இடுகைகள்

ஓராண்டுக்குள் தடுப்பூசியைக் கண்டுபிடித்தால் அது சாதனைதான்! சௌமியா சுவாமிநாதன், WHO

படம்
TIE மொழிபெயர்ப்பு நேர்காணல் சௌம்யா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அறிவியலாளர் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை தடை செய்திருக்கிறதே? அமெரிக்கா உல்க சுகாதார நிறுவனத்திற்கு நிதி மட்டுமன்றி பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் முன்னர் அளித்து வந்த நாடு. எதிர்காலத்தில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் என நம்புகிறோம்.   கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்கெனவே இங்கு உள்ளது. புதிதாக நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கவில்லை என்கிறார்கள். இது அறிவியல்ரீதியான கருத்துதானா?   இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நோய்த்தொற்று பரவல் எப்படி குறைவாக இருக்கிறது என பல்வேறு அறிவியலுக்கு மிஞ்சிய கருத்துகள் உலவி வருகின்றன. இவற்றுக்கு சரியான பதில்கள் கிடையாது என்பதே உண்மை. மேற்சொன்ன நாடுகளில் ஊரடங்கு உத்தரவும், சமூக தனிமைப்படுத்தலும் அமலில் இருக்கலாம். இதன் காரணமாக வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதை ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் இந்த வைரஸ் தொற்றை இயல்பை நம்மால் முழுமையாக கணிக்க முடியவில்லை என்பதால்தான். ஊரடங்கு காலம் தளர்த்தப்ப

ஊரடங்கு விதிகளால் மாணவர்களை அழைத்து வர முடியவில்லை! - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

படம்
commonwise மொழிபெயர்ப்பு நேர்காணல் நிதிஷ்குமார், மாநில முதல்வர், பீகார் பல்வேறு மாநிலங்களில் பீகாரைச் சேர்ந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு வரமுடியாமல் தடுமாறி வருகின்றனர். முகாம்களில் அவர்களை தங்க வைத்து இந்திய அரசு உணவுகளை வழங்கி வருகிறது. இதுபற்றி பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசினோம். பீகாரிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம் என பல்வேறு மாநிலங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பீகாரில் நோய்பரவல் சதவீதம் குறைவாக இருக்கிறது. என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்? ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிப்படி பீகாரில் 329 நோயாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அதில் 57பேர் முழுக்க குணமாகியுள்ளனர். இதில் 270 பேர் இன்னும் கண்காணிப்பில் உள்ளனர். நாங்கள் எங்கள் மாநிலத்தில் உள்ள ஆறு மையங்கள் மூலம் நோயாளிகளின் மாதிரிகளை சோதித்து வருகிறோம். 75 லட்சம் வீடுகளில் 4 கோடி மக்களுக்கு சோதனைகளை நடத்தி நோய்ப்பரவலைக் குறைத்துள்ளோம். மருத்துவமனைகள், சிகிச்சை வசதிகள், தனிமைப்படுத்தல் வசதிகளை செய்துள்ளோம். மத

டிஸ்னி படத்தை கிண்டல் செய்யும் ஹோம்வர்டு அனிமேஷன் படம்!

படம்
Cartoonbrew ஹோம்வர்ட் அனிமேஷன் திரைப்படம் இயக்குநர் : மைக்கேல் ஜான்சன் ஆர்க், எல்ஃப் என்ற இரு இனத்திற்கும் உள்ள வேறுபாடு தீவிரமான போராக மாறுகிறது. இதனை இரு இனத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் சேர்ந்து அமைதிக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த அமைதியை ஆர்க் இனத்தைச் சேர்ந்த படைத்தளபதியின் வம்சாவளியினரான ரோல்ஃப் விரும்பவில்லை. ஆர்க் இனத்தின் சக்திக்கு காரணமாக கற்கள் இரண்டு சிலைகள் பொதிந்து வைக்கப்படுகின்றன. அவற்றை எடுக்க எல்ஃப் இனத்தின் மந்திரப்பை தேவைப்படுகிறது. லாய்டு, பார்ல் என்ற இரு சகோதரர்களுக்கு ஏற்படும் வேறுபாடு, ஒருகட்டத்தில் பெரும் மோதலாகிறது. இதனால் லாய்ட் தன்னுடைய பட்டமளிப்பு விழா கெட்டுவிடும் என்று தன்னுடைய தத்து சகோதரனை நியூ ஆர்க் லேண்ட் என்ற நகரத்திற்கு கொண்டு சென்று விடுகிறான். ஆனால் அங்கு நேரும் தவறு, நியூ ஆர்க் நகரம் மற்றும் எல்ஃப்டேல் நகரம் என இரு நகரங்களுக்கும் பேராபத்தாக மாறுகிறது. இப்பிரச்னையை எப்படி சகோதரர்கள் இணைந்து தடுக்கின்றனர், நகரத்தை எப்படி காப்பாற்றினர் என்பதுதான் கதை. படத்தின் முக்கியமான அம்சம், மனிதர்களுக்குள் வேறுபாடு கூடாது. அனைவரும் ஒன்றாக அமைதியாக வாழ வேண்டு

நேர்மறையான செயல்பாடுகளை உருவாக்கும் பெர்மா மாடல்!

படம்
pixabay ஆக்ட் தெரபி ஒருவர் நான் நேர்மறையாக எதையும் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருப்பார். இத்தெரபி எனக்கு நேர்மறையாக எதுவும் செய்யவராது என்ற எண்ணம் தோன்றுகிறது என்று எண்ண வைக்கும். இதன்படி அவர்களுக்கு நேர்மறையாக சிந்திக்கவும், வாழவும் ஆலோசனைகளை உளவியலாளர்கள் வழங்குகின்றனர். ஆக்ட் மற்றும் டிபிடி தெரபி, நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் தம்மைத்தாமே காயப்படுத்திக்கொள்வது, தவறான எண்ணங்களின் பாதிப்பால் மது, போதைப்பொருட்களை பயன்படுத்தும் எண்ணம் கைவிடப்படுகிறது. நோயாளி தனக்கு ஏற்படும் எண்ணம் பற்றி அவர் ஒப்புக்கொள்வது சிகிச்சையை எளிதாக்கும். இதன் பின்னர் அவர் கடைபிடிக்கவேண்டிய பழக்கங்களை உளவியலாளர் அட்டவணைப்படுத்தி தருவார். அதனை அவர்கள் முழுமையாக கடைப்பிடிப்பது அவசியம். சுயமாக தனக்கு என்ன தேவை, என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் முழுமையாக உணர்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டிபிடி தெரபியில் முக்கியமான அம்சங்கள் இவைதான். இதில் ஒருவர் சொல்லுவதற்கு பதில் சொல்வதைவிட புரிந்துகொள்வது முக்கியம். எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிகளால் எல்லைமீறி நடந்துகொள்

கனவுகளை துரத்த ஒழுக்கம் முக்கியமான தேவை! - மயங்க் அகர்வால்

படம்
first post மயங்க் அகர்வால், கிரிக்கெட் வீரர் கிரிக்கெட்டில் பரபரப்பான வீரராக இருந்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுப்பது எப்படியிருக்கிறது? ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் நான் இல்லாமல் அணி இழப்பைச் சந்திக்கப்போகிறது என்றெல்லாம் நினைக்கவில்லை. வீட்டிற்கு நாம் விளையாட்டு கடந்து செய்யவேண்டிய விஷயங்கள் உள்ளன. அதேசமயம் இக்காலகட்டத்தில் நம்மை நாம் மேம்படுத்திக்கொள்வதும் முக்கியம். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது இதுவே முதல்முறை அல்லவா? உண்மைதான். கிரிக்கெட் பயிற்சிக்கு கூட போகாமல் இருப்பது எனக்கு இதுதான் முதல்முறை. எப்போதும் கிரிக்கெட் போட்டிகள், பயிற்சிகள் என்றே இருப்போம். சின்ன இடைவெளி கிடைத்திருப்பது நல்லதுதான். இந்த நிலை மாறி திரும்ப எப்போது கிரிக்கெட் விளையாடப்போகிறோம், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போகிறோம் என்று தோன்றுகிறது. ஆனால் வேறுவழியில்லை. அரசின் விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம். நிச்சயமில்லாத எதிர்காலம் உங்களை பயமுறுத்துகிறதா? இப்போதுள்ள நிலையை எங்களது கிரிக்கெட் துறை கடந்து பார்க்கவேண்டியது அவசியம். விளையாட்டு கடந்து நாம் கவலைப்படவேண்டிய வ