொழில்நுட்ப தியரின் தந்தையாக கிளாட் ஷனான் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். தகவல் வேகமாக சென்று சேரவேண்டும். அதேசமயத்தில் அதன் தரமும் குறையக்கூடாது என்று அன்றிலிருந்து இன்றுவரை டெக் கம்பெனிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே உலகை ஆளுவார்கள். அனைத்து மென்பொருட்களுக்கும் கருவிகளுக்கும் பொருந்தும் கோப்பு முறைகள் உருவாகுவது இன்று அவசியத் தேவையாக உள்ளது. அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். 1867 இல், சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகை பதிப்பாளர் ஜோசப் மெடில், முடிந்தளவு எழுத்துகளை சிக்கனமாக பயன்படுத்துவதை ஆதரிப்பவர். இப்படித்தான் ஃபேவரிட் என்ற எழுத்திலுள்ள இ எழுத்தை அகற்றல

இன்று நடப்பதை நேற்றே அறிய முடியுமா? - தேஜா வூ கதை!

படம்
தெரிஞ்சுக்கோ  - தேஜா வூ தேஜா வூ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரெஞ்சில் இதற்கு முன்னமே பார்த்தது என்று பொருள். பொதுவாக தாராளவாத கருத்துகள், யாத்ரீகராகச் சுற்றுவது, நிறைய நூல்களைப் படிப்பது, டஜன் கணக்கிலான படங்களைப் பார்ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு தேஜா வூ பாதிப்பு இருக்கிறது. உளவியல் பூர்வமாக இது சாதாரணமானது என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சம்பவங்களை முன்னமே பார்த்தது போல் இருப்பது யாரையும் சற்றே அதிர வைக்கும். அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். உலகில் மூன்றில் இருபங்கு பேருக்கு தேஜா வூ அனுபவம் நடந்திருக்கிறது. எனவே உங்களை நீங்களே அமானுஷ்யமானவர், அபூர்வமானவர் என நினைத்துக் கொள்ளாதீர்கள். தேஜா வூ அனுபவங்கள் நடப்பதற்கான குறைந்தபட்ச வயது எட்டு முதல் ஒன்பது வயது வரை. இது பற்றி 30க்கும் மேலான விளக்கங்கள் அறிவியலில் உண்டு. இவற்றைக் கொஞ்சம் நம்பலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகில் 32 சதவீதம் பேருக்கு தேஜா வூ அனுபவம் ஏற்படுகிறது என்றால் அவர்களில் பலரும் ஆண்டுக்கு நான்கு முறை அங்குமிங்கும் பயணிப்பவர்கள். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே எங்கும் பயணிக்காதவர்கள். ஆ

இ சிகரெட்டை கண்டு அரசுகள் பயப்படுவது இதனால்தான்!

படம்
giphy.com புகை நமக்கு பகை! இ சிகரெட்டுகளைத் தடுத்து புகையிலைக்கு ஆதரவாக இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் உலகளவில் இ சிகரெட்டுகள புகழ்பெற்று வருகின்றன. இதுவரை அமெரிக்காவில் 26 பேர் இதற்கு பலியாகி உள்ளனர். 1200க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இளைஞர்கள் நேரடியாக இ சிகரெட்டை இப்போது புகைக்கத் தொடங்கியுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம். புகையிலை கம்பெனிகள் இ சிகரெட்டை தடை செய்யக்காரணம், மரபான சிகரெட்டுகள் பீடிகளுக்கான லாபம் பறிபோகிறதே என்றுதான். பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி இருக்கின்றன. உண்மையில் இ சிகரெட்டுகளால் சிகரெட் சந்தை பேரழிவில் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியெல்லாம் கிடையாது என்று பதில் கிடைக்கிறது. தெரிஞ்சுக்கோ... உலகிலுள்ள நிகோட்டின் சந்தை மதிப்பு 785 பில்லியன் டாலர்கள். ஏறத்தாழ 89 சதவீத சந்தையில் சிகரெட்தான் ராஜா. 2013-2018 காலகட்டத்தில் சிகரெட்டுகளின் வளர்ச்சி 8 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதே காலத்தில் இ சிகரெட்டுகளின் வளர்ச்சி இருபது மடங்கு அதிகரித்துள்ளது. எங்கே என்கிறீர்க

பேச்சுலர் பார்ட்டி ரகசியங்கள்! - தெரிஞ்சுக்கோ டேட்டா!

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! வண்டி வாங்கினாலும் சரி, ஃபேப் இந்தியாவில் காட்டன் குர்தா வாங்கினாலும் சரி ட்ரீட் வெச்சே ஆகணும் என அடம்பிடிக்கிறார்கள் மில்லினிய அன்பர்கள். அப்புறம் வேற வழி? இன்று குறிப்பிட்ட தின கொண்டாட்டங்களை விட வலிய உருவாக்கும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் ஹேங் ஓவர் சினிமாக்களிலேயே வந்துவிட்டது. உடனே இந்தியாவுக்கு டவுன்லோடு செய்யும் பழக்கம் உருவாகி வருகிறது. அதுபற்றிய ஜாலி டேட்டா! கடந்த ஆண்டில் மட்டும் பேச்சுலர் பார்ட்டிக்கு செலவான தோராய தொகை 1400 டாலர்கள். இங்கிலாந்தில் பேச்சுலர் பார்ட்டி சந்தை மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. ஒருவருக்கு இந்த பார்ட்டியில் ஆகும் செலவு 471 பவுண்டுகள் ஆகும். குறைந்தது இப்பார்ட்டியில் பத்து பேர் கலந்துகொள்கிறார்கள். மூன்று நாள் பேச்சுலர் பார்ட்டியில் தோராயமாக 5 காக்டெய்ல் பானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகளவில் கல்யாண சந்தை மதிப்பு 300 பில்லியன் டாலர்களாக உள்ளது. நன்றி- க்வார்ட்ஸ் 

போதை அடிமைத்தனத்தை மீட்கும் கிராடம்! - தெரிஞ்சுக்கோ

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! கிராடம் எனும் புதிய போதை மருந்து வந்திருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் விளையும் பசுமையான மரத்தின் இலைகளிலிருந்து கிராடம் தயாரிக்கப்படுகிறது. இம்மருந்து அப்படியே கோகைன் போலவே செயல்படும். தற்போது நிறைய நாடுகள் தடை செய்யவில்லை என்றாலும் விரைவில் தடைக்கு உள்ளாகும் அனைத்து வாய்ப்புகளும் கிராடம் மருந்திற்கு உண்டு. தற்போது அமெரிக்காவில் கிராடத்திற்கு பெரும் மவுசு நிலவி வருகிறது. நீங்களும் சற்று முயற்சித்தால் இணையம் வழியாக கூட கிராடத்தை வாங்க முடியும். அசலா, நகலா என்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. அமெரிக்காவில் மட்டும் 3.5 மில்லியன் கிராடம் பயனர்கள் உள்ளனர். 95 சதவீத கிராடம் இந்தோனேசியாவிலிருந்து வருகிறது. மாதம்தோறும் 440 டன்கள் கிராடம் மேற்கு கலிமன்டன் பகுதியிலிருந்து உலகச்சந்தைக்கு வருகிறது. இது தூய்மைப்படுத்தப்படாத கிராடம் ஆகும். இரண்டு டோஸ்கள் என்ற அளவில் 200 மில்லியன் டோஸ்கள் மாதம்தோறும் விற்பனைக்கு வருகிறது. தாயகம் இந்தோனேசியாதான். இதன் மதிப்பு 130 மில்லியன் டாலர்கள் ஆகும். இணையத்தில் நூறு கிராம் கிராடமை நீங்கள் 30 டாலர் விலையில் வாங்கலாம்

தெரிஞ்சுக்கோ! - குப்பைத்தொட்டி

குப்பைத்தொட்டி என்பது நகரங்களுக்கானவை. கிராமங்களில் ஏதோ ஒரு இடத்தில் கொட்டி அதனை விற்றுவிடுவார்கள். ஆனால் நகரங்களில் அது சாத்தியமில்லை. காரணம், டன் கணக்கில் குவியும் அதன் வேகம்தான்.மேலும் சென்னையில் நுகரப்படும் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் பழவந்தாங்கல் சதுப்புநிலங்களின் மீது கொட்டப்படுகிறது. தற்போது அதனைப் பிரிப்பது தற்போது அரசுகளின் தோள்களின் மீது சுமத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 1, 2019 அன்று ஷாங்காய்  நகரில் அரசு, பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான அளவீட்டை  வெளியிட்டுள்ளது. மறுசுழற்சி, சமையலறை கழிவு, ஆபத்தான கழிவு பிற கழிவுகள் என அனைத்திற்கும் தனி குப்பைத்தொட்டியைப் பயன்படுத்த சீன அரசு கோரியுள்ளது. இது எந்தளவு குப்பைகளை மறுசுழற்சி செய்ய உதவும் என்று தெரியவில்லை. ஷாங்காய் நகரில் ஆண்டுதோறும் உருவாகும் குப்பையின் அளவு 9 மில்லியன் மெட்ரிக் டன்கள். நியூயார்க் நகரில் சுகாதாரத்துறை தினசரி சேகரிக்கும் குப்பையின் அளவு 12 ஆயிரம் டன்கள். 2017-18 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் செயல்பாட்டிலுள்ள குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை 1,131. வயர்களிலான குப்பைத்தொட்டியின் விலை நூறு