இடுகைகள்

இருவேளை உணவுக்காக நான் ஏராளமான வேலைகளை செய்துள்ளேன்! - எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி

படம்
  மனோரஞ்சன் பியாபாரி எழுத்தாளர், அரசியல்வாதி இமான் என்று வெளியாகியுள்ள நூல் நீங்கள் எழுதிய வரிசையில் 25ஆவது நூல்தானே? இல்லை 26 ஆவது நூல். வங்காளத்தில் இந்த நூலை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன். சீரா சீரா ஜீபோன் என்பது அதன் பெயர். இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இமான் என்றாகியுள்ளது.  அருணாவா சின்காவின் மொழிபெயர்ப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? எனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. ஆனால் மொழிபெயர்த்துள்ள அருணாவாவின் பணி மீது பெரும் மரியாதை வைத்துள்ளேன்.  அவர் என்னுடைய தேர் ஈஸ் கன்பவுடர் இன் தி ஏர் என்ற நூலை மொழிபெயர்த்தார். அந்த நூலை வாசித்தவர்களுக்கு அனைவருக்கும் பிடித்திருந்தது. அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். நூலின் அடிப்படை உணர்ச்சிகளை உள்வாங்கி மொழிபெயர்க்கும் திறன் கொண்டவர்.  நாவலை எழுத எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? நான் மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன்.  வங்காள மொழியில் மட்டும் முதலில் உங்கள் நூல்கள் வெளியாகின. இப்போது மொழிபெயர்ப்பு காரணமாக பிற மொழிகளிலும் வாசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அருணாவா அவர்களுக்குத

நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? கோள்களின் எடையை எப்படி தீர்மானிக்கிறார்கள்? அறுபது கிலோ தாஜ்மகால் என்று பெண்களை தோராயமாக வர்ணிப்பது போல அல்ல. கோள்களின் எடையை அதன் ஈர்ப்புவிசை எந்தளவு வீரியமாக உள்ளதோ அதை வைத்தே தீர்மானிக்கிறார்கள். புதிதாக கண்டுபிடிக்கும் கோள்களை அதன் குறுக்களவு, அதிலுள்ள கனிமங்களின் அளவு வைத்து எடை இவ்வளவு இருக்கும் கண்டறிந்து கூறுகிறார்கள்.  ஒரு கோள் எந்தளவு ஈர்ப்புவிசையைக் கொண்டு பிற கோள்களை ஈர்க்கிறது என்பதே இதில் முக்கியம். இதற்கு நியூட்டனின் ஈர்ப்புவிசை கொள்கைகள் பயன்படுகின்றன. ஒருகோளின் எடையை தனியாக கண்டுபிடிப்பதை விட அதற்கு ஒரு துணைக்கோள் இருந்தால் வேலை எளிதாகிவிடும். செயற்கைக் கோள் மூலம் அதன் ஈர்ப்புவிசை பற்றிய விவரங்களைப் பெற்று எடையைக் கணக்கிட முடியும். கோள்களில் புதன், வெள்ளிக்கு நிலவுகள் கிடையாது. இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள ஈர்ப்பு விசை என்பது மிக குறைவு. இனிவரும் காலங்களில் நாம் விண்கலங்களைக் கொண்டு நேரடியாகவே கள ஆய்வுகளுக்கு சென்றுவிடலாம். இதனால் தோராய அளவுகளை கணிக்க வேண்டிய அவசியம் குறைவு.  நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் வாழும்? சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். இ

மாருதி 800 கார் உருவாக்கம் சஞ்சய் காந்தியின் கனவா? இந்தியா 75

படம்
  இந்திய அரசு, 1950களில் மக்களுக்கான சிறிய காரை உருவாக்க வேண்டும் என நினைத்தது. ஆனால் அப்போது நிறைய விதிமுறைகள் இருந்ததால் ஐடியாக்கள் காகிதங்களோடு அப்படியே மூடி வைக்கப்பட்டன. கார்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவேண்டும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒன்றாக இணையவேண்டும் என்ற சூழல் இருந்தது.  அரசு, தனியார் கார் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து கார் தயாரிப்புக்கான உரிமங்களை தருகிறோம் என்று கூறியது. இதற்கு பதினெட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. டெல்கோ என்ற நிறுவனம் முக்கியமானது. இன்றைய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் அது.  ஆனால் சஞ்சய் காந்திக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அவரைப் பொறுத்தவரை கார்களின் தயாரிப்பு அவரது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென நினைத்தார். வெளிநாட்டில் இருந்தபோது, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் படித்தார் என்று கூறப்பட்டது. பின்னாளில் அந்நிறுவனம், இயந்திர பொறியியலில் சஞ்சய்க்கு குறைந்த திறமையே இருந்தது. அவருக்கு அதைக் குறிப்பிட்டுத்தான் சான்றிதழ் வழங்கினோம் என்று கூறியது.  பழைய டெல்லி அருகே வாடகைக்கு காரேஜ் ஒன்றை சஞ்சய் வாங்கி வைத்திர

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிஜமான நடுத்தர வர்க்க கனவு! - இந்தியா 75

படம்
  இந்தியாவில் தொண்ணூறுகளில்தான் தாராளமயமாக்கல் தொடங்கியது என்று கூறுகிறார்கள். உண்மையில் இதற்கான முன்னேற்பாடுகள் 1980களிலேயே தொடங்கிவிட்டன. இதனை தொடங்கியவர் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி. இவர் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கும்படியான காரை தயாரிக்க விரும்பினார். இப்படித்தான் மாருதி உத்யோக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனம் மாருதி சுசுகியாக மாறிவிட்டது.  சஞ்சய் காந்தியின் கனவு இன்று நிஜமானாலும் கூட அதைப் பார்க்கும்வரை அவர் உயிரோடு இல்லை. 1980ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்துவிட்டார். இந்திய அரசு ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து மாருதி காரைத் தயாரித்தது.  ஹர்பால்சிங் தனது காருடன்.. கார் எளிமையாக இருக்கவேண்டும். விலையும் பாக்கெட்டை ஓட்டையாக்காமல் இருந்தால் நல்லது என்ற விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கினார்கள். டெல்லியில் அதன் விலை 52, 500ஆக இருந்தது. 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய முன்பதிவு விறுவிறுவென பிரமாதமாக இருந்தது. 1.35 லட்சம் பேர் மாருதியை வாங்க ஆர்வமாக இருந்தனர். தயாரிக்கப்பட்ட கார்கள் அதே ஆண்டில் டிசம்ப

ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது!

படம்
  தமிழ்நாட்டில் இப்போது மெல்ல பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து வந்த தலித், பட்டியலின மாணவர்கள், அரசின் கல்வி தொலைக்காட்சியைக் கூட அணுக முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு இவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலைதான் முக்கியமான காரணம்.  ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையிலும் அரசின் கல்வி தொலைக்காட்சி பார்த்து கல்வி கற்க முடியாத நிலையில் கல்வி கற்றலில் ஓராண்டு தடை விழுந்துள்ளது. ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் பதில் வந்திருச்சு என்றுதான் பதில் கிடைக்கும்.  ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மீது அக்கறையாக செயல்படுபவர்கள் குறைவானவர்கள்தான். அரசின் கல்வி தொலைக்காட்சி பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஆதி திராவிடர் மாணவர்களை ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். உண்மையில் கல்வி கற்றலில் விழுந்த இடைவெளியை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடும் கல்வி தொலைக்காட்சி புகைப்படம் நிரப்பிவிடும் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறு என்ன இருக்க முடியும்? சேத்துப்பட்டு, பெருநகர், மானாமதி ஆகிய காஞ்சிபுரத்தி

வகுப்பிலிருந்து ஆதிதிராவிட, பட்டியலின மாணவர்களை வெளியேற்றிய பொதுமுடக்க காலம்!

படம்
  Photo TNIE லாக்டு அவுட் எமர்ஜென்சி ரிப்போர்ட் ஆன் ஸ்கூல் எஜூகேஷன் என்ற தலைப்பில் 1362 மாணவர்களிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இந்த மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பவர்கள்.  நகர்ப்புறங்களில்  பத்து முதல் பதினான்கு வயது வரையிலான மாணவர்களின் கல்வி சதவீதம் 74 ஆக உள்ளது. கிராமப்புறங்களில்  இதன் அளவு 66 சதவீதமாக உள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களில் 61 சதவீதமாக உள்ளது.  கிராமப்புறங்களில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பவர்களின் அளவு 15 சதவீதமாக உள்ளது. இதில் தலித் மற்றும் பட்டியலின மாணவர்களின் சதவீதம் 4 ஆக உள்ளது.  43 சதவீத தலித், பட்டியலின மாணவர்கள் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியை ஒராண்டாக தொடரவேயில்லை.  45 சதவீத தலித், பட்டியலின மாணவர்களுக்கு பாடங்களில் சில எழுத்துக்களை மட்டுமே வாசிக்க முடிந்தது அதிர்ச்சிகரமான செய்தி.  இவர்களில் 55 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் கிடையாது.  ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து, விடுதிகளில் தங்கி வந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீடுகளுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.  ஆ

நூலகங்களை புத்துயிர் பெறச்செய்வது எப்படி? கர்நாடகா வழிகாட்டுகிறது!

படம்
  நூலகங்கள் மட்டும்தான் அனைத்து குழந்தைகளும் உள்ளே வந்து படிக்கும் வாய்ப்பை அனைத்து பிரிவினருக்கும் வழங்குகின்றன. இங்குதான் ஏராளமான வார, மாத, நாளிதழ்கள் எளிதாக கிடைக்கும். நீங்கள் இருக்கும் பகுதியைப் பொறுத்து அங்கு ஊர்ப்புற, பகுதிநே, கிளைநூலகம் இருக்க வாய்ப்புள்ளது. அதிலும் சிரத்தை எடுத்து வேலை செய்யும் நூலகமும், கொஞ்சமேனும் துடிப்புள்ள தன்னார்வலர்கள் இருந்தால் சிறப்பு. இல்லையெனில் தூசி துடைக்கப்படாத மேசையும், குப்பைகளாக போடப்பட்ட நூல்களும்தான் நூலகத்தின் அடையாளமாக இருக்கும்.  கர்நாடக மாநிலத்தில் 5600 கிராம நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராம பஞ்சாயத்துகளின் கீழ் செயல்படும் இந்த நூலகங்கள், பெருந்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவின. ஒடுவா பெலகு எனும் திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்தி நூலகங்களை மீட்டெடுத்துள்ளனர். மாணவர்கள் இந்த நூலகங்களில் இலவசமாக கட்டணமின்றி இணைந்துகொள்ளலாம்.  நூலகங்களில் உள்ள நூல்களை வீட்டுக்கே எடுத்துச்சென்று படித்துவிட்டு பிறகு குறிப்பிட்ட நாள் தவணையில் கொடுத்தால் போதுமானது. இவர்களுக்கென மஞ்சள் நிற அட்டை ஒன்றைக் கொடுக்கிறார்கள். இப

காந்தியின் பொருளாதார அறிவு உலகைக் காப்பாற்றுமா? - நூல் அறிமுகம்

படம்
  ஸ்கேரி ஸ்மார்ட் மோ காவாதத் பான் மெக்மில்லன் 699 மனிதர்கள் எழுதும் அல்காரிதப்படிதான் எந்திரங்கள் இயங்குகின்றன. இதன் செயல்பாடு பற்றி இன்னும் நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனைப் பற்றி ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார்.  ஷட் டவுன் ஆடம் டூஸ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 899 பொதுமுடக்கம் வந்தபிறகு நாடுகளின் பொருளாதாரம் 1929ஆம் ஆண்டுக்கு முன்னர் சென்றுவிட்டது. பணம், தங்கம் என பலவற்றையும் செலவு செய்யும் நிலைக்கு நாடுகள் வந்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு நாடுகளின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. இப்படி உலகம் முழுக்க நடந்த விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார் ஆசிரியர்.  பெரில் பாப் வுட்வர்ட் ராபர்ட் காஸ்டா சைமன் ஸ்ஹஸ்டர் அமெரிக்காவில் டிரம்ப் தேர்தலில் தோற்றபிறகு பைடன் ஆட்சிக்கு வருகிறார். அவருடைய காலம் வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்துவிட்டது. இருநூறு பேர்களுக்கு மேல் நேர்காணல் கண்டு அரசியல் சிக்கல்களை பேசியுள்ளனர். எகனாமிஸ்ட் காந்தி ஜெய்திர்த் ராவ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  499 இன்றும் பொருளாதார நூல்களில் காந்தியப் பொருளாதாரத்தை பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். காந்தி வறுமைய

சைக்கோ டைரி நூல் வெளியீடு- தரவிறக்கும் முகவரி இதோ!

படம்
  பொதுவாக குற்றங்களை பற்றிய நூல்கள் தமிழில் குறைவு. உளவியல் சார்ந்த கோணத்தில் குற்றங்களை பார்ப்பது என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கில நூல்கள், நாளிதழ் செய்திகள் ஆகியவற்றை தழுவியே நூல் எழுதப்பட்டுள்ளது. குற்றம், அதுதொடர்பான உணர்ச்சிகள், பின்விளைவுகள் ஆகியவற்றை பற்றிய மனதிற்குள் எழும் ஏராளமான கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கும் என நம்புகிறோம். நூலை தரவிறக்கி வாசியுங்கள்.  நூல் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்படுகிறது. இதனை வணிகரீதியாக பயன்படுத்தக்கூடாது. மற்றபடி நூலை படிக்கலாம் பகிரலாம் பரவசமாகலாம்.  சைக்கோ டைரி நூலின் பிடிஎப் முகவரி https://www.mediafire.com/file/83wrallx78g3ipc/psycho_diary_boo k_pdf.pdf/file மொபி கோப்பை தரவிறக்கும் முகவரி https://www.mediafire.com/file/v1qrnxr9shsk5ol/psycho_diary.mobi/file இபப் கோப்பைத் தரவிறக்கும் முகவரி https://www.mediafire.com/file/7o6kxokcqvxgl15/psycho_diary.epub/file கோமாளிமேடை டீம் 

நாட்டை திகிலில் உறைய வைத்த கொலைகாரர்

படம்
 புத்திசாலியான குற்றவாளி முடிஞ்சா என்னைப் பிடி என சொல்லிவிட்டு குற்றங்களை செய்து விட்டு ஓடுபவர்களைத்தான் புத்திசாலி என காவல்துறை ஏற்கும். இதில் டாக்டர் ஹெச் ஹெச் ஹோல்ம்ஸ் என்பவரை இப்படிக் கூறலாம். இவர் ஸ்வீனி டாட் என்பவரை தனது ரோல்மாடலாக வரித்துக்கொண்டு வேலை செய்தார்.  ஸ்வீனி டாட் என்பவர் நாவிதராக வேலை செய்து வந்தார். அவரைப் பொறுத்தவரை முடிவெட்டுவது, ஷேவிங், அண்டர் ஷேவிங் என்பதெல்லாம் ஹாபி. முழுநேர வேலை, சேரில் உட்கார்ந்தவர்கள் அப்படியே கீழேயுள்ள அறைக்கு லிவரைத் தள்ளி கொண்டுபோய் சேர்த்து கொல்வதுதான். பிறகு அவர்களின் பணத்தை திருடிக்கொண்டு உடலை அழித்துவிடுவது.  இவரைப் பற்றிய செய்தியைப் படித்த ஹோல்ம்ஸ் உடனே தனது வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார். இவர், வேடிக்கை மற்றும் லாபத்திற்காக கொலைகளை செய்யத் தொடங்கினார். ஹோட்டல் ஒன்றைக் கட்டி அதில் தான் கூட்டி வரும் இரைகளை சித்திரவதை செய்வதற்கான அறைகளை அமைத்தார். அலறல் கேட்காத சவுண்ட் ப்ரூப்  வசதி, சித்திரவதை அறைகள்,  உடலை வேக வைக்கும் ஸ்டவ் என வேற லெவலில் அமைத்தார். தனது காதலிகள், மனைவிகள், வணிக பங்காளிகள், குழந்தைகள் என ஏராளமானோரை தடயமே இல்லாமல் கொன்

இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டால் மக்களுக்கு உணவு வழங்கலாம்! பமீலா

படம்
  பமீலா டி மெக் எல்வீ பேராசிரியர், ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகம் மனிதவள சூழலியல் பற்றி பாடம் எடுத்து வருகிறீர்கள். அதன் அடிப்படை என்ன? பல்வேறு வித இயற்கை சூழல்கள் நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. மாற்றுகின்றன. நான் இந்தக் கோணத்தில் மனிதவள சூழலியலைப் பார்க்கிறேன். மனிதர்கள் இயற்கை சூழலுக்கு எதிராக அல்லது ஆதரவாக இருக்கவேண்டும். இந்த இரு நிலைகள்தான் நமக்கு எதிரே உள்ளன. இயற்கை சூழல்களின் மாற்றம் எப்படி மனிதர்களை ஆபத்துக்குள்ளாக்கிறது என்பது பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.  பருவச்சூழல் மாற்றம் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுக்கிறதா? நிச்சயமாக. ஐபிசிசி கூட்டத்தில் பங்கெடுத்து இதுபற்றி நான் பேசியுள்ளேன். எந்த பயிர் எந்த இடத்தில் வளரவேண்டும் என்பதை தீர்மானிப்பது இயற்கைச் சூழல்தான். வெப்பம் அதிகமாகும்போது குறிப்பிட நிலத்தில் பயிர் வளரும் வாய்ப்பு குறைவு. வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்ட பயிர் மட்டுமே அங்குவாழும். மேலும் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து வந்தால் பயிர்கள் பெறும் ஊட்டச்சத்துகள் குறையும். இப்போதே கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தி மெல்ல குறைந்து