இடுகைகள்

பத்திரிகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொய்வாகும் உடலால் ஆற்றல் இழக்கும் மனம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  தொய்வடையும் உடலால் பலவீனமாகும் மனம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன . ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது . குரல் அப்படித்தான் . சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார் . இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை . எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது . 2022 ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் . உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் . தாரகை - ரா . கி . ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன் . 624 பக்கம் . சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது . வேலைச்சுமை தான் காரணம் . செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது . பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் . உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது . புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன் . போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை . இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை . உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள் . நன்றி ! அன்பரசு 29

கூடுகிற வேலைச்சுமை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான அக்கறை கொண்ட கட்டுரைகள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் வீட்டில் அப்பா , அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள் . நவ .1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால் , எங்கள் நாளிதழ் 15 ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன் . ஃபிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது . இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன . எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை . படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே . ஃபிரன்ட்லைனில் எழுதும் டி . கே . ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர் . இவர் தான் எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம் , அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார் . இப்போது தினசரி அலுவலக வேலைக்கு ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன் . ஃபேஷன் கம்ஃபோர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன . அங்கு தான் அண்மையில் , 1,450 ரூபாய்க்கு சட்டை , பேண்ட் வாங்கினேன் . காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன் . இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது . இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந்துவ

நெருக்கடியான சூழலில் நமக்கு உதவும் காந்தி!

படம்
                      காந்தியை , இந்தியாவில் எப்போது நெருக்கடியான சூழல் வந்தாலும் நினைத்து பார்க்கிறோம் . அவர் எப்படி சூழலை , நிலையைக் கையாண்டிருப்பார் என சிலர் பேசுகிறார்கள் . இடையறாது , தேசிய நாளிதழ்களில் பத்தி எழுதப்படுகிறது . இதற்கு என்ன காரணம் ? நவீன இந்திய சிற்பிகளில் உள்ள பிற தலைவர்களை இப்படி யாரும் எதிர்பார்ப்பதில்லையே ? அதற்கு காரணம் , காந்திக்கு இந்தியா பற்றியும் , மக்கள் பற்றியும் அடிப்படையான உள்ளுணர்வுத்தன்மை இருந்தது . அதனால்தான் காந்தியின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் கூட அறியும்படி தனது உருவத்தை வடிவமைத்துக்கொண்டார் . தகவல்தொடர்பு வேகமாக இல்லாத காலத்தில் கூட காந்தி என்ற பெயர் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது . 1915 ஆம் ஆண்டு காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார் . அப்போதும் அவருக்கு பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை . அதற்கான சக்தியும் அவருக்கு அப்போது உருவாகியிருக்கவில்லை . ஆனால் அதற்கான முயற்சியை அரசியலமைப்பு மூலம் செய்யவேண்டுமென்ற தெளிவு அவருக்கு இருந்தது . ஆனால் இதைக்கூட காந்தியின் பேராசைக

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல

நடப்பதற்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பார்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை. மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன. சாப்பிட அறைக்கு வரும்போது, பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது. அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார். ஆச்சரியம்... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன்.  அடாத மழையிலும் என்னுடைய தேவை  உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது.  எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார். மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன். ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன். மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை பிரன்ட்லைனில் பார்த்தேன். படிக்கவேண்டும். நன்றி!  அன்பரசு

குருநாதரின் ஸ்பீடையும், ஸ்டாமினாவையும் நெருங்கவோ, மேட்ச் செய்யவோ முடியாது! கடிதங்கள் - கதிரவன்

படம்
  எனது ஆசான் திரு. கே.என்.சிவராமன் 21.10.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பா, அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள். நவ.1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால், எங்கள் மாணவர் இதழ் 15ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன்.  பிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது. இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன. எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை. படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே. டி.கே. ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர். எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம், அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார்.  இப்போது ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன். ஃபேஷன் கம்போர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன. அங்கு தான் 1450 ரூபாய்க்கு சட்டை, பேண்ட் வாங்கினேன்.  காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன். இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது. இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந்துவிடுகிறார். இப்போதும் அவரின் உழைப்பு ஒரு அடி முன்னாடி தான் இருக்கிறது. வேகத்த

பத்திரிகை சுதந்திரத்தில் பின்தங்கும் இந்தியா! - இந்தியா 75

படம்
  2022ஆம் ஆண்டு இந்தியா, உலக பத்திரிகை சுதந்திர தொகுப்பு பட்டியலில் சரிந்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் உள்ள பட்டியலில், இந்தியா தற்போது 150ஆவது இடத்தை வகிக்கிறது. இந்த பட்டியலை ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்  என்ற ஊடக கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.  ஊடக சுதந்திரத்தில் முன்னிலையில் உள்ள மூன்று நாடுகளைப் பார்ப்போம். நார்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளே முன்னிலை வகிக்கின்றன.  பாரிசில் இருந்து செயல்பட்டு வரும் ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு, தன்னார்வமாக பத்திரிகை சுதந்திரத்தை காக்க செயல்பட்டு வருகிறது. பத்திரிகை சுதந்திரம் தொகுப்பு பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான செய்திகளை உண்மையை உடல், மன அச்சுறுத்தல் இன்றி பத்திரிகையாளர்கள் வழங்குவது என பத்திரிகை சுதந்திரத்தை இந்த அமைப்பு விளக்கியுள்ளது.  நாடுகளை பட்டியலிட என்ன மாதிரியான அம்சங்களை கணக்கிடுகிறார்கள்? 0 முதல் 10 வரையிலான புள்ளிகளை வழங்குகிறார்கள். இதில் ஜீரோ என்பது பத்திரிகை சுதந்திரமே படுகுழியில் இருக்கிறது என்பதைக் காட்டும் புள்ளி. அதிக புள்ளிகள் வாங்குவது நாட்டிற்கு பெருமை