இடுகைகள்

விஷம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூஞ்சை உள்ள பகுதியை வெட்டியெடுத்துவிட்டு பிரெட் சாப்பிடலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  Fungus bread image -TOI உணவில் பூஞ்சை உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டு சாப்பிடலாமா? உணவில் பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிய்த்துவிட்டு சாப்பிடலாம் என சாமர்த்தியமாக நினைக்கிறீர்கள். ஆனால் தாக்கப்படாத பகுதியில் கூட பூஞ்சை நச்சு இருக்க வாய்ப்புண்டு. உணவைத் தாக்கும் பல்வேறு வித பூஞ்சைகள் உள்ளன.  சீஸைத் தாக்கும் பென்சிலியம் (Penicillium), ஸ்ட்ராபெரியைத் தாக்கும் பாட்ரைடிஸ் (Botrytis) ஆகியவை வரை உள்ளன. பூஞ்சைகள் ஏற்படுத்தும் நச்சுக்கு மைக்கோடாக்சின் (Mycotoxins)  என்று பெயர். இவை தாக்கினால் உடல் நடுக்கம், வாந்தி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும். அஃப்லாடாக்சின் (Aflatoxins)என்ற பூஞ்சை நச்சு பாதிப்பு ஏற்பட்டால், ஒருவரின் டிஎன்ஏவே தாக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும். முடிந்தவரை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட உணவுப்பொருளை தூக்கி எறிந்துவிடுவதே நல்லது.  உலகிலேயே அதிக விஷம் கொண்ட மரம் உள்ளதா? வடக்கு, மத்திய தெற்கு அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் ஹிப்போமனே மன்சினெல்லா  (Hippomane mancinella) இனத்தைச் சேர்ந்த கடும் விஷம் கொண்ட மரம் உள்ளது. கடற்புரங்களில் உள்ள மாங்குரோவ் காடுகளில் 15 மீட்டர் உயரத்திற்கு இம்மரம் வளர

டிராகன் போல நெருப்பை உமிழும் உயிரினம்!

படம்
  கேள்வியும் பதிலும்! டிராகன் போல நெருப்பை உமிழும் உயிரினம் உண்டா? வாயில் நெருப்பை உமிழும் உயிரினம் இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதில். நெருப்புக்கு இணையாக வேதிப்பொருளைப்  பின்புறமாக உமிழும் உயிரினம் உண்டு. அதன் பெயர், பாம்பர்டியர் பீட்டில் (Bombardier beetle). இந்த வண்டு பிறரால் தாக்கப்படும்போது சூடான, எரிச்சல் உண்டாக்கும் திரவத்தை விசிறியடிக்கிறது. இதில் இரு வேதிப்பொருட்கள் உள்ளன.  ஹைட்ரோகுயினோன் (Hydroquinone), ஹைட்ரஜன் பெராக்சைடு (Hydrogen peroxide) இந்த இரண்டுமே வண்டின் வயிற்றுப் பகுதியில் தனித்தனி இடங்களில் சேமிக்கப்படுகிறது. தேவைப்படும் அவசரநிலையில், ஒன்றாக கலக்கப்பட்டு வெளியேறுகிறது. இதனை ஏதேனும் உயிரினம் விழுங்கினால் கூட வேதிப்பொருட்களை ஸ்ப்ரே செய்வதால், இதனை கீழே துப்பிவிடுகின்றன.  நர்ட்லெஸ் (Nurdles) என்றால் என்ன? சிறிய பிளாஸ்டிக் துண்டு அல்லது துகள்கள் எனலாம். இதனை பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் பயன்படுத்துகிறார்கள். தோராயமாக ஆண்டுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் டன்கள் தயாரிக்கப்பட்டு நிலம், நீரில் கழிவாக தேங்குகிறது. கடலில் நர்ட்லெஸ் கழிவுகள் போடப்படுவதால், கடல் உயிரினங்கள்

எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021

படம்
  நூல் அறிமுகம் தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ் சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன் நியோகி புக்ஸ் 350 மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம்.  எ பேர்ட் ஃபிரம் அஃபார் அன்சுல் சதுர்வேதி பான் மெக்மில்லன் 399 1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது.  பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட் லெமோனி ஸ்னிக்கெட்  ஒன்வேர்ல்ட் 499 எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை.  தி எக்ஸைல் ஆப் முகுந்தா ஆர்பிட் பக்ஷி ஆலெப் புக் கம்பெனி 395 மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின் மகன் முகுந்தன். அவர் இப்போத

தனது தொழிற்சாலை சகாக்களுக்கு காபியில் விஷம் கலந்த சைக்கோ கொலைகாரர் - கிரகாம் யங்

படம்
                கோடரிக் கொலைகள் ! பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அமெரிக்கர்கள் , பண்ணை வீட்டில் வசித்தனர் . அவர்கள் அங்கு கத்தி , கோடரி , கடப்பாரை என பல்வேறு கருவிகளை வைத்துக்கொண்டு வேலைகளை செய்துகொண்டிருந்தனர் . இதனால் அங்கு நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களிலும் கோடரி , கத்தி ஆகியவை முக்கியமான கொலை பொருட்களாக இருந்தன . இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ? இப்போதும் கூட கோபம் வரும்போது கையில் கிடைப்பதை எடுத்து பிறரை அடிப்பவர்கள் இருக்கிறார்கள்தானே ? 1836 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ராபின்சன் என்ற செல்வச் செழிப்பான குடும்பத்தில் வளர்ந்தவர் , கொலையாளியாக மாறினார் . அப்போது நியூயார்க்கில் புகழ்பெற்றிருந்த விலைமாது ஹெலன் என்பவரை கோடரி மூலம் மண்டையை பிளந்து கொன்றார் . இதனால்தான் ரிச்சர்ட் அந்த நகரில் பிரபலமானார் . முதல் உலகப்போர் காலகட்டத்தில் பெல்லா குன்னஸ் என்ற பெண்மணி , ஒரு டஜன்பேர்களுக்கு மேல் கோடரியால் வெட்டி கொன்றார் . அப்படிதான் இந்த கொலைகள் வெளியானபோது ஊடகங்கள் பேசிக்கொண்டன . 1940 களில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜாக் பேர்ட் என்பவர் , கோடரியால் ஏராளமான வெள்

வாளின் முனையால் விதியுடன் போரிட்டு காதலனை வெல்லும் வீராங்கனை! - லெஜெண்ட் ஆப் ஃபெய்

படம்
                      லெஜண்ட் ஆப் ஃபெய் சீன தொடர் 51 எபிசோடுகள் யூட்யூப் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட தனது முன்னோர்களுக்காக தற்காப்புக்கலையைக் கற்று துரோகிகளை வீழ்த்தும் மாபெரு்ம் வீரப்பெண்ணின் கதை . 48 ஸ்ட்ராங்ஹோல்ட் என்ற வம்சத்திற்கும் அதன் பரம எதிரியான திஷா மேனர் என்ற வம்சத்திற்கும் எப்போதும் பகை நிலவி வருகிறது . இதற்கு முக்கியமான காரணம் , திஷாவைச் சேர்ந்த ஷென் தியான்சு என்ற பழுப்பு ஓநாய் தலைவர் , சில பொக்கிஷங்களை அபகரிக்க தந்திரமாக விஷத்தைப் பயன்படுத்தி 48 ஸ்ட்ராங்ஹோல்டைச் சேர்ந்த லீ செங் , அவரது நண்பரான யின் குலத்தைச் சேர்ந்த யின் வெனலான் ஆகியோரையும் வீழ்த்துகிறார் . இதனால் அந்த வம்சங்களில் திஷாவைச் சேர்ந்த ஆட்கள் என்றாலே கத்தியை எடுத்து தொண்டையில் செருகும் ஆத்திரமும் வன்மமும் உள்ளது . இப்போது அனைத்து பொறுப்புகளும் இளைய தலைவர்களிடம் வருகிறது . 48 ஸ்ட்ராங்ஹோல்டை மூத்த தலைவர்களுடன் சேர்ந்து வழிநடத்துவது பெண் தலைவரான லீ . இவரது மகள்தான் தற்காப்புக்கலையைக் கற்கும் வேட்கை கொண்ட ஸூ ஃபெய் . பிடிவாதமும் , கோபமும் , துன்பம் என்றால் உடனே கரைந்தழும் இயல்