இடுகைகள்

விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்ஐசி முகவரின் ஆன்மிகத்தேடல் பயணம் - வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்

படம்
  வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்  கிழக்கு பதிப்பகம்  நாவல்  சந்தானம் என்ற எல்ஐசி ஏஜெண்ட், திருவண்ணாமலையில் கணபதி என்பவரைச் சந்திக்கிறார். அதன் வழியாக வேதமூர்த்தி என்ற சாமியாரைப் பற்றி அறிவதோடு அவரது சீடர்களையும் சென்று சந்திக்க செல்கிறார். இதன் வழியாக அவர் பெறும் அனுபவங்கள்தான் கதை.  ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம், அவர்களது சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்குகிறது. மாதச்சம்பள வேலைக்குப் போகவேண்டும் என நினைத்த பால்பாண்டி, சிலம்பம் கற்றுக்கொடுப்பவராக மாறுகிறார். கண்பார்வை இல்லாத ஹரி, குருவின் தீட்சை பெற்று அடுத்த குருவாக மாறுகிறார். இறந்துபோன அம்மாவின் நினைவில் இருந்து மீளாத வைரவன், நகரத்தார் விடுதிக்கு பொறுப்பாளராகிறார். மடத்தின் விடுதியில் வளர்ந்த கோவர்த்தனம் பத்து ஆண்டுகள் அலைந்து திரிந்தபிறகு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மகன் அகாலமாக இறந்துபோக, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து அதன் வழியாக துக்கத்திலிருந்து மீள முயல்கிறார் கட்டுமானக் கலைஞர் சிவராமன். ஒட்டுமொத்த குடும்பமே தற்கொலை செய்து இறக்க, மடத்தில் துறவியாகி வாழ்கி

பட்டுநூல் மாவீரனின் மறுபிறப்பு பழிவாங்கல் கதை!

படம்
  ஸ்வார்ட் டைனஸ்டி 23 எபிசோடுகள் - மொத்த எபிசோடுகள் 30க்கும் அதிகம சீன டிராமா ராக்குட்டன் விக்கி  பா எனும் வாள் பயிற்சி அகாடமி இருக்கிறது. அதன் தலைவர் ஹெங் என்ற அரசருக்கு போரில் உதவுகிறார். இதனால் அரசர மூன்று ராஜ்யங்களையும் வெற்றி கொள்கிறார். ஆனால் போரின் இறுதியில் வாள் பயிற்சி அகாடமி தலைவரின் பங்களிப்பு காரணமாகவே தான் வெற்றிபெற்றோம் என தாழ்வுணர்ச்சியால் தவிக்கிறார். இதிலிருந்து மீள துரோகம் செய்து வாள் பயிற்சி அகாடமி தலைவரைக் கொல்கிறார். இதில், அவருக்கு அகாடமி தலைவர் காதலியும் உதவுகிறார். இருவரும் சேர்ந்து அவரை விருந்து ஒன்றில் தாக்கி கொல்கிறார்கள். பிறகு அந்த காதலி மன்னரை மணந்துகொள்கிறாள். அந்த துரோகத்தை எதிர்கொள்ள முடியாத வாள்வீரர், தன்னைத்தானே அழித்துக்கொண்டு இறந்துபோகிறார். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை.  அகாடமி தலைவரிடம் பயிற்சி செய்த மாணவர்கள் சிலர், அவருக்காக பழிவாங்க காத்திருக்கிறார்கள். அதற்கெனவே உயிரை பத்திரமாக வைத்திருக்கிறார்கள். மற்றும் சிலரோ, ஹெங் அரசில் இணைந்து சுயநலமாக மாறி தங்கள் வாழ்க்கைக்கு என்ன கிடைக்கும் என பார்க்கிறார்கள். நிகழ்காலத்தில், ஹெங் நாட்டில்

அப்பாவியான பங்குச்சந்தை தரகன் தன்னை சைக்கோபாத் கொலைகாரனாக நினைத்துக்கொண்டால்....

படம்
சைக்கோபாத் டைரி  கே டிராமா பதினாறு எபிசோடுகள்  ராக்குட்டன் விக்கி ஆப்  பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன். இளகிய இதயம் கொண்ட அப்பாவி. எனவே, அவனை பலியாடாக்கி ஒரு நிறுவனத்தைப் பற்றிய அறிக்கையை தயார் செய்யச் சொல்கிறார்கள். அந்த வேலை கூட அவனது நண்பன் செய்யவேண்டியதுதான். ஆனால் அவன் நாயகனின் தலையில் கட்டிவிடுகிறான். அதை அவன் தயாரித்துக் கொடுத்த அந்த நேரத்தில் அதிலுள்ள தகவல்களால் அந்த நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது. இதை வைத்து அவனை வேலையை விட்டு நீக்க முயல்கிறார்கள். தனது நெருங்கிய நண்பனே இப்படி துரோகம் செய்கிறானே என நொந்துபோன நாயகன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். அப்படி தற்கொலை செய்ய முயலும்போது, யாரோ ஒருவர் வலியில் முனகுவது போல சத்தம் கேட்க, கீழே வந்து எட்டிப்பார்த்தால் ஒருவன் வயதான ஒருவரைக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறான். அதை நாயகன் மறைந்திருந்து பார்க்கிறான். அவன் கோழை, அப்பாவி. எனவே, அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது முதியவர் கொலைகாரனது டைரியை தட்டிவிடுகிறார். அதை நாயகன் எடுத்துக்கொண்டு ஓடும்போது போலீஸ்காரில் அடிபட்டு ரெட்ரோகிராட் அம்னீசியாவில

மூன்றாவது பிறப்பில் எதிரிகளை நாயகன் எதிர்கொண்டு வெல்வானா?

படம்
  அகெய்ன்ஸ் காட்ஸ்  மாங்கா காமிக்ஸ்  மான்வா.காம்.  இதில் நாயகன் பலவீனமானவன். அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமணம் கூட ஒரு நன்றிக்கடனை கழிக்கவே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை கழுதையில் உட்கார வைத்து அழைத்து வரப்படுகிறான். அவனது சொந்தக்காரர்கள் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். மாப்பிள்ளை பலவீனமான உதவாக்கரை என ஊருக்கே தெரிகிறது. அதாவது அவன் தற்காப்புக்கலை கற்க முடியாதபடி உடலில் பிரச்னை இருக்கிறது. மேலும் அவனது அண்ணணுக்கே, தம்பி கட்டிக்கொள்ளும் பெண் மீது பொறாமை உள்ளது. எனவே,  தம்பிக்கு விஷத்தை டானிக் என கொடுத்து குடிக்கச் செய்கிறான். அப்போது அவனது உடலில் வேறு ஆன்மா ஒன்று குடியேறுகிறது.  அந்த ஆன்மாவினுள்ளே பொக்கிஷமாக கருதப்படும் விஷம் உள்ளது. அந்த விஷம் டானிக்கிலுள்ள விஷத்தை முறிக்கிறது. புதிய உடலில் குடியேறிய ஆன்மாவுக்கு இது மூன்றாவது வாழ்க்கை. ஏற்கெனவே இரண்டு வாழ்க்கை வாழ்ந்து இரண்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பிறவியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கவனிக்கத் தொடங்குகிறது. இதில் ஆறுதல், அவனுக்கு அத்தை முறை வரும் அவனது வயதுள்ள பெண்ணும்,

தனது குடும்பத்தை அழித்த படைத்தளபதியை பழிவாங்க முயலும் பலவீனமான எல்லைப் பாதுகாப்பு படை வீரனின் போராட்டம்!

படம்
  எவர் நைட் சீன டிராமா முதல் பாகம் அறுபது எபிசோடுகள்  நிங்க் சூ, வெய் சிட்டி ராணுவத்தில் வேலை பார்க்கிறான். அவனை மரம் வெட்டுபவன் என கூறிக்கொள்கிறான். எல்லையில் உள்ள கொள்ளைக்காரர்களை அடித்து உதைத்து கொல்வதுதான் வேலை. அவனுக்கு வீட்டில் வேலை செய்ய சாங்சாங் என்ற சிறுமி இருக்கிறாள். அவளை குழந்தையாக இருக்கும்போதில் இருந்து நிங்க் சூ , தெருவில் இருந்து எடுத்து வளர்க்கிறான். இருவருக்குமான மனப்பொருத்தம் அந்தளவு நேர்த்தியாக உள்ளது. உடல் இரண்டு என்றாலும் மனசு ஒன்று.  இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நிங்க் சூ, ராணுவ வீரன். அவனுக்கு வீட்டில் சாப்பாடு தயாரிப்பது, உடைகளை துவைப்பது, வெந்நீர் போடுவது என அனைத்து வேலைகளையும் சாங்சாங் செய்கிறாள். அவளுக்கு நிங்க் சூ சொல்வதுதான் எல்லாம். வேறு எதுவும் முக்கியமல்ல.  தனது பெற்றோரைக்கொன்றவர்களை பழிவாங்க உடல்பலத்தோடு ஆன்மிக ஆற்றலும் தேவை என நிங்க் சூவுக்குத் தெரியும். எனவே, டேங்க் பேரரசின் தலைநகரத்தில் உள்ள டேங்க் அகாடமியில் சேர முயல்கிறான். இத்தனைக்கும் அவனுடைய உடலில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் அனைத்துமே அடைபட்டுவிட்டன. ஆனாலும் தற்காப்புக்கலைகளை தொடர்ந்து

ஆற்றல் மாநாட்டை உருக்குலைக்க முயலும் உள்நாட்டு தீவிரவாதிகளை தடுக்க முயலும் கமாண்டோ படையின் வீரதீரம்!

படம்
  operation special warfare c drama 35 எபிசோடுகள்  ப்ளூலைட்னிங் என்ற கமாண்டோ படை. அதில் மொத்தம் பதினான்கு வீரர்கள். எட்டு பெண்கள். ஆறு ஆண்கள். இவர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் போராடி தீவிரவாதிகளை வீழ்த்தி தூய ஆற்றல் மாநாட்டை எப்படி வெற்றிகரமாக நடத்தினர் என்பதே கதை.  இதில் எட்டு பெண் கமாண்டோக்கள் உள்ளனர். அவர்களில் நிங் மெங்தான் நாயகி. இவருடைய அண்ணன் தீவிரவாத தாக்குதலில், தங்கையைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோவார். இதன் விளைவாக அம்மாவிற்கு அழுது அழுதே கண் பார்வை போய்விடும். நிங்மெங், தனது அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்க ராணுவத்தில் குறிப்பாக கமாண்டோ படையில் இணைவார். ஆனால், கமாண்டோ படை கேப்டன், நிங் மெங்கை மட்டும் வெளியேற்றுவதில் குறியாக இருப்பார். அவரை திட்டுவார். இழிவு செய்வார். ஆனால் நிங்மெங் திறமை மீது கமாண்டோ படையின் உயரதிகாரிக்கு நல்ல அபிப்பிராயம் நம்பிக்கை இருக்கும். எனவே அவர் அவளை வெளியேற்றக்கூடாது என கேப்டனை மிரட்டுவார்.  அடிப்படையில் பார்த்தால் தேசப்பற்று சீரியல்தான். ஆனால், ராணுவத்தில் கூட பெண்களை ஆண் வீரர்கள்தான் காப்பாற்ற வேண்டும். அவர்கள் செய்யும் பணியின்

மருத்துவரை வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்களை பழிவாங்க வரும் ராவணாசுரா!

படம்
  ராவணாசுரா இயக்கம் சுதீர் வர்மா ரவிதேஜா, பரியா அப்துல்லா, அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ் பின்னணி இசை - ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர் நகரில் உள்ள முக்கியமான தொழிலதிபர் ஒருவரை, மற்றொரு பிரபலமான ஒருவர் பகிரங்கமாக மதுபான பாட்டிலால் குத்திக்கொன்றுவிட்டு துப்பாக்கியைக் காட்டி ஓட்டல் ஊழியர்களை மிரட்டிவிட்டு தலைமறைவாகிறார். அந்த வழக்கு ரவீந்தர் என்பவரின் அலுவலகத்திற்கு வருகிறது. அவரது முதலாளி சட்டநிறுவனத்தை நடத்தி வருகிறார். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரின் மகள் வழக்கை ஏற்று வாதாட கூறுகிறாள் அவள் கூற்றுப்படி, அவளது தந்தை, தான் அந்தக்கொலையை செய்யவில்லை. கொலை நடந்தபோது தான் மயக்கமாக காரில் இருந்ததாக கூறுகிறார். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் கொலை செய்துவிட்டு நிதானமாக நடந்து சென்றதற்கான அழுத்தமான ஆதாரங்கள் மனிதர்களின் நேரடி சாட்சியமாகவும் சிசிடிவியில் காணொலியாகவும் பதிவாகியுள்ளது.  இதற்கடுத்து, இன்னொரு பிரபலமான அடியாள் ஒருவர போலீஸ் கமிஷனரின் அலுவலகத்திற்கு வந்து கமிஷனரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கிறார். இதை காவலர்களே நேரடியாக பார்த்துவிடுகிறார்கள். அவரை தேடிப்பிடித்து கைது செய்யும்போது அவர

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் போல வெட்டப்பட்டாலும் அவள்

குடும்பத்தை அழித்தவர்களை நிதானமாக துப்பறிந்து கொல்ல முயலும் நாயகன்!

படம்
  Decline c drama  7 episodes சீன தொடர் சர்வ சாதாரணமாக 24, 35 என எபிசோடுகளை இழுத்துவிட்டு பார்வையாளர்களை கஷ்டப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்போது சில தொடர்கள் அதன் மையப்பொருட்களை பொறுத்து எபிசோடுகளை சுருக்கி வருகிறார்கள். கிடைக்கும் பயனாக, நமக்கு டேட்டா சற்று மிச்சமாகிறது.  கதையை, துண்டு துண்டாக கூறி முக்கியமான முழுக்கதையை ஒருவழியாக இறுதியாக சொல்லி முடிக்கிறார்கள். நாயகன் ஒரு துப்பறிவாளன். நன்றாக வாழ்ந்து அழிந்துபோன குடும்பத்தின் வாரிசு. சீன நகரங்களில் நடக்கும் அமானுஷ்ய கொலைகளை ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதே அவனது வேலை. எதற்காக இதை செய்கிறான் என்பது அவனது குடும்பம் படுகொலையான விவகாரம் சம்பந்தப்பட்டது. கதையின் இடையே நாயகன் தனது கடந்தகாலம் பற்றி அவனது தற்காப்புக்கலை தெரிந்த நண்பனிடம் கூறுகிறான். அவன் அந்தளவு நெருக்கமான நண்பனா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம்.  ஒரு நாடக குழு நகரத்திற்கு வருகிறது. அதில் உள்ள பதினொரு பேர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டுபேர் மட்டும் காணவில்லை. இதன் பின்னாலுள்ள மர்மத்தை நாயகன் சூ சென்க்ஸி கண்டுபிடிக்கிறான். இதற்கு அவனது தற

அண்டர்கவர் ஏஜென்டாக இருந்து காணாமல் போன அம்மாவைக் கண்டுபிடிக்க செல்லும் மகனின் கதை!

படம்
  சேஸ் தி ட்ரூத்  24 எபிசோடுகள் சீன டிராமா நாயகன் போலீஸ் அதிகாரி. அவனது அம்மா, சிறுவயதிலேயே வடமேற்கு ஓநாய் குழுவைப் பிடிக்க அதில் இடம்பிடித்தவர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவருடனான தொடர்பு காவல்துறையிடம் இருந்து துண்டிக்கப்படுகிறது. அவர் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா, காவல்துறைக்கு துரோகம் செய்துவிட்டாரா என பல கணிப்புகள் நிலவுகின்றன. நாயகன், தனது அம்மாவைத் தேடி வடமேற்கு ஓநாய் குழுவைத் தேடி கிளம்புகிறான். இதில் அவன் சந்திக்கும் சவால்களே கதை.  இந்த தொடரின் பலம், சண்டைக்காட்சிகளும், உணர்ச்சிகரமான பாசம் தொடர்பான உரையாடல்களும்தான். அதுதான் தொடரை பார்க்க வைக்கிறது. சுவாரசியமானதாக மாற்றுகிறது.  தொடர் நெடுக ஓநாய்களின் ஓவியங்கள், அதன் பொம்மைகள், கிராபிக்சில் ஓடிவரும் ஓநாய்கள் என பார்க்க அழகாக இருக்கிறது. மனிதர்கள் நகருவது போலவே கேமராவும் ஹான்பெய், காலிசா, பாலைவனம், மலைதொடர்கள் என நகர்கிறது. கதையின் வழியாக அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. காவல்துறைக்கும், வடமேற்கு ஓநாய் குழுவுக்கும் நடைபெறும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் இறுதிப்பகுதியில் வடமேற்கு ஓநாய் குழுவின் தலைமை அலுவல