இடுகைகள்

ஆன்டிபயாடிக்கிற்கு மாற்று!

படம்
எதிரியின் எதிரி ! கடந்தாண்டு ஏப்ரலில் , சான்டியாகோ மருத்துவக்கல்லூரியில் தீவிர தொற்றுநோய் பாதிப்பில் அட்மிட்டானவருக்கு எந்த ஆன்டிபயாடிக்கும் பயனளிக்கவில்லை . கோமா சென்றவர் இறப்புக்கு அருகிலிருந்தார் அப்போது ட்ரையலாக bacteriophages    எனும் பாக்டீரியா உண்ணும் வைரஸை உடலில் செலுத்த பேஷன்ட் பிழைத்தார் . எஃப்டிஏ   இச்சிகிச்சையை பயன்படுத்த அனுமதி தந்ததோடு விவசாயத்துறையிலும் கால்நடைகளிலும் பயன்படுத்த பர்மிஷன் தந்துவிட்டது . ஐரோப்பிய யூனியன் தீப்புண்களை ஆற்ற பாக்டீரியாதின்னி வைரஸ்களை பயன்படுத்த யோசித்துள்ளது . 1919 ஆம் ஆண்டு பிரான்சின் பாரீசிலுள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில் ஃபெலிக்ஸ் ஹெரல்லே வயிற்றுப்போக்கு தீராத சிறுவனுக்கு பாக்டீரியாதின்னி (Phage therapy) வைரஸை உடலில் செலுத்தி குணமாக்கினார் . 1915 ஆம் ஆண்டே பேஜோதெரபியை ஃபெலிக்ஸ் கண்டறிந்தாலும் முறையான கல்வி கற்காததால் இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை . இதன் இன்னொருவடிவாக 1945 ஆம் ஆண்டு பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டது . ஆனால் இன்று ஆன்டிபயாடிக்குகளை பாக்டீரியாக்கள் எளிதாக எதிர்க்கத் தொடங்கிவிட்டதால் மாற்று வழியாக ப

காதல் படுகொலைகள்!

படம்
காதல் கொலைகள் ! ஐஸ்லாந்திலுள்ள Illugastaoir பண்ணையிலிருந்து ஓடிவந்த ஆக்னஸ் என்ற பெண் , பண்ணை வீடு தீ பற்றிக்கொண்டது என அலற , மக்கள் பலரும் ஓடிப்பார்க்க , அங்கு பண்ணை ஓனர் நாதன் கெட்டில்சன் , அவரின் நண்பரான பீட்டர் ஜான்சன் இருவரும் தீயில் உருளைக்கிழங்காய் வெந்திருந்தார்கள் . ஆனால் இருவரும் கத்தியால் குத்தியும் , சுத்தியலால் தாக்கப்பட்ட காயங்களை போலீசார் கண்டுபிடித்தனர் . அனைத்துக்கும் காரணம் , நாதனின் காதல் லீலைகள்தான் . இயற்கை மருத்துவரான நாதன் , உள்ளூர் கவிஞரான ரோசா , டீனேஜ் பெண் சிக்ரியர் என்ற இருவரையும் தெலுங்கு ஹீரோவாக லவ் செய்தார் . பொறாமையில் வெந்த ஆக்னஸ் , சிகர்ஸன் மற்றும் தோழி ஒருத்தியை சேர்த்து செய்த மர்டர்தான் இது என தெரியவந்தது . மூவரில் ஆக்னஸின் தோழிக்கு மட்டும் ஆயுள் தண்டனை . சிகர்ஸனுக்கும் ஆக்னசுக்கும் 1830 ஜனவரி 12 அன்று மரணதண்டனை . கோடாரியால் வெட்டப்பட்ட இருவரின் தலைகளும் அங்கேயே ஈட்டியில் குத்தி வைக்கப்பட்டன . சிலமணி நேரத்திலேயே இருவரின் தலைகளும் மிஸ்ஸிங் . பின் 1930 ஆம் ஆண்டில் Illugastaoir பண்ணையருகே ஜோர்ன் என்ற இடத்தில் தலையோடு இரு எலும்

மோடிக்கு பில்!

படம்
ரேடியோ பேபி ! ஹாஸ்பிடலில் அல்லது வீட்டில் அல்லது விமானத்தில் கூட குழந்தை பிறந்து கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஆனால் காற்றில் குழந்தை பிறப்பது புதுசுதானே ! யெஸ் இது அத்தென்டிக் அமெரிக்கன் ரவுசு . அமெரிக்காவைச் சேர்ந்த ரேடியோ காம்பியர் கேசிடே பிராக்டர் , செயின்ட் லூயிசிலுள்ள ஆர்ச் ஸ்டேஷனில் தன் காலை ஷோவில் ஊரையே  கலாய்த்துவந்தார் . மேரேஜ் ஆகி , கர்ப்பம் தரித்தபோதும் லீவ் போடாமல் ஜாலிகோழியாக வேலை பார்த்த கேசிக்கு திடீரென டெலிவரி அவசரம் . ஷோடைமின்போது ஹாஸ்பிடலில் இருந்தார் கேசி . அங்கேயே மைக் சகிதமாக ரேடியோகுழு செல்ல , கேசி தன் குழந்தை பிறப்பை லைவ் கமெண்ட்ரியாக தன் ரேடியோ விசிறிகளுக்காக ஒலிபரப்பி பீதியூட்டினார் .  கமெண்ட்ரி மட்டுமல்ல , க்யூட் செல்லத்துக்கு பெயர் சொல்லுங்களேன் என மினிபோட்டியையும் நடத்தியிருக்கிறார் கேசி . விரைவில் நல்ல பெயரை ஓட்டுபோட்டு செலக்ட் செய்யவிருக்கிறார்கள் .  2 வெஜ் ஷூக்கள் வாங்குங்க ! வீகன் , சைவ உணவு பிரசாரம் பரவி வரும்போது வெஜ் பொருட்களும் சந்தையில் சேல்சிற்கு வந்தால்தானே ஜரூராக கல்லா கட்டமுடியும் . கர்நாடகாவின் சிரவ

"விவசாயிகளின் தற்கொலை இருமடங்கு ஆகியுள்ளது"

படம்
முத்தாரம் mini ராஷ்ட்ரிய கிசான் மகாசங்கம் எப்போது தோன்றியது ? சண்டிகரில் அரசின் நிலச்சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக திரண்ட அறுபது விவசாயங்கள் இணைந்து கிசான் ஏக்தா என ஒரு அமைப்பானது . ஹரிஷ் சௌகான் தலைமையில் பெங்களூரு , சிம்லா என மாநாடு நடந்தது . கமிஷன்களால் ஏமாற்றப்பட்டபோதும் நாங்கள் அமைதியாக இருந்தோம் .2019 தேர்தல் எங்களைப் பற்றி உலகுக்கு சொல்லும் . உங்களது கோரிக்கைகள் என்ன ? கடன் தள்ளுபடி , குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிப்பு ஆகியவையே . கடந்தாண்டு செய்த போராட்டங்களைப் பற்றிக் கூறுங்கள் . 2017 ஆம் ஆண்டு ஜனவரி 10-12 ஆகிய நாட்களில் போபாலில் போராட்டம் நடத்தினோம் . 22 மாநிலங்களில் 290 தேசிய ஹைவேகளில் போராடுவதாக பிளான் . மக்களுக்காக அதனை விலக்கிக்கொண்டு , 9-15 தேதிகளில் ஜெயில் பாரோ அந்தோலன் திட்டப்படி 45 ஆயிரம் விவசாயிகள் சுதந்திர தினங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம் . இனி டெல்லியில் பெரியளவு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் . விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறதா ? மோடியில் ஆட்சியில் மட்டும் விவசாயிகளின் தற்கொலை 43%  அதிக

ஐ லவ் சாக்லெட்!

படம்
சாக்லெட் சாப்பிடுவோமா?  தியோபுரோமா கோகோ பருவகால மரத்தின் பழங்களிலிருந்து சாக்லெட் பெறப்படுகிறது . இம்மரத்தின் பெயரை கடவுளின் உணவு என்று வரையறுக்கிறது கார்னெல் யுனிவர்சிட்டி . பிரேசில் , இந்தோனேசியா , நைஜீரியா , மேற்கு ஆப்பிரிக்கா , தென்கிழக்கு ஆசியா ஆகிய இடங்களிலிருந்து 79 சதவிகித கோகோ பெறப்படுகிறது . பப்பாளி சைசில் உள்ள கோகோ பழத்தில் 50 விதைகள் உள்ளே இருக்கும் . கையால் பறிக்கப்பட்ட பழங்களிலிருந்து பெறப்பட்ட விதைகள் , அதனைச் சுற்றியுள்ள வெள்ளை சதைப்பற்றுடன் வாழை இலைகளால் ஏழு நாட்களுக்கு மூடி வைக்கப்படுகின்றன . சாக்லெட் மணம் கிளம்பியவுடன் வெள்ளைநிற பகுதி அகற்றப்பட்டு வெயிலில் காயவைக்கப்படுகின்றன . சிதைந்த விதைகள் நீக்கப்பட்டு , மற்ற விதைகள் நன்கு வறுக்கப்படுகின்றன . மெஷினில் செலுத்தப்படும் விதைகள் து்ண்டாக்கப்பட்டு உமிகள் அகற்றப்படுகின்றன . இப்போதுள்ளது நிப் - இதுவே சாக்லெட் . பல்வேறு முறைகளிக் திக்கான பசைபோல இருக்கும் . இதில் சர்க்கரை , பருப்புகள் , பாலாடை ஆகியவை சேர்த்தால் சாப்பிடுவதற்கான சாக்லெட் ரெடி .  தொகுப்பு: ரோஜர் வின்சி, பானுமதி கேமுலா நன்

ஜெகஜ்ஜால கில்லாடி விக்டர்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள்   ஜெகஜ்ஜால கில்லாடி விக்டர்! ரா . வேங்கடசாமி பொ கீமியா என்பது செகஸ்லோவேகியா நாட்டிலுள்ள மாநிலம் . அதிலுள்ள ஹோஸ்டைன் நகர மேயருக்கு மகனாகப் பிறந்தவர்தான் விக்டர்லஸ்டிக் (1890-1947) என்னும் ஏமாற்றுப் பேர்வழி. ஜெர்மனியிலுள்ள டிரெஸ்டன் நகரிலிருந்த ஒரு சிறந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு கற்றுக்கொண்ட பாைஷகள் ஜெர்மன் , ஆங்கிலம் , பிரெஞ்சு இத்தாலியன் போன்றவை. பாரிஸ் சென்ற தன் மகன் பாரிஸில் நன்றாகப் படிக்கிறான் என்று நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் பாரிசில் காஸனோவாக திரிந்த விக்டர் கேளிக்கை நாயகனானார் . பிரிட்ஜ் , போக்கர் , பில்லியார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் கைதேர்ந்தார் . அமெரிக்காவின் புதிய பணக்காரர்கள் , ஐரோப்பாவுக்கு உல்லாசப் பயணம் வருவது அப்போதைய பிரபல நாகரீகமாக இருந்தது. அவர்கள் வரும் சொகுசு கப்பல்களில் , சீட்டு விளையாடும் புலிகள் சிலர் ஊடுருவி இருந்தனர் . இவர்களிடம் சிக்கிய பணக்காரர்களில் ஒருவர் கூட பணத்தை இழக்காமல் வீடு போய் சேர்ந்ததில்லை . பிரபு வம்சம் என்று தற்பெருமை தாளம் வாசித்த விக்டர் , சூதாட்ட கேங்கில் தன்னையும் இணைத்துக்கொண்டார

நேர்காணல்: பிர்ஜித் ஸ்வார்ஷ், மூத்த பத்திரிகையாளர்

படம்
முத்தாரம் நேர்காணல் "உண்மையை பேசும் மக்கள் அரசிடம் கொடுக்கும் விலை அசாதாரணமானது" பிர்ஜித் ஸ்வார்ஷ் , மூத்த பத்திரிகையாளர் . தமிழில் : ச . அன்பரசு நன்றி : hrw.org வட ஆப்பிரிக்காவிலுள்ள மேற்கு சகாரா மற்றும் செனகல் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள மாரிடானியா உலகிலேயே கடைசியாக (1981) அடிமை முறையை ஒழித்த நாடு . 2007 ஆம் ஆண்டு அதனை குற்றமென அறிவித்தது . அராபியர்கள் , பெய்டர்கள் , வடகிழக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெர்பர்கள் , ஆப்பிரிக்க அடிமைகள் இங்கு வசிக்கின்றனர் . ஆப்பிரிக்க மாரிடானிய மக்களுக்கு எதிராக அரசு கட்டவிழ்த்த வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை மூத்த பத்திரிகையாளரான பிர்ஜித் ஸ்வார்ஷ் பேசுகிறார் . மாரிடானியாவில் இன்னும் அடிமை முறை ஒழிக்கப்படவில்லையா ? இதற்கு ஆதாரம் ஏதேனும் கிடைத்திருக்கிறதா ? அரசு தவிர்த்த பிற இயக்கங்கள் அடிமை முறைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன . அரசின் பங்கு இதில் மிக சொற்பம் . ஹராடைன் இன மக்கள் கடும் வறுமையில் வதங்குகிறார்கள் . வசதியான குடும்பங்களின் ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்ப்பதே இவர்களின் பணி . கிராமங்களில