இடுகைகள்

இறைச்சி மட்டுமே உணவு! சரியா - தவறா?

படம்
இறைச்சி மட்டும் உணவாக சாப்பிடலாமா? இறைச்சி மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் பல் விளக்க வேண்டியதில்லை. மாவுப்பொருட்களை சாப்பிடுவதால்தான் நாம் பற்களில் ஒட்டும் இறைச்சியை அகற்ற  பல்விளக்க வேண்டியிருக்கிறது. 1928 ஆம்ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சிப்படி இரு ஆண்களுக்கு உணவாக இறைச்சி மட்டுமே வழங்கப்பட்டது. இதில் ஆய்வு இறுதியில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப்படவில்லை. அதாவது நீண்டகால நோக்கில் நீங்கள் இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி

வீகன் பால்களில் சிறந்தது எது?

படம்
வீகன் பால்களில் எது சிறந்தது? பசு, எருமை பால்களைத் தவிர பிற பொருட்களிலிருந்து பெறப்படும் பால் அனைத்துமே சூழலுக்கு இசைவானவையே. குறைந்தளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன.  குறைந்த பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில் பாதாம் பால் முன்னிலை வகிக்கிறது. காரணம், இம்மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளடக்கி வளருகின்றன. ஆனால் இவற்றைப் பெற நாம் அதிக நீரை கொடுக்க வேண்டியிருக்கிறது. இவற்றின்படி பார்த்தால் சோயா பால் மட்டுமே குறைந்த நீரை எடுத்துக்கொண்டு வளருகிறது. எனவே சோயா பாலை நீங்கள் உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அலர்ஜி பிரச்னையை கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி:பிபிசி

வெயிலில் நின்றால் கொழுப்பு குறையுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சூரிய ஒளியில் நின்றால் கொழுப்பு குறையுமா? சூரிய ஒளி தோலில்பட்டால் உடல் விட்டமின் டி சத்தை தயாரித்துக்கொள்கிறது. இது கொழுப்பு குறைய உதவுகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். கோடையில் நீங்கள் தோட்டவேலை செய்தால் வியர்வை வரும். எடை குறையும். பனிக்காலத்தில் இதைச் செய்யமுடியாது. எனவே டயட்டில் இருந்து எடை குறைப்பதே சிறப்பு. கொழுப்பு குறைய வெயிலில் நின்று நீர்ச்சுருக்கம் ஏற்பட்டுவிடப்போகிறது. ஜாக்கிரதை நன்றி: பிபிசி

குழந்தைகளைக் கொன்றால் காசு!

படம்
அசுரகுலம் சைக்கோ கொலைகாரர்கள் மியூகி இஷிகாவா 1948 ஆம் ஆண்டு ஜனவரி  12. டோக்கியோவின் வசிடா பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் ஐந்து குழந்தைகள் இறந்துபோனதை விசாரித்து வந்தார்கள். குழந்தையை எதேச்சையாக பிரேத பரிசோதனை செய்தபோதுதான் குழந்தைகள் இயற்கையாக இறக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. அந்த குற்றத்திற்கு காரணம் என மியூகி இஷிகாவை கைது செய்த து காவல்துறை. ஐந்து குழந்தைகள் மட்டுமல்ல, நூறு குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்ட விவகாரம் அப்போதுதான் தெரிய வந்தது. 1897 ஆம் ஆண்டு இஷிகாவா பிறந்தார். இவரின் இளமைக்காலம் பற்றி அதிக விவகாரங்கள் தெரியவில்லை. ஜப்பானின் குனிடோமி நகரில் பிறந்தார். டோக்கியோ பல்கலையில் பிறந்தவர், டகேஷி இஷிகாவாவை மணந்தார். மியூகியின் வேலை, கோடோபுகி  மருத்துவமனையில் செவிலி. பின்னர்,  அம்மருத்துவமனையின் இயக்குநரானார். இம்மருத்துவமனை குழந்தைகள் பிறப்புக்கு புகழ்பெற்றது. அந்த காலகட்டத்தில் ஜப்பானில் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. பல தம்பதிகள் குழந்தை கருவாக இருக்கும் நிலையிலும், குழந்தை வளர்க்க முடியாதவர்களும் அந்த மருத்துவமனைக்கு வந்தனர். இந்த குழந்

வாசனை திரவியங்களில் ஆண், பெண் வேறுபாடு உண்டா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கான, பெண்களுக்கான வாசனை திரவியங்களில் வேறுபாடு என்ன? அனைத்திற்கும் ஆல்கஹால்தான் மையம். ஆனால் வேறுபடுவது, பெண்களுக்கான வாசனைகள்தான். ஆண்களுக்கு சற்று மூக்கை நெருடும் வாசனைகளையும் பெண்களுக்கு இதமான, ஆழ்ந்து சுவாசித்தால் தெரியும்படியான பூக்கள் வாசனைகளை அமைக்கிறார்கள். இதற்கான காரணம், பெண்களின் உடல் வியர்வை மற்றும் ஆண்களின் உடல் வியர்வை மணம்தான். இதனை அடிப்படையாக வைத்தே அன்றிலிருந்து இன்றுவரை பர்ப்யூம்கள், டியோடிரண்ட், சென்ட் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் இவன் வேற மாதிரி விக்ரம் பிரபு போல பாடி ஸ்ப்ரேயில் என்ன வித்தியாசம்? என அக்கா பெண்ணின் பாடி ஸ்ப்ரேயை களவாடி களிப்புறுவதும் நம் தேசத்தில் நடக்கும் காட்சிதான். நன்றி:பிபிசி

ஏமனுக்கு மானிய உதவிகளை நிறுத்தலாமா? - ஐ.நா யோசனை

படம்
ஏமன் நாட்டில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை ஹூதி புரட்சியாளர்களுக்கு வழங்கினால் விரைவில் உணவுப்பொருட்களுக்கான மானியம் நிறுத்தப்படும் என ஐ.நா தலைவர் அறிவித்துள்ளார். ஏமனில் ஹூதி புரட்சியாளர்கள் அரசை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றனர். அவர்கள் கைப்பற்றிய நிலப்பகுதி சார்ந்த மக்களுக்கு உண்ண உணவில்லை. இதனை மனிதநேயமுறையில் பரிசீலித்த ஐ.நா சபை இவர்களுக்கு பதினைந்து மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உணவுப்பொருட்களை அனுப்பி வைத்தது. தற்போது ஐ.நாவின் உணவு வழங்கும் திட்டத்தலைவர் டேவிட் பீஸ்லி, ஐ.நா வழங்கும் உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்காமல் ஹூதி புரட்சியாளர்களுக்கு கொடுத்தால் நாங்கள் உணவுப்பொருட்களையும் மானியம் வழங்குவதையும் நிறுத்திவிடுவோம் என அச்சுறுத்தி உள்ளனர். இதற்கு பதிலளித்த ஹீதி புரட்சியாளர்கள் சார்பான வெளிநாட்டுத்துறை அமைச்சர் ஹூசைன் அல் எசி,  தவறுகள் சிலசமயங்களில் நடைபெறலாம். ஆனால் நாங்கள் மக்களுக்கு வழங்கும் உணவுப்பொருட்களை புரட்சியாளர்களுக்கு வழங்கவில்லை. மக்களை நாங்கள் நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அவர்கள்தான் எங்கள் பலமும் கூட என்றார். பனிரெண்டு

இனி உங்கள் ஏசி பேசும்! - எல்ஜியின் புதிய சிப் காரணம்

படம்
எல்ஜி, ஸ்மார்ட் சாதனங்களை இயக்கும் மூளை போன்ற சிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதனை நியூட்ரல் சிப் என்று அழைக்கின்றனர். எல்ஜி நியூட்ரல் எஞ்சின் எனப்படும் இந்த சிப், குரல், டேட்டா ஆகியவற்றை பரிசீலனை செய்யும் திறன் பெற்றது. இந்த சேவை மேக கணினியத்தில் இணைக்காத போதும் செய்யமுடியும். மே 17 அன்று சியோலில் எல்ஜி, நியூட்ரல் எஞ்சின் என்பது மூளையின் நியூரான்களைப் போன்ற செயல்பாடுகளைக் கொண்டது என அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக எல்ஜி தன் ஏஐ பொருட்களை திங்க் என்ற பிராண்டில் சந்தைப்படுத்தி வருகிறது. இணைய இணைப்பின்றி செயல்படும் வசதி, அதற்கான பாதுகாப்பு ஆகியவற்றை எல்ஜி மனதில் கொண்டு இதனைத் தயாரித்திருக்கலாம் என்கிறாலர் அட்னன் பரூக்கி.  புதிய எல்ஜி ஏஐ சிப், எதிர்காலத்தில் அனைத்து எல்ஜி பொருட்களையும் கட்டுப்படுத்தும் விதமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இருக்கலாம். கருவி, இணையத்தில இணைக்கப்படாமலிருந்தாலும் செயல்படுவது இதன் ஸ்பெஷல்.  இதன் அர்த்தம் இனி உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஏசி, வாஷிங்மெஷின், டிவி, ஸ்மார்ட் உதவியாளர் என அனைத்து பொருட்களுக்கும் கண், காது கிடைக்கப்போகிறது என்ப