இடுகைகள்

பயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதியோர்களுக்காக பெரும் வீடுகள், இல்லங்கள், சேவைகள்!

படம்
            முதியவர்களுக்கான புதிய அடையாளம் ! இப்படி தலைப்பு வைத்ததும் காசா கிராண்டே ஏதாவது விளம்பரம் கொடுத்துவிட்டார்களா என அச்சப்படாதீர்கள் . விஷயம் அப்படிப்பபட்டதுதான் என்றாலும் , இது முதியவர்களை வைத்து பல்வேறு தொழில்நிறுவனங்கள் தொடங்கப்படுவது தொடர்பானது . இன்று அரசு வேலை , தனியார் வேலை என கடுமையாக உழைப்பவர்கள் வாழ்வதைப் பற்றி ஐம்பதுக்கு பிறகுதான் யோசிக்கிறார்கள் . ஆனால் அதற்குள் காலம் தலையில் வெள்ளை அடித்துவிடுவதோடு , பலருக்கும் முடி கூட கொட்டி விடுகிறது . அதற்குப்பிறகு மாமனார் வீட்டில் செய்துபோட்ட மோதிரம்தான் மிச்சமா என வாழவேண்டியதுதான் என நினைக்கிறார்கள் . ஆனால் பெருநகரங்களில் வயதானவர்கள் வேலைக்கு சென்றுகொண்டிருந்த காலத்தை விட இப்போது இன்னும் பெரியதாக வாழ்கிறார்கள் . வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட பிள்ளைகளைப் பற்றி இப்போது பெற்றோர் பெரிதாக கவலைப்படுவதில்லை . தங்களைக் கவனித்துக்கொள்ள அதற்கெனவே இருக்கும் சீனியர் சிட்டிசன் வில்லாக்களை தேர்ந்தெடுக்கிறார்கள் . அங்கு சென்று வாழ்கிறார்கள் . தனியாக அல்ல . அங்கும் இவர்களைப் போல வசதியான பல நூறு முதியவர்கள் வாழ்கிறா

பிறர் பேசும் கதைகளை நீங்கள் கேட்டு வெளிப்படுத்துவதில்லை! - சுதாமூர்த்தி, எழுத்தாளர்

படம்
  சுதா மூர்த்தி உங்களுக்கு நிறைய திறமைகள் உண்டு என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகிறோம். குழந்தைகளுக்கான  நூல்களை எழுதுகிறீர்கள். கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். கணினி பற்றியும் எழுதுகிறீர்கள். எப்படி எழுத்தார்வம் பிறந்தது? இங்கு ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சிண்ட்ரெல்லா, ஸ்னோவொயிட் கதைகளை எழுதுகிறார்கள். அக்கதைகளைத் தான் சொல்லுகிறார்கள். பெற்றோர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அந்த கதைகள் நமக்கு பொருந்தாது. நம்முடைய கூட்டு குடும்ப முறை, கலாசாரம், விழாக்கள் ஆகியவற்றுக்கு மேற்கத்திய கதைகள் பொருந்தாதவை. எனவே நான் அதற்கு ஏற்ப இந்திய பண்பாட்டு தன்மை கொண்ட கதைகளை ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன்.  நீங்கள் முதலில் கன்னட மொழியில் எழுத தொடங்கினீர்கள் அல்லவா? நான் பத்தாவது வரையில் கன்னடப் பள்ளியில்தான் படித்தேன். பிறகு 50வயது வயதில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலுள்ள டிஜேஎஸ் ஜார்ஜ் நான் எழுதுவதை பெரிதும் ஊக்குவித்தார்.  கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு எழுத தொடங்கியது கடினமாக இருக்குமே? உண்மைதான். இதுபற்றி அம்மாவிடம் புலம்பியிருக்கிறேன்.

தன்னைதானே உணரவைக்கும் ஒரு நெடும் பயணம்! - கார்வான்

படம்
              கார்வான் துல்கர் சல்மான் பெங்களூருவில் வேலை செய்பவர் . புகைப்படம் எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்ள நினைப்பவரின் எண்ணத்திற்கு அவரின் அப்பா சம்மதிப்பதில்லை . இதனால் வேண்டாவெறுப்பாக ஐடி கம்பெனி ஒன்றுக்கு வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார் . அப்போது அவரின் அப்பா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது . அதனை கார்கோ நிறுவனம் ஒன்றில் அனுப்பி வைக்கிறார்கள் . ஆனால் அதில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது . துல்கரின் அப்பாவுக்கு பதிலாக கொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடலை அனுப்பிவிடுகிறார்கள் . இவரின் அப்பா உடல் கொச்சிக்கு மாற்றி அனுப்பப்படுகிறது . இப்படி செல்லும்போது இவர்களிடம் உள்ள உடலுக்கு சொந்தக்காரரான தாஹிரா என்ற பெண்மணியின் மகள் , ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள் . அவளையும் அழைத்துச்செல்லும்படி நேருகிறது . இதன்படி வேன் ஓட்டுநரான சௌகத் , துல்கர் , தான்யா என மூவரின் பயணம் தொடங்குகிறது . இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை மூவருமே அப்பாவினால் பாதிக்கப்பட்டவர்கள் , ஒருவருக்கு அப்பா கொடுமைக்காரர் , இன்னொருவருக்கு புரியாத புதிர் , இன்னொருவருக்கு அப்பாவைப் பார்க்கவ

ஆற்றில் பயணிகளை முதுகில் சுமக்கும் யமராஜா! உத்தர்காண்ட்டில் புதுமை மனிதர்!

படம்
        sample picture cc       யமராஜா உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள திவானி ராமுக்கு ஐம்பது வயதாகிறது . அவர் பங்காபானி பகுதியில் வசிக்கிறார் . பருவகாலங்களில் மக்கள் ஆற்றைக் கடக்க முப்பது ஆண்டுகளாக உதவிவருகிறார் . ஊர் மக்கள் அவரை யமராஜா என்று அழைக்கின்றனர் . சிலசமயம் இந்த வேலைக்கு எருமையில் ஏறி வருவதால் இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது . ஆற்றைக்கடக்க நினைப்பவர்களை முதுகில் தூக்கிக்கொண்டு நடக்கும் துணிச்சல்காரர் இவர் . ஆற்றில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு நடப்பது என்பது சாதாரண பணியல்ல . வழுக்கும் பாறைகள் , நீரின் கணிக்கமுடியாத வேகம் என நிறைய பிரச்னைகள் உள்ளன . பதினான்கு வயதில் ராமுவுக்கு அவரது தந்தை ஆற்றில் நடக்க சொல்லித் தந்திருக்கிறார் . பல்வேறு பருவகாலங்களில் தனது பணியை நிறுத்தாமல் செய்துவருபவருக்கு , இப்போது அவரின் மகனும் துணையாக இருக்கிறார் . தனது சேவைக்கு குறிப்பிட்ட கட்டணம் தாண்டி அதிக பணத்தை எப்போதுமே ராம் நாடியதில்லை . பல்வேறு தொழிலாளர்கள் , அதிகாரிகள் , சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு இலவசமாகவே ஆற்றைக் கடக்க உதவுகிறார் . தற்போது ஆற்றைக் கடக்க அரசு இப்போது

கிலோமீட்டர்களை கணக்குப்போடாமல் பயணம் போகலாம்! கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்

படம்
      கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்     கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர் ஜியோ பேபி இசை சூரஜ் குரூப் பின்னணி சுஷ்யந்த் சியாம் கேரளத்தில் உள்ள சொந்த ஊரில் சின்ன மோட்டார்கள், வண்டிகளை பழுத்து பார்த்து வேலை செய்து வருகிறான் ஜோஸமோன். அவனுக்கு உள்ள கடமைகளில் முக்கியமானது. தங்கைக்கு கல்யாணம் செய்வது. அதற்கு காசுவேண்டுமே? இதற்காக அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலா பயணி கேத்திக்கு ஊரைச்சுற்றிக்காட்ட அப்பச்சன், ஜோஸமோனை தேர்வு செய்து அனுப்புகிறான்.  ஜோஸமோனுக்கு ஒரே ஆசை, அவனது அப்பாவின் புல்லட்தான். அதை அவனுடைய தந்தையாக பார்க்கிறான். ஆனால் அதனை பணமுடைக்காக விற்கும் சூழலில் கேத்தியின் வருகை அதனை தடுக்கிறது. சந்தோஷமாக வண்டியில் கேத்தியை கூட்டிக்கொண்டு செல்கிறான். கேத்தியைப் பொறுத்தவரை வாழ்க்கையும் காசுதான் முக்கியம். காசு இருந்தால் எல்லாமே வரும் என நம்புகிறாள். ஜோஸமோனுக்கு காசும் முக்கியம். உறவுகளும் முக்கியம் என்ற எண்ணம் மனதில் வலுவாக இருக்கிறது. இந்த இருவரும் செய்யும் பயணம் இருவருக்குள்ளும் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுதான் படம். ஜோஸமோன் ஆக டோவினோ தாமஸ், அப்பச்சன் ஆக ஜோஜூ ஜார்ஜ், கேத்தியாக

வாசிக்கவேண்டிய சாகச நூல்கள்!

படம்
பலரும் கொரோனா பாதிப்பால் தனிமையாக இருக்கும்படி நேரலாம். மேற்குலகில் தனியறையில் என்றால் இந்தியாவில் இங்கு குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும். டிவியில் படங்கள் சுவாரசியமாக இருந்தாலும் நூல்களைப் போன்ற அனுபவங்களை திரைப்படங்கள் தருவது இல்லை. சில சுவாரசியமான திரில் தரும் நூல்களைப் பார்ப்போம். லத்தீன் குடும்பத்தில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர் நோ ஆல்வாரெஸ். இவரது குடும்பத்தில் கல்லூரி படிக்கட்டில் கால் வைத்த முதல் ஆள் இவர். கனடா தொடங்கி குவாத்திமாலா வரை ஓடத்தொடங்கினார். இதன்பிறகுதான் அல்ட்ரா மாரத்தான்கள் பிரபலமாயின. இதுதொடர்பான அனுபவங்களை இந்த நூல் பேசுகிறது. அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்களுக்கு இப்போது போக முடியாது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? அதற்குத்தான் அந்த பூங்காக்களின் சிறப்பு என்ன, அங்குள்ள தாவர வகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிய இந்த நூல் உதவும். மியாமியிலுள்ள வின்வுட் வால்ஸ் என்ற இடம் பிரபலமானது. இந்த இடத்தில் பல்வேறு கலைஞர்கள் சுவர் ஓவியங்களை வரைந்திருப்பார்கள். அதனை படம் எடுக்க இளைஞர்கள் அலைமோதுகின்றனர். இங்கு சுவரோ

காந்தியின் மனதை உலுக்கிய நவகாளி பயணம்! - சாவி

படம்
பிபிசி தமிழ் நவகாளி யா த்திரை  சாவி பதிப்பாசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி தமிழ்டிஜிட்டல் லைப்ரரி நவகாளி யாத்திரை பற்றி இந்து தமிழ்திசையில ஆசைத்தம்பி எழுதியிருந்தார். அப்போதுதான் இதுபற்றி படிக்கவேண்டும் என்று தோன்றியது. அதற்காக தேடியபோது சாவியின் இந்த நூல் தட்டுப்பட்டது.  இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான போராட்டங்கள் அப்போது நடந்து வந்தன. முஸ்லீம் லீக் தொடங்கிய போராட்டங்கள் வன்முறைக்கான தொடக்கமாக இருந்தன. இதனை அப்படியே இந்து மகாசபை போன்ற இந்து அமைப்புகள் பெரிய கலவரமாக மாற்றின. இதன் விளைவாக கராச்சி, கொல்கத்தா, வங்கதேசத்தின் நவகாளி, தர்மாபூர், பீகார் ஆகிய இடங்களில் கடும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனை நீங்கள் கண்ணீரும் கம்பலையுமாக எழுதலாம். அதேசமயம் வார இதழுக்கான நகைச்சுவை கமழவும் எழுதலாம். சாவி, இரண்டாவது ரூட் பிடித்து வாசகர்களின் மனதை வென்றிருக்கிறார். இரண்டு நாட்கள்தான் காந்தியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்கி அவரை நவகாளி யாத்திரையைப் பதிவு செய்ய அனுப்புகிறார். சாவி அந்த நிகழ்ச்சியை மிக அழகாக, அங்கதச்சுவையோடு எழுதியுள்ளார். காந்தி, ராஜாஜி உர

நிலவுக்கு போகலாமா?

படம்
இஸ்ரோ சந்திரயானைத் தொடர்ந்து அதன் அடுத்த பார்ட்டுக்கு சென்றுவிட்டது. வரும் ஜூலை 15 ஆம் தேதி நிலவுக்கு அடுத்த பயணம் தொடங்குகிறது. சந்திரயான் 1 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இத்திட்ட மதிப்பு 978 கோடி ரூபாய். ஜிஎஸ்எல்வி 3 சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் கொண்டு செல்லவிருக்கிறது. 3.8 டன் எடை கொண்ட செயற்கைக்கோள் இது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செல்லும் இந்த ராக்கெட்டில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய கருவிகள் உண்டு. சந்திரயான் 2 செயற்கைக்கோளை சுமக்கும் ஜிஎஸ்எல்வி 4 டன் எடையைத் தூக்கிச்சுமக்கும் சமர்த்து கொண்டது. இதனை பாகுபலி என்று அழைக்கின்றனர். நிலவில் நிலவும் அசாதாரண சூழல்களைச் சமாளித்து ரோவர் அங்கு சரியாக இறங்குவது சாதனை. அத்தனை தகவல் தொடர்பையும் சரியாக ஒருங்கிணைப்பதும் அடுத்த சாதனை. இதில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 14 கருவிகளும், நாசாவின் கருவி ஒன்றும் உள்ளது. விக்ரம் எனும் ஆர்பிட்டரில் உள்ள ரோவர் நிலவில் இறங்கி 14 நாட்கள் சோதனை செய்ய உள்ளது. ரோவர் ஆர்பிட்டர் வழியே தகவல்களையும் படங்களையும் அனுப்ப உள்ளது. நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

2014- 2019 மாற்றங்கள் என்ன?

படம்
pinterest/creative gaga 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கும் விரைவில் நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. விலைவாசி உயர்வு என்பது பொதுவான ஒன்று. அதில்லாமல் பிரிவினைவாதம், அரசைக் கேள்விகேட்கும் நெஞ்சுரம் குன்றியது, அரசு அமைப்புகளின் நம்பிக்கை உடைந்துபோனது, வெற்றுப் பேச்சுகள், அநாகரிக செயல்கள், சுயநலன் அரசியல், போலி தேசபக்தி நாடகங்கள் என பல பாதிப்புகள் நேர்ந்திருக்கின்றன. பெட்ரோல் உயர்வு 71.56(2014) , 72.24(2019) டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 59.3         -  70.6 சென்செக்ஸ் 24,217 - 35,867 பிஎஸ்இ - 9,206  - 14, 196 ஏற்றுமதி (ஏப்-ஜூன்) பில்லியனில் 264   170 கழிவறை உருவாக்கம் 38%   98% காய்கறிகள் விலை(டெல்லி, கி.கி) உ.கிழங்கு 25 15 தக்காளி 15  34 வெங்காயம் 23   20 உள்ளூர் விமானப்பயணிகள்(கோடிகளில்) 6.7    13.6 நுகர்வோர் நம்பிக்கை 117.1 128.9 மாசுபாடு 8 வது இடம் 3 வது இடம் மொபைல் டேட்டா பயன்பாடு 33 எம்.பி - 8.3 ஜி.பி நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

சூப்பரான பயணங்களுக்கு ஏற்ற நகரம் எது?

படம்
pinterst பொதுவாக ஒரு நாட்டிற்கு எதற்கு செல்கிறீர்கள்? அங்கு அழகான இடங்கள் இருப்பதோடு, அந்நாட்டின் கலாசாரமும் ஈர்ப்பாக இருக்கும். அது ஒரு முக்கியமான காரணம்தானே? அண்மையில் எடுக்கப்பட்ட வணிகம் மற்றும் ஜாலி டிராவல் திட்டத்தில் ஜப்பானின் டோக்கியோ முதலிடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவின் டில்லி, மும்பையும் அதன் கலாசார விஷயங்களால் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு முன்னிலை பெற்றிருந்த சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகள் கீழே சரிந்துள்ளன. அதேநேரம் பாதுகாப்பான நாடு என்றால் சிங்கப்பூரை சந்தேகமின்றி கைகாட்டலாம். போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வணிக விஷயங்களிலும் சிங்கப்பூரே டாப் ஸ்பாட். நன்றி: டைம்ஸ்

சியர்ஸ் ஃபோக்ஸ் - இன்ஸ்டாகிராமில் காதல் தம்பதிகள்

படம்
Hiking.org இன்ஸ்டாகிராமைக் கலக்கும் ஜோடிகள் இவர்கள். இதில் என்ன புதுசு. அனைவரும் உலகை தம்பதிகளாக சுற்றிவந்து நம்மை பிரமிக்க வைக்கிறார்கள் என்பதுதான் செம ரவுசு. ரிஷப் - நிராலி -gypsycouple இழுத்தணைச்சு ஒரு உம்மா தரூ என்ற போஸில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடும் ஜோடி. உலகமெங்கும் 42.7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். போகும் இடமெங்கும் தெறிக்கும் ரொமான்ஸ் படங்களை ஷூட் செய்து பதிவிடுவதுதான் வெற்றிக்கு காரணம். பிடித்த ஸ்பாட்கள்: லேக் பேலஸ், உதய்பூர். கிரண் - சச்சின் wroom _with kiran _sachin தனித்தனி பைக்கில்  வ்வ்ரூம் என பாய்வது இந்த மும்பைத் தம்பதிக்கு பிடித்தமான ஒன்று. ஹோண்டா சிபிஆர் 250 ஆரில் ஒருலட்சத்து 75 கி.மீ பயணித்து சாதனை செய்திருக்கிறது இந்த ஜோடி. எனக்கு பில்லியனில் உட்கார்ந்து சென்று அலுத்துவிட்டது எனும் கிரண், முன்னர் ஐடியில் வேலை பார்த்தவர். சச்சின், ரேசிங் மனிதர். கிரண், பாரம்பரிய பஞ்சாபிக் குடும்பம் என்றாலும் பைக் ஓட்டுவதற்கு அஞ்சவில்லை. இரண்டே மாதங்கள்தான் ட்ரெய்னிங் எடுத்தேன். அப்புறம், நானே துணிச்சலாக வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டேன் என்கிறார் கிரண