இடுகைகள்

பாலபாரதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எழுதுவதில் சுணக்கம்! - கடிதங்கள்

படம்
  எழுதுவதில் சுணக்கம் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இப்போது ஊருக்கு வந்துவிட்டேன். சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அறையில் பயங்கரமான புழுக்கம். அலுவலகம் சென்றால் கூட எட்டு மணிநேரம் சமாளித்து விடலாம். வடக்குப்புதுப்பாளையம் நூலகத்திற்கு அன்பளிப்பாக தர எட்டு நூல்களை ரெடி செய்துள்ளேன்.  மந்திர சந்திப்பு - பாலபாரதி அவர்கள் எழுதிய நூலை படித்து வருகிறேன். இந்த நூல் தினசரி ஒரு அத்தியாயம் என அவரது பேஸ்புக் பக்கத்திலும், வலைத்தளத்திலும் வெளியானது. இப்போது நேரம் கிடைத்துள்ளதால் அதனை நூலாக தொகுத்துவிட்டார்.  அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை கணியம் சீனிவாசன் சாரிடமிருந்து பெற்றேன். அதனை இனிமேல்தான் படிக்கத் தொடங்கவேண்டும். அடுத்து வரும் ஜூனில்தான் எங்களுக்கு வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். எனக்கென தனியாக எழுதும் வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னமோ தெரியவில்லை. எழுதுவதில் சுணக்கமாக சோம்பலாக இருக்கிறது. வேகமாக வேலைகளைத் தொடங்கவேண்டும். வாசிப்பதிலும் வேகம் கூட்டவேண்டும்.  நன்றி ச.அன்பரசு 5.4. 2021

பிடித்திருக்கிறது என்பதற்கான உடனே நூலை வாங்கினால் கஷ்டம்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். லைபாக்லை ஆன்ட்டி வடகிழக்கு சிறுகதைகள் தொகுப்பு படித்தேன். மொழிபெயர்ப்பும் தொகுப்பும் சுப்பாராவ். நூலை வாங்கி படித்துக் கொண்டிருந்தபோது, அலுவலக நண்பர் பாலபாரதியிடம்  எழுத்தாளர் பற்றிக் கேட்டேன். அவர்,  சுப்பாராவ் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடையாது என்று சொன்னார். கூகுள் ட்ரான்ஸ்லேட் வழியாக அவர் மொழிபெயர்த்த நூல் ஒன்றை வாங்கி படாதபாடு பட்டதாக கூறினார்.  தொழில்நுட்பத்தை தனது வேலைக்காக பயன்படுத்திக்கொள்கிறார் போல என்று நினைத்துக்கொண்டேன். புதிய புத்தகம் பேசுது இதழில் நூல்களைப் பற்றி சுப்பாராவ் எழுதுவதை சில ஆண்டுகளாக நூலகத்தில் படித்திருக்கிறேன்.  வடகிழக்கு தொடர்பான கதைகளை படிக்கவேண்டும் என நினைத்து புத்தக கண்காட்சியில் சுப்பாராவின் நூலை வாங்கினேன். மொத்தம் பதினான்கு கதைகள் இருந்தது. அதில் நான்கு கதைகள் மட்டுமே மாநிலத்திலுள்ள மக்களின் தன்மையை, பிரச்னையை, அரசியல் சிக்கல்களை பேசும்படி இருந்தது.  பிடித்திருக்கிறது என்ற காரணத்திற்காக உடனே நூலை வாங்கக் கூடாது என்பதற்கு லைபாக்லை ஆன்ட்டி சரியான உதாரணம்.  எலிஸா பே எழுதிய இந்தி

பூமிக்கு அடியிலுள்ள மர்மத்தை சீலன் நண்பர்கள் குழு கண்டுபிடித்ததா? - பூமிக்கு அடியில் ஒரு மர்மம் - பாலபாரதி

படம்
  சென்னை புத்தக காட்சி 2021 நந்தனம்  பூமிக்கு அடியில் ஓர் மர்மம் யெஸ். பாலபாரதி வானம் பதிப்பகம் பக்கம் 164 ரூ. 140 விகடன் விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதியின் மற்றொரு சிறார் நாவல். கதை நடைபெறுவது நாகப்பட்டினத்தில். அங்கு வாழும் சிறுவர்கள் சீலன், புகழ்மணி, அன்வர் ஆகியோர்தான் நாயகர்கள். இவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களுக்கு அங்குள்ள சுயம்புநாதர் கோவிலிலுள்ள சுரங்கம் பற்றிய தகவல் கிடைக்கிறது. இவர்களோடு கண்ணன், ஜெமி, ஜெஸி ஆகியோர் இணைந்துகொள்கிறார்கள் சுரங்கம் என்றாலே உடனே நமக்கு என்ன தோன்றும்? ஆகா, பொக்கிஷத்தை அடையப்போகிறோம் என்கிற கற்பனை சந்தோஷம்தானே? அதேதான் கதையின் மாந்தர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.  கதையின் போக்கில் பாலபாரதி சொல்லும் பல்வேறு விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆட்டிச சிறுவனை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் சிறுவர்கள் குழு. அவனது செயல்பாடு வினோதமாக தோன்றினாலும் அவன்தான் குயிலானோடு இயல்பாக பழகுகிறான். அவனது நண்பர்கள் குயிலானை எதிரியாக பார்க்கும்போது கூட கண்ணன் அப்படி பார்ப்பதில்லை.  அவனை விட்டுக்கொடுக்காத ஜெமி, ஜெஸி பாத்திரங்கள் அழ

தேர்வால் சோகத்திற்குள்ளாகும் மாணவர்கள்!

படம்
தேர்வு வரும் காலங்களில் மாணவர்கள் கடுமையான மனச்சோர்வுக்கு உட்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 72 நகரங்களில் செய்த ஆய்வில் 82 சதவீத மாணவர்கள் கடுமையான சோர்வையும் அழுத்தத்தையும் உணர்வதாக கூறியிருக்கிறார்கள். ஃபோர்டிஸ் மனநல திட்டம் சார்பில் பல்வேறு தன்னார்வலர்கள் இந்திய மாநிலங்களில் இதுபற்றி சோதனைகளை நடத்தினர். இதில் 25 சதவீதப் பேர் கடுமையான பதற்றத்தை தேர்வுக்காலங்களில் மனதளவில் சந்திக்கின்றனர். இவர்களில் அதிகளவு பதற்றத்தை சந்திப்பவர்களுக்கு ஐந்து எனும் ரேட்டிங்கை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். இதில் 13 சதவீத மாணவர்கள் மட்டும் குறைந்தளவு பதற்றம் கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளனர்.  “நாம் மாணவர்களுக்கு தேர்வு கால பதற்றம் பற்றி குறைவாகவே விவாதித்துள்ளோம். ஆனால் இந்த ஆய்வில் குறைந்தளவேனும் தேர்வு பற்றிய பதற்றத்தை மாணவர்கள் உணருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது” என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான மருத்துவர் சஞ்சய் பாரிக். மாணவர்களிடம் நெருங்கிப் பேசினால்தானே அவர்களின் மன அழுத்தம் வெளியே தெரியவரும். இதற்காக 24 பேர் கொண்ட தன்னார்வக்குழுவை பயிற்சி கொடுத்து உருவாக்கி உள்ளனர். இதனால் மாணவர

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்ள.....

படம்
ஆட்டிசம் சில புரிதல்கள் யெஸ்.பாலபாரதி பாரதி புத்தகாலயம் ரூ.50 ஆட்டிசம் என்றால் என்ன, அதனை எப்படி அணுகுவது, இக்குறைபாடு கொண்ட குழந்தைகளை எப்படி பயிற்சி அளிப்பது, சமூகத்தில் கலந்து உறவாட வைப்பது, ஆட்டிசக் குழந்தைகளின் உணவுப்பழக்கம் என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் விரிவாக விளக்கியிருக்கிறார். ஆட்டிசத்தை முதலில் கண்டறிந்து கூறிய லியோ கானர் என்ற மருத்துவர் தொடங்கி, பெற்றோருக்கான குறிப்புகள், பயிற்சிகள், இக்குறைபாட்டுடன் சாதித்த ஆல்பிரட் ஐன்ஸ்டீன் வரை விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இது வெறும் ஆட்டிசம் பற்றிய நூலாக இல்லாமல் அனுபவ நூலாக இருப்பதன் காரணம், ஆசிரியரின் மகனும் ஆட்டிசக் குறைபாடு பாதிப்பு உள்ளவன் என்பதால்தான். சாதாரண பள்ளிகளில் ஆட்டிசக் குழந்தைகளை படிக்க வைப்பது சிரமம். எனினும் அதனை ஆசிரியர் முக்கியம் என்கிறார். சிறப்பு பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஆட்டிச குறைபாடு உள்ள மாணவர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பாலபாரதி. சாதாரணமானவர்கள் சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்றால், ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு அனைத்தையும் சொல்லித் தருவது கட்டாயம்.  ஆட்டிச

கடலை நேசிக்கச் சொல்லும் ஆமை காட்டிய அற்புத உலகம்!

படம்
ஆமை காட்டிய அற்புத உலகம் யெஸ்.பாலபாரதி பாரதி புத்தகாலயம் கடலில் உள்ள உலகம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். நான்கே நான்கு சிறுவர்கள் மூலம் கடல் உயிரிகளை ரசிக்க, பாதுகாக்க, பயப்படாமலிருக்க சொல்லித் தந்திருக்கிறார் ஆசிரியர். கடலில் ஜாலியாக விளையாடச் செல்கிறது சிறுவர்கள் கூட்டம். அப்போது என்னைக் காப்பாத்துங்க என்று ஒரு குரல் கெஞ்சுகிறது. ஆம் அதுதான் கதை நாயகன் ஜூஜோ என்கிற ஜூனியர் ஜோனாதன். மனிதரல்ல ஆமைதான் கதை சொல்கிறது. கதையை நடத்திச்செல்கிறது என்பதுதான் இதில் புதுமை. கதையின் ஊடே மெல்ல கடல் உயிரிகள் பற்றிய அறிமுகம், மனிதர்கள் சூழலை அழிக்க செய்யும் வேலைகள், கண்பார்வை இழக்கும் நீல்ஸ் திமிங்கலம், ஜெல்லி மீன்கள் என பல்வேறு விஷயங்களை அறிமுகப்படுத்தி அதிசயிக்க வைக்கிறார் ஆசிரியர். சுறா, திமிங்கலம், ஆமை, திருக்கை மீன்கள், ஜெல்லி  என பல்வேறு உயிரினங்கள் குறித்து நமக்கு ஆங்கிலத்திரைப்படங்கள் வழியாக கூறிய அனைத்தையும் உடைத்து பேசி உண்மையை இளையோர் மனங்களில் பதிய வைக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்களை பதிய வைப்பது அவசியம். சொக்கலிங்கத்தின் படங்கள் குறுநாவலுக்கு ஏற்றவைதா