இடுகைகள்

டைம் 100 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100: மகத்தான தலைவர்கள்

படம்
டைம் 100 - சாதனை தலைவர்கள் மகாதீர் முகமது ஜனநாயகத்தைக் காப்பாற்ற 93 வயதிலும் போராடி வருகிற தலைவர். முன்னாள் மலேசிய பிரதமர். நடப்பு பிரதமராக மலேசியாவை வெற்றிப்பாதையில் நடத்திச்செல்ல முயன்றுவருகிறார். முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதானார். மே 2018 இல் நடந்த தேர்தலில் மகாதீர் முகமதி அமோகமாக வென்றார். விரைவில் சிறையிலிருந்து வெளிவந்துள்ள அன்வர் ரஹீமிடம் தன் ஆட்சிப்பொறுப்பை அளிக்கவுள்ளார் மகாதீர் முகமது. ரென் ஸெங்பெய் இப்படிச்சொன்னால் அவரது ஊரிலேயே கூட அடையாளம் தெரியாது. சீனாவின் பெருமையை உலகெங்கும் ஒலிக்க வைத்த கம்பெனி ஹூவெயின் ஓனர் என்றால் அவரா என்பீர்கள். 1987 ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 600 டாலர்களில் தொடங்கிய கம்பெனி, இன்று இந்தியாவுக்கு 5 ஜி சேவையை வழங்கப்போகிறது. உலகில் 170 நாடுகளில் கடையைப் போட்டு ஸ்மார்ட்போன்கள் முதல் தொலைத்தொடர்பு வசதிகள் வரை தரும் நிறுவனம் இது. ஆனால் சீனாவுக்காக ஹூவெய் பிறநாடுகளை உளவு பார்ப்பதாக வதந்தி பரவ நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை தடை செய்ய முயற்சிக்கின்றன. சீ

டைம் 100 - திறமைக்கு மரியாதை

படம்
டைம் 100 கல்விக்கரம் - FRED SWANIKER ஆப்பிரிக்கர். இன்று அங்கு 60 சதவீத மக்கள்தொகையினர் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்கள்தான். அங்குள்ள இளைஞர்களுக்கு கல்வி அளித்து அவர்களை தலைவர்களாக்கும் கல்வி முயற்சியை ஃபிரெட் ஸ்வானிகர் தொடங்கியுள்ளார். சொல்லாத கதைகள் - LYNN NOTTAGE மனிதநேயம் பேசும் கதைகள், நாடகங்களுக்கான உழைப்புதான் லின் நோட்டேஜின் பெயர் சொல்லும் படைப்புகளுக்கான காரணம். இவரின் ஸ்வெட் எனும் நாடகத்திற்காக நாடு முழுவதும் அலைந்து அதனை உருவாக்கினார். இதற்கு அங்கீகாரமாக இரண்டாவது முறையாக புலிட்சர் பரிசைப் பெற்றுளார் லின். இனவெறி, மதம் ஆகியவற்றைக் கடந்து மனிதநேயம் பேசும் படைப்புகளை உருவாக்க முனையும் லின்னின் உழைப்பு ஆச்சரியமானது. பாராட்டப்பட வேண்டியது. பெண்களுக்கான குரல் Aileen Lee பலரும் கூகுளில் பெண்களுக்கு மதிப்பில்லை, ஊதியம் குறைவு என்று பேசுவதோடு நின்றுவிடுவார்கள். ஆனால் அய்லீன் லீ ஆல் ரெய்ஸ் என்ற தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி பெண்கள் பலருக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறார். ஆண்களின் நெருக்கடிகளால் தவித்த பெண்களுக்கு தன்னம்பிக்கை தந்துள்ளார். TA