இடுகைகள்

வீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோலர்கோஸ்டரில் செல்லும்போது கீழே விழ வாய்ப்புள்ளதா?

படம்
      ரியலா ? ரீலா ?   1. ஒருவர் தும்மினால் அவருக்கு மற்றவர்கள் , காட் பிளெஸ் யூ சொல்லவேண்டும் . ரியல் : மதம் சார்ந்த இரண்டு கருத்துகள் இதன் பின்னே இருக்கின்றன . ரோமில் பிளேக் நோய் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் . போப் கிரிகோரி ( கிரிகோரி தி கிரேட் ), யாராவது தும்மினால் அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் . எனவே அவர் அந்நோயிலிருந்து குணமாக காட் பிளெஸ் யூ சொல்லி பிரார்த்தியுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார் . அடுத்து , தும்மலின்போது இறைவனின் ஆசி பெற்ற மனித ஆன்மா உடலிலிருந்து வெளியேறுகிறது . எனவே அதைத் தடுக்கவும் , வெளியிலுள்ள தீய சக்திகள் பிறரைத் தாக்காமல் இருக்கவும் மக்கள் காட் பிளெஸ் யூ சொல்லத் தொடங்கினர் என்கிறது வரலாறு . 2. வைக்கோலைப் பயன்படுத்தி வீடு கட்ட முடியும் ரியல் : மண் , சுண்ணாம்பு , கற்கள் கொண்டு நம் முன்னோர்கள் வீடு கட்டினர் . பின்னாளில் சிமெண்ட் , மணல் , செங்கற்கள் என புழக்கத்திற்கு வந்தன . இன்று உலகில் பசுமை வீடுகள் என்றழைக்கப்படும் கட்டட வகைகளில் வைக்கோல் கட்டடங்களும் ஒன்று . உலர்ந்த இறுக்கமாக பின்னப்பட்ட வைக்கோல்களைப் பயன்படுத்தி வீட

அமேஸானின் இன்டோர் ட்ரோன் பாதிப்பு ஏற்படுத்துகிறதா?

படம்
        அமேசானின் இன்டோர் ட்ரோன் அமேசான் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இன்டோர் ட்ரோன் , பாதுகாப்பு பிரச்னை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக டெக் வல்லுநர்கள் கூறியுள்ளனர் . தி ரிங் ஆல்வேய்ஸ் ஹோம் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது . ஹேக்கர்கள் , இச்சாதனத்தை எளிதாக பயன்படுத்தி வீட்டில் இருக்கும் பொருட்களை பார்த்து கொள்ளையடிக்க முடியும் . அமேசான் நிறுவனம் இச்சாதனத்தை வீட்டை கண்காணிக்கும் அற்புதமான சாதனம் என்று விளம்பரம் செய்கிறது . ஆனால் காஸ்பர்ஸ்கை நிறுவனம் , இது புதிய சைபர் பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது . ரிங் மட்டுமல்ல இணையத்தோடு இணைந்து செயல்படும் அனைத்து சாதனங்களும் பிறரால் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை . இச்சாதனம் வீட்டுக்குள் பறந்து கண்காணிப்பது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இனிமேல் பயனர்கள் கூறும் விஷயங்களில்தான் இருக்கிறது .

வீட்டிலேயே தனியறையில் இருப்பது சரியா?

படம்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் பலரும் பரிந்துரைப்பது வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்றுதான். வீட்டிலேயே அலுவலக வேலையைப் பார்ப்பது என்பது அனைவருக்கும் பொருந்தாது. காரணம், அதற்கான அடிப்படை வசதிகளை பலரும் உருவாக்கி வைத்திருக்க மாட்டார்கள். மேலும், வேலை செய்வதற்கான மனநிலையை வீட்டில் உருவாக்கிக்கொள்வது கடினம்,. வீட்டில் இருக்கும்போது, மனைவி பேசுவதைக் கேட்கவேண்டியிருக்கும். குழந்தைகளோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும். இதற்கிடையில் கவனமான ஆபீஸ் வேலையையும் பார்க்கவேண்டும் என்பது பெரும் சுமையாகவே இருக்கும். கணியம் சீனிவாசன் எழுதியுள்ளது போலவே, நேர மேலாண்மை இதில் முக்கியமானது. அதை கடைப்பிடித்து வேலை செய்வது உடனே அனைவருக்கும் சாத்தியமாகாது. மேற்கு நாடுகளில் குழந்தைகளுக்கு தனி அறை உண்டு. அவர்களுடைய பணியை அங்கு வைத்து செய்வார்கள். சாப்பிட, பேச என ஹாலுக்கு வருவார்கள். இந்திய வீடுகளில் இப்படி தனி அறைகளை எதிர்பார்க்க முடியாது. நேரடியாக சொன்னால் இங்கு அந்தரங்கம் என்பதே பொதுவாகத்தான் இருக்கும். வீடு என்பது குறைந்தபட்சம் ஹால், ஒரு அறை, சமையலைறை, கழிவறையோடு இணைக்கப்பட்ட குளியலறை என்றே பொதுவாக இ

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வீடுகள் - இங்கிலாந்தில் புது ரூல்!

படம்
giphy.com மாற்றம் தரும் பசுமை வீடுகள் !   இங்கிலாந்தில் உள்ள வீடுகளில் வெளியாகும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க கார்பன் வெளியீட்டுக்கு எதிரான மனநிலை உருவாகிவருகிறது. இதன்காரணமாக தனிநபரின் இயற்கைவள ஆதாரங்கள் செலவு, தொழிற்சாலைகளின் பங்கு, உணவுக்கு உதவும் பண்ணை விலங்குகள் என அனைத்தையும் சூழலியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தில் வெளியாகும் கார்பன் வெளியீட்டுக்கு, அங்கு வாழும் மக்களின் வீடுகளும் முக்கியக்காரணம் என அரசு கண்டறிந்துள்ளது. இதன்விளைவாக, 2022க்குள் கட்டப்படும் புதிய வீடுகள் கார்பன் வெளியீடு குறைந்த பசுமை வீடுகளாக்க முயன்று வருகிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும், 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் அறைகளை சூடாக வைக்க கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றைத் தவிர்க்க வைக்கும் வழிகளை அரசு தேடிவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் பசுமை வீடுகளுக்கான விதிகள் அமலாக இருக்கின்றன. தற்போது வீடுகளுக்குத் தேவைப்படும் வெந்நீர் பொதுவா