இடுகைகள்

அசத்தும் அறிவியல்!

படம்
செல் ரோபோ ! மின்சாரத்தை கடத்தும் , சூழலை பாதிக்காத உருவத்தை மாற்றிக்கொள்ளும் மனிதர்களின் செல் சைசில் பொருளை உருவாக்க முடியுமா ? இதற்கு கார்னெல் பல்கலையைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் பால் மெக்யுன் மற்றும் இடாய் கோகன் ஆகியோர் விளக்கம் தருவதோடு இதற்கான செல்களை உருவாக்கியுள்ளனர் .  " எலக்ட்ரானிக்ஸில் எக்ஸோகெலிடன் என்று கூறும் விஷயங்களை செய்ய முயற்சிக்கிறோம் . இது விண்வெளியிலுள்ள வாயேஜர் திறனை சிறிய செல்லில் அடைப்பது போல " என தனது பணிகளை விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர் இடாய் கோகன் . இந்த சிறிய செல் ரோபோக்கள் எலக்ட்ரானிக் , உயிரியல் மற்றும் ரோபோ என மூன்று விஷயங்கள் இணைந்த விளைவு . கிராபீன் மற்றும் கண்ணாடி இணைந்த வாகனம் , உடலிலுள்ள வெப்பத்தை மின்சாரமாக பெற்று இயங்குகிறது . ரத்தசெல்களை விட பெரிதாகவும் நியூரான்களை விட சிறியதாகவும் உள்ள இந்த புதிய செல் ரோபோக்களை செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் பயன்படும் வாய்ப்புள்ளது .   2 சூரியனின் உள்ளே ! சூரியனை ஆய்வு செய்வதே சிரமம் என்ற நிலையில் அதன் உட்புறங்களை ஆராய்ந்து கூறுவது விளையாட்டா ? மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்ட

ஒரு படம் ஒரு ஆளுமை!

படம்
லோகோ: திலீப் பிரசாந்த் குங்குமத்தின் சீனியர் சப் எடிட்டர் த.சக்திவேல் முத்தாரம் இதழில் குழந்தைகள் சினிமா, சிறந்த குழந்தை செயல்பாட்டாளர் ஒருவரைப் பற்றியும் வாராவாரம் அறிமுகப்படுத்தி 16.3.2018 முதல் இனிய தொடராக எழுதவிருக்கிறார்.  குங்குமம்  வார இதழில் குழந்தைகள் பள்ளி, நாடக கலைஞர், குழந்தைகள் எழுத்தாளர் பற்றி கட்டுரைகளை பேரார்வமுடன் எழுதுபவர் நண்பர் சக்திவேல். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் குறித்து அவர் எழுதிய மறுபக்கம் என்ற தொடர் பலருக்கும் நினைவிருக்கலாம். குங்குமம் தோழி இதழில் பெண்கள் மைய சினிமா எழுதி வந்ததை வாசித்து விட்டு அவரிடம் கருத்து கூறும்போது எதேச்சையாக "முத்தாரம் இதழில் ஏதாவது குழந்தைகள் தொடர்பாக எழுதலாமா?" என்று கேட்டார். ஆனால் அவர் கேட்டசமயத்தில் இடம் ஒதுக்கி கொடுக்க முடியாத நெருக்கடி. முதன்மை ஆசிரியரிடம் அனுமதி பெற்று இதோ இப்போது சக்திவேலின் ஆசையை நிறைவேற்றியாயிற்று. அவருக்கு முதலில் ஒருபக்கம் தரவே நினைத்தோம் என்றாலும் குழந்தைகளைச் சுற்றி அவர்களின் வானை விரிவாக்கும் ஆளுமைகளைப் பற்றி எழுதினால் என்ன என்று யோசனை. உடனே இருபக்கம் ஒதுக்கியதும் சக

புத்தக வாசிப்பு!

படம்
ஸ்டீவ்ஜாப்ஸ் வழி - புதிய தலைமுறைக்கான ஐ லீடர்ஷிப் வில்லியம் எல். சைமன் தமிழில் : வானமாமலை ரூ.250 ஜெய்கோ இன்று ஆப்பிள் நிறுவனம் தனது வருங்காலத்தைக் காப்பாற்றுவதற்கான சிஇஓ தேடுதலில் இருக்கிறது. அப்படிப்பட்ட தேடுதலை வெற்றிகரமான தனது செயல்பாடுகள் மூலமாக ஏற்படுத்தியவர் ஸ்டீவ். சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால் ஆப்பிள் என்ற கணினி நிறுவனத்தை கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸாக ஸ்டீவ் என்ற ஒற்றை மனிதர் எப்படி முன்னேற்றினார் என்பதை அவருடன் பணிபுரிந்த ஜெ.எலியட் விவரிக்கிற நூல் இது. தொழில்நுட்பத்தில் அபார ஆளுமை இல்லாதபோதும், தன் மக்கள்தொடர்பு, ஊழியர்களை ஊக்குவிக்கும் குணம், கொடையாளி மனம் , சரியானவர்களை சரியான இடத்தில் அமர்த்துவது என தன் சக போட்டியாளர்களிடம் இல்லாத விஷயங்களை எப்படி சாதித்தார் ஸ்டீவ் என்பது இந்நூலை முக்கியமான அலுவலக மேலாண்மை கையேடாக மாற்றுகிறது.. ஸ்டீவின் குணங்களை அப்படியே காப்பியடிப்பது எந்த இடத்திலும் பயனளிக்காது. ஆனால் குறிப்பிட்ட முடிவை நோக்கிய ஆர்வம் நமக்கிருந்தால் ஸ்டீவின் வழிமுறைகளை ஃபாலோ செய்தே ஆகவேண்டும். வேலை வாங்குவது, சரியான ஆட்களை எங்கிருந்தாலும

கலாய் பக்கங்கள்!

படம்
2018 ஆம் ஆண்டின் முதல் வாரிசு ! பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் ஜனவரி முதல் தேதி பிறந்த குழந்தைக்கு ்கல்விச்செலவு முழுவதையும் தானே ஏற்பதாக உறுதிமொழி கூறியுள்ளது மருத்துவமனை நிர்வாகம் . பெங்களூருவிலுள்ள ராஜாஜி நகரின் மருத்துவமனையில்தான் மேற்படி சம்பவம் நிகழ்ந்தது . புத்தாண்டு பிறந்த 5 நிமிடம் பிறந்த குழந்தை என்பதால் இந்த ஸ்பெஷல் பரிசு . " கோபி - புஷ்பா என்ற தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு 5 லட்சரூபாய் வங்கிக்கணக்கில் விரைவில் பணம் டெபாசிட் செய்யப்படவிருக்கிறது " என்கிறார் மருத்துவனை அதிகாரியான எல் . சுரேஷ் . புத்தாண்டு அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கல்லூரி வரையிலான செலவு அரசு ஏற்கும் என்பது இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொன்மை வழக்கம் " என்கிறார் நகர மேயரான சம்பத் ராஜ் .  கொலைகார செல்ஃபீ ! காலையில் எழுந்து ஃபேஸ் வாஷ் செய்வதற்கு முன்பு ஜென்இசட் யூத்ஸ் , முகத்தை அஷ்ட கோணலாக்கி செல்ஃபீ தாண்டவத்தை தொடங்கிவிடுகிறார்கள் . ஆனால் கனடாவில் இந்த வகையறா செல்ஃபீதான் கொலையாளியை கண்டுபிடிக்க உதவியிருக்கிற விஷயம் தெரியுமா ? கனடாவைச்சே

ரோனி பதில் சொல்லும் ஏன்?எதற்கு?எப்படி?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி? பயம் எப்படி எங்கிருந்து   உருவாகிறது ? இயற்கையாக பாம்பு , தேள் , முதலை போன்றவற்றை பார்த்ததும் வயிற்றுக்குள் கடாமுடா சத்தம் , முதுகெலும்பில் வேர்ல்பூல் ஜிலுஜிலுப்பு ஏற்படுவது இயற்கையிலே நேர்கிறது . ஏன் ? டிசைன் அப்படித்தான் பாஸ் ! அப்படி பயப்படவில்லையென்றால் பூமியில் நாம் உயிரோடு இருக்க முடியாதே ! ஆனால் இதே பயம் நண்பர்களுக்கும் பரவி எக்ஸ்ட்ரீம் ஆனால் அது போபியா என நோய் ஆகிவிடும் . எனவே பெற்றோர் பயத்தை போக்கி அவசியமான விஷயங்களுக்கு பயப்பட கற்றுத்தரவேண்டும் . கூட்டம் ஆகாது , பைக் பயணம் என்றாலே ஜூரம் என பயம் கிளம்பினால் ட்ரீட்மெண்ட் அவசியத்தேவை .   ஏன் ? எதற்கு ? எப்படி ? பார் கோடுக்கும் , க்யூஆர் கோடுக்கும் என்ன வித்தியாசம் ? பொருளின் பெயர் விலை விவரங்களைக் கொண்ட பார்கோடுகள் டஜன் ஷேப்களிலும் அளவுகளிலும் உண்டு . 12 நம்பர்களில் வரும் Universal Product Code (UPC) இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் சூப்பர் ஹிட்டாக பயன்படுகின்றன . இதில் ராயல் மெயில் மெய்ல்மார்க் வகை L வடிவ பார்கோடுகள் 26

பாதாள அறிவியல் லேப்கள்!

படம்
பாதாள அறிவியல் லேப்கள் ! SNOLAB SNOLAB (Sudbury Neutrino Observatory) கனடாவின் வேல் கிரெய்க்டன் சுரங்கப்பகுதியில் 1.2 கி . மீ தொலைவில் அமைந்துள்ளது . சுரங்கத்தில் நிக்கல் கனிமத்தை தொழிலாளர்கள் அகழ்ந்தெடுக்க , ஆராய்ச்சியாளர்கள் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் . கருந்துளையின் மூலக்கூறுகளைப் பற்றிய பிகாஸோ சோதனை முக்கியமான ஒன்று . Large Hadron Collider செர்ன் அமைப்பின் சகோதர ஆய்வகம் இது . ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் 175 மீட்டர் தொலைவில் பூமிக்குள் அமைந்துள்ளது . பால்வெளி எப்படி உருவானது என்பதற்கான ஆராய்ச்சி நடந்துவருகிறது . குறிப்பிட்ட துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோத வைக்கப்பட்டு பல்வேறு புதிய கோணங்கள் இங்கு பரீட்சித்து பார்க்கப்பட்டு வருகின்றன . ஆய்வகத்தை சுற்றிலும் பாறைகள் நிறைந்திருப்பதால் , அது டெஸ்ட்களில் உருவாகும் கதிர்வீச்சை அவை உள்வாங்கிக் கொள்கின்றன . Soudan Underground Laboratory அமெரிக்காவின் மின்னசோட்டாவிலுள்ள கைவிடப்பட்ட இரும்பு சுரங்கத்தில் செயல்பட்ட ஆய்வகம் இது . பூமிக்கு கீழேயுள்ள இந்த ஆய்வகத்தில் பால்வெளி பற்றியும் , நியூட்ரினோ துகள்கள் ப

சிறந்த அறிவியல் புத்தகங்கள் 2017!

படம்
சிறந்த அறிவியல் புத்தகங்கள் 2017! Swearing Is Good For You: The Amazing Science of Bad Language Emma Byrne Rs.1,111, Profile Books கெட்டவார்த்தை இல்லாமல் மொழி உண்டா ? மொழியில் உள்ள கெட்டவார்த்தைகளின் வரலாற்றை சிம்பன்சி காலம் முதல் நம் காலம் வரை விளக்குகிறார் எம்மா பைர்ன் . Mysteries Of The Quantum Universe Thibault Damour & Mathieu Burniat Rs.1,539, Particular Books ஜாய்ன் பாப் , தன் செல்ல நாய் ரிக்குடன் பால்வெளி பற்றிய மர்மங்களை அறிய செல்லும் பயணமே இந்நூல் . ஐன்ஸ்டீன் , மேக்ஸ் பிளான்க் ஆகியோர் இப்பயணத்தில் பாப்புக்கு உதவி மர்மங்களை அறிய உதவுகிறார்கள் . கிராபிக் நாவலாக இதனை படிப்பது சூப்பர் விறுவிறுப்பு . Only Connect: The Official Quiz Book Jack Waley-Cohen Rs.1,282 BBC Books சிக்கலான க்ளூக்களின் விடை தேடும் சுவாரசிய கேள்விகளைக் கொண்ட நூல் இது . பிபிசி டிவியின் பிரபல ஷோவாக நூலின் பெயரில் வெளியானாலும் பல கேள்விகள் புதிது . உங்களின் ஐக்யூவை சூப்பராக வார்ம் அப் கொடுக்க உதவும் பொது அறிவு நூல் . Graphic Science Darryl Cunningham