இடுகைகள்

மருத்துவமனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோயாளிகளுக்கு தசை தளர்வு மருந்து கொடுத்து கொன்ற கொலையாளி - நெசட்

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் ஆர்ன்ஃபின் நெசட் நார்வே  சீரியல் கொலைகாரர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நெசட் மருத்துவத்துறை சார்ந்த கொலைகாரர். 1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். ஓர் மருத்துவமனையில் செவிலியராக இருந்தார். அப்பணியில் அங்கிருந்த 22க்கும் மேற்பட்ட நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றார். எத்தனை பேரை கொன்றீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, எனக்கு சரியாக நினைவில்லை என்று தில்லாக பேசினார். அதே தில்லுடன்தான் அனைத்து கொலைகளை சிம்பிளாக செய்தார். ஆர்க்டலிலுள்ள ஜெரியாரிக் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனத்தில் நெசட் இயக்குநராக இருந்தார். அங்குதான் கியூராசிட் எனும் தசை தளர்வு மருந்தைப் பயன்படுத்தி பலரையும் வைகுந்தம் அனுப்பி மகிழ்ந்தார். 22 பேர்களை கொன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் ஐந்து மாதங்கள் விசாரணை நடந்தது. நார்வே நாட்டு சட்டப்படி உச்ச தண்டனையாக 21 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. விடுதலையானவர் 2004ஆம் ஆண்டு முதல் தன் பெயரை மாற்றிக்கொண்டு நார்வேயில் வேறிடத்தில் வசித்து வருவதாக க

தற்கொலையில் சிறந்த அமெரிக்கா - சிதையும் இளைஞர்கள்!

படம்
giphy.com அமெரிக்காவை உள்ளிருந்து உடைக்கும் பிரச்னையாக தற்கொலை மாறி வருகிறது. ஆண்டுக்கு தோராயமாக 47 ஆயிரம் பேர் அங்கு தற்கொலை செய்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குடும்ப அமைப்பாகவும் இருக்கலாம். ஆனால் தற்கொலைகள் நடந்து வருவது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போர் சமயங்களில் நடந்த இறப்புகளை விட தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை அதிகம். அதுவும் குறிப்பாக 10 -24 வயது பிரிவில்தான் அதிகளவு தற்கொலை மரணங்கள் ஏற்படுகின்றன. ஏறத்தாழ 2007-2017 வரையில் 56 சதவீதம் தற்கொலைகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. தற்கொலை ஏன் செய்துகொள்கிறார்கள் என்று டக்கென கூறிவிடமுடியாது. ஏதாவது நிராகரிப்பு, தோல்வி, விரக்தி, ஹிக்கிகோமெரி போல சாதிக்க எதுவுமே இல்லையென்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். உளவியல் பிரச்னை என்றாலும் அமெரிக்கர்கள் உடனே நரம்புகளை அறுத்துக்கொண்டு செத்து விடுவதில்லை. 83 சதவீதம் பேர் மருத்துவர்களைச் சென்று சந்திக்கிறார்கள். பின்னரே தற்கொலைகளை சந்திக்கிறார்கள். அல்லது அதிலிருந்து மீள்கிறார்கள். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள சென்டர்ஸ்டோன் மனநல மருத்துவ

மருத்துவர்களுக்கு எதற்கு விடுமுறை? - ஒடிசா பரிதாபம்!

படம்
தோல் பாதிப்புக்காக அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவமனை கூட வேண்டாம் என்று ஞாயிறு ராயப்பேட்டை கிளம்பினேன். பொதுவாக எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் மருத்துவமனைகள் உண்டு. கொடுமுடி, சிவகிரி என இரண்டு மருத்துவமனைகளும்தான். ஆனால் ராயப்பேட்டையில் அப்படியில்லை. ஞாயிறு ஒருநாள் மட்டுமே எனக்கு விடுமுறை. நான் மற்ற வேலைநாட்களில் வந்து பார்ப்பது நடக்காத விஷயம். மருத்துவமனையில் பாதுகாவலரை அடையாளம் காட்டச்சொல்லி யோகா இயற்கை வாழ்வியல் மையம் நோக்கிச் சென்றேன். கதவு திறந்திருந்தது. உள்ளே நோயாளிகளின் இருக்கையில் ஒருவர் அமர்ந்து அங்கு பணியாற்றும் பெண் ஊழியருடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தார். நான் நுழைந்து மருத்துவரைத் தேடினேன். ஏன் என்கிறீர்களா? சித்த மருத்துவரைப் போல அடக்கமான மனிதர்களை எங்குமே பார்க்க முடியாது. அமைதியாக அறையில் சம்மணங்கால் போட்டு அகத்தியர் போல அமர்ந்துவிடுவார்கள். நாள்பட்ட வியாதிக்கார ர்கள் மட்டுமே வருவார்கள். அவர்களும் ஆறு மாதங்களுக்குள் காலாவதி ஆகிவிடுவார்கள்.இவர்களுக்கு வைத்தியம் செய்து அவரும் விரக்தியாகி விடுவார். உடனே ஊழியர் கேட்டார். என்னப்பா வேணும்? சித்தா டாக்டரைப் பார

அரசு மருத்துவமனைகளின் அவலம் தீர மோடிகேர் உதவும் - சேட்டன் பகத்

படம்
கடமையைச் செய்ய கையூட்டா? அரசு மருத்துவமனை அவலம்! உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சாபகேட்டின் விளைவாக 72க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துபோயுள்ளன. இதற்கு தனிநபர் பணிமாற்றம் எந்தளவு சாத்தியமான மாற்றத்தை, விழிப்புணர்வை அங்கு கொண்டுவரும் என்று எனக்குப் புரியவில்லை. இந்திய அரசு இந்தியாவில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களை நடத்தி வருகிறது. மேலும் இவை மட்டுமன்றி எல்ஐசி போன்ற லாபத்தில் இயங்கும் நிதிநிறுவனங்களும் கூட கையில் இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜனுக்கு மட்டும் அரசிடம் பணம் இல்லை என்றால் நாம் இந்த நிலைக்கு வெட்கப்படவேண்டாமா?  இந்தியாவில் அரசுத்துறையில் அலங்கோலத்திற்கு அரசு ஹோட்டல்கள் மற்றும் எம்டிஎன்எல், ஏர் இந்தியா சாட்சியாக இருக்கின்றன. உலகில் வேலை செய்யாமலிருக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் மருத்துவமனையில் தன் பணியைக் கடமையைச் செய்யவே காசு கேட்கிறார்கள். காந்தி காலத்து தர்மம் இதுதான்.  இந்த நிலையில் மருத்துவத்துறையை தனியாருக்கு கொடுப்பது சேவையை மேம்படுத்த உதவும். சேவையை க

அதிகரிக்கும் சுயமருத்துவ சோதனைகள்

படம்
மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்னதாக நோய் பற்றி அறியும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. செகண்ட் ஒப்பீனியனாக நோய் பற்றி அறிவது செலவு குறித்தும், மருந்து குறித்தும் அறிய இது உதவுகிறது. அதேசமயம், உடலுக்கு தகுந்தாற்போல அல்லாது நோய் குறித்த பொதுவான தன்மைகளைப் படிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை சைபர் காண்டிரியா என்று குறிப்பிடுகின்றனர். 205 ஐடி பணியாளர்களிடம் இது குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 19.5 சதவீதம் பேர் இணையத்தில் நோய் குறித்து தகவல்களைத் தேடுவதும், 20 சதவீதம் பேர் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதுகுறித்து இணையத்தில் தேடுவதும் தெரிய வந்துள்ளது. 24.4 சதவீதம் பேர் பாடல், படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் திடீரென  நோய் குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.  10.7 பேர் நோய் குறித்து பாதிப்புகள் குறித்தும் படிக்கின்றனர். 17.6 சதவீதம் பேர் இணையத்தில் படித்த நோயின் பாதிப்பு தங்களிடம் உள்ளதாக நினைத்து அஞ்சி நடுங்குகின்றனர். இதில் இணையத்தில் உள்ள பாதிப்புகளால் 9.8 சதவீதம் பேர் கவலைப்பட்டுக்கொண்டே உள்ளனர். இணையத்தில் தான் படிப்பதை மருத்துவரிடம் விவரிக்கும்