இந்தியாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு நேபாளம் உதவாது!







முத்தாரம் Mini

நேபாளத்தில் இருபது ஆண்டுகளாக முழு ஆட்சிக்காலம் நீடிக்காத அரசுகளை பார்த்துள்ளோம். என்ன பிரச்னை?

சட்டங்களின் ஒருங்கிணைப்பு போதாமைதான் காரணம். இதோடு பிறநாடுகளின் தலையீடுகளும் ஒன்றுசேர அரசு உறுதியாக உருவாகவில்லை. அரசு சரியாக பணியாற்றாதபோது அதனை திரும்பபெறும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது பெரும்பலம்தானே?

கம்யூனிச இயக்கம் நேபாளத்தின் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை லட்சியமாக கொண்டுள்ளது. கம்யூனிய கட்சிகள் ஜனநாயகமற்று நடந்துகொள்வதைப் போன்று சித்தரிக்க முயல்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜனநாயக தேரை தோளில் சுமந்து பயணிப்பது கம்யூனிச கட்சிகள்தான்.திறந்தவெளி சமுதாயத்தை பல்வேறு கலாசார மக்களை ஒருங்கிணைத்து கட்டமைக்க முயற்சிக்கிறோம்.

நேபாள பிரதமர் சீனாவுக்கு சென்றுவந்த பயணம் குறித்து..?

சீனாவுடன் பெரும் ஒப்பந்தங்களை செய்துள்ளோம். நேபாளத்தின் நோக்கம் பரஸ்பர லாபம்தான். சீனாவுடன் கொண்ட நட்பை எல்லைப்புற நாடுகள் சந்தேகத்துடன் பார்க்கவேண்டியதில்லை. பிறநாடுகளுக்கு எதிரான விஷயங்களுக்கு நேபாள மண்ணை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்பது உறுதி.

-பிரதிப்குமார் கியாவலி, வெளியுறவுத்துறைஅமைச்சர், நேபாளம்.



பிரபலமான இடுகைகள்