இடுகைகள்

கோமாளிமேடை ஸ்பெஷல்ஸ் -ரோனி

படம்
Hotwater சேலஞ்ச் ! ப்ளூவேல் கேமில் இணைந்து பலரும் உயிரை விட்டுக்கொண்டிருக்க அடுத்ததாக புயலாக அமெரிக்காவில் ஹாட்டாக கிளம்பியிருக்கிறது Hotwater சேலஞ்ச் ! ஐஸ்பக்கெட் சேலஞ்ச் உள்ளிட்ட நோய்களுக்கான நிதிபிரசார விளையாட்டுகளைத் தாண்டி இணையத்தில் சுயவதையை தூண்டும் பிரசாரம் செய்யும் ட்ரெண்ட் திகுதிகுவென பரவி வருகிறது . ஹாட்வாட்டர் சேலஞ்சும் அப்படித்தான் . வெந்நீரை நன்கு காய்ச்சி , நண்பர்கள் மீது ஊற்றுவதுதான் கேம் பிளான் . அப்போது கைகால் வெந்துவிடுமே ? யெஸ் . அப்படி கதறி துடித்தால்தானே கேமில் அடுத்த லெவல் . அடுத்த லெவலில் வெந்நீரை இன்னும் பல நூறு செல்சியசில் கொதிக்கவைக்கவேண்டும் . அமெரிக்காவின் அர்கனாசில் வீட்டில் தூங்கிய சிறுவனின் முகத்தில் ஓவனில் கொதிக்க வைத்த வெந்நீரை கொட்டி ஊரையே பதறவைத்துள்ளான் அச்சிறுவனின் சக நண்பன் . இரண்டாவது சம்பவத்தில் 11 வயதான ஜாமோனிஷா ஹாட்வாட்டர் சேலஞ்சால் பாதிக்கப்பட்டு முகம் , தோள் எல்லாம் வெந்து ஆஸ்பிட்டலில் சேர்ந்துள்ளது உலகெங்கும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது . சூசைட் டூ சுமங்கலி பவ ! சினிமாவில்தான் இது சாத்தியம் . ஒருவரின் லைஃபில்

கோமாளிமேடை ஸ்பெஷல்! தொகுப்பு: ரோனி

படம்
ஃபேக்டரியை எரித்த அணில் ! வெற்றிக்கு அணிலாக உதவினேன் என்று சிலர் வெட்டிப் பெருமை பேசுவார்கள் . நிஜமாகவே அணில் உதவியா , உபத்திரமா என கீழேவரும் சீஸ் ஃபேக்டரி ஓனர்தான் சொல்லவேண்டும் . ஏன் ? அவருக்கு அணில் செய்த செய்வினை அப்படி . கனடாவின் பர்னபி பகுதியிலுள்ள ஸ்கார்டில்லோ சீஸ் ஃபேக்டரிதான் சம்பவம் நடந்த ஸ்பாட் .   காலை 9 மணிக்கு அப்பகுதியின் ஃபயர்சர்வீஸ் நிலைய அலாரம் ஒலித்தது . நெருப்புடா என பதறிய வீரர்கள் உடனே மின்னல் வேகத்தில் சீஸ் ஃபேக்டரியில் என்ட்ரியானார்கள் . என்ன ஆச்சு ? அணில்தான் . பல்லை வைத்துக்கொண்டு பழம் , பாதம் என தின்னாமல் முக்கிய பவர்லைனின் வயர்களை கடித்து வைக்க , ஃபேக்டரி முழுக்க தீ ஜம்மென்று பிடித்துவிட்டது . 4 வண்டிகள் , 15 ஃபயர் ஆட்கள் என 12 மணிநேரம் போராடி தீயை அணைத்ததில் சீஸ் செய்ய வைத்திருந்த 20 ஆயிரம் காலன் பாலும் காலி . இப்போ சொல்லுங்க , இதுக்கு மேலயும் அணிலைப் பார்த்தால் உங்களுக்கு பாசம் வருங்களா ஆபீசர் ? என்னை காப்பாத்துங்க அமைச்சரே ! குறைந்தபட்ச அமைச்சரவை அதிகபட்ச நிர்வாகம் என்ற லட்சியத்தில் அணுவளவும் பிறழாமல் மாதம் ஒரு வரி , மாதம்

குங்குமம் ஸ்பெஷல்! -ரோனி ப்ரௌன்

படம்
காசு வேண்டாம் காதல் போதும் ! என் மகள் இப்படி பண்ணிட்டாளே என மனம் குமைந்து கிடக்கிறார் மலேசிய பணக்காரரான கே பெங் . பின்னே , மூன்று கண்டங்களில் வீடு , பிரைவேட் ஜெட் அத்தனையும் விட்டுவிட்டு ஆசைமகளான ஏஞ்சலினா ஃப்ரான்சிஸ் , பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாத தருமி போன்ற ரேஞ்சிலுள்ள காதலனை மணந்துகொண்டதுதான் அப்பாவின் வருத்தத்துக்கு காரணம் . 300 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரியான பெங்கின் மகள் ஏஞ்சலினா , 2008 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டில் படிக்கும்போது ஜெடிடியா ஃப்ரான்சிஸ் என்ற கரீபிய கட்டழகன் மீது மையலாகிவிட்டார் . அப்பா பெங் , கண் சிவந்து நம்பியாராகி கையைப்பிசைய , எம்ஜிஆராக ஜெடிடியா மாற வேறென்ன ? ஏஞ்சலினாவும் ஜெடிடியாவும் கமுக்கமாக 30 பேர் முன்னிலையில் கெட்டிமேளம் கொட்டி 1500 டாலர்களில் மேரேஜை முடித்து ஃபிரான்சிஸின் அறையில் குடித்தனமே செய்யத்தொடங்கிவிட்டனர் . காதலே ஜெயம் !   அவமானத்தை வென்ற மாற்றுத்திறனாளி ! மனிதவளம் கொட்டிக்கிடக்கும் இ்ந்தியாவில் எளிய மனிதர்களுக்கு ரெஸ்பெக்ட் கிடைப்பதே சால கஷ்டம் . இதில் பிறரின் உதவியாலேயே வாழும்  மாற்றுத்திறனாளிகளின் நிலைமை என

நூல் விமர்சனம் :1984 சீக்கியர்கள் படுகொலை

படம்
1984 சீக்கியர்கள் படுகொலை ஜெ.ராம்கி கிழக்கு அக்டோபர் 30 அன்று இந்திராகாந்தி பாதுகாவலர்களால் சுடப்பட்டார். அடுத்த நாள் இந்திராகாந்தியின் உடல் அஞ்சலி செலுத்தப்படும்போது தொடங்கிய சீக்கியர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்களால் மேற்கு டெல்லியிலுள்ள திலக் விகார் காலனி முழுக்க விதவைகளாக சீக்கியப்பெண்கள் நிறையும் அளவு கொடூரமானதாக மாறியது. ராஜீவ்காந்தி அரசு திட்டமிட்டு நிகழ்த்திய படுகொலையில் அதிகம் பலியானது டெல்லியில் வாழ்ந்த லாபனா எனும் தலித் சீக்கியர்கள்தான். இது பெரியளவு பஞ்சாபின் ஜாட் சீக்கியர்களை பாதிக்கவில்லை என்றாலும் சீக்கியர்களின் மீதான பயம் இ்ந்திராகாந்தி இறந்தபோது பெருமளவு உருவானது உண்மை. அத்தருணத்தில் நேர்மையாக செயல்பட்ட கவாய் உள்ளிட்ட டெல்லி போலீஸ் ஜெனரல், பின்னாளில் அரசினால் பழிவாங்கப்பட்டது காங்கிரஸ் அரசுக்கு களங்கம். அக்டோபர் 31,நவம்பர்1, நவம்பர் 2  என மூன்றுநாட்களில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம். அரசின் கணக்கு 2,733 மட்டுமே. கொள்ளை, தாக்குதல் என பாதிக்கப்பட்ட சீக்கிய மக்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேல் என ராம்கி விவரிக

அறிவியல் பிட்ஸ் - முத்தாரம் ஸ்பெஷல்

படம்
மரங்கள் சைவமா ? அசைவமா ? கற்பகம் மெஸ்ஸில் சைவ மனிதர்களையும் , ஹோட்டல் பாண்டியனில் அசைவ மனிதர்களையும் பார்க்கலாம் . ஆனால் மரங்கள் எதில் சேரும் ? " தாவரங்கள் உறுதியாக வெஜிடேரியன் கிடையாது " என உறுதியாக பேசுகிறார் ஓஹியோவிலுள்ள மியாமி பல்கலையின் தாவரவியல் பேராசிரியர் நிகோலஸ் மணி . தாவரங்கள் அசைவமா எப்படி ? " நேரடியாக சாப்பிடுவதில்லை ஆனால் பூஞ்சைகளின் மூலமாக அதை செய்கின்றன " என்கிறார் நிகோலஸ் . சூரியன் மூலம் கார்பன்டை ஆக்சைடும் , ஆக்சிஜனையும் பெறுகின்றன . கால்சியம் , பொட்டாசியம் , சோடியம் ஆகியவற்றை பெற மரங்கள் பூஞ்சைகளை நாடுகின்றன .  தமக்கான உணவை பூஞ்சைகள் இறந்த சிறிய புழுக்களின் வழியாக பெறுகின்றன . ( எ . கா : காளான் ) பூஞ்சைகள் சர்க்கரையை ஒளிச்சேர்க்கை மூலம் பெற முடியாது என்பதால் , மரங்களுடன் இணைகின்றன . மரங்களுக்கு பூஞ்சைகள் சில சத்துக்களை தந்து , ஒளிச்சேர்கை பலனான சர்க்கரையை மரங்களிடமிருந்து பரஸ்பர சகாயமாக பெறுகின்றன . இதில் யார் வெஜ் , யார் நான் வெஜ் நீங்களே சொல்லுங்கள் . 2 ஒளியை கன்ட்ரோல் செய்யும் Voicy! லைட்டுகளின் ஒளியைக் குறைக்க ஸ்வி

அறிவியல் அப்டேட்ஸ்- விக்டர் காமெஸி

நியூக்ளியர் போரில் தப்பிப்பது எப்படி ? அணுஆயுதப்போரில் தப்பிப்பதற்காக இங்கிலாந்தின் லண்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள பதுங்குகுழியின் பெயர் பிண்டர் . இது கிரேக்க கவிஞரின் பெயர் . நாளிதழ்களிலும் மிகச்சில படங்களே வெளியிடப்பட்டுள்ள இடம் இது . அரசு அதிகாரிகள் , ராணுவ இயக்குநர் , பிரதமர் என அனைவரும் ஈஸியாக பதுங்குழியில் தப்பித்துவிடுவார்கள் . ஆனால் மக்கள் என்ன செய்வது ? நியூஜெர்ஸியின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த வெலர்ஸ்டெய்ன் , அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து Nukemap என்பதை உருவாக்கியுள்ளார் . கூகுள்மேப்பை ரீமேக் செய்து உருவாக்கிய மேப் இது . ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் 15 ஆயிரம் அணுகுண்டுகள் இருக்கும் . தற்போது வடகொரியா தொடந்து ஏவுகணைகளை டெஸ்ட் செய்வதால் , அமெரிக்கா கடும் கோபத்திலுள்ளது . ஜப்பான் தன் மக்களுக்கு அணுகுண்டு வெடிக்கும்போது எப்படி தப்பிப்பது என இப்போதே டிரில் வகுப்புகளை தொடங்கிவிட்டது .  குவாம் தீவிலுள்ள அரசும் பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுவிட , அமெரிக்க அரசு அணு ஆயுத பாதுகாப்புக்காக ready,gov என தனி இணையதளம