இடுகைகள்

நோயாளிகளுக்கு இலவச உணவுதரும் முஸ்லீம்!

படம்
தெலங்கானா மகாத்மா!  தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள தபிபுரா காந்தி அரசு பொதுமருத்துவமனை நோயாளிகளுக்கு தினசரி இலவச உணவு வழங்கிவருகிறார் அசார் மக்சூஸி. சிறுவயதில் குடும்பத்தை காப்பாற்றி வந்த தந்தை இறந்துபோக, பசியும் பட்டினியுமாக கிடந்த வாழ்க்கை அசாருக்கு பிறரின் பசி, தாகம் போக்க தூண்டியுள்ளது ஆச்சர்யமான கதை. “குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு செல்லும்போது பெரும்பாலான இரவுகளில் வெறும் வயிற்றுடன்தான் தூங்குவேன்” என இறந்தகாலத்தை கண்ணீர்மல்க பேசுபவர், சாலையில் உணவுக்கு கையேந்திய ஆதரவற்ற பெண்ணுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்த தினத்திலிருந்து வாழ்க்கை மாறியிருக்கிறது. தபிபுராவில் முதல் மூன்றாண்டுகள் சொந்தப்பணத்தில் ஏழைகளுக்கு உணவு வாங்கிக்கொடுத்தவர், ஏழாண்டுகளாக இச்சேவையை் தொடர பல்வேறு நல் இதயங்களிடமிருந்து வந்த நன்கொடைகள் உதவியுள்ளன. “பெங்களூரு, ராய்ச்சூர், தந்தூர், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய இடங்களிலும் ஆயிரத்து இருநூறு பேர்களுக்கு இலவச உணவை அளிக்க முயற்சித்து வருகிறேன். ஏழைகளின் கண்களில் பசி நெருப்பு தீர்ந்து அமைதி படருவதை காண்பதே இறைவனைக் கண்ட திருப்தி” என நெகி

குழந்தைகளை கொல்லும் அதிகாரப்போர்!

படம்
பசியால் இறக்கும் குழந்தைகள்! ஏமனின் ஹஜ்ஜா நகரில் குழந்தைகள் எலும்பும் தோலுமாக பெற்றோர்களின் கண்முன்னே பசியால் துடித்து இறந்து வருகின்றனர். காரணம், சவுதி அரேபியாவின் இரக்கமற்ற போர்வெறிதான். உள்நாட்டு சந்தையில் உள்ள காய்கறிகளை, ரொட்டிகூட வாங்கமுடியாத வறுமையில் ஏமன் நாட்டினர் தவித்து வருகின்றனர். அலி அல் ஹஜாலியின் கண்முன்னே அவரது மூன்றுவயதுமகன் இறந்ததும் அப்படித்தான். ஹூதி புரட்சியாளர்கள் வடக்கு ஏமனைக் கட்டுபாட்டில் வைத்துள்ளனர்.  அவர்களை எதிர்த்து நடக்கும் போரில் வீசப்படும் ஏவுகணையால் பலநூறு மக்கள் பலியாகிவருகின்றனர். உணவுக்கு அரசை நம்பியுள்ள எட்டு மில்லியன் ஏமன் நாட்டு மக்களின் எண்ணிக்கை விரைவில் 14 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். 2 மில்லியன் டாலர்களை ஏமன் மத்திய வங்கிக்கு அரபு அமீரகத்துடன் இணைந்து அளித்துள்ளதாக சவுதி கூறினாலும் சன்னி- ஷியா இனவெறுப்புக்கு ஏதுமறியாத மக்கள் பலியாகவேண்டுமா என்ற கேள்விக்கு சவுதி அரேபியா என்ன பதில் சொல்லப்போகிறத

இந்திய ராணுவத்தை திட்டமிட்டு கொல்லும் ஸ்நைப்பர் டீம்!

பாதுகாப்பு படைகளுக்கு புதிய எதிரி!  காஷ்மீரிலுள்ள இந்தியப்படைகளை ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி பெற்ற ஸ்நைப்பர்கள் தீவிரமாக பலிவாங்க தொடங்கியுள்ளனர். கடந்த செப்டம்பரில் மூன்று இந்திய வீரர்கள் பலியாக ஸ்நைப்பர்களின் துல்லிய தாக்குதல்களே காரணம் என ராணுவம் கூறியுள்ளது. புல்வாமாவிலுள்ள நேவா, ட்ரால், நவ்காம் ஆகிய இடங்களில் ஊடுருவியுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு காஷ்மீரில் தீவிரவாத ஆதரவாளர்கள் உதவியுள்ளனர் என்கிறது உளவுத்துறை அறிக்கை. டெலஸ்கோப் வசதிகொண்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பாக்.தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய இத்துப்பாக்கி ரகத்தில் 600 மீட்டர் தூரத்தில் ஒரு நிமிடத்திற்கு 700-950 ரவுண்டுகள் சுடலாம். எம்4 கார்பைனை பாகிஸ்தானின் சிறப்பு ராணுவப்படை பயன்படுத்தி வருகிறது. இந்திய வீரர்களின் புல்லட் ப்ரூப் உடைகளை துளைக்கும் சக்தி கொண்ட தோட்டாக்களை தீவிரவாதிகளுக்கு சீனா வழங்குகிறது என சந்தேகமும் இந்தியாவுக்கு எழுந்துள்ளது. ஐ.நா சபையில் ஜெய்ஷ் –இ- முகமது இயக்கத்தையும் தடை செய்து அதன் தலைவரான மௌலானா மசூத

விலங்குகளை வேட்டையாட சீனா பச்சைக்கொடி!

படம்
மருத்துவத்திற்கு தடை நீக்கம்! – மருத்துவத்தில் காண்டாமிருகம் மற்றும் புலிகளின் கொம்புகள், எலும்புகளை பயன்படுத்த விதித்திருந்த தடையை சீன அரசு அண்மையில் விலக்கிக்கொண்டுள்ளது. “25 ஆண்டுகளாக எலும்புகள் மற்றும் கொம்புகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த இருந்த தடை விலக்கிகொள்ளப்படுகிறது. இப்பொருட்களை பயன்படுத்தும்போது அரசிடம் அனுமதி பெறுவது அவசியம்” என சீன அரசின் கேபினட் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கு சூழலியல் ஆர்வலர்களிடையே கடுமையான கண்டனங்கள் கிளம்பியுள்ளன. கடந்தாண்டு உள்நாட்டில் தந்தங்களுக்கான சந்தையை சீன அரசு ரத்து செய்வதாக அறிவித்து விலங்கு நேசர்களிடையே எக்கச்சக்க பாராட்டுக்களை பெற்றது. ஆனால் சீன அரசின் தற்போதைய தடம் மாறிய அறிவிப்பு பாதுகாக்கப்படும் காண்டாமிருகங்கள், புலிகளை அழித்துவிடும் என அச்சம் சூழலியல் வட்டாரங்களில் பரவிவருகிறது. “சீனா 25 ஆண்டுகளாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டது உலகளவிலான சூழலியல் பிரச்னையாக விரைவில் மாறும்” என எச்சரிக்கிறார் உலக கானுயிர் அமைப்பைச்(WWF) சேர்ந்த மார்க்கரேட் கின்னார்ட்.

நம் குரலை ஸ்பீக்கர்களில் கேட்கும்போது நமக்கே பீதியாவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? – நமது குரலை ஸ்பீக்கர்களில் கேட்கும்போது அதனை வெறுப்பது ஏன்? எந்த உடல் உறுப்புகளுக்கும் பிறருடையதோ, அல்லது செயற்கையாக கூட தயாரித்து பொருத்திக்கொள்ளமுடியும். ஆனால் குரலுக்கு மட்டும் ஆப்ஷனே கிடையாது. அவரவருக்கு என்ன வாய்க்கிறதோ அதுவேதான். அப்படிப்பட்ட குரலை பிறரோடு பேசும்போது சகிக்கும் நாம், ஸ்பீக்கர்களில் ரெக்கார்ட் செய்தபின் கேட்டால் கண்றாவியாக தோன்றும். அதற்குகாரணம், உச்சஸ்தாயியில் ஒலிக்கும் குரலின் தன்மையே. கேட்கும் குரல் நமது ஆளுமையின் வெளிப்பாடு என பிறர் நினைப்பார்கள் என்பதால் பொது இடங்களில் மைக் மோகனாக பாடும்போதும் பேசும்போதும் பலருக்கும் பயப்பந்து வயிற்றில் உருள தடுமாறுகிறார்கள்.

மூன்று நாட்டு அதிபர்களை ஒற்றுமையாக்கிய போர்!

படம்
புத்தக அரங்கு! The Allies: Churchill, Roosevelt, Stalin, and the Unlikely Alliance That Won World War II   Winston Groom   464 pp National Geographic பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்டாலின் ஆகிய மூன்று நாட்டு அதிபர்களும் ஒன்றிணைந்து இரண்டாம் உலகப்போரை எப்படி முடிவுக்கு கொண்டுவந்தனர் என்பதை இந்நூல் விளக்குகிறது. உலகின் வரலாற்றை மாற்றிய இப்போரை நடத்திய மூன்று அதிபர்களின் அரசியல் நம்பிக்கைகள், செயல்பாடுகளை ஆசிரியர் வின்ஸ்டன் சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ள நூல் இது. A Misunderstood Friendship: Mao Zedong, Kim Il-Sung, and Sino-North Korean Relations, 1949-1976 Zhihua Shen 352 pp Columbia University Press சீனாவின் மாவோ – வடகொரியாவின் கிம் சுங் ஆகியோருக்கிடையேயான உறவு எப்படி இன்றுவரையும் அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டு தொடர்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது.  

கோக்குமாக்கு தீர்வு சொன்னால் கோப்ரா எஃபக்ட் கிடைக்குமா?

படம்
பிட்ஸ்! விண்டோஸ் ஓஎஸ் தொடங்கும்போது ஒலிக்கும் வரவேற்பு ஒலி, ஆப்பிளின் மேக் ஓஎஸ்ஸிற்காக உருவாக்கப்பட்டது. பிரச்னைக்கான தீர்வு, பிரச்னையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால் அதற்கு கோப்ரா விளைவு(Cobra Effect) என்று பெயர். நிலவில் அப்போலோ 11 விண்கல வீரர்கள் ஊன்றிய அமெரிக்க தேசியக்கொடி சியர்ஸ் எனும் கடையில் 5.50 டாலர்களுக்கு வாங்கப்பட்டது. விண்வெளியில் அழுதாலும் கண்ணீர் கீழே விழாது; காரணம், புவிஈர்ப்பு விசை இல்லாததுதான். பிரேக்கிங் நியூஸ் மற்றும் ஏராளமான கிசுக்கள், வதந்திகளை தேடித்தேடி படிப்பவர்களுக்கு Quidnunc என்று பெயர். 1993 ஆம் ஆண்டு அமெரிக்கா ஊறுகாய் ஆராய்ச்சிக்கென செலவு செய்த தொகை 2,77,000 டாலர்கள்.  

கட்டற்ற அறிவு மின்னூல் வெளியீடு!

படம்
இனிய நண்பர்களுக்கு, விண்டோஸ் தெரிந்தளவு அரசு கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள லினக்ஸ் ஓஎஸ் பற்றி நமக்கு தெரியாது. அதை தெரிந்துகொள்வது அறிவு சுதந்திரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் நூல்தான் இது. கட்டற்ற அறிவு தொடருக்கான ஐடியாவை சொன்னதும் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து இதற்கான பயன்பாடுகளை கூறிய கணியம்.காம் சீனிவாசன் அவர்களுக்கு என்றும் எனதன்பு. பல்வேறு இ-நூல்களை அவர் கொடுத்ததோடு அடிப்படையான லினக்ஸ் குறித்து பேசி ஊக்கப்படுத்தினார். இது குறித்து பல்வேறு இணையதளங்கள் உதவின. நூலில் அடிப்படையாக லினக்ஸ் எதற்கு என்பது மட்டுமே பேசப்பட்டுள்ளது. லினக்ஸை எப்படி இன்ஸ்டால் செய்வது, அதில் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து கூறப்படவில்லை. லினக்ஸை நாம் தேர்ந்தெடுப்பது ஏன்? அதன் அவசியம் குறித்து இந்நூலை படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள் என நம்புகின்றேன். இணைய லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-KakLMGgXvaf0

நினைவுக்கேணி மின்னூல் வெளியீடு!

படம்
அன்புள்ள நண்பர்களுக்கு, எழுத்தாளர்களின் கதைகளை படிப்பதும் அவர்களோடு நட்பு பேணுவதும் வேறுபாடான தன்மை கொண்டது. கவிதை படிக்க நன்றாக இருந்தாலும் அதை எழுதுபவர்களின் மனம் மகா கோரமாக இருக்கும். எழுத்தும் மனிதர்களும் ஒன்றுபோலவே இருப்பது மிக அரிது. பாவண்ணன் எளிய மனதில் சித்திரமாய் பதியும் சிறுகதைகள் மற்றும் கட்டுரை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவர், இரா.முருகானந்தம் என்ற வாசகருக்கு எழுதிய கடிதங்களை நினைவுக்கேணி என்ற நூலாக தொகுத்துள்ளோம். பதிலுக்கு பதில் என கிரா.- அழகிரிசாமி கடித நூல் போல வரவில்லை என்பது என் வருத்தம்தான். ஆனால் முடிந்தளவு எழுத்தாளர் பாவண்ணனின் சொற்களிலிருந்து அக்காலகட்டத்தில் என்ன நடைபெற்றுள்ளது என்பதை அறியமுடியும். வாசகர்கள் நிச்சயம் அதை தேடி அறிவார்கள் என நம்புகின்றேன். இணைய லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-oHoUDgtMphXj?utm_source=transactional&utm_medium=email&utm_campaign=pratilipi_published_author

மின்நிலையங்களை அமைத்தால் கங்கை காலி

படம்
நேர்காணல் 2 ஜெய்ராம் ரமேஷ் பல்வேறு மாநிலங்கள் நீர்மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனவே? சூழல் பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு பதிலாக பசுமை நிதியை வழங்க பரிந்துரை செய்துள்ளோம். 5 ஆண்டுகளுக்கு ரூ. 300 கோடி அளவுக்கு இந்திய அரசு நிதி வழங்கியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலங்களுக்கு இழப்பீடு கிடைக்காதது ஏன் என புரியவில்லை. உண்ணாநோன்பிருந்து உயிரிழந்த அகர்வால், கங்கையில் நடைபெறும் மணல்கொள்ளையை தடுக்கவும் கூட அரசை வற்புறுத்தினாரே? மணல்கொள்ளையை திருகலான அரசியல் பிரச்னை. இதனை தடுக்க உத்தர்காண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியாலுக்கு டஜனுக்கு மேலான கடிதங்களை எழுதியதோடு டெல்லியில் இருமுறையும் டேராடூனில் இருமுறையும்  சந்தித்து பேசியும் கூட  மணல் கொள்ளையை தடுக்க வற்புறுத்தினேன். ஆனால் மணல் கொள்ளை நிற்கவில்லை. கங்கை விவகாரமும் அப்படித்தான். இதற்கான பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தக்கூட நினைத்தேன். ஆனால் அப்படிச்செய்தால் ஆளும் பாஜக மாநில அரசை குறிவைப்பதாக மாறும் அபாயமிருந்தது. முடிந்தவரை உத்தர்காண்ட் முதல்வரிடம் பே

ஸ்டார்ட்அப் மந்திரம் 1 மின்னூல் வெளியீடு!

படம்
இந்தியாவில் ஆரவாரமாக தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் பெரியளவு வெற்றி பெறவில்லை. ஆனால் முத்ரா கடன்களை நம்பி இளைஞர்கள் பலரும் நம்பிக்கை தரும் ஸ்டார்ட்அப் முயற்சிகளை செயல்படுத்த முயற்சித்தனர். அந்த நம்பிக்கையை பரவலாக்க நினைத்தேன். அதன்வழியாக உருவானதுதான் ஸ்டார்ட்அப் மந்திரம் தொடர். அமேசான் ஐடியாவை ஃபிளிப்கார்ட்டும் ஏர்பிஎன்பி ஐடியாவை ஓயோவும் எடுத்து லாபம் சம்பாதிப்பதை ஸ்டார்ட்அப் தொழில்முயற்சியாக எடுத்தால் இந்தியாவின் தனித்தன்மை காணாமல் போய்விடும். இந்த நூலில் ஸ்டார்ட்அப் தொழில்முயற்சிகளில் வென்றவர்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள், பணிச்சூழல், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், களத்தில் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் ஆகியவற்றை  செய்திதாள், வணிக நூல்கள், இணையதளங்களில் சேகரித்து எழுதியுள்ளேன். அதேசமயம் தொழில்முயற்சி என்பது களத்தில் அச்சூழலுக்கு சிறந்ததும், நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முடிவு எடுக்கவேண்டியது  சிறந்த தலைவர்களின் கைகளிலேயே உள்ளது. இருபகுதிகளாக வெளியிடப்படவுள்ள ஸ்டார்ட்அப் மந்திரத்தின் முதல்பகுதி இது. https://tamil.pratilipi.com/story/%E0%AE%B8%E0%