இடுகைகள்

முத்தாரம் Mini லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்விஸ்வங்கி பணம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி- கட்கரி

முத்தாரம் Mini பணமதிப்பு நீக்கம் , ஜிஎஸ்டி ஆகியவை நாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளதே ? ஜிஎஸ்டி மூலம் மோசடிகள் குறைக்கப்பட்டு அரசுக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது . கருப்புபணம் மெல்ல குறையத்தொடங்கியுள்ளதோடு   வெளிநாடுகளுக்கும் பணம் செல்வதில்லை . வரிவருவாய் மக்களின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் . ஆனால் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பண இருப்பு அதிகரித்துள்ளது … சட்டப்பூர்வமான முறையில் சேமிக்கப்பட்டுள்ளது . இந்திய பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் அது . சாலை பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டுகிறீர்களே ? சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துகளில் 1.5 லட்சம்பேர் இறந்துள்ளனர் . இவர்களைக் காப்பாற்ற கொண்டுவந்த வாகனச்சட்டம் இன்னும் நிறைவேறவில்லை . போலி லைசென்ஸ்களின் அளவை 30 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைத்துள்ளேன் . உங்களுடைய பணி திருப்தியளிக்கிறதா ? இல்லை . வருமானத்தை 25 லட்சம் கோடியாக வருமானத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறேன் . பாரத்மாலா (7.5 லட்சம்கோடி ), சாகர்ம

ஆதாரிலும் தவறுகள் உண்டு!

முத்தாரம் Mini பொதுவிநியோகமுறை முதல் போன் கனெக்‌ஷன் வரை ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது . இதில் பாதுகாப்பு உண்டா ? அடையாள முறை என்பது அதற்கான பிரச்னைகளைக் கொண்டுள்ளது . இதனை சரிபார்க்க கருவிகள் , மின்சாரம் தேவை . இவை இல்லாதபோது நிலைமை மோசமாகிவிடும் . எங்களுடைய ப்ரௌசர் மட்டுமல்ல உலகிலுள்ள பல்வேறு அமைப்புகளிலும் பாதுகாப்பு தவறுகள் இல்லாமலில்லை . இணையத்தில் பேச்சு சுதந்திரமும் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது . சமூகவலைதள பதிவுகளுக்கு அரசு தண்டனை அளிக்க சட்டங்களை உருவாக்கி வருவது ஆபத்தானது அல்லவா ? இணையச்சுதந்திரம் தாக்குதல்களாக்கி வருவது உண்மை . அவதூறான செய்திகளுக்கு இந்திய அரசு தண்டனைச்சட்டங்களை உருவாக்கி வருகிறது . பொது , தனியார் என பதிவுகளை பிரிப்பது சிக்கலான ஒன்று . சீனா இணையத்தை ஒற்றைத்தன்மையுடையதாக்கி வீசாட் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்திவருகிறது . இது பற்றி உங்களது கருத்து ? அரசின் தலையீடு பற்றி உறுதியாக கூறமுடியாது . ஐரோப்பாவில் கூகுள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மக்களின் பிரைவசி விஷயங்களில் தலையிட முடியாத சூழலையும் இதில் கருத்தில் கொள்ளவேண்டும் .

இந்தியாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு நேபாளம் உதவாது!

படம்
முத்தாரம் Mini நேபாளத்தில் இருபது ஆண்டுகளாக முழு ஆட்சிக்காலம் நீடிக்காத அரசுகளை பார்த்துள்ளோம் . என்ன பிரச்னை ? சட்டங்களின் ஒருங்கிணைப்பு போதாமைதான் காரணம் . இதோடு பிறநாடுகளின் தலையீடுகளும் ஒன்றுசேர அரசு உறுதியாக உருவாகவில்லை . அரசு சரியாக பணியாற்றாதபோது அதனை திரும்பபெறும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு . இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது பெரும்பலம்தானே ? கம்யூனிச இயக்கம் நேபாளத்தின் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை லட்சியமாக கொண்டுள்ளது . கம்யூனிய கட்சிகள் ஜனநாயகமற்று நடந்துகொள்வதைப் போன்று சித்தரிக்க முயல்கிறார்கள் . ஆனால் உண்மையில் ஜனநாயக தேரை தோளில் சுமந்து பயணிப்பது கம்யூனிச கட்சிகள்தான் . திறந்தவெளி சமுதாயத்தை பல்வேறு கலாசார மக்களை ஒருங்கிணைத்து கட்டமைக்க முயற்சிக்கிறோம் . நேபாள பிரதமர் சீனாவுக்கு சென்றுவந்த பயணம் குறித்து ..? சீனாவுடன் பெரும் ஒப்பந்தங்களை செய்துள்ளோம் . நேபாளத்தின் நோக்கம் பரஸ்பர லாபம்தான் . சீனாவுடன் கொண்ட நட்பை எல்லைப்புற நாடுகள் சந்தேகத்துடன் பார்க்கவேண்டியதில்லை . பிறந

"நீதிமன்றத்தின் கதவு மக்களுக்காக திறந்தேதான் இருக்கிறது"

படம்
முத்தாரம் Mini பயமற்ற இந்தியாவைப் பற்றி பேசுகிறீர்கள் . கௌரிலங்கேஷ் , எம் . எம் . கல்புர்கி , கோவிந்த் பன்சாரே , நரேந்திர தபோல்கர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் படுகொலைகள் அச்சுறுத்தலாக உள்ளதே ? கர்நாடகாவில் பத்திரிகையாளர் கௌரிலங்கேஷ் கொல்லப்பட்டது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு . இதுபோல நிறைய சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளது . மாநில அரசுக்கு நாங்கள் அறிவுறுத்தல்களையும் உதவிகளையும்   தரமுடியும் . ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் இந்திய அரசை குறைசொல்வது அழகல்ல . கூட்டாட்சியைப் பற்றி நீங்கள் பேசினாலும் ஜிஎஸ்டி , பணமதிப்புநீக்கம் அரசுக்கு புகழ்தரவில்லையே ? ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சியில் தயாரானது . அதை நாங்கள் எளிமைப்படுத்தி அமுல்படுத்தினோம் . ஜிஎஸ்டிக்காக இந்திய அரசை மட்டும் வசைபாடினால் எப்படி ? காங்கிரஸ் , பிஜூ ஜனதாதளம் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் இதில் பங்கில்லையா ? என்ஐஏ மீது விமர்சனங்கள் கிளம்புகிறதே ? அது தன்னாட்சி அமைப்பு . அதன் மீது நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம் . நீதிமன்றத்தின் கதவு மக்களுக்காக திறந்தேதான்

Garfield 40!

படம்
முத்தாரம் Mini உங்களுக்கு திங்கட்கிழமை பிடிக்காதா ? திங்களை நான் வெறுப்பதில்லை . தினசரி காலையை காபி , டூநட்டுடன் தொடங்குவது வழக்கம் . திங்கட்கிழமை காலையில் மீட்டிங் இல்லாமல் பார்த்துக்கொள்வேன் . அவ்வளவுதான் . கார்பீல்டின் சோம்பேறித்தனம் மிகவும் பிரபலமானது . இந்த குணநலனை எப்படி உருவாக்கினீர்கள் ? நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கார்பீல்டு கேரக்டர் உண்டு . டயட் , தினசரி வேலைகளை சோம்பலாக செய்யும் மக்களின் பழக்கத்தை முன்வைத்தே அக்கேரக்டரை வடிவமைத்தேன் . இன்று 200 மில்லியன் மக்கள் கார்பீல்டு காமிக்ஸை வாசிக்கிறார்கள் . சோம்பேறி பூனை உங்களுக்கு 800 மில்லியன் டாலர்களை சம்பாரித்து கொடுத்திருக்கிறதே ? ஆம் . கொழுத்த சோம்பேறி பூனையை பலரும் விரும்பாமல் இருக்கமுடியாது . என்னையும் என் குடும்பத்தையும் பராமரிப்பதே கார்பீல்டுதான் . நான் என்னை கார்ட்டூனிஸ்ட் என்று கூறிக்கொள்வதையே இன்றும் விரும்புகிறேன் . இவ்வாண்டை நினைவுபடுத்தும் விலங்கு என்ன ? மிகவும் கஷ்டமான கேள்வி . கார்பீல்டாக இருந

அரசு வளத்தை வீரர்கள் தவறாக பயன்படுத்துவதால்தான் வரி!

படம்
முத்தாரம் Mini விளையாட்டு வீரர்கள் வருமானவரி கட்டிவரும் நிலையில் எதற்காக தனியாக 33% வரியை அரசுக்கு தரவேண்டும் ? அரசுக்கு வரி கட்டுவது அறக்கட்டளை செயல்பாடல்ல , குடிமகன்களின் கடமை . விளையாட்டு வீரர்கள் வணிகரீதியில் பெறும் வருமானத்தில் ஒரு பகுதியைத்தான் அரசு வரியாக கேட்கிறது . அரசின் பிறதுறை பணியாளர்களுக்கும் இதே விதிதான் . வரி விதித்தால் விளையாட்டு வீரர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடாதா ? தேசத்தின் பெருமைக்காகவும் ஆர்வத்திற்காகவும் மட்டுமேவா வீரர்கள் விளையாடுகிறார்கள் ? மாநில அரசின் வேலைவாய்ப்பை பெற்ற விளையாட்டு வீரர்களுக்கானது . வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை அரசின் சட்டம் பாதிக்காது . பரிசும் , அரசுவேலையும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க போதுமா ? சுசில்குமாரைத் தவிர வேறு எந்த வீரரும் இரண்டுமுறை ஒலிம்பிக்கில் மெடல் வெல்லவில்லை . ஒலிம்பிக்கில் தங்கமெடல் வென்றவருக்கு அரசு ஆறு கோடி ரூபாய் வழங்கியது . விளையாட்டு வீரர்களுக்கு அரசுவேலை , பணப்பரிசு மிக முக்கியமான ஒன்று . அரசு வ