இடுகைகள்

அன்று மலமள்ளும் தொழிலாளி இன்று கல்லூரி பேராசிரியர்! -தலித் பெண்ணின் சாதனைக்கதை --ச.அன்பரசு

படம்
அன்று மலமள்ளும் தொழிலாளி இன்று கல்லூரி பேராசிரியர் ! - தலித் பெண்ணின் சாதனைக்கதை -- ச . அன்பரசு " உன் அப்பா என்ன வேலை செய்கிறார் ? துப்புரவு வேலை செய்பவர்தானே ? போய் கழிவறையை கழுவிவிடு . வகுப்பில் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய் ?" என்று கேட்ட ஏழாம் வகுப்பு சமஸ்கிருத ஆசிரியரின் அமில வார்த்தைகள் அந்த தலித் சிறுமியை தீயாய் சுட்டபோதும் அணுவளவும் நம்பிக்கை தளரவில்லை . ஹரியானாவின் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமஸ்கிருத வகுப்பில்தான் இந்த தீண்டாமைப் பேச்சு . இன்று அச்சிறுமி ஜாதி அச்சுறுத்தல்களை கடந்து மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியையாகி சாதித்திருக்கிறார் . தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிறருக்கும் உள்ள வேறுபாடு , தன் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்திலும் தலித்துகள் தீண்டாமை அவலத்தை மென்று செரித்து கண்ணீரை உரமாக்கி முன்னேற வேண்டியுள்ளதுதான் . ஹரியானாவில் கைதல் மாவட்டத்தில் ராஜூண்ட் கிராமத்தில் பால்மிகி ஜாதியில் மலமள்ளும் தொழிலாளிக்கு பிறந்த கௌஷல் பன்வார் , மேலே சொன்ன சம்பவம் நடந்த அடுத்த நாளும் வகுப்புக்குச் சென்றார் . அச்சுறுத்தியும் அடித்தும் அசராத கௌசலை வே

இந்தியாவின் நெ.1 அலைச்சறுக்கு பெண்! - ச.அன்பரசு

படம்
இந்தியாவின் நெ .1 அலைச்சறுக்கு பெண் ! - ச . அன்பரசு மங்களூருவிலுள்ள பள்ளி மாணவர்கள் கடல் நீரில் மெல்ல பயம் கலைந்து , உற்சாகம் துள்ள நீச்சலடித்துக் கொண்டிருந்தனர் . அதனை தூரத்தில் தனியே நின்றபடியே ஏக்கம் நிறைந்த கண்களோடு ஒரு சிறுமி பார்த்துக்கொண்டிருந்தாள் . அவளுடைய பெற்றோருக்கும் தன் பெண்ணின் சிறிய ஆசையை பூர்த்தி செய்யமுடியவில்லை என்று வருத்தம்தான் . ஆனால் ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளித்து வரும் நிலையில் கடல்நீரில் நீச்சல் எப்படி சாத்தியம் ? என்ற அக்கறை அவர்களுக்கு . இச்சூழலில் அவளுடைய தாத்தா மட்டுமே அச்சிறுமிக்கு ஆறுதலாய் இருந்தார் . வெறும் ஆறுதல் மட்டுமல்ல , அவளது பெற்றோரிடம் போராடி அச்சிறுமி நீரில் இறங்க பர்மிஷனும் வாங்கி கொடுத்துவிட்டார் தாத்தா . அச்சிறுமிக்கு தன் கனவான  கடலில் அலைச்சறுக்கு பயிற்சி என்ற மகிழ்ச்சியோடு , ஆஸ்துமா என்ற தன் நோய்மையையும் சமாளிக்க வேண்டியிருந்தது . " கடலை எனது தாயின் மடியைப்போலவே உணர்கிறேன் . கடல்நீரில் இருக்கும்போது என் மனதில் எவ்வித தயக்கமும் பயமும் இதுவரை எழுந்ததேயில்லை " என அன்லிமிடெட் உற்சாகத்தில் பேசும் சிறுமியின் பெயர் தன்வி ஜ

ஆல் நியூ அறிவியல் - தொகுப்பு: விஷ்வேஷ் பானர்ஜி

படம்
ஆல் நியூ அறிவியல் - தொகுப்பு: விஷ்வேஷ் பானர்ஜி இத்தாலியின் சைக்கிள் டூரிஸம் ! இத்தாலியின் ரிசார்ட் ஒன்று மலைப்பாதையில் சைக்கிள் ஓட்ட சுற்றுலா பயணிகளை ஊக்கப்படுத்துகிறது . 3 நாட்கள் சைக்கிள் மட்டுமே அங்கு ஓட்டுவதற்கான ஏற்பாடுகளை இந்த ரிசார்ட் கவனிக்கிறது . யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய இடமான இங்கு , ரிசார்ட்டுகளின் எண்ணிக்கை அதிகம் . 31 ஆவது ஆண்டாக மாரடோனா லெஸ் டோலமைட்ஸ் எனும் நிகழ்வில் ஏராளமான மக்கள் பங்கேற்று சைக்கிள் ஓட்டி மகிழ்கிறார்கள் . இதில் புரொபஷனல் வீரர்கள் டூ அமெச்சூர் வீரர்கள் வரை உண்டு . இது இந்நிகழ்விற்கு கூடுதல் கலர் சேர்க்க இப்போது இங்கு சீஸனில் கூட்டம் அள்ளுகிறது . 28 ஆயிரம் சைக்கிள் வீரர்கள் 160 கி . மீ ரைடு அடித்து பிரமிக்க வைத்துள்ளார்கள் . இங்கிலாந்து , ஐரோப்பாவிலும் இதுபோன்ற சைக்கிள் ரைடு உண்டு என்றாலும் இந்த அளவு பிரமாண்டம் இல்லை . ஆனால் அதிகளவில் சைக்கிள் வீரர்களின் வருகை இடத்தை மாசுபடுத்தும் என்கிற உண்மையையும் மறுக்க முடியாது . காலை 10- 3 மணிவரை சாலை போக்குவரத்து அகற்றப்பட்டு 51 கி . மீ சைக்கிள் பயணத்திற்கு ரெடியாகிறது . இதில் 1

பிரபஞ்சத்தின் ஹிஸ்டரி சொல்லும் வெப் டெலஸ்கோப்! - ச.அன்பரசு

படம்
பிரபஞ்சத்தின் ஹிஸ்டரி சொல்லும் வெப் டெலஸ்கோப் ! - ச . அன்பரசு     நாஸாவின் ஸ்பெஷலே இதுதான் . இதற்கு முன்பு கெப்ளர் டெலஸ்கோப் கண்டறிந்த புதிய கோள்கள் மூலம் டாக் ஆப் தி டவுனாக அறிவியல் உலகில் தான் என்றுமே லெஜண்ட் என காட்டிக்கொண்டது . இதோ இம்முறையும் வெப் டெலஸ்கோப் மூலம் மாஸ் வெற்றி பெற்றிருக்கிறது . எப்படி ? அடுத்தாண்டு விண்வெளியில் ரிலீசாகவிருக்கும் வெப் டெலஸ்கோப் எனும் மெகா பட்ஜெட் திட்டம்தான் இந்த புகழுக்கு காரணம் . 1958 தொடங்கி 58 ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சியில் வலது காலெடுத்து நுழைந்துள்ள நாஸாவின் பெயரை பூமியைக் கடந்து பிரபஞ்சம் முழுக்க பேசவைக்கப் போகிறது வெப் டெலஸ்கோப் . சும்மா சொல்லவில்லை ; மேட்டர் அவ்வளவு சுவாரசியம் !     அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள ஜான்ஸன் ஸ்பேஸ் சென்டரிலுள்ளது பலரும் அறியாத தேசிய வரலாற்று நினைவுச்சின்னமான அறை . விண்வெளி மையத்தில் தரைதளத்திலுள்ள வங்கியின் காப்பக அறை வடிவிலுள்ள 40 டன் எடை , 40 அடி அகலமான கதவைத் திறந்தால் சேம்பர் ஏ நம்மை வரவேற்கிறது . திரவ ஹீலியமும்