இடுகைகள்

தனித்தீவில் பனிரெண்டு பணக்காரர்களுடன் இறுதி விருந்து - தி மெனு

படம்
  மெனு ஆங்கிலம் தனியாக ஒரு தீவு. அதில் ஹோவர்தன் எனும் புகழ்பெற்ற உணவகம் உள்ளது. அதனை நடத்தும் சமையல்கலைஞர் பனிரெண்டு ஜோடிகளை   தனது உணவகத்திற்கு விருந்திற்கு அழைக்கிறார். விருந்து நாள் முழுக்க நடைபெறுகிறது. அதில் விருந்தினர்கள் சந்திக்கும் பல்வேறு ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும்தான் கதை. ஒரு உணவை நாம் சாப்பிடுகிறோம், ருசிக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிற படம், தீவிரமான தொனியில்   காட்சிகளைக் கொண்டிருந்தாலும் அவல நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது. ஒருவருக்கு 1250 டாலர்கள் என்ற கட்டணத்தை ஏற்றுக்கொண்டுதான் அங்கு பலரும் வருகிறார்கள். அவர்கள் பலருமே தாங்கள் சாப்பிடுவது பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள். அதாவது சாப்பாடு பற்றிய கவனம் குறைந்தவர்கள், அல்லது அறவே கவனம் இல்லாதவர்கள். சமையல் குழு, தலைமை சமையல்காரரின் கைத்தட்டலுக்கு உடல் விறைத்து பிறகு இயல்பாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு ராணுவக்குழு போலவே இயங்குகிறார்கள். அப்படி ஒரு கச்சிதம். படத்தில் வரும் கைதட்டல் ஒருகட்டத்தில் ஹிப்னாடிசம் போல நமக்கும் வேலை செய்வதாக தோன்றுகிறது. படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களையும் விட இயல்பாக இருக்க

விளம்பர இடைவேளை - அமேஸானில் வெளியாகியுள்ள மின்னூல்கள்

படம்
 

விளம்பர இடைவேளை - பிரதிலிபி தமிழ் வலைத்தளத்தில் வெளியான நூல்கள், தொகுப்பு நூல்கள்

படம்
 

குற்றங்களை அடையாளம் காண்பதில் பயன்படும் பல்வேறு கோட்பாடு முறைகள்

படம்
  குற்றத்தை எப்படி புரிந்துகொள்வது, இதில் பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் உள்ளன. உளவியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். அதற்கு ஏற்ப அவரவர் துறை சார்ந்த கருத்துகளைச் சொல்லி குற்றங்களை பிறருக்கு புரிய வைக்கலாம். சமூகவியல் அடிப்படையில் ஒருவரின் சமூகம், அவரின் இனக்குழு, குடும்ப நிலை, வேலை செய்பவரா, வேலை கொடுப்பவரா என்றெல்லாம் பகுத்தாய்ந்து  குற்றத்தின் அடிப்படையை நோக்கம் என்ன என்று கண்டறியலாம். பத்தொன்பதாவது நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் பெயர், சீசர் லாம்ப்ரோஸா. இவர், பரம்பரையாக வரும் குணங்கள்  காரணமாக ஒருவர் தவறுகளை செய்கிறார். இப்படி தவறு செய்யும் குணம் நட்பு மூலமாகவும் இன்னொருவருக்கு பரவலாம். குடிநோயாளிகள் நிறைய குற்றங்களை செய்கிறார்கள் என கருத்துகளை எழுதினார். பரவலாக்கினார். வறுமையான சூழ்நிலை, கல்வி அறிவின்மை ஆகியவை குற்றங்களுக்கு முக்கியமான காரணங்கள் என்று கூறினார். மூன்றில் ஒரு பங்கு குற்றவாளிகள் பிறக்கும்போது குற்றவாளிகள் என்று எழுதினார். பிற்காலத்தில் லாம்ப்ரோஸாவின் ஆய்வுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. குற்றங்களை செய்யும்

வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்தால் ... உல்லாசம் - ஷான் நிகாம், பவித்ரா லட்சுமி

படம்
  உல்லாசம் மலையாளம் ஷான் நிகம், பவித்ரா லட்சுமி லட்சியத்தைக் கொண்ட துயரங்களா, இலக்கைப் பற்றி கவலைப்படாத மகிழ்ச்சியா என இரு வேறுபட்ட விஷயங்களைப் பற்றி பேச முயல்கிற படம்தான் உல்லாசம். ஹாரி மேனன் என்ற இளைஞரும், யாரிடமும் அதிகமாக பேசாத கர்ப்பிணிகளைக் கண்டால் மட்டும் மனம் பதைபதைக்கிற இளம்பெண்ணும் ஊட்டியில் சந்திக்கிறார்கள். மோதல் தொடங்கினால் காதலாகத் தானே மாற வேண்டும். அந்த வகையில் காதல் ஆகிறது. ஆனால் இதில் இளம்பெண், ஹாரி மீது நம்பிக்கை வராமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களையும் கூறுவதில்லை. ஹாரிக்கு அந்த பெண்ணை திரும்ப சந்திக்க ஆசையிருக்கிறது. மனதில் காதலும் இருக்கிறது. ஆனால், அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியாது. ஹாரி கோவையிலும், இளம்பெண் கேரளாவுக்குமாக பிரிந்து செல்கிறார்கள். இருவரும் பிறகு சந்தித்தார்களா இல்லையா என்பதே கதை. ஹாரியாக ஷான் நிகம் நடித்திருக்கிறார். படம் நெடுக   ஷானின் இளமைத் துடிப்பும் நடிப்பும்தான் படத்தை காப்பாற்றுகிறது. இதில், நிமா என்ற பாத்திரத்தில் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார். மாடல் போல தோற்றமிருந்தாலும் இந்த படத்திற்கு அவரின் பங்களிப்பு என்பதே குறைவ

தோற்றுப்போவதற்கு செத்துவிடலாம் என நினைத்து போராடும் வக்கீலின் சதுரங்க ஆட்டம் - முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் - அபினவ் சுந்தர்

படம்
  முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் மலையாளம் வினித் சீனிவாசன் இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக்  சுகபோகங்களில் ஆசை கொண்ட வக்கீலின் அனைத்துக்கும் ஆசைப்படும் வாழ்க்கைக் கதை. முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நினைத்தது போல வாழ்க்கையில் பிரேக் கிடைக்கவில்லை. பணம், புகழ் என ஏதும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் சுய முன்னேற்ற நூல்களில் உள்ள அனைத்தையும் மாற்றுக்கருத்து   இல்லாமல் பின்பற்றுகிறவன்தான் முகுந்தன் உண்ணி. இப்படி இருப்பவனின் வாழ்க்கை ஒருநாள் மாறுகிறது. அவனது அம்மா, வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ஒன்றால் திகைப்புக்கு உள்ளாகி கீழே விழுகிறாள். இதனால், கால் எலும்பு விரிசல் காண்கிறது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய நினைக்கிறான். ஆனால், கையில் பணம் இல்லை. அப்போது அவன் வேலை செய்த வக்கீலின் நிறுவனத்திலிருந்தும் கூட   வெளியேறிவிட்டிருக்கிற சூழல். கட்டணத்தை குறைக்க, மருத்துவமனையின் பில்லிங்கில் உள்ள பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் எதிரில் உள்ள கவுண்டரில் பணத்தை ஒருவர் கற்றை கற்றையாக அள்ளி எடுத்து கட்டுகிறார். அதைப் பார்த்து அதன் பின்னால் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறான். அதே

நாட்டுக்குப் போராடிய ராணுவ வீரன், 5 ஏக்கர் நிலத்தைக் காக்க எம்எல்ஏவை எதிர்த்து நின்றால்... சண்டி - ரவிதேஜா

படம்
  சண்டி ரவிதேஜா, சார்மி, அதுல் குல்கர்னி, டெய்ஸி போபனா   ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான் சண்டி. அப்படி வரும் நிர்பந்த சூழ்நிலை, அவனது அப்பா மாரடைப்பால் இறந்த காரணத்தால் ஏற்படுகிறது. அப்பாவும், கண் பார்வையற்ற தங்கையும்தான் அவனுக்கு ஒரே சொந்தம். அப்பா இறந்த காரணத்தால் கிராமத்தில் தங்கி தங்கையைப் பார்த்துக்கொண்டு அவளுக்கு மணம் செய்ய நினைக்கிறான். இந்த நேரத்தில் அந்த ஊரில் உள்ள எம்எல்ஏ ராணுவ வீரன் சண்டிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறான். அதை கைப்பற்றி சாலை போட்டுவிட்டால் அருகில் உள்ள தொழிற்சாலையை எளிதாக இயங்க வைக்கலாம் என நினைக்கிறார். இதற்கு அவர் செய்யும் செயல்களும், அதற்கான ராணுவ வீரன் சண்டியின் எதிர்வினைகளும்தான் படம்… நிலம் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதுதான் மையக் கதை. நிலத்தை அடிப்படையாக வைத்துத்தான் பார்வைத்திறனற்ற தங்கையை கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என நிர்பந்தம் சண்டிக்கு உள்ளது. பிறகுதான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியும். நிலம் பற்றிய சிக்கல்கள் எழும் நேரத்தில் அவனை இரு பெண்கள் காதலிக்கிறார்கள். ஒருத்தி, உறவுக்காரப் ப