இடுகைகள்

மார்க்கெட்டிங்கில் மாஸ் மகராஜா ஆவது எப்படி? - மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி

படம்
      sample/pixabay           மார்க்கெட்டிங் பஞ்சமாபாதகங்கள் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது , அதனை விற்பனை செய்வது என இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் ஏராளமான உள்நாட்டு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்கியுள்ளார் . மார்க்கெட்டிங்கின் அடிப்படை என்ன , அதில் பிரபல நிறுவனங்களாக இருந்தாலும் செய்த தவறுகள் என்ன , அதனை திருத்திக்கொள்வது எப்படி என விளக்கியுள்ளார் . ஒருவகையில் மார்க்கெட்டிங்கை பற்றி தெரியாதவர்கள் இந்த நூலைப்படித்தால் கூட அதனை எப்படி செய்வது என அடிப்படையைக் கற்றுக்கொள்ளலாம் . பெரிதாக அவர்கள் சாதிப்பார்களோ இல்லையோ , இதில் சதீஸ் கூறியுள்ள தவறுகளை நிச்சயம் செய்யமாட்டார்கள் . அந்தளவு நூலில் ஏராளமான நம் தினசரி வாழ்க்கையில் பயன்படும் பல்வேறு பொருட்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளார் . நூலை வாசிக்க உதவுவது சதீஸ் பயன்படுத்தியுள்ள மொழிதான் . நம் தோள் மீது கைபோட்டு நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பற்றி சொல்லிக்கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு மொழியுடன் நூல் உள்ளது . பிராண்டின் செக்மெண்ட் , டார

சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த வரலஙற்றை சொல்லும் நூல்! - புதிய புத்தகம் அறிமுகம்

படம்
                      பெ ஸ்ட் ஷார்ட் ஸ்டோரிஸ் எவர் டெர்ரி ஓ பிரையன் வெஸ்ட்லேண்ட் ரூ .199 உலகம் முழுக்க புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 41 சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன . இதனை எழுத்தாளர் ஆசிரியர் டெர்ரி ஓ பிரையன் தொகுத்துள்ளார் . மொழிவளமும் , உணர்ச்சிகரமும் கொண்ட புதிய பாணி கதைகள் இதில் உள்ளன . எட்கர் ஆலன்போ எர்னஸ்ட் ஹெமிங்வே , சோமர்செட் மாகாம் , வர்ஜீனியா உல்ப் ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன . சுலை ஜான் கிரிசம் ஹாசெட் ரூ .699 17 வயது நிரம்பிய சாமுவேல் சுலைமான் தெற்கு சூடானைச் சேர்ந்தவன் . இவனுக்கு பேஸ்கட் பால் விளையாட்டில் திறமை இருக்கிறது . இவனை கவனித்த பயிற்சியாளர் அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் . அவன் அமெரிக்காவிற்கு சென்றானா , விளையாட்டில் சாதித்தானா என்பதே கதை . சிங் ஆப் லைப் பிரியா சருக்காய் வெஸ்ட்லேண்ட் ரூ .499 தாகூரின் கீதாஞ்சலி போலவே இதுவும் ஆன்மிகத்தை தேடும் முயற்சிதான் . தனக்குள் ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை உள்ளடக்கி நூல் உருவாகியுள்ளது . இந்த உலகத்தை மீண்டும் தாகூர் போல

புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலிருந்து சொட்டும் குருதி! - நொறுங்கிய குடியரசு- அருந்ததிராய்

படம்
                நொறுங்கிய குடியரசு அருந்ததிராய் தமிழில் க . பூர்ணச்சந்திரன் காலச்சுவடு பழங்குடி மக்களை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை நூலாசிரியர் ஏராளமான செய்திக்கட்டுரைகள் , நூல்கள் மற்றும் தனது நேரடியாக களத்திற்கு சென்று வந்த அனுபவம் மூலம் விளக்குகிறார் . 194 பக்கங்களை கொண்ட நூலை வாசிப்பவர்கள் யாரும் இதிலுள்ள அவல நகைச்சுவையை ரசிக்காமல் நூலை படிக்க முடியாது . படித்தவுடனே புன்னகைத்துவிட்டு அடுத்த நொடியே அதன் பொருள் உணர்ந்து வருத்தமும் படுவோம் . அந்தளவு தண்டகாரண்ய வனத்தில் நடக்கும் பல்வேறு கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பு பணி பற்றிய புள்ளிவிவரங்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார் . மன்மோகன்சிங் எப்படி மத்திய அரசில் அங்கம் வகிக்கும்படி சூழல் நேர்ந்தது , அவர் பிரதமரானவுடன் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கும் பணி வேகமெடுத்தது என பல்வேறு செய்திகளை முன்வைத்து பேசப்பட்டிருக்கிறது . அச்சமயம் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சுகளை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது என கூறப்பட்டுள்ள பகுதி முக்கியமானது . ஊடகங்கள் எப்படி அரசுக்கு ஆதரவாக பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் மாவோ

இஸ்ரேலை மிரட்டும் நிழல் கமாண்டோ தலைவர்! - மொகம்மது டெய்ப்

படம்
                  பாலஸ்தீனியர்களை காக்கும் தலைவன் ! மொகமது டெய்ப் மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய நாட்டு உச்சநீதிமன்றம் , கிழக்கு ஜெருசலேமிலுள்ள ஷேக் ஜர்ராவிலுள்ள பாலஸ்தீனிய குடு்ம்பங்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது . இஸ்ரேலிய அரசுக்கு மகிழ்ச்சி என்றாலும் உடனே அதன் எதிரிகளில ஒன்றிடமிருந்து உடனே எச்சரிக்கை வந்தது . ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவான இஷ் அட் தின் அல் க்வாசிம் படைத்தலைவர் மொகம்மது டெய்ப்தான் அந்த எச்சரிக்கையை செய்தார் . பொதுவாக பாலஸ்தீனியர்கள் மொகம்மதை வெளியிடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள் , மேலும் இதுபோல வெளிப்படையாக எச்சரிக்கையையும் அவர் செய்த்து . இல்லை . பாலஸ்தீனியர்களை வெளியேற்றினால் இஸ்ரேல் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என மொகம்மது தனது எச்சரிக்கை செய்தியில் கூறியிருந்தார் . . பாலஸ்தீன மக்களே பல்லாண்டுகளாக பார்க்காத நிழல் தலைவர்தான் மொக்ம்மது . அவரின் செய்தி வெளியானவுடன் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் ஷேக் ஜர்ராவில் புரட்சி போராட்டத்தைத் தொடங்கினர் . மே 10 அன்று அங்கு வந்த இஸ்ரேலிய ராணுவம் அல் அக்சா மசூதியை முற்றுகையிட

கல்வி, தொழில், ஊடகம் ஆகிய துறைகளில் சாதித்த பெண்கள்! - திவ்யா, மானசி டாடா, மசபா குப்தா, பிரஜக்தா கோலி

படம்
              ஆர்த்தி கில் துணை நிறுவனர் , ஆஸிவியா பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனல் குறைபாடுகளை போக்குவதற்கான பொருட்களை தயாரித்து வருகிறார் . நடப்பு ஆண்டில் தனது நிறுவன வருமானத்தை 200 கோடியாக உயர்த்த உழைத்து வருகிறார் . உலகில் பலருக்கும் ஆசை இருக்கலாம் . ஆனால் அதனை தொடர்ந்து செல்வதற்கான உழைப்பு இருக்காது . ஆர்த்தி இதற்கு விதிவிலக்கான ஆள் . இவர் எம்பிஏ முடித்துவிட்டு ஃபிட்சர்க்கிள் என்ற ஆப்பைத் தொடங்கினார் . இதில் ஊட்டச்சத்துகளுக்கான பல்வேறு செய்திகளை வழங்கத் தொடஙகினார் . இவருடன் மிஹிர் கடானியும் இணைந்தார் . 2014 இல் இந்த நிறுவனத்தை இருவரும் தொடங்கினர் . என்னதான் ஆப்பில் உடல்நலத்திற்கான ஆலோசனைகளை வழங்கினாலும் கூட பிற நிறுவனங்களின் பொருட்களை பயனர்கள் வாங்க வேண்டியிருந்தது . இதில் பல்வேறு செயற்கைப் பொருட்கள் இருந்தன . எனவே , நாமே ஆரோக்கியமான பொருட்களை தயாரித்து விற்கலாமே என ஆர்த்தி முடிவெடுத்தார் . எனவே இருபது லட்சம் கடன் வாங்கி முதலில் புரத உணவு , ஆரோக்கிய பானம் ஒன்றைத் தயாரித்தனர் . இப்போது இந்த வரிசையில் பதினைந்து பொருட்கள் உள்ளன . இந்த குழந்தைகள் முதல் பெர

பழக்க வழக்கங்களை நல்லது, கெட்டது என பிரிப்பது எப்படி?

படம்
              பழக்க வழக்கங்களில் நல்லது எது கெட்டது எது ? பழக்கவழங்கங்களை ஆராய்வது என்பது உயிரியலில் முக்கியமானது . ஒரு பழக்கத்தை ஒருவர் கற்றுக்கொள்ள முக்கியமானது , அதற்கு கிடைக்கும் பரிசுதான் . இந்த பரிசு கிடைப்பது உறுதியானால் மூளை அதற்கு பழகி விடும் . எனவே , பரிசு பற்றி யோசிக்கும் நேரம் அதற்கு மிச்சமாகும் . காலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு அதற்காக உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு அளித்துக்கொள்கிறீர்கள் என்றால் , அதற்கேற்ப மூளை அந்த பழக்கத்தை தொடர்ச்சியாக செய்யச் சொல்லும் . காய்கறிகளை உணவில் சேர்த்து சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடித்தமானது கிடையாது . இந்த செயல்பா்டை சுவாரசியமாக்குவதற்கு அவசியமில்லை . சிறுவயதில் இதனை சாப்பிடக் கொடுத்துவிட்டால் எப்படி சாப்பிடுவீர்களோ பிடித்திருந்தால் சாப்பிடு , இல்லையெனில் கடித்து விழுங்க வேண்டியதுதான் . சமூக வலைத்தளங்களை எப்போதும் சோதிக்கும் விஷயம் , மோசமான பழக்கவழக்கங்களில் சேரும் . நண்பர்களுடன் பிரைடு சிக்கனை பக்கெட்டாக வாங்கி , நீங்கள் மட்டுமே அதிக பீஸ்களை லபக்குவது எல்லாம் மோசமான பழக்கத்தில் சேர்த்திதான் . இதனை தொடங்கிவிட்டா

வம்ச பெருமையைக் காப்பாற்ற தன்னையே தியாகம் செய்யும் அப்பாவியின் கதை! - ஷனாரா குரோனிக்கிள் 1&2

படம்
                ஷனாரா குரோனிக்கிள் அமெரிக்க வெப் தொடர் 20 எபிசோடுகள் ஆக்லாந்து , நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளது . எம்எக்ஸ் பிளேயர் எல்வின் என்ற நாட்டு மக்களுக்கு தெய்வமாக ஒரு மரம் இருக்கிறது . அந்த மரம்தான் அங்குள்ள நான்கு நாட்டு மக்களையும் காப்பாற்றி வருகிறது . எல்கிரிஸ் என்ற மரத்தை காப்பாற்ற ஏழுபேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இந்த பட்டியலில் இளவரசியும் கூட தேர்வாகிறார் . உண்மையில் அந்த மரம்தான் மக்களை காக்கிறதா ? கருப்பு மந்திரத்தை பயன்படுத்தும் சாத்தான்களை அந்த மரம் இலையாக தன்னுடன் கட்டி வைத்திருக்கிறது என்று கூறப்படும் கதை உண்மையா என்பதை தொடர் விரிவாக பேசுகிறது . இதனுடன் கிளைக்கதையாக பில் என்பவனின் அம்மா , மரணப்படுக்கையில் இருந்து இறந்துபோகிறார் . அப்பாவின் சொத்தாக அவனுக்கு எல்ஸ் ஸ்டோன் எனு்ம் நீலநிற கற்கள் கிடைக்கின்றன . அதைப் பெற்று வேறிடம் நோக்கி சென்று வாழலாம் என நினைக்கிறான் பில் . அப்போது அவனது முயற்சியை அவனது மாமா பிலிப் தடுக்கிறார் . வெளியுலகம் நேர்மையானது அல்ல என்று எச்சரிக்கிறார் . அவனது அப்பாவை எல்லோருமே பழித்து பேசுகிறார்கள