இடுகைகள்

சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய நூல்!

படம்
சைக்கோ கொலைகாரர்கள் - நூல்கள் சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய நூல்களை படிக்காவிட்டால் நீங்கள், எஃப்பிஐ, கேஜிபி, மொசாட் என பல்வேறு நாடுகளின் க்ரைம் பட்டியல்களை துப்பு துலக்க வேண்டியிருக்கும். அதற்காகத்தான் பத்திரிகையாளர்கள் ஏராளமாக தகவல்களைச் சேகரித்து நூல்களாக எழுதியுள்ளனர்.அப்படிப்பட்ட நூல்களில் சில.. The Misbegotten Son by Jack Olsen ஆர்தர் ஜே சாகிராஸ் என்ற சீரியல் கொலைகாரரைப் பற்றி ஜேக் ஆல்சன் ஆராய்ந்துள்ள நூல் இது. நுணுக்கமாக நுட்பமாக இவரின் மனநிலையைப் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஒருகாலத்தில் நியூயார்க் வாசிகளை தூங்கவிடாமல் வதைத்த கொடூரனின் கதை இது. Lustmord by Brian King I : The Creation of a Serial Killer by Brian King நூல் முழுக்க கட்டுரை, வாசகங்கள், கவிதை என அனைத்தும் உண்டு. இவை எதையும் பிரையன் கிங் எழுதவில்லை என்பதுதான் விசேஷம். எழுதியவர்கள் அனைவரும் சீரியல் கொலைகாரர்கள். ராஜேஷ்குமார், கோட்டயம் புஷ்பநாத் போல எழுதவில்லை என்றாலும் ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை எழுதினால் அடையாளம் கண்டு கொள்ளலாம் அல்லவா? நூல் அதற்கு உதவும். இரண்டாவது நூல், ஹீத் ஹன்டர் ஜ

அமைதியைக் குலைத்த இஸ்ரேல் பிரதமரின் வெற்றி!

படம்
இஸ்ரேலின் நீண்டகால அதிபர்! வேறுயார்? பாலஸ்தீனத்தை கடுமையாக தாக்கி அப்படியொரு நாடே இல்லை என்று கூறிய பெஞ்சமின் நேடான்யாஹூதான் அவர். ஐந்தாவது முறையாக அதிபராகி சமாதானம் விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். இதுபோல இந்தியாவிலும் மோடி வென்று வர வாய்ப்புள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பென்னி கன்ட்ஸைத் தோற்கடித்து பெஞ்சமின் நேடான்யாஹூ வென்றுள்ளார். பெஞ்சமின் மற்றும் அவரது சகாக்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்கள் இருந்தாலும் அத்தனையிலும் மீண்டு ஊடகங்கள், நாட்டின் நீதித்துறைக்கு எதிராக பேரணி நடத்தி தேர்தலிலும் வென்று காட்டிவிட்டார். பெஞ்சமினின் வெற்றி, குறைந்தபட்சம் பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இருந்த பிரச்னைகளை தீர்க்கும் என்று நினைத்த நம்பிக்கையைக் கூட அழித்துவிட்டது என்று கருத்து சொல்லியிருக்கிறார் முன்னாள் பிரதமர் ஈஹட் பாரக்கின் பிரதம செயலரான ஜில்லீடு ஷெர். நன்றி: டைம் இதழ்

பெண்களுக்கு என்ன தேவை? குடும்பமா? செக்ஸா? - சேட்டன் பகத்

படம்
இளைஞர்களின் இந்தியாவுக்குப் பிறகு சேட்டன் பகத் கோமாளிமேடைக்கு வருகிறார். இந்த விமர்சனப் பதிவு மூலம்.  கதை, அதே லைன்தான். உயர் கல்லூரிகளில் படிப்பு, நட்பு, கோல்டன் சாக் எனும்  முதலீட்டு நிறுவனத்தில் வேலை, காதல், பாலுறவு, பிரிவு, திருமணம் என சேட்டனிடம் என்ன எதிர்பார்த்து கிராஸ்வேர்டு கடையில் வாங்கினோமோ அத்தனை விஷயங்களும் நூலில் உண்டு.  ராதிகா மேத்தா என்ற படிப்பில் பட்டையை கிளப்பும் சுமார் மூஞ்சிப் பெண் கோல்ட்மேன் சாக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். தன் மீதான தாழ்வு மனப்பான்மையில் தடுமாறுபவர்,  டெபனீஸ் சென் என்ற விளம்பரத்துறை இளைஞர் மீது காதலில் விழுகிறார். ஆனால் அவர், டிபிக்கல் பெங்காலி ஆள். காதலிக்கும் பெண் தன்னை விட ஒரு ரூபாயேனும் குறைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். இதுதெரிய காதல் புட்டுக்கொள்கிறது. இது அமெரிக்காவில், ப்ரூக்ளின் நடைபெறுகிறது. உடனே ட்ரான்ஸ்பர் கேட்க, கம்பெனி ஹாங்காங் போங்களேன் என்று சொல்லுகிறது.  யெஸ். அங்கும் காதல்தான். ஆனால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நீல் குப்தாவுடன் கிறுக்குத்தனமான ஆனால் ராதிகா மேத்தா

ஆவிகளை துவைத்து எடுக்கும் கரும்புலி!

படம்
கரும்புலி தோன்றும் ஆவி உலகம் கதை, ஒரே லைன்தான். காட்டுக்குள் ஆவிகள் முழுநிலவு நாளில் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அந்த பூஜையை தடுக்காவிட்டால் அவர்கள் சக்தி பெற்று உலகை அழிப்பார்கள். எவ்வளவு பெரிய கதை. உலகை புலி, கரும்புலி, அவரின் மாமா மூவருமே ஜஸ்ட் லைக் தட் காப்பாற்றி விடுகிறார்கள். எப்படி என்று கேட்டால் கரும்புலி பிடறில் எட்டி உதைப்பார். காட்டில் நடைபெறும் சண்டைக்காட்சிகள் மட்டுமே கொஞ்சம் காமிக்ஸ்தான் படிக்கிறோம் என நினைக்க வைக்கிறது. மற்ற விஷயங்கள் எல்லாம் எப்போது எழுதின காமிக்ஸ் இது என நினைக்க வைக்கிறது. இப்படியொரு தத்தியான கதையா என வியக்க வைக்கிறது. ராணி காமிக்ஸ் உருப்படாமல் நொடிந்து போனதற்கு இந்த கதை தேர்வு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறோம். கதை முன்னாடியிலிருந்து அல்லது பின்னாடியிலிருந்து என எப்படி படித்தாலும் பிரச்னையில்லை. குழப்பமே இருக்காது. அப்படியொரு கதை லைன். கரும்புலி பாத்திரத்தை ஏதோ சர்க்கஸில் மரணக்கிணறு ஓட்டுபவர் போல மாற்றியிருப்பதை எப்படி புரிந்துகொள்வது? நன்றி: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் குழு. படம் உதவி:  jsc johny

மரணக்குகையில் வைரக்குவளை ஆபத்து!

படம்
வேதாளர் அல்லது மாயாவி அசத்தும் மரணக்குகை ஆக்சன்களே இல்லாத வேதாளரின் கதை. ரெக்ஸ், டாம் என்ற இரு சிறுவர்களுக்கு வேதாளர் தன் குகையிலுள்ள பொருட்களைப் பற்றி விளக்கிச் சொல்கிறார். அப்போது அங்கு, முன்னரே வந்திருந்த பேராசிரியர் வைர குவளை பற்றி தகவலை ஒருவருக்கு கூறுகிறார். எதற்கு? தன் அறிவை நிரூபிக்க. இதனைக் கேட்கும் ஒருவர், பேராசிரியர் மூலமாக அந்த வைர கோப்பையை அபகரிக்க திட்டம் போடுகிறார்.  லூசு பேராசிரியர் தன் அறிவை மற்றவர்கள் ஏற்க எதையும் செய்யத் தயாராகிறார். அப்போதுதான் எதற்கு வைரக்குவளை என்று கேட்க விற்கத்தான் என்ற திருடர் சொல்ல, அய்யய்யோ நான் சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேட்டீங்கன்னு நினைச்சேன் என எஸ்கேப் ஆக நினைக்கிறார். திருடர் கொன்றுவிடுவதாக சொல்ல, பீதியாகிறார் பேராசிரியர்.  அப்புறம் என்ன காட்டுக்கு பேராசிரியர் செல்லவும், அவரை பின்தொடர்ந்து திருடர் போகிறார். வேதாளர் இருவரையும் குமட்டில் குத்தி கொல்லாமல் , குகை முழுக்க சுற்றிக்காட்டுகிறார். ஆவ்... என கொட்டாவி விடக்கூடாது.  பின் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருடர் வேதாளரையே மிரட்டுகிறார். வேதாளர் ஏதாவத

மாற்றி யோசி வெற்றி ஈஸி - வெற்றி விதிகள்

படம்
வெற்றியின் விதிகள்- நெப்போலியன் ஹில் வெற்றி என்பது மனிதர்களுக்கு தனியாக கிடைப்பதல்ல. மனிதர்களை குறிப்பிட்ட லட்சியத்திற்காக ஒன்றிணைத்து சாதனை செய்தவர்களை மட்டுமே சாதனையாளர் என்று கூறமுடியும். அப்படி வென்றவர்களை பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து இந்த நூலை நெப்போலியன் ஹில் எழுதியுள்ளார். எழுதிய சிறிது காலத்திலேயே நூல் விற்பனை சரிந்தது. காரணம், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கம். அதற்காக, யோசி, வெற்றி பெறு என்ற நூலை எழுதி மக்களுக்கு உற்சாகமூட்டி இருநூல்களையும் வெற்றி வரிசையில் இணைத்திருக்கிறார். நூலைவிட நெப்போலியன் ஹில்லின் இக்கதை பெரும் உற்சாகம் தருகிறது. சரி நூலில் என விளக்குகிறார். பதினைந்து விதிகளைச் சொல்லித் தருகிறார். அவற்றில் பல காலத்திற்கொவ்வாததாக இன்று இருக்கலாம். ஆனால் சாதனையாளர்களின் வாழ்க்கையில் இது முக்கிய பங்காற்றியுள்ளது. நோக்கம், உற்சாகம், பணியாளர்களிடையே இணக்கம், வேலை செய்வதில் காட்டும் தீவிரம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை முக்கியமாக கொள்ளலாம். இதற்கான எடுத்துக்காட்டுகளை ஃபோர்டு, ஜி.எம். மோட்டார், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களை வைத்த

வெல்வாரா நகைச்சுவை நடிகர்- உக்ரைன் தேர்தல் அப்டேட்

படம்
தேர்தலில் வெல்வாரா நகைச்சுவை நடிகர்! நகைச்சுவை நடிகர்களுக்கும் அரசியலுக்கும் அவ்வளவு பொருத்தப்பாடு கிடையாது. கட்சி சார்ந்தவர்கள் நடிகர்களாக இருந்தால் வாய்ப்பு கிடைப்பது கடினம். உலகில் வேறு நிலைமை. உக்ரைனில் நடைபெற்றுவரும் தேர்தலில் காமெடி நடிகர் வெல்லும் உறுதியில் உள்ளார். நடப்பு தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏறத்தாழ 60% வாக்குப்பதிவுகளை இவர் பெற்றுள்ளார். இவருக்கு எதிராக நின்ற பெட்ரோ போரசென்கோ பெற்றது வெறும் 24 சதவீதம்தான். பொதுவாக நடிகர்கள் சினிமா தாண்டி அரசியலில் வெல்வதற்கு ரசிகர்களின் பின்னணி பலம் அவசியம். இதனை ரொனால்ட் ரீகன், அர்னால்ட், குத்துச்சண்டை வீரர் ஜெஸ்ஸி வென்சுரா ஆகியோர் நிரூபித்துள்ளனர். தற்போது போட்டியில் உள்ள ஸெலன்ஸ்கி 2015 ஆம் ஆண்டு டிவி நிகழ்ச்சி(தி சர்வன்ட் ஆப் பீப்பிள்) ஒன்றைத் தயாரித்தார். அதில் ஆசிரியராக ஊழல்களை எதிர்த்து போராடுபவராக நடித்தார். அதில்தான் மக்கள் அபிமானத்தை சம்பாதித்தார். 2018 ஆம் ஆண்டு புது ஆண்டு பிறப்பின்போது, திடீரென ஸெலன்ஸ்கி தன் ரசிகர்களிடம் பேசினார். என் அன்பு ரசிகர்களே, உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். வரும்