இடுகைகள்

டாட்டூ கிரிமினல்கள்!

படம்
பிட்ஸ் ! மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் Always, Never, Completely. லண்டன் நகரம் 1211 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து ராணிக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்துவதற்காக வாடகையை அவருக்கு செலுத்தி வருகிறது . காலனிய ஆதிக்க காலகட்டத்தில் பணியாளர்களுக்கு உணவாக வழங்கப்பட்டதில் முக்கிய ஐட்டம் , இறால் . சிங்கத்தின் பிடரிமயிர் அதன் ஹார்மோன்களின் அதிகரிப்பிற்கேற்ப அடர்த்தியாக வளரும் . பெண் சிங்கங்களை ஈர்ப்பதும் இதுவே . அமெரிக்காவின் எஃப்பிஐ குற்றவாளிகளை அவர்களின் உடலிலுள்ள டாட்டூக்களை வைத்து கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளது . நியூயார்க்கிலுள்ள Vinnie Pizzaria என்ற கடையில் பீட்ஸா ஆர்டர் செய்தால் , அதனைக் கொண்டுவரும் பெட்டியையும் ரொட்டியினால் செய்து அனுப்புகிறார்கள் . சிட்னியைச் சேர்ந்தவர் விமானநிலையத்தில் ஒலிமாசு பிரச்னைக்காக ஓராண்டுக்கு 19 ஆயிரத்து 600 புகார்களை தந்துள்ளார் . தோராயமாக 20 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் புகார்களை அனுப்பியுள்ளார் . 

சூரியனை ஆராயப்போகிறது நாசா!- எப்படி சாத்தியம்?

படம்
ஆபரேஷன் சன் ! வரும் ஜூலை 31 அன்று கென்னடி விண்வெளி மையத்தில் இதுவரை செய்யாத சாதனை நிகழ்த்தப்போகிறது நாசா . பல்வேறு கோள்களை ஆராய்ந்த நாசா , அடுத்த ஆராயப்போவது சூரியனைத்தான் . பார்க்கர் என பெயரிடப்பட்டுள்ள ஆளில்லாத விண்கலம் சூரியனை நோக்கி செல்லவிருக்கிறது . ஏழு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த திட்டம் வெற்றியடைந்தால் சூரியனில் நிகழும் வேதிவினைகளையும் , பூமிக்கு கிடைக்கும் வெப்பம் பற்றிய புதிய செய்திகளை அறிய முடியும் . 2024 ஆம் ஆண்டு சூரியனை 6.3 மில்லியன் கி . மீ தூரத்தில் நெருங்கும் பார்க்கர் விண்கலம் , வெப்பத்தையும் கதிர்வீச்சையும் தாங்க 11.5 செ . மீ தடிமனுள்ள கார்பன் கவசத்தைக் ( தாங்கும் சக்தி 2500 டிகிரி செல்சியஸ் ) கொண்டுள்ளது .  இயற்பியலாளர் யூஜென் பார்க்கர் பெயரிடப்பட்ட விண்கலத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ளது . சூரியனுக்கு செல்லும் முதல் விண்கலம் என்பதால் , உலகெங்கும் உள்ள மக்கள் தங்கள் பெயரை எழுதி அனுப்பவும் நாசா கேட்டுக்கொண்டுள்ளது . பெயர்களை மைக்ரோசிப்பில் பொறித்து விண்கலத்தில் இணைத்து சூரியனுக்கு அனுப்புவார்கள் . விண்வெளியிலும் வெற்றிக

செயற்கைக்கோள் காணாமல் போனது எப்படி?

படம்
இஸ் ‌ ரோ தேடும் செயற்கைக்கோள் ! மார்ச் 29 அன்று ஏவிய தகவல்தொடர்பு செயற்கைக்கோள் அது .  ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6 ஏ ஏப்ரல் 1 அன்று விஞ்ஞானிகளை ஏமாற்றியது . இரண்டாம் வட்டப்பாதைக்கு திட்டப்படி மாறிய ஜிசாட்டிலிருந்து சிக்னல் ஏதும் வரவில்லை . இஸ் ‌ ரோ இதுவரை தொட்டது அனைத்தும் துலங்கியது . மொத்தம் 104 செயற்கைக்கோள்களையும் ஏபிடி பார்சல் சர்வீஸ் போல விண்ணுக்கு அனுப்பியது இதுவரை எந்த நாடும் செய்யாத இந்தியச்சாதனை . அடுத்து சந்திரயான் 2 திட்டத்தை இத்தோல்வி பாதிக்குமா ? " விண்வெளி திட்டங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம் . நாங்கள் ஜிசாட்டை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம் . இதற்கும் அடுத்து திட்டமிட்டுள்ள செயற்கைக்கோள்களுக்கும் தொடர்பில்லை " என்கிறார் இஸ் ‌ ரோவைச் சேர்ந்த பேராசிரியர் சிவதாணுப்பிள்ளை . இஸ் ‌ ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் நாற்பதுமுறை ஏவப்பட்டு , ஒருமுறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது . ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டைச் சேர்ந்த Angosat-1 கடந்தாண்டு டிசம்பரில் கஜகஸ்தானிலிர

தலித்துகள் பழங்குடிகள் மீதான வன்முறை டேட்டா!

படம்
கட்டற்ற வன்முறை ! தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக - 40 ஆயிரத்து 801 விசாரணை முடிந்துள்ள வழக்குகள் - 4 ஆயிரத்து 615 கிடப்பிலுள்ள வழக்குகள் (2016) - 1 லட்சத்து 29 ஆயிரத்து 831 (89.6%) பதிமூன்று நிமிடத்திற்கு ஒரு குற்றம் , தினசரி ஏழு கற்பழிப்பு புகார்கள் , வாரத்திற்கு பதினைந்து கொலைகள் பதிவாகின்றன . குற்ற மாநிலங்கள் - உத்திரப்பிரதேசம் (25.6%), பீகார் (14%), ராஜஸ்தான் (12.6%), மத்தியப்பிரதேசம் (12.1%) பழங்குடிகளுக்கு எதிராக - 6 ஆயிரத்து 568 விசாரணை நிறைவுற்ற வழக்குகள் - 2 ஆயிரத்து 895 நிலுவையிலுள்ள வழக்குகள் (2016) - 20 ஆயிரத்து 386 (87.1%) ஒரு மணிநேரத்திற்கு ஒரு குற்றம் , வாரத்திற்கு பத்தொன்பது கற்பழிப்புகள் , மாதம் பனிரெண்டு கொலைகள் பதிவாகின்றன . குற்ற மாநிலங்கள் - மத்தியப்பிரதேசம் (27.8%), ராஜஸ்தான் (18.2%), ஒடிஷா (10.4%), ஆந்திரா (6.2%)

சிறந்த சுயமுன்னேற்ற நூல்கள்!

படம்
கடந்த இருபது ஆண்டுகளில் வெளியான சிறந்த சுயமுன்னேற்ற நூல்களில் சில.  சிறந்த சுயமுன்னேற்ற நூல்கள் ! You Can Win: A Step by Step Tool for Top Achievers Book by Shiv Khera Bloomsbury 1998 வேலைவாய்ப்புத் துறையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டி நூல் . பல்வேறு முன்னோடிகளில் வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்கள் , மீட்சி , ரிஸ்க்கான முடிவுகள் , வெற்றி ஆகியவற்றை விவரிக்கும் சூப்பர் தன்னம்பிக்கை புத்தகம் இது . The Monk Who Sold His Ferrari Book by Robin Sharma Jaico 1997 கனடா நாட்டைச் சேர்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளர் ராபின் சர்மா , முதலில் வழக்குரைஞராக பணியாற்றியவர் . கடும் மன அழுத்தம் தந்த வேலையை தன் இருபத்தைந்து வயதில் வேலையைவிட்டு எழுத தொடங்கி சுயமுன்னேற்ற புத்தகங்களாலேயே கோடீஸ்வரரானார் ராபின்சர்மா . குழந்தைகளின் நலன்காக்கும் அறக்கட்டளையை (RSFC) நிறுவி செயல்பட்டு வருகிறார் இவர் . Stay Hungry Stay Foolish Book by Rashmi Bansal Westland 2008 எழுத்தாளர் , பேச்சாளர் ராஷ்மி இந்நூலில் தம் கனவுகளை தேடிப்போன 24 எம்பி

குற்றம் பழகு!

படம்
வரலாற்று சுவாரசியங்கள்   குற்றம் பழகு! ரா . வேங்கடசாமி 1885 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த ராபர்ட் ஆர்தர் , படிப்பு வராததால் பிரெஞ்சு சர்க்கஸ் கம்பெனியில் எடுபிடியாக வேலைக்கு சேர்ந்தார் . பெரிய குழியைச்சுற்றி சைக்கிள் ஓட்டுவதுதான் வேலை . கீழே சிங்கங்கள் காத்திருக்கும் . கவனம் சிதறினால் சிங்கத்திற்கு விருந்து நிச்சயம் . கிரிமினலான ராபர்ட் ஆர்தர் , கிரைம் விஷயங்களில் கெட்டியாக முன்னேறியதால் எலி என செல்லப்பெயர் பெற்றார் . எதிலும் லாவகமாக தப்பியோடுவதால் இந்தப்பெயர் . பிரான்ஸ் போரடிக்க , அமெரிக்காவிற்கு கிளம்பினார் ராபர்ட் . தன் கிளாமர் மேன்லி தோற்றத்தினால் பெண்களை கவர்ந்து விழுந்து விழுந்து காதலித்தார் ராபர்ட் . அப்புறம் என்ன காதலில் பித்தான பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளிவிட்டு சுகவாசியாக வாழ்ந்தார் ராபர்ட் . லாபம் கிடைத்தாலும் போலீஸ் லத்தியை சுழற்றி முட்டியை பெயர்த்து சிறையில் தள்ளியதால் பர்சனாலிட்டி பங்கமானது . பின் தன் பெயரை காலின்ஸ் என மாற்றிக்கொண்டு பிரான்ஸ் திரும்பினார் ராபர்ட் . அங்கே பணக்கார ஆன்டிகளை வலைபோட்டு பிடித்தவர் , பிளாக்மெயில் செய்து பெற்ற   பணத்தால்

கார்டன்: யார் நீ?

படம்
வரலாற்று சுவாரசியங்கள் கார்டன் : யார் நீ ? ரா . வேங்கடசாமி ஸ்காட்லாந்தில் பிரபலமானது கார்டன் குடும்பம் . 1871 ஆம் ஆண்டு கார்டன் , மின்னிசோட்டாவிலுள்ள வங்கியில் 40 ஆயிரம் பவுண்டுகள் பணம் டெபாசிட் செய்தார் என்பதை அறிந்த ஊர்மக்களே வியந்து போனார்கள் . அது சரி யார் இந்த கார்டன் பிரபு ? அப்போது சுற்றித்திரிந்த வதந்திகள் இரண்டு . ஒன்று , இவர் பாதிரியார் ஒருவருக்கும் , வேலைக்காரிக்கும் பிறந்தவர் என்றும் , செல்வாக்கான கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பது இரண்டாவது . ஆனால் கடத்தல் தொழிலில் கார்டன் சூப்பர் டான் என்பது பின்னர்தான் உலகுக்கு தெரிய வந்தது . எடின்பர்க்கிலுள்ள மார்ஷல் அண்ட் சன் என்ற நகைக்கடையில் கார்டன் வாங்கினார் ஆனால் கையெழுத்தை செய்ரீன் பிரபு என்ற பெயரில் போட்டார் . 1843 ஆம் ஆண்டு பிறந்த கார்டன் பிரபு , தன் இருபத்தேழு வயதில் செய்ரீன் பிரபுவின் அளவற்ற சொத்துக்களுக்கு வாரிசு ஆவார் எனவும் நம்பப்பட்டது . மின்னிசோட்டாவில் ஸ்காட்லாந்திலிருந்து நிறைய குடித்தனக்காரர்களை இங்