இடுகைகள்

காவல்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறவையால் அழகாகிறது வானம்! - இலவச மின்னூல் வெளியீடு

படம்
     இலவச மின்னூல் வெளியீடு.... விரைவில் .....       இந்த நூல் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது . இவர்களைப் பற்றி எழுதக்காரணம் , இதுபோன்ற உதவிகள் துயரமான காலத்தில் அனைவருக்கு்ம கிடைக்கவேண்டும் என்ற நோக்கம்தான் . தற்போதைய காலத்தில் அனைத்து மக்களுக்கும் இடையிலும் பிரிவினை வேலிகள் வேகமாக ஊன்றப்பட்டு வருகி்ன்றன . அதனை மனிதநேயமிக்க மனிதர்கள் தொடர்ந்து களைந்தெறிந்து மக்களுக்கு பாகுபாடு இன்றி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது . இதில் குறிப்பிடப்பட்டவர்கள்தான் உயர்ந்த மனிதர்கள் என்பதல்ல . நம்மால் முடிந்த உதவியை பாகுபாடின்றி பிறருக்கு வழங்க முன்வருபவர்கள் அனைவருமே நாம் போற்றத்தகுந்தவர்கள்தான் . இந்தநூல் அதற்கான நம்பிக்கையை வாசிப்பவர்களுக்கு வழங்கும் என்று கருதுகிறேன் .  பொதுநலம் சார்ந்து உழைக்கும் பல்வேறு மனிதர்களை அறிமுகம் செய்த  நண்பர் திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.  

கொரோனாவை தீரத்துடன் எதிர்த்த வீரர்கள்!

படம்
          காவல்துறை உங்கள் நண்பன் ! நிஷா சாவன் காவல்துறை துணை ஆய்வாளர் மும்பை புனேவிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் நிஷா சவான் . இவர் , வாசி எனுமிடத்தில் தங்கியிருந்து கேர்வாடி காவல்நிலையத்திற்கு வந்து துணை ஆய்வாளராக பணிசெய்துகொண்டிருந்தார் . ஒருநாள் கணவரால் வன்முறையாக தாக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்துகொண்டிருந்தார் . புகார் கொடுத்த பெண் மாஸ்க் அணியவில்லை . அதை அப்போது பெரிதாக நிஷா எடுத்துக்கொள்ளவில்லை . ஆனால் சில நாட்களில் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு என உறுதியானது . அடுத்தடுத்த நாட்களில் நிஷாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் இவற்றை தனது பெற்றோருக்கு அவர் கூறவில்லை . பதினெட்டு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்று வந்திருக்கிறார் . நோயிலிருந்து குணமாகி வந்த நிஷா , காலை எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை இரண்டு மணி வரை டூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் . இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புனேவிலிருந்து உத்தரப்பிரத்தேசம் , ராஜஸ்தானுக்கு ரயில் , பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் . அதற்கு முன்னர் அவர்கள் பத்து பேர்களை குழுவாக ப

அரசியலமைப்புச்சட்டப்படி செல்லாத சட்டம் லவ் ஜிகாத், தேர்தலுக்காக இதனை முன்னிலைப்படுத்துகிறார்கள்! - மிஹிர் ஶ்ரீவஸ்தவா, எழுத்தாளர்

படம்
                  லவ் ஜிகாத் என்பது தேர்தலைக் குறிவைத்து நடக்கும் யுக்தி எழுத்தாளர் மிஹிர் ஶ்ரீவஸ்தவா பிரன்ட்லைன் திவ்யா திரிவேதி லவ் ஜிகாத் என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக எப்படி கூறுகிறீர்கள் ? உண்மையில் இந்தியாவில் நடக்கும் இயல்பான திருமணங்களை ஊடகங்கள் உலகில் பார்வையில் வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறார்கள் . இது எப்படியென்றால் அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் யாருடைய பக்கம் செயல்படுகிறதென அனைவருக்கும் தெரியும் . அதில் வரும் செய்திகள் எப்படி , யாருக்கு சார்பாக இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா ? அதுபோலதான் இதுவும் . என்ஐஏ இதுவரை லவ் ஜிகாத் என்பதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட காண்பிக்கவில்லை . திருமணம் செய்துகொண்ட சிலரை ஊடகங்களும் காவல்துறையும் குறிவைக்கின்றனர் . வழக்கு , சர்ச்சை காரணமாக அவர்கள் வாழ்க்கை நாசமாகிறது . ஊடகங்கள இதனை பெரிதுபடுத்தி லாபம் சம்பாதிக்கின்றனர் . புலனாய்வு அமைப்புகள் ஒருவரின் திருமணம் தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என அலறுகின்றன . இதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் செய்யும் தூண்டுதல்தான் .   அப்போது இந்துகள் ஆபத்த

கருப்பு பணம் காதலையும் சுமந்து வந்தால்... பிளாக் மணி லவ்(கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர்

படம்
            பிளாக்மணி லவ் (கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர் 2014-2015 164 எபிசோடுகள் துருக்கியின் இஸ்தான் புல்லில் வாழும் அஹ்மது டெனிஸர். தனது மகள் எலி்ப் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஆபீசிற்கு நள்ளிரவில் செல்கிறார். செல்லும் வழியில் காரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவருடன் அவரது மகள் வயதில் இளம்பெண் ஒருவரும் இருக்கிறாள். இந்த வழக்கை  ஹூசைன் டெமிர் என்ற இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அங்கு லீவுக்கு வான் நகரிலிருந்து அவரது தம்பியும், குற்றப்பிரிவு கேப்டனுமான உமர் டெமிர் வந்திருக்கிறார். நாட்டிலேயே ஸ்மார்டான சிறந்த போலீஸ் அதிகாரி அவர். தனது காதலியை திருமணம் செய்துகொள்ள நினைத்துள்ள நேரத்தில் அவரின் பணிக்காக  பாராட்டி விருது வழங்கப்படுவதோடு ஒரு மாத காலம் சம்பளத்தோடு விடுமுறையையும் அரசு வழங்குகிறது. அதில்தான் இஸ்தான்புல்லிலுள்ள தனது அம்மா, அண்ணன் குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார் உமர் டெமிர்.  அஹ்மது டெனிஸர் கொல்லப்பட செய்தி வயர்லெஸில் சொல்லப்பட, அண்ணன் ஆபீசில் ஆர்டா என்ற நண்பனோடு பேசிக்கொண்டிருக்கிறார் உமர். ஆர்டா அந்த வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டே  கிளம்பும்போது, உமரையும் சரி ந

ஊபர் ட்ரைவரோடு போதை மாபியா தலைவனை வேட்டையாடும் முன்கோபி போலீஸ்!

படம்
ஸ்டூபர் - ஆங்கிலம் (2019) இயக்கம் -மைக்கேல் டௌசே திரைக்கதை - ட்ரிப்பர் கிளான்சி ஒளிப்பதிவு - பாபி ஷோரே   இசை - ஜோசப் ட்ரப்பனீஸ் காமெடி ஆக்சன் வகையைச் சேர்ந்த படம். ஸ்டீவ் பிளஸ் ஊபர் என்பதைத்தான் ஸ்டூபர் என பொருத்தி தலைப்பை வைத்திருக்கிறார்கள்.  படத்தின் நாயகன் ஊபர் கம்பெனிக்காக லீசுக்கு நிசான் எலக்ட்ரிக் காரை ஓட்டும் ஸ்டூதான். படத்தில் இவர் அனைத்து காட்சிகளிலும் வருகிறார். வசனம், உடல்மொழி என அனைத்திலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் இவர். இவருக்கு எதிர்மறையான பிக் பாய் கதாபாத்திரத்தில் பட்டிஸ்டா நடித்திருக்கிறார். கண்பார்வை பிரச்னையால் தன் போலீஸ் துணையை இழக்கும் காட்சியிலும், பின்னர் ஸ்டூவுடன் இணைந்து எதிரிகளை வேட்டையாடும் காட்சியிலும் இறுதிக்காட்சியில் தன் மகளைக் காப்பாற்றியதற்காக கட்டிப்பிடிப்பதும் என பட்டிஸ்டா நடிக்க முயன்றிருக்கிறார். முடிந்தளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவருக்கு காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.  கதையை மறந்துவிட்டோமே... போதைப்பொருள் மாபியா தலைவனைப் பிடிக்கவேண்டும். டெட்ஜோ

தவறுகளை ஒழிக்க உருவான புராண நாயகன் - வீரபோக வசந்த ராயுலு!

படம்
வீரபோக வசந்த ராயுலு - தெலுங்கு இயக்கம் - இந்திரசேனா இசை மார்க் கே ராபின் ஒளிப்பதிவு  நவீன் யாதவ், எஸ்.வெங்கட் மூன்று கதைகளைக் கொண்ட படம். படம் முடிவில் ஆச்சரியமான முடிவு கிடைக்கிறது. இதுதான் படத்தை இப்படி ஒரு படமா எனவும், குழப்பறாங்கப்பா எனவும் சொல்ல வைக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. முதல் கதையில் ஆதரவற்றோர் காப்பகங்களில் உள்ள பெண்குழந்தை காணாமல் போகிறது. போலீசார் வழக்கை அலட்சியமாக கையாள்கின்றனர். இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு காப்பக உரிமையாளர் டாக்டர் செயல்பட திடீரென அவர், கடத்தல் கும்பலால் கொல்லப்படுகிறார். அதில் மிஞ்சுவது செஸ் பிளேயராக உள்ள டாக்டரின் மகன்தான். சிறுவன் என்ன செய்ய முடியும்? அடுத்த கதை - ஒரு பதினைந்து வயது சிறுவன், காவல்நிலையத்தில் தன் வீட்டைக் காணோம் என்று புகார் செய்கிறான். என்னடா இது புது விஷயமாக இருக்கிறதே என சப் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அப்போதுதான் குழந்தைகளை கடத்துவது தெரிய வருகிறது. இதற்கிடையில் கடத்தல் குழுவைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்று தலைவரை நெருங்கும்போது, சப் இன்ஸ்பெக்டரின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.

நட்பிலும் வேறுபாடுகள் உண்டு! - சந்திப்போமா... கடிதங்கள்

படம்
6 அன்புத்தோழர் சபாவுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் வேலையிலும் சிலசமயங்களில் சாதி சார்ந்தும் வேலை சார்ந்தும் பிரஷர் இருக்கலாம் . எனக்கு தினசரி பன்னிரண்டு பக்கம் செய்யவேண்டும் . பிரஷர் குப்பென எகிறாதா ? அதுவும் பத்திரிகை தொடங்கும்போதிலிருந்தே இருப்பவர்கள்தான் என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் . ஆனால் எதையும் புதிதாக கற்றுக்கொண்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள் . தென்னைவோலையில் சிறுநீர் கழித்தால் வரும் சத்தம் போல , அவ்வளவு பேச்சு ... அப்புறம் வேலையில் எங்கே மனம் செல்லும் ? தின்பதையும் ஊர் சுற்றுவதையும் தாண்டி எதையும் யோசிக்காத ஆன்மாக்கள் . இப்போதே ஊதிய உயர்வு பேச்சுக்களை தொடங்கிவிட்டார்கள் . எடிட்டர் தண்ணீர் ஒட்டாத விம் பாராய் நழுவுகிறார் . அவரிடமும் மீட்டிங்கை நடத்தினார்கள் . விளைவு , அனைவருக்கும் சிறப்பான செய்தியை பத்திரிகை அதிபர் அனுப்பி அதிரவைத்தார் . அப்புறம் மூச்சு வரணுமே ? சினிமாதான் சிறிது ஆசுவாசம் தருகிறது . ப்ரௌச்செவரு என்ற தெலுங்கு படத்தைப் பார்த்தேன் . ஸ்ரீவிஷ்ணுவுக்கு முக்கியமான படம் . இயக்குநர் விவேக் ஆத்ரேயா திரைக்கதையில் பின்னி இருக