இடுகைகள்

முதலீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலித்துகளின் அரசியல் விடுதலை பற்றி பேசும் நூல்! - புத்தக அறிமுகம்

படம்
                  புத்தக அறிமுகம் 1232 கி . மீ வினோத் காப்ரி ஹார்பர் கோலின்ஸ் ரூ .295 இந்த நூலில் மத்திய அரசு செய்த முட்டாள்தனத்தால் அதன் இடம்பெயர் குடிமக்கள் எப்படி சாலையில் நடந்து வரும் அவலம் நடைபெற்றது என்பதை துல்லியமாக விவரிக்கிறது . திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி இந்த நூலை எழுதியுள்ளார் . ரிச்சர் வைசர் ஹேப்பியர் வில்லியம் க்ரீன் ஹாச்செட் ரூ .599 அனைத்து நாடுகளிலும் பாராட்டப்படுபவர்களு்ம் , தூற்றப்படுபவர்களும் முதலீட்டாளர்கள்தான் . ஒருவகையில் சரியான முதலீட்டை செய்து லாபத்தை எடுத்துக்ளகொண்டு மாயமாகி பிற நாடுகளுக்கு ஓடும் இவர்கள் புத்திசாலிகள் . எழுத்தாளர் 25 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றியவர் . இவர் தனது அனுபவங்களையும் , எந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் எழுதியுள்ளார் . டாடா ஸ்டோரிஸ் ஹரீஷ் பட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் டாடா குழுமத்தில் உள்ள தனிநபர்கள் , நிகழ்ச்சிகள் , இடங்கள் பற்றிய பல்வேறு சிறு கதைகளைக் கொண்ட நூல் இது . கெட் அவுட் ஆப் யுவர் ஓன் வே மார்க் கௌல்ஸ்டன் அண்ட் ப

பொன்ஸி திட்டங்களின் மீது மக்களுக்கு குறையாத ஆர்வம்! - மேற்குவங்கம், தமிழகம் முன்னிலை-

படம்
      சார்லஸ் பொன்ஸி         நுணுக்கமாக ஏமாற்றுவது எப்படி ? அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு பொருளாதாரம் வளரத்தொடங்கியுள்ளது இதனால் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதற்கு பணக்காரர்கள் முதலீடு செய்ய முண்டியடித்தனர் . இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் சார்லஸ் பொன்ஸி . இவருடன் கூட்டணி சேர்ந்து தன்னை வளர்த்துக்கொண்டவர் பெர்னி மேடாப் . இவர் செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 150 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது . கடந்த வாரத்தில்தான் இவர் மறைந்தார் . பெர்னி , பொன்ஸி என இருவரின் காம்போதான் வரலாற்றில் பெரும் பொன்ஸி திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களை ஏமாற்றியவர்கள் . பொன்ஸியை விட அதிக காலம் முதலீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் பெர்னி . முதலீட்டாளர்களிடம் 64 பில்லியன் டாலர்களைப் பெற்று அவர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீத தொகையை திருப்பிக் கொடுத்தார் . எப்படி ? எதிலும் முதலீடு செய்யவில்லை . புதிதாக ஆட்களை அறிமுகம் செய்யவேண்டும் . அப்படி செய்தால் கூடுதலாக தொகை கிடைக்கும் . புதிதாக திட்டத்தில் இணையும

பணம் கையாளப் பழகுவோம் - பட்ஜெட் திட்டம்

படம்
        4 பணம் கையாளப் பழகுவோம் பட்ஜெட் திட்டம் இந்திய அரசு , ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை ( பட்ஜெட் ) உருவாக்குகிறது . அதில்தான் நாட்டில் வருமானம் , செலவு , பற்றாக்குறை ஆகிய விஷயங்கள் இடம்பெறும் . அனைத்து மக்களுக்கும் என்னென்ன திட்டங்களுக்கு அரசு செலவு செய்கிறது என மக்களுக்கும் தெளிவாகும் . தனிப்பட்ட முறையில் நாமும் வாரம் தோறும் , மாதந்தோறும் , ஆண்டுதோறும் செய்யும் செலவுகளையும் , சேமிப்பையும் கண்டறிய பட்ஜெட் போடுவது அவசியம் . தனிமனிதராக ஒருவர் தனது எதிர்கால வருமானத்தை யூகித்து பட்ஜெட் போடுவது அவசியம் . அப்போதுதான் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து அவர் முன்னேற முடியும் . ஒருவரின் நிதி நிர்வாகத்திறனை முன்னேற்றுவதற்கே பட்ஜெட் உருவாக்கப்படுகிறது . சேமிப்பு சேமிப்பு = வருமானம் - செலவு வருமானத்திலிருந்து செலவைக் கழித்தால் கிடைப்பதுதான் ஒருவரின் சேமிப்பு . செலவு = வருமானம் - சேமிப்பு வருமானத்திலிருந்து சேமிப்பைக் கழிப்பது போக கிடைப்பதுதான் செலவு . ஒருவர் தான் செய்யும் செலவுகளைத் திட்டமிட்டு , வருமானத்தில் ஒருபகுதியை சேமிப்து அவசியம் ப

இளைய தலைமுறையினர் சேமிக்கிறார்களா?

படம்
pixabay பூமர், ஜென் இசட் ,மில்லியனிய ஆட்கள் என அனைவரையும் இணைப்பது பணம்தான். ஆம். இவர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை. இன்று இயர்போன் மாட்டாத இளைஞர்களை நீங்கள் எங்கும் தேடித்தான் பிடிக்கவேண்டும். அதேபோலத்தான் அவர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவும். ஜியோவை சல்லீசு ரேட்டில் வாங்கி அளவில்லாத இணையத்தை நுகர்பவர்கள், தனக்கான நலன்களையே முக்கியமாக கருதுகிறார்கள். சமூகத்தை இணையத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்கள். இந்த விவகாரங்கள் எப்படியோ, ஆனால் கல்யாணம் ஆகி ஹீரோ பைக் வாங்கி செட்டில் ஆகும் விஷயத்தில் எந்த மாற்றமுமில்லை. பூமர் முதல் மில்லியனிய ஆட்கள் ஆட்கள் வரை காசு சேர்ப்பதிலும், அதனை முதலீடு செய்வதிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்கிறார்கள். இதில் ஜென் இசட் ஆட்கள் கில்லி என்கிறார் வலைத்தளத்தில் நிதி மேலாண்மை பற்றி எழுதி வரும் லாவண்யா மோகன். இவருக்கு எப்படி நிதிமேலாண்மை பற்றி பிறருக்கு சொல்வதில் ஆர்வம் வந்தது? என்று கேட்டோம். எங்கள் வீட்டில் செய்யும் செலவுகள், வருமானம் பற்றி சுதந்திரமாக பேசுவார்கள். இதன் அடிப்படையில்தான் நான் பொருளாதாரம் பற்றி எழுதத் தொடங்கினேன

வீழ்ச்சியில் சிக்கிய இந்திய ஆட்டோமொபைல் துறை!- பிரச்னை என்ன?

படம்
பொருளாதாரம் வாகனத்துறை சரிவிலிருந்து மீளுமா? இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு இந்திய அரசு உயர்த்திய ஜிஎஸ்டி வரியும், வாகனங்களின் பதிவுக்கட்டண உயர்வும் முக்கிய காரணமாக உள்ளது. பத்து முதல் இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு பத்திரப்பதிவுக்கட்டணம் 8-16 சதவீதம் உயர்ந்துள்ளது. வாகனத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3கோடியே 20 லட்சம்பேர் பணியாற்றி வருகின்றனர். இத்துறையின் மதிப்பு 8.3 லட்சம் கோடியாகும். 2021ஆம் ஆண்டில் உலகளவில் மூன்றாவது பெரிய வாகனத்துறையாக இந்தியா மாறும் என்று ஆய்வுகள் கூறிவந்த நிலையில்தான் பெரும் சரிவு நடந்துள்ளது. அதிகரிக்கும் வேலை இழப்பு! விழாக்காலங்களில் அதிகரிக்கும் கார் மற்றும் பைக் விற்பனை கூட இந்த ஆண்டு மந்தமானதால், வேலையிழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ”ஆட்டோமொபைல் துறையில் முதலீடு இல்லை; தேவையும் இல்லை. வளர்ச்சி வானத்திலிருந்தா வரும்?” என்கிறார் பஜாஜ் ஆட்டோ நிறுவனரான ராகுல் பஜாஜ். இவரின் கூற்றை ஆமோதிக்கும் விதமாகவே கார் மற்றும் பைக் விற்பனை நிலவரங்கள் திகிலூட்டுகின்றன.

சமூக பொறுப்பு சட்டம் செயல்படுகிறதா? - இந்திய அரசு கண்காணிக்கிறதா?

படம்
இந்திய அரசின் சமூகநலப்பொறுப்பு (CSR Act) சட்டம் (2013 ) அமலானபிறகு, இதுதொடர்பாக செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா போன்ற பல்வேறு நிலப்பரப்பு மற்றும் கலாசாரம் சார்ந்த நாட்டில் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று சேர்வது மிகச்சிரமம். இதனைச் சாத்தியப்படுத்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உருவாயின.  இவை அரசின் திட்டங்களை பல்வேறு அடிப்படை வசதிகளற்ற தொலைதூரக் கிராமங்களிலும் கொண்டு சென்று சேர்க்கும் பணியைச் செய்கின்றன. உலக நாடுகளில் தொழில்நிறுவனங்கள் தம் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூகநலத் திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என்பது சட்டமாகவே உள்ளது. இந்திய அரசு சமூகப்பொறுப்பு திட்டத்தை, 2013 ஆம் ஆண்டு மேம்படுத்தி உருவாக்கியது. இதன் விளைவாக சூழல், கல்வி, வாழ்க்கைத்தரம், சம்பளப் பற்றாக்குறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உழைக்கும் தன்னார்வலர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இம்முறையில் இந்தியாவில் கேட்ஸ் பவுண்டேஷன், டாடா டிரஸ்ட், அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். 1980 -90 களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில்

ஹெட்ஜ் நிதியில் லாபம்!

வணிகத்தில் லாபம் பார்ப்பதற்கான முக்கிய வழி, ஹெட்ஸ் நிதிகளில் இணைவதுதான். இந்த முதலீடு, பல்கிப் பெருகி நம் வங்கிக்கணக்கை அடைவது நாட்டின் தொழில்வளர்ச்சியைப் பொறுத்துள்ளதே.  ஹெட்ஜ் நிதி என்பது வெளிநாட்டு முதலீடு. கடல்கடந்து இன்று நீங்கள் அமெரிக்காவில் ஏன் இங்கிலாந்தில் கூட முதலீடு செய்யலாம். இணையம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும். நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு ஆன்லைன் வணிகத்தில் நீங்கள் ஈடுபடலாம். உலகிலுள்ள பணக்காரர்கள் இவ்வகையில் வளரும் தொழில்துறையில் முதலீடு செய்கின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு இந்த ஹெட்ஜ் நிதி அவசியம். கடந்த ஆண்டில் மட்டும் இவ்வகையில் கிடைத்த முதலீட்டு நிதி 88 பில்லியன் டாலர்கள். நாட்டின் தொழில்வளர்ச்சி சரியான திசையில் சென்றால்தான் முதலீட்டு நிதி கிடைக்கும். அரசியல் தடுமாற்றங்கள், தொழில்துறை சரிவு, போராட்டங்கள் நாடு திகைத்து நின்றால் மெல்ல ஹெட்ஜ் நிதி சரிவைச் சந்திக்கும். கடந்த ஆண்டின் செப்டம்பரில் 955 பில்லியன் டாலர்கள் முதலீட்டு நிதி கிடைத்தது. ப்ளூம்பர்க் அறிக்கைப்படி இது சாதனையான தொகைதான். சிக்கல்களைச் சந்தித்தாலும் இன்றும் ஹெட்ஜ் நிதிகளில் பணம் குவிவது