இடுகைகள்

இந்த உலகம், பூமி என்னுடையது! - ஓவியர் லூசிடா ஹராடோ

படம்
ஓவியத்தின் நீண்ட வரலாறு! லூசிடா ஹராடோ 1920ஆம் ஆண்டு பிறந்த மகத்தான ஓவிய ஆளுமையை நான் 2017இல் அடையாளம் கண்டு பிரமித்தேன். சர்ரியலியசம், டைனடன் இயக்கம், மேஜிகல் ரியலிசம் ஆகிய தன்மையை உள்ளடக்கமாக கொண்டவை லூசிடாவின் ஓவியங்கள். இவருக்கு தற்போது 98 வயதாகிறது. இவரது ஓவியங்களை செர்பனைட் கேலரியில் பார்த்தபோது, அதனுடன் தனித்துவதமான உணர்வு ஏற்பட்டது போல இருந்தது. தனித்துவமாக வரையப்பட்ட பல்வேறு ஓவியங்களை கொண்டாலும், பெரும்பாலும் மக்களால் அடையாளம் காணப்படாதவராகவே இதுவரை இருந்தார். தன்னுடைய 98 வயதில், இத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து புகழைப் பெறத் தொடங்கியுள்ளார். இவர் மனித உடல்களை இயற்கையிலிருந்து பிரிக்கப்படாத பகுதியாக பார்க்கிறார். மனிதர்கள் எப்படி மொழி மூலம் பிறருடன் பாலம் அமைத்து தொடர்பு கொள்கிறார்களோ அதுபோல இவரது ஓவியங்கள் வானத்தின் மீதும், பூமியின் மீதும் தீராத வேட்கையை வெளிப்படுத்துகின்றன. லூசிடா, வெறும் ஓவியர் மட்டுமல்ல. சூழலியலாளர், செயல்பாட்டாளரும் கூட. தனக்கான உடைகளை இவரே வடிவமைத்துக்கொள்கிறார். நான் வாழ்க்கைக்கு என்றுமே இல்லை என்று கூறியதில்லை. உலகம் மற்றும் இந்த பூமி பற்றிய பொறுப

மனிதநேயமிக்க திரைப்படக் கலைஞர், உரிமைக்கான போராளி - பிரை லாரிசன்

படம்
சகலகலா மனுஷி! பிரை லார்சன் மார்வெல் படத்தின் சூப்பர் ஹீரோவாக நடித்தவர். திரையிலும் சரி, திரைக்கு வெளியிலும் சரி நாயகியாகத்தான் ஜொலிக்கிறார். காரணம், அவரது பாலின பாகுபாடு, பாலியல் சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வருகிறார். அவரது படம் பல கோடி ரூபாய் வசூலித்தது என்பதைத் தாண்டி கவனம் ஈர்க்கும் மனுஷியாக இருக்கிறார். இளைஞர்களுக்கான நிகழ்வுகளிலும் நாற்காலியில் அமர்ந்து இருப்பதை நாம் பார்க்கலாம். சினிமாக்களில் நாம் என்ன விஷயங்களை தவறவிடுகிறோம் என்பதை பவர் பாய்ண்ட் விஷயங்களோடு பிறருக்கு விளக்கி கொண்டிருக்கும் ஆச்சரியங்களையும் பிரை லார்சன் ஏற்படுத்துகிறார். இது பல்வேறு துறைகளிலும் பெண்கள் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் காலம். மார்வெல் படங்களில் முக்கியமான நடிகையாக அவர உருவாகி வரும் வாய்ப்பு உள்ளது. லார்சன் ஒரே நேரத்தில் ஜாலியான, கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்களிலும் பங்குகொண்டு நம்மையும் அவர்பால் கவனிக்க வைக்கிறார். டெஸா தாம்சன் டைம்

ஆபத்தான வசீகரமான கலைஞன்! ரிச்சர்ட் மேடன்

படம்
magzter ஆபத்தான கலைஞன் ரிச்சர்ட் மேடன் நாடக நடிகரான ரிச்சர்ட் தனது கலை சார்ந்த பணிகளில் தீவிரமாக இருப்பவர். தனது நடிப்பதை அவரே கடுமையாக விமர்சித்து சீர்திருத்திக்கொள்ளும் தன்மையை பிரமிப்போடு பார்க்கிறேன். சிண்ட்ரெல்லாவில், அவர் ஸ்காட்லாந்துகாரராக இருந்தாலும் ஆங்கில உச்சரிப்பில் பேசி இளவரசனாக நடித்திருந்தார். படப்பிடிப்பு முழுவதும் அனைவரிடமும் அவர் அந்த பாணியில் பேசிக்கொண்டிருந்தார். அந்த மெனக்கெடல் அசாத்தியமான ஒன்று. குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கான குணங்களை அவர் இயல்பாக வரித்துக்கொள்வது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நான் இயக்கிய ரோமியோ ஜூலியட் படத்தில் அவர் ரோமியோவாக விதிகளை கடைபிடிக்காத இளைஞனாக, பிறரை காதலிக்க வைக்கும் தன்மை கொண்ட கண்களுடன் வசீகரமாக நடித்திருந்தார். சினிமா துறையில் ரிச்சர்ட் அபாயகரமான கலைஞனாக   உருவெடுத்து வருகிறார் என்பதை நான் உறுதியோடு சொல்கிறேன். கென்னத் பிரானாக் டைம்

குறைந்த வாடிக்கையாளர்கள் மூலம் அதிக வருமானம் பெறுவோம்! - நோயல் டாடா

படம்
நோயல் டாடா டிரெண்ட், வோல்டாஸ் நிறுவனத் தலைவர் டிரெண்ட் நிறுவனத்தின் வருவாய் 85 சதவீத வருவாய், வெஸ்ட்சைட் மற்றும் பிற லேபிள்கள் மூலம்தான் கிடைக்கிறது அல்லவா? நாங்கள் எங்களுடைய நிறுவனத்தின் பிராண்டுகளை அதிகம் காட்சிபடுத்தவிருக்கிறோம். இவை பிற நிறுவனங்களின் பொருட்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். பெருந்தொற்று பாதிப்பு முடிவுற்றபிறகு நிறைய கடைகள் டிரெண்ட் மெ பெயரில் திறக்கவிருக்கிறோம். பெருந்தொற்று பாதிப்பால் விற்பனை மையங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்யவிருக்கிறீர்களா? பலவீனமான பிராண்டுகளை இனி கடைகளில் விற்கவேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பெருந்தொற்று காரணமாக நிறைய கடைகளை அடைக்க நேர்ந்துள்ளது. இந்தியாவில் இவணிக வலைத்தளங்களின் வளர்ச்சி 6 சதவீதம்தான் உள்ளது. எனவே, கோவிட் -19 க்கும்பிறகு கடைகளும், இவணிக நிறுவனங்களும் சேர்ந்து வளர வாய்ப்புள்ளது. கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக வாடிக்கையாளர்கள் செலவு செய்வது குறைந்துள்ளது பற்றி உங்களது கருத்து என்ன? இப்போது ஏற்பட்டுள்ள நிலை தற்காலிகமானதுதான். வேலையிழப்பு, எதிர்காலம் குறித்த கவலை ஆகியவை மக்களை குறைவாக செலவழிக்க வைத்துள்ளது. ந

தற்சார்புக்காக அதிக செலவுகளை செய்ய, சேமிப்புகளை கரைக்க தயாராக இருக்கிறீர்களா? - ரதின் ராய்

படம்
பிஸினஸ் ஸ்டாண்டர்டு ரதின் ராய், பொது பொருளாதாரம் மற்றும் கொள்கை அமைப்பு தலைவர் ரதின்ராய், மேற்சொன்ன அமைப்பின் தலைவராக இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் பதவியைவிட்டு விலகுகிறார். இவருடைய பதவிக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரவிருக்கிறார். பிரதமர் மோடிக்கு ஆலோசகராக இருந்த ரதின்ராயின் அடுத்த திட்டம், இந்தியா சீனாவை விட குறைந்த செலவில் பொருட்களை தயாரித்து தர முடியுமா, இந்தியாவின் முன்னுள்ள அடுத்த திட்டங்கள், வாய்ப்புகள் என்னவென்று அவரிடம் பேசினோம். நீங்கள் பதவி விலகுவதற்கும், உர்ஜித் படேல் பதவி ஏற்பதற்குமான நிகழ்ச்சிகளை தற்செயல் என்று கூறலாமா? இந்த அமைப்பின் தலைவர் விஜய் கேல்கர். அவர் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதற்கும், உர்ஜித் படேல் அந்த பதவிக்கு அறிவிக்கப்பட்டதற்கும், நான் பதவியை ராஜினாமா செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உர்ஜித் படேலை விட இப்பதவிக்கு வேறு யாரும் பொறுத்தமாக இருக்க முடியாது. உலகளவில் அவர் பிரபலமான ஆளுமை, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகிய அம்சங்கள் நம் முன் உள்ளன. அவர் பதவியேற்றபிறகு நான் பதவி விலகினால் கூட நீங்கள் அதற்குப் பின்னால் ஏதாவது கார

ஆப்ரோ அமெரிக்கர்களில் ஒருத்தி! - ரெஜினா கிங் - டைம் 2019

படம்
என்னை உணரவைத்த பெண்! ரெஜினா கிங் நான் சிறுமியாக இருந்து வளரும்போது ஆப்ரோ அமெரிக்கர்கள் நடித்த பல்வேறு தொடர்களைப் பார்த்துள்ளேன். ஆமென், 227, குட் டைம்ஸ் ஆகியவை முக்கியமானவை. அதில் 227 தொடரில் நடித்த ரெஜினா கிங், பிரெண்டா ஜென்கின்ஸ் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அமெரிக்காவில் உள்ள ஆப்ரோ அமெரிக்க இளம்பெண்ணின் தன்மைகளை அப்படியே உள்வாங்கி உருவாக்கப்பட்டிருந்தது. அவரும் பிரமாதமாக நடித்திருந்தார். அதில் என்னை நானே பார்ப்பது போல இருந்தது. அவரை குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் சந்தித்தபோது எனது குடும்பத்தில் உள்ள உறுப்பினரை சந்தித்து பேசியது போலவே இருந்தது. என்னை அப்படி உணரவைத்தார். அவர் தனது நடிப்பைக் கடந்து பிறரின் நடிப்பையும் பாராட்டி ஊக்குவிப்பவராக இருந்தார். மேலும் அவர் நடிகை என்பதைத் தாண்டி படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியிருந்தார். அவர் இயக்குநரும் கூட. வணிக உலகில் ஆப்ரோ அமெரிக்கர்களை, பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் மாற்றுவதற்கான முயற்சியில் அவர் இறங்கியிருந்தார். கூட்டுப்புழுவாக இருந்து உலகை பார்ப்பதிலிருந்து அவர் மாறி, வளர்ந்த பட்டாம்பூச்சியாக ம

இசைத்துறையில் சாதனை செய்த பாடகி! - அரியன்னா கிராண்டே - டைம் 2019

படம்
ஃபோர்ப்ஸ் குயில்பாட்டு அரியன்னா கிராண்டே நான் புயல், சூறாவளி போன்ற நிகழ்வுகளை எல்லாம் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தனையிலும் நிஜமான பாடகியாக, மனுஷியாக அரியன்னா இருந்திருக்கிறார். மனிதர்களுக்கு ஏற்படும் சோகம், விரக்தி, மகிழ்ச்சி, கோபம் என அத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் அரியன்னாவின் பாடல்களை மக்கள் கேட்கிறார்கள். ரசிக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். மக்களை மனப்பூர்வமாக நேசிக்கும் இதயம் கொண்டுள்ளதால், அவர் பாடல்களை அனைவரும் இதயம் உருக கேட்டு வருகின்றனர். அவர் இசைத்துறையில் சாதனைகள் செய்துள்ளார். ஏறத்தாழ சில வாரங்கள் இடைவெளியில் தேங்க்யூ, நெக்ஸ்ட் என்ற இரு பாடல்களை எழுதி பாடி வென்றிருக்கிறார். அவர் அடுத்து என்ன பாடலை உருவாக்குவார் என்று ஆவலோடு நான் காத்திருக்கிறேன். ட்ரோய் சிவன் டைம்