இடுகைகள்

அரிய ஒட்டகச்சிவிங்கியோடு செல்ஃபி!

ஒட்டகச்சிவிங்கி வேட்டை ! தென் ஆப்பிரிக்காவில் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி பெருமையுடன் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த அமெரிக்கா பெண்மணி  டெஸ் தாம்சன் , ஒரே புகைப்படத்தில் டாப் செலிபிரிட்டியாகியுள்ளார் . " கறுப்பு ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுவது என் வாழ்நாள் கனவு . என் கனவு நிஜமாகியிருக்கிறது " சமூக வலைதளத்தில் பெருமையுடன் பகிர , " அரிய விலங்கை வேட்டையாடி பெருமையா ?" என நெட்டிசன்கள் வறுத்தெடுத்த உடனே அப்பதிவை நீக்கிவிட்டார் டெஸ் தாம்சன் . ஆனால் புகைப்படம் அதற்குள் ஆயிரக்கணக்கான பயனர்களிடம்  பகிரப்பட்டுவிட்டது . 1985 ஆம் ஆண்டு முதலாக கருப்புநிற ஒட்டகச்சிவிங்கி அரிய உயிரினமாக பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது . உலகில் வாழும் இவ்வகை ஒட்டகச்சிவிங்கியின் எண்ணிக்கை 40 சதவிகிதம் . தென் ஆப்பிரிக்காவில் வேட்டையாடுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு . இதன் மூலம் ஆண்டுவருமானம் 2 பில்லியன் டாலர்கள் வருமானம் அரசுக்கு கிடைக்கிறது . 2011 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன்கள் டொனால்ட் ஜூனியர் , எரிக் ஆகியோர் சிறுத்தையை வேட்டையாடியதும் , 2015 ஆம் ஆண்டு அ

வீக்எண்ட் பிட்ஸ்!- செக்ஸூக்கு எக்சேஞ்ச் ஆஃபர்!

எக்சேஞ்ச் ஆஃபரில் செக்ஸ் ! வால்மார்ட்டோ அமேசானோ கூட இப்படி ஒரு ஆஃபரை அறிவிக்கவில்லை . அமெரிக்காவைச் சேர்ந்த கணித ஆசிரியர் டீனேஜ் பெண்ணை கனியவைக்க ஐபோன் தருகிறேன் என்று கூறி சிக்கியுள்ளார் . அமெரிக்காவின் லாங் ஐலேண்டைச் சேர்ந்த எழுபது வயது கணித ஆசிரியர் ஜெய்ரோ இன்ஸ்வாஸ்திதான் டீனேஜ் பெண்ணுக்கு ரூட் போட்ட ரோமியோ . சென்ட்ரல் ஐஸ்லிப் பள்ளியில் பணியாற்றும் ஜெய்ரோ தன் வகுப்பறையிலுள்ள இரு மாணவிகளை நைச்சியமாக அணுகி அவர்களின் நிர்வாண படங்களுக்கு பணமும் , செக்ஸூக்கு ஒத்துழைத்தால் ஐபோனும் தருவதாக ஆசைகாட்டியுள்ளது என்கொயரியில் தெரியவந்துள்ளது . மாணவி போலீசில் புகார் செய்ய , பள்ளி உடனே ஆசிரியர் ஜெய்ரோவை சஸ்பெண்ட் செய்துள்ளது . " ஜெய்ரோ மாணவிகளின் பிகினி போட்டோவுக்கு தலா 5 டாலர்களும் , நிர்வாண போட்டோக்களுக்கு 150 டாலர்களும் அளிப்பதாக பேரம் பேசியுள்ளார் " என பேட்டியளித்துள்ளார் காவல்துறை கமிஷனர் ஜெரால்டைன் ஹார்ட் . எழுபது வயதில் இவ்வளவு எனர்ஜியா ? ஆடிட்டர் திருடர் ! ஆடிட்டராக நடித்து இந்தியாவிலுள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களில் பணத்தை கொள்ளையடித்து வந்த அமேசி

இந்து உணவுகள் ரிடர்ன்!

 இந்து உணவுகள்  ரிடர்ன் !   துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இந்து உணவுகளை மீண்டும் தன் பயணிகளுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது . " வாடிக்கையாளர்களின் எதிர்வினைகளை ஆராய்ந்து இந்து உணவுகளை மீண்டும் கஸ்டமர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் " என எமிரேட்ஸ் இந்தியா நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது . இந்தியாவிலுள்ள பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சைவ உணவு , ஜெயின் உணவு , கோசர் உணவு , மாட்டிறைச்சி இல்லாத அசைவ உணவு என மெனு ஆப்ஷன்களை எமிரேட்ஸ் உருவாக்கி பரிமாறி வருகிறது .  முன்பு இந்து மீல்ஸ் ஆப்ஷன்களை நிறுத்தி வைத்த எமிரேட்ஸ் , குவிந்த வாடிக்கையாளர்களின் புகார்களால் தற்போது யூடர்ன் அடித்து இந்து உணவுகளை மீண்டும் வழங்கத்தொடங்கியுள்ளது . வெளிநாட்டு சேவைகளை வழங்கும் பன்னாட்டு விமானநிறுவனமான எமிரேட்ஸ் இந்தியா ,  சென்னை , ஹைதராபாத் , கொச்சி , கொல்கத்தா , டெல்லி , மும்பை , திருவனந்தபுரம் ஆகிய இடங்களை கவர் செய்து இயங்கி வருகிறது .

எகிப்து பூமியில் புத்தரின் அடிச்சுவடுகளை தேடும் ஆராய்ச்சியாளர்!

உலகம் புகழும் பதினேழு வயது அகழ்வாராய்ச்சியாளர் ! பதினான்கு வயதில் அலகாபாத்தைச் சேர்ந்த அரிஸ் அலி அமெரிக்கா , கனடாவில் கல்லூரிப்பாடங்களை படித்து பெற்ற மதிப்பெண் உலக வரலாற்றில் சாதனை ரெக்கார்ட் . யெஸ் ஐந்துக்கு நான்கு புள்ளிகள் . அதாவது 99 சதவிகிதம் . இப்படி டன் கணக்கில் ஐக்யூ நிறைந்த மாணவரை எஞ்சினியராகவோ , டாக்டராகவோ உருவாக்கி பாரின் அனுப்புவதுதானே இந்தியப் பெற்றோரின் புதிய கலாசாரம் . ஆனால் அந்த தவறை அரிஸ் அலியின் பெற்றோர் செய்யவில்லை . அதன் விளைவாக 17 வயதில் இந்தியா - எகிப்து தொடர்பான அகழ்வாராய்ச்சி அறிக்கையை பன்னாட்டு பல்கலைக்கழகங்களில் சமர்ப்பித்து இந்தியாவின் தொன்மை கலாசாரப் பெருமையை சிகரமேற்றி வருகிறார் அரிஸ் அலி . அண்மையில் எகிப்தின் சக்காராவிலுள்ள ஜோசரின் பிரமிடுக்கு சென்ற அரிஸ் அலிக்கு குறிப்பிட்ட நடுகல் பற்றிய தகவல்கள் மட்டுமே லட்சியம் . அது எங்கேயிருந்து பயணித்து இங்கு வந்தது என்ற வழியையும் பின்னணியையும் தேடும் சவாலும் இடர்களும் அரிஸ் அலியின் உற்சாகத்தை பல டிகிரி உயர்த்தியுள்ளது . " மௌரிய பேரரசரான அசோகர் (232-268), புத்த மதத்தை பரப்ப எகிப்துக்கு த

குழந்தைகள் மனதில் கருத்துகள் உண்டு!

முத்தாரம் லைப்ரரி ! YOUR KID'S GONNA BE OKAY Building the Executive Function Skills Your Child Needs in the Age of Attention by Michael Delman உங்கள் குழந்தைகள் சலிப்புக்குள்ளானவர்களாக ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டு போனில் சோஷியல்தளங்களை மேய்ந்துகொண்டு திரிகிறார்களா ? அவர்களுக்கு ஒவ்வொன்றைப் பற்றியும் திடமான கருத்துகள் உண்டு என அழுத்தமாக பேசுகிறார் ஆசிரியர் மைக்கேல் டெல்மன் . சிறுவர்களின் உளவியலை வருத்தாமல் அவர்களுக்கு பொறுப்பை புரியவைக்கும் சிறுதிட்டங்கள் , முயற்சிகள் அனைத்தும் சுவாரசியமாகவும் புதிதாகவும் இருப்பது சிறப்பு . DOING CAPITALISM IN THE INNOVATION ECONOMY by William H. Janeway 458pp Cambridge University Press முதலீட்டாளரான வில்லியம் ஹெச் ஜேன்வே தொழில்துறை கண்டுபிடிப்புகளுக்கு அரசு தரும் நிதி முயற்சிகளின் சாதக , பாதகங்களை இந்நூலில் அலசுகிறார் . பொருளாதாரத்தின் மூலமான கொள்கைகள் , அரசின் பங்கு , முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு என பல்வேறு விஷயங்களை புதுமையான கோணத்தில் விறுவிறுவென வாசிக்கும் வேகத்தில் ஆராய்ந்துள்ளார் ஆசிரிய

வீக்எண்ட் பிட்ஸ்!

பிட்ஸ் ! ஹ்ஹா (Huh?) என்பது அனைத்து மொழிகளிலும் புரியும் மக்கள் புரிந்துகொள்ளும் வார்த்தைகளில் ஒன்று . இங்கிலாந்தில் கால்சென்டர் ஆட்களை எப்படி உச்சரிப்பது இவரின் பெயரை ? என கதிகலங்க வைத்த வாடிக்கையாளர் ஒருவரின் பெயர் Tim Pppppppppprice. பாலூட்டிகளில் உயர் ரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி . இதயத்துடிப்பு என்பது மனிதர்களைப் போலவே இருக்கும் . ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் , முயலை வளர்க்க சட்டப்பூர்வ தடையுண்டு . 4 என்ற எண் மட்டுமே தன் பொருளுக்கேற்ப எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளது . மாமியார் மீது ஏற்படும் மனரீதியான எரிச்சல் பிளஸ் பயத்துக்கு Pentheraphobia என்று பெயர் .  

அணுவிமானங்களில் பயணிக்க முடியுமா?

ஏன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி அணு விமானங்களில் பயணிப்பது சாத்தியமாகுமா ? தியரியாக , அணு ஆற்றலில் இயங்கும் விமானங்கள் சாத்தியம் . பெட்ரோல் பிரச்னையின்றி கார்பனைப் பற்றி கவலைப்படாமல் மும்பை டூ சென்னை கூட பறக்கலாம் . விமானத்தில் அணு ஆற்றல் ரியாக்டரை எப்படி பொருத்தி இயக்குவது , மக்கள் அதன் அருகில் உட்காருவதை ஏற்பார்களா , கதிர்வீச்சை தாங்கும் அடர்த்தி கொண்ட கவசத்தை விமானத்திற்கு ஏற்படுத்த முடியுமா ? என்பது போன்ற எண்ணற்ற கேள்விகள் உள்ளன . அதேசமயம் கரிம எரிபொருட்களுக்கு மாற்றான சக்தி குறித்த இங்கிலாந்தின் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன . 2009 ஆம் ஆண்டில் கூட மான்செஸ்டர் பல்கலைக்கழகம் நீரை ஆவியாக்கி விமானத்தை இயக்கமுடியுமா என டெஸ்ட் செய்தது . எதிர்காலத்தில் நியூக்ளியர் விமானங்கள் வானில் பறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன .  

மடகாஸ்கரில் அரசியல் குழப்பம்!

மடகாஸ்கர் தேர்தலுக்கு ரெடி ! மக்கள் போராட்டங்களால் ஏற்பட்டுவரும் அரசியல் சமநிலையின்மையைப் போக்க , இவ்வாண்டின் அக்டோபர் மாதம் மடகாஸ்கரில் தேர்தல் நடத்த மடகாஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில்  ஏப் .15 லிருந்து 27 வரை அரசுக்கு எதிராக  தலைநகரான அன்டானநரிவோவில் மக்கள் போராட்டம் நடத்தியது உலகளவில் கவனிக்கப்பட்டது . இதற்கான தீர்வாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிக அரசை உருவாக்கும்விதமாக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது . புதிய தற்காலிக அரசு  ஜூன் 12 முதலாக ஆட்சிக்கு வரும் . உலக தொழிலாளர் சங்கத்தின் தலைவரான கிறிஸ்டியன் என்சே நாட்டின் அதிபராக தேர்தல் அறிவிப்பு வரை செயல்படுவார் என்றும் அமைச்சரவையில் எதிர்கட்சியைச் சேர்ந்த பத்துபேர் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . பல்வேறு ஊழல் கறைகளை கொண்ட முன்னாள் அதிபர்களான மார்க் ராவலோமனானா , ஆண்ட்ரி ரஜோலினா ஆகியோரை எதிர்த்து வெல்ல கிறிஸ்டியனுக்கு வாய்ப்புள்ளது .

டாங்கோ பாடல் யாருக்கு சொந்தம்? -இரு நாடுகளின் பிடிவாத வரலாறு!

டாங்கோவின் பூர்விக தேசம் ! உருகுவேயைச் சேர்ந்த கட்டிடக்கலை மாணவரான மாடோஸ் ரோட்ரிகுவெஷ் உருவாக்கிய டாங்கோ நடனப்பாடல் செம ஹிட்டானது பின்னர்தான் . மெலடியாக உருவானாலும் இசைப்பயிற்சியில்லை என்பதால் பாடல் மீது மாடோஸூக்கு ஹிட்டாகுமா என சந்தேகம் இருந்தது . உடனே அர்ஜென்டினா ஆர்க்கெஸ்ட்ராக்காரரான ராபர்ட் ஃபிர்போவை நாட , அவரின் மாற்றங்களால் பாடல் லா கம்பர்சிதா என பெயர்பெற்று பிரபலமானது .   இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாடல் உரிமையை 50 பெசோக்களுக்கு விற்றுவிட்டார் . 300 படங்களில் 2 ஆயிரம் வகைகளில் பயன்படுத்தப்பட்ட பாடல் இது . பாடலில் சில மாற்றங்களை செய்து எல் டாங்கோ என்ற பெயரில் கார்லோஸ் கார்டெல் வெளியிட அவரை தங்கள் நாட்டு குடிமகன் என அர்ஜென்டினா , பிரான்ஸ் , உருகுவே நாடுகள் உரிமைகொண்டாடின . இருபதாண்டுகளாக தென்அமெரிக்க கோர்ட்டுகளில் பாடலின் காப்புரிமைக்கு போராடிய மாடோஸ் , 1948 ஆம் ஆண்டு 80 சதவிகித காப்புரிமையைப் பெற்றார் . கார்லோஸ் உருகுவேயில் பிறந்தாலும் அந்நாட்டு குடியுரிமை பெற்றிருக்கவில்லை . பின்னாளில் சுயசரிதை நூலில் அவரின் உருகுவே பூர்விகம் வெளியானது . டாங்கோ நடனத்தி

பழைய படங்களை ரீஸ்டோரேஷன் செய்வதே இனி எதிர்காலம்!

பழைய திரைப்படங்களுக்கும் பாதுகாப்பு தேவை !  முழுநீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா முதற்கொண்டு ரிலீசுக்கு காத்திருக்கும் சூப்பர்ஸ்டாரின் காலா வரை அனைத்து படங்களும் உங்கள் நினைவிலிருக்கலாம் . ஆனால் அவற்றை பாதுகாப்பாக சேமித்தால்தானே அடுத்த ஜெனரேஷனுக்கு அதனை திரையிட்டு காட்ட முடியும் . அப்பணியைத்தான் தனது ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன் மூலம் செய்துவருகிறார் மும்பையைச் சேர்ந்த சிவேந்திரசிங் தங்கர்பூர் . மும்பையின் தர்தியோ சாலையிலுள்ள ஆபீசில் நுழைந்தால் ஹாலில் நம்மை மிட்செல் கேமரா கம்பீரமாக வரவேற்கிறது . உள்ளே சுவரில் லூயிஸ் புனுவெலின் படபோஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது . சின்ன ஷெல்ஃபுகளில் படபோஸ்டர்கள் , பாட்டு புத்தகங்கள் , சென்சார் சான்றிதழ்கள் , சினிமா இதழ்கள் ஆண்டு , மொழி , இயக்குநர் என கச்சிதமாக பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன . இந்திய அரசின் தேசிய திரைப்பட ஆவணமையம் (NFAI) தவிர ஃபிலிமில் உருவான திரைப்படங்களின் நகல்களை பாதுகாக்கும் ஒரே அமைப்பு இந்தியாவில் ஃபிலிம் ஹெரிடேஜ் அமைப்பு மட்டுமே .  2014 ஆம் ஆண்டு ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷனை தன்னார்வ தொண்டு நிறுவன

மெக்சிகோ அதிபரிடம் என்ன எதிர்பார்க்கலாம்?

அகதிகளின் அதிபர் ! மெக்சிகோவின் அதிபராக அகதிகளை அரவணைக்கும் இடதுசாரி ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரேடர் பதவியேற்றுள்ளார் . முன்னாள் நகரமேயரான ஆண்ட்ரேஸ் 64 வயதில் மூன்று போட்டியாளர்களை வென்று 53 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று அதிபராகியுள்ளார் . இது அதிகசெலவு பிடித்த தேர்தல் என்பதோடு , 136 வேட்பாளர்கள் பல்வேறு கூலிப்படைக்குழுக்களால் கொல்லப்பட்டுள்ளனர் . போதை தலைவர்களை மன்னித்து ஊழலை ஒழித்து வாக்குறுதி தந்த திட்டங்களை எப்படி ஆண்ட்ரேஸ் நிறைவேற்றுவார் என்பது விரைவில் தெரிந்துவிடும் . 1821 ஆம் ஆண்டு ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் மெக்சிகோ சந்தித்து வந்த விஷயங்கள் இனி ஆண்ட்ரேஸ் அதிபரான நொடி முதல் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது . 2014 ஆம் ஆண்டு ஆண்ட்ரேஸ் தொடங்கிய மொரினா கட்சி தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளதோடு , நகர மேயராக கிளாடியா ஷீன்பம் என்ற பெண்மணியையும் நியமித்து சாதனை செய்துள்ளது . அமெரிக்காவின் அகதிகொள்கையை இரக்கமில்லாத ஒன்று என விமர்சித்த ஆண்ட்ரேஸ் , அமெரிக்காவுக்கு ஆதரவான அகதிகொள்கையை பின்பற்றமாட்டார் என உறுதியாக நம்பலாம் .