இடுகைகள்

சேகரவீராசாமியின் தன்னம்பிகை கதை! - ச.அன்பரசு

படம்
வீல்சேர் டென்னிஸ்  - சேகர் வீராசாமியின் தன்னம்பிக்கை கதை! - ச . அன்பரசு கடந்த டிசம்பர் மாதத்தில் பெங்களூருவில் நடந்த தபேபுயா ஓபன் வீல்சேர் டென்னிஸ் போட்டியின் ஃபைனல் . சேகர் வீராசாமி மற்றும் பாலச்சந்தர் இருவீரர்களுக்குமிடையேயான அனல் பறக்கும் நீயா , நானா ? சர்வீஸ்களால் பார்வையாளர்கள் கண்ணிமைக்கவும் மறந்து போனார்கள் . பாலச்சந்தரின் தவறுகளை பயன்படுத்திக்கொண்ட சேகர் , ஃபோர்ஹேண்ட் சர்வீஸ்களால் அநாயசமாக வென்றபோது எழுந்த கரகோஷங்கள் அவரின் ஆயுள் வலிகளையும் ஒரு நிமிடம் மறக்கவைத்தது . டென்னிஸ் கோர்ட் தாண்டிய வலிகளையும் சுமந்துதான் சேகர் தபேபுயா ஓபனில் சொல்லியடித்தார் . பின்னே , அர்ப்பணிப்பான விளையாட்டை விளையாட சேகர் தன் இடது காலையே வெட்ட நேர்ந்ததை விட வேறு வேதனை என்ன வேண்டும் ? தினக்கூலியான சேகரின் தந்தைக்கு , அவரை பள்ளிக்கு பசிக்காமல் சோறிட்டு அனுப்பக்கூட இயலாத வறுமை . வயிற்றை அமைதிபடுத்த பத்து வயதிலேயே வெள்ளி விளக்குகளுக்கு பாலீஷ் செய்யும்வேலையில் சேர்ந்தார் சேகர் . அப்போது அவரின் நண்பர் டென்னிஸ்

ஆல் இன் ஆல் அறிவியல்!

படம்
சீனா ஜெயிக்க காரணம் என்ன ? 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 264 பில்லியன் டாலர்கள் எனில் சீனாவின் ஏற்றுமதி 2,098 பில்லியன் டாலர்கள் . இந்தியச்சந்தையை சீனர்கள் எப்படி வளைத்தார்கள் என்பதை பார்ப்போம் . மெகா தயாரிப்பு : இந்தியர்கள் இரண்டு மெஷின்களில் குடம் செய்கிறார்கள் என்றால் சீனாவில் 70 மெஷின்கள் அதை செய்கின்றன . பணியாட்களின் உற்பத்தித் திறன் 5 மடங்கு அதிகம் . நூறு பணியாளர்களை பணியில் அமர்த்த Industrial Disputes Act of 1947,Contract Labor Act of 1970 ஆகிய சட்டங்களின் குறுக்கீடு இங்கு அதிகம் . ஊழலும் போக்குவரத்தும் : ஊழல் பட்டியல் 2016 படி 176 நாடுகளில் இந்தியாவும் சீனாவும் 76 இடம் வகித்தாலும் தினசரி வாழ்வில் சீனர்களுக்கு ஊழல் குறுக்கீடு குறைவு . மேலும் யூனியன்களின் வரைமுறையற்ற ஸ்ட்ரைக் தொல்லைகள் சீனாவில் குறைவு . மும்பை - டெல்லி தூரத்தைவிட சீனாவின் குவாங்சூவிலிருந்து மும்பை 5 மடங்கு தூரம் அதிகம் . ஒரு கன்டெய்னருக்கு ஆயிரம் டாலர் செலவெனில் , ஒரு சிலைக்கு 4 சென்ட்ஸ் . இதோடு தடையற்ற மின்சாரம் , அரசு மானியங்கள் ஆகியவையும் சீனா சந்தையில் ஜெயிக்க உதவி