இடுகைகள்

இந்துத்துவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆர்எஸ்எஸ்ஸின் நிழலுடன்தான் எதிர்க்கட்சிகள் போரிட்டு வருகின்றன! - பத்ரி நாராயணன், சமூக வரலாற்று அறிஞர்

படம்
            பத்ரி நாராயணன் சமூக வரலாற்று அறிவியலாளர் பத்ரி நாராயணன் , ஆதி திராவிடர் மற்றும் இந்துத்துவா பற்றி பல்வேறு கட்டுரைகளை நூல்களை எழுதியுள்ளார் . அண்மையில் ரீபப்ளிக் ஆப் இந்துத்துவா என்ற நூலை எழுதியுள்ளார் . இதில் எப்படி இந்துத்துவா தன்னை மறுகட்டமைப்பு செய்து உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதைக் கூறியுள்ளார் . இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்பவர்கள் , அதன் நிழலுடன்தான் போரிடுகிறார்கள் . இந்துத்துவ தத்துவத்தின் கர்ப்பகிரகம் என ஆர்எ்ஸ்எஸை நீங்கள் கூறியுள்ளீர்களே ? தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கம் , தாராளமயமாக்கம் அறிமுகமானது . அப்போதிலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பை நவீன காலகட்டத்திற்கு ஏற்றபடி தனது கொள்கைகளையும் செயல்களையும் சிந்தனைகளையும் மாற்றி அமைத்து வருகிறது . இன்று ஒருவர் பல்வேறு சமூக பிரச்னைகள் சார்ந்து ஆர்எஸ்எ்ஸ் அமைப்பை கேள்விகள் கேட்டாலும் அதனிடம் அதற்கான பதில்கள் உள்ளன . அண்மையில் கூட அதன் தலைவர் மோகன் பகவத் , கோல்வால்கரின் பேச்சுகள் அடங்கிய தொகுதியில் கூற்ப்பட்ட சில கருத்துகளை நாம் மறக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . காலமும் , மக்களும் ம

ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததற்கான விடை தரும் நூல்! - புத்தகம் புதுசு!

படம்
                        இந்தியன்ஸ் ப்ரிப் ஹிஸ்டரி ஆப் எ சிவிலைஷேசன் நமித் அரோரா பெங்குவின் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த விவகாரம் இன்றுவரை முக்கியமான விவாதமாக மாறியுள்ளது . கஜூராகோ கோவிலில் சிற்றின்ப ஓவியங்கள் இடம்பெற்றது ஏன் , நாளந்தா பல்கலைக்கழகத்தில் துறவிகள் உணவாக என்ன சாப்பிட்டனர் என நம் மனதில் தோன்று பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூல் பதில் தருகிறது . பிஇ 2.0 ஜிம் கோலின்ஸ் பில் லேசியர் பெங்குவின் பியாண்ட் என்டர்ப்ரீனர்ஷிப் என்ற நூலின் மேம்படுத்தப்பட்ட வடிவம் இது . 2005 இல் எழுதப்பட்ட நூலை மேலும் பல விஷயங்களைச் சேர்த்து புதிதாக்கியிருக்கிறார்கள் . தொழிலதிபர்கள் இந்த நூலை வாசிக்கலாம் . ஜேபி டு பிஜேபி சந்தோஷ் சிங் சேஜ் ஜெயப்பிரகாஷ நாராயணனின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி பாஜக எப்படி அரசியலின் முன்களத்திற்கு வந்தது என்பதை ஆசிரியர் விவரித்துள்ளார் . 75 ஆண்டுகால இந்தியாவில் பிறந்த முக்கியமான சமூக தலைவர்களையும் ஆசிரியர் குறிப்பிட்டு எழுதியுள்ளார் . அண்டர்கவர் மை ஜர்னி இன் டு தி டார்

இந்தியா எப்படி இந்து ராஷ்டிரத்தை நோக்கி நகர்கிறது என்பதை அறிவதற்கான நூல்! புத்தக அறிமுகம்

படம்
            புத்தக அறிமுகம் இந்தியன் எகனாமிஸ் கிரேட்டஸ்ட் கிரிசிஸ் டி அருண்குமார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் ப . 264 ரூ .499 பெருந்தொற்று இந்தியாவில் ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்களை நூல் பேசுகிறது . வி வடிவ முன்னேற்றம் சாத்தியப்படவில்லை என்பது தற்போதைய நிலவரம் . இதனை அரசு எப்படி கையாண்டது , அதில் ஏற்பட்ட தடைகள் , சமாளித்த விதம் என ப்லவேறு விஷயங்களை நூலாசிரியர் பேசுகிறார் . அவர் இந்து ராஷ்டிரா ஆகார் படேல் வெஸ்ட்லேண்ட் ரூ . 799 இந்துத்துவா கருத்தியல் எப்படி இந்தியாவில் அடிப்படையான விஷயங்களை ஆக்கிரமித்து வருகிறது என்பதை பல்வேறு அடுக்குகளில் விவரிக்கிறார் நூலாசிரியர் ஆகார் படேல் . எப்படி பல்வேறு நம்பிக்கையான அரசு அமைப்புகள் வீழ்த்தப்படுகின்றன என்பதையும் செயல்பாட்டாளர் ஆகார் படேல் சிறப்பாக எழுதியுள்ளார் . டில் வீ வின் ரந்தீப் குலேரியா ககன்தீப் காங் , சந்திரகாந்த் லகாரியா பெங்குவின் ராண்டம் ஹவுஸ் ப . 352 ரூ . 299 இன்னும் எத்தனை நாட்கள் நாம் மாஸ்க் பயன்படுத்தவேண்டும் , கொரோனா இறப்புகள் குறைந்துவிட்டனவா என்பது

என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை! சரோஜினி நாயுடு ஆல் இந்தியா ரேடியோ உரை!

படம்
    என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை !     சரோஜினி நாயுடு 1948 ஆண்டு பிப்ரவரி 1 அன்று , இந்துத்துவவாதிகளால் காந்தி சுடப்பட்டு இறப்பதற்கு இரு நாட்களுக்குப் பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் சரோஜினி நாயுடு ஆற்றிய உரையின் சுருக்கம் இது . இன்று காந்தியை விரும்பிய அனைவரும் , அவரை அறிந்தவர்கள் , அவரது பெயர் மட்டுமே கேள்விப்பட்டவர்கள் கூட அவருக்காக அஞ்சலி செலுத்துகிறோம் . ஒரு அதிசயம் போன்ற ஆளுமை அவர் . அவரது இழப்பு நம் மனதில் சோகத்தையும் கண்ணீர் கண்ணீரை ஆற்றொழுக்காகவும் பெருக்குகிறது . அவர் எப்படி வாழ்ந்தார் , தனது வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை இழந்தார் , அவரது ஆன்ம சக்தி எத்தகையது , வெறும் சதையல்லாத ஆற்றலின் வடிவமாக உலக ராணுவ வலிமைகளையும் மிஞ்சியிருந்தார் . காந்தி சிறியவர்தான் , எளியவர்தான் . அவரிடம் பணம் கூட கிடையாது . ஏன் உடுத்திக்கொள்ள உடலை மறைக்க முழுமையான உடை கூட அவரிடம் இல்லை . ஆனால் அவரை விட வலிமையான ஆயுதங்களை கொண்டவர்களை எதிர்த்து நின்றார் . இது உலகளவில் எங்காவது சாத்தியமா ? இதற்கு காரணம் ஒன்றுதான் , அவர் யாருடைய பாராட்டுகளுக்காகவும் ஏங்கவில்லை . அ

டில்லியில் நடந்த கலவரத்தில் மக்களைக் காப்பாற்றிய நாயகர்கள்!

மனிதாபிமான நாயகர்கள் தலைநகரான டில்லியில் ஆளும்கட்சியான பாஜகவின் ஆதரவுடன் தூண்டிவிடப்பட்ட கலவரங்கள் ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. பொருட்களை காப்பாற்ற முடியாதபோதும் மனிதர்களை காப்பாற்ற பல மனிதாபிமானிகள் முயன்றனர். அவர்களில் சிலரைப் பார்ப்போம். முஸ்தாரி காட்டூன் சந்து நகர், டில்லி பிப்ரவரி 25ஆம் தேதி இரவில் முஸ்தாரி தனது மூன்று வயது வந்த பிள்ளைகள் மற்றும் கணவருடன் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவரது போன் திரை பளிச்சிட, அழைப்பு ஒன்று வந்தது. முஸ்தாரியின் கணவர் தூக்கச்சடவோடு அதனை முஸ்தாரிக்கு கொடுத்தார். மறுமுனையில் பயம் தொனிக்க முஸ்தாரியின் உறவுக்காரர் மொகம்மது நியாய் பேசினார். எங்களைக் கொன்னுடுவாங்க போல பாட்டி. எப்படியாவது எங்களைக் காப்பாத்துங்க என பேசிய குரலில் பதற்றமும் பயமும் நிரம்பி வழிந்தது. முஸ்தாரி யோசிக்கவேயில்லை. வேகமாக எழுந்தவர், உடனே தெருவில் பாய்ந்தார். அப்போது அவருக்கு போனில் குரல் பேசிய செய்தி மட்டும்தான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. முஸ்தாரி வசித்த பகுதி, டில்லியின் வடகிழக்கு பகுதியாகும். கஜூரி காஸ் பகுதியிருந்துதான் அவரது உறவினர் உதவி கேட்ட

காவிமயப்படுத்தலையும், ஊழல்களையும் எதிர்த்ததால் தேசவிரோதி ஆகிவிட்டேன்!

படம்
brijeshkumar/edexlive நீதிவெல்லும் என்ற நம்பிக்கை எனக்குண்டு ! பிரிஜேஷ் குமார் , உதவிப் பேராசிரியர் . பிரிஜேஷ்குமார் , ஐஐடி குவகாத்தியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் . 2011 ஆம் ஆண்டிலிருந்து மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பணி . இவர் கற்பித்தலுக்காக உலகிற்கு தெரியவரவில்லை . தனது மேலதிகாரிகள் ஐஐடியில் செய்த பல்வேறு ஊழல்கள் முறைகேடுகளை வெளியே சொல்லி உலகம் அறிய வைத்தார் . அதற்காகவே பிரிஜேஷ் பெயர் அனைவராலும் கூறப்பட்டது . உண்மையைப் பேசினால் சாதாரண மனிதருக்கு என்ன ஆகும் என்பதற்கு பிரிஜேஷ் மிகச்சிறந்த உதாரணம் . நிர்வாகத்திற்கு எதிராகவும் , அதில் செல்வாக்கு உள்ள மனிதர்களைப் பகைத்துக்கொண்டதால் அவர் தான் தங்கியுள்ள இடத்தை விட்டு உடனே காலி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார் . மேலும் அவரது பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இதற்கும் மேலாக அவருக்கு மன உளைச்சல் அளிக்கும்படியாக , அவர்மீது காவல்துறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . ஐஐடியில் பெருகும் ஊழல் , அங்கு அதிகரித்து வரும் இந்துத்துவ நடவடிக்கைகள் பற்றி பேசினோம் .