இடுகைகள்

அறம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தவறுகளை சகித்துக் கொள்ளாதீர்கள் - சேட்டன் பகத்

படம்
கோவிலுக்குள் அரசியல்வாதி ஒருவர் செருப்புடன் செல்கிறார். அங்குள்ள சிலைகளுக்கு பாக்கெட்டிலிருந்து எடுத்த சாராயத்தை அபிஷேகம் செய்கிறார். இந்தக்காட்சி உங்களுக்குள் அனல் கிளப்புகிறதா? இப்படி ஒருவர் இன்று செய்தால் அவரின் அரசியல் எழுச்சி, எதிர்காலம் அதோடு முடிந்துவிடும். காரணம், வாக்காளர்களின் நம்பிக்கைதான். ஆனால் மற்ற விஷயங்களில் நமது கவனம் எங்கிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.  நம் கண்ணெதிரே தொழிலதிபர்கள் கடன்களை கட்ட மறுக்கிறார்கள், அவர்களுக்கு அரசியல்வாதிகள் உதவி செய்து வல்லரசு நாடுகளில் அடைக்கலம் தேடித்தருகிறார்கள். நிழலான பல வணிக காரியங்களை தொழில் என்ற பேரில் இவர்கள் செய்கிறார்கள். இவற்றை மக்கள் நாளிதழ்களில் படித்து தெரிந்துகொண்டாலும் அமைதியாகவே இருக்கின்றனர். ஆனால் இது நல்லதல்ல. ஊழல் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டவர்களாக மாறி வருகிறார்களோ என்று தோன்றுகிறது. இதே காலத்தில்தான் ஊழல் நமக்கு பகை என்று சொல்லி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். காரணம், இயல்பாகவே நமக்கு ஊழல் மீதான கோபம் உள்ளது. ஆனால்,  அது அரசியல்வாதிகள் மீதான கோபமாக மாற்றத்தை ஏற்படுத்துவதாக