இடுகைகள்

முரடன், சாமுராய், துறுதுறு பெண் என மூன்று பேரும் இணைந்து சாமுராயைத் தேடிச்செல்லும் பயணம்! - சாமுராய் சம்புலு - அனிமேஷன்

படம்
                  சாமுராய் சம்புலு அனிமேஷன் தொடர் இருபத்தி ஆறு எபிசோடுகள் குருவைக் கொன்றுவிட்டு சுற்றும் சாமுராய் வீரனும் , ரைகு தீவில் வளர்ந்த குற்றவாளி ஒருவனும் நண்பர்களாகி , இளம்பெண் ஒருவளுக்கு அவளது தந்தையைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள் . தொடரின் டைட்டிலிலேயே ஜின் என்ற சாமுராய் வீரன் எப்படி , முகன் என்பவன் எப்படி , இவர்களை தனது பாதுகாவலர்களாக கொண்டு தந்தையைத் தேடும் ஃபு என்ற பெண்ணின் குணம் எப்படி என சொல்லிவிடுகிறார்கள் . இருபத்தி ஆறு அத்தியாயங்களில் சிறுகதை போல ஒரு கதையைச் சொல்லுகிறார்கள் . இவற்றில் ஜின் , முகன் என இருவருமே தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொண்டு சண்டைபோடுகிறார்கள் , நகைச்சுவை செய்கிறார்கள் , காதலிக்கிறார்கள் , தங்களை நிழல் போலத் தொடரும் இறந்தகாலத்தை நினைத்து வருந்துகிறார்கள் , புதிய விஷயங்களைக் கற்கிறார்கள் . இரண்டு ஆண்கள் , ஒரு பெண் என்றால் முக்கோண காதல் இருக்குமே என்றால் அதில்தான் வேறுபாடு காட்டுகிறார்கள் . முகன் , காசு கொடுத்தால் எதையும் செய்யும் முரடன் . அதிகம் யோசித்து செயல்படுவது இவனுக்கு சரிவராது . கோபம் வந்தால் உடனே

இமயமலையிலுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளக்கப்பட்ட வரலாறு!

படம்
              புத்தகம் புதுசு ! ஸ்பேஸ் லைப் மேட்டர் ஹரி புலக்கட் ஹாசெட் 699 குறைந்த ஆதாரங்களைக் கொண்ட நாட்டில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி ? இந்தியா எந்த அடிப்படையும் இல்லாத இடத்தில் இருந்துதான் வானியல் ஆய்வுகளை நடத்தத் தொடங்கியது . இதன்விளைவாக கோலார் தங்க வயலில் காஸ்மிக் கதிர் சோதனை , ஊட்டியில் தொலைநோக்கி அமைத்தது , இப்படி இந்தியாவில் ஆய்வுகளை சிறப்பாக நடத்தி , வலிமையான அறிவியல் நிறுவனங்கள் எப்படி அமைக்கப்பட்டன என்பதை இந்த நூல் விளக்குகிறது தி ஹன்ட் பார் மவுன்ட் எவரெஸ்ட் கிரேக் ஸ்ட்ரோர்டி ஹாசெட் 699 இமயமலையிலுள்ள சிகரத்தை எப்படி அளவிடுகிறார்கள் , இதில் நேபாளம் , திபெத் ஆகிய நாடுகளின் பங்கு , பிரிட்டிஷ் காலத்தில் அங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் அதனை எப்படி அளவிட்டனர் என்பது பற்றிய ஏராளமான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது . எ டேஸ்ட் ஆப் டைம் மோகனா காஞ்சிலால் 899 ஸ்பீக்கிங் டைகர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தலைநகராக இருந்த நகரம் . இந்த நகரில் ஏராளமான கலாசார பன்மைத்துவம் கொண்ட குழுக

கிளப் ஹவுஸ் வரவால் அதிகரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்கள்! - கட்டுப்பாடுகள் கூடுகிறதா? குறைகிறதா?

படம்
              கிளப் ஹவுஸ் என்பது வெறும் கேன்வாஸ்தான் . இதில் பயனர்கள் இல்லையென்றால் அதன் பயன் ஒன்றுமே இல்லை என்று அதன் துணை நிறுவனர் பால் டேவிட்சன் கூறினார் . கடந்த ஆண்டு மார்ச்சில் ஆப்பிள் ஐஓஎஸ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளப்ஹவுஸ் பின்னர் ஆண்ட்ராய்டிலும் வெளியானது . கடந்த மேயில் அறிமுகமாகி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது . உலகம் முழுக்க இருபத்தைந்து மில்லியன் பேர் இந்த ஆப்பில் இணைந்துள்ளனர் . இந்த ஆப்பில் ஒருவர் இணைந்து தனக்கென ஒரு அறையை உருவாக்கிக்கொண்டு என்ன வேண்டுமோ அதனைப் பேசலாம் . பிறர் பேசும் விஷயங்களை பின்பற்றலாம் . அரசியல் , சினிமா , செக்ஸ் , ஆன்மிகம் என எதையும் இங்கே பேசலாம் . பல்வேறு துறை ஆட்களும் இங்கே குழுமி தங்களது துறை சார்ந்த விஷயங்களை பகிரலாம் . பத்திரிகையாளர்கள் இதிலுள்ள அறைகளைப் பயன்படுத்தி செய்திகளைக் கூட திரட்ட முடியும் . கிளப் ஹவுஸ் மட்டுமே ஆடியோரூம் வசதியைக் கொண்டிருக்கவில்லை . வேறு நிறுவனங்களும் இதேபோல வசதியை தங்களது சேவையில் கொண்டு வரவிருக்கின்றன . பேஸ்புக்கில் லைவ் ஆடியோ ரூம் வசதி வரவிருக்கிறது . ட்விட்டரில் ஸ்பேசஸ் எனும் வசதி உள்ளது .

நகைகளை குறிவைத்து திருடும் ஓநாய்க்கூட்டத்தைப் பிடிக்கும் ஸகூபிடூ குழு! - பிக் டாப் ஸ்கூபிடூ அனிமேஷன்

படம்
              பிக் டாப் ஸ்கூபி டூ அனிமேஷன் ஹன்னா பார்பரா , வார்னர் பிரதர்ஸ் நகரில் ஓநாய் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை திருடிச்செல்கிறது . இதனை யார் செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை . அப்போது அங்கு வெல்மாவின் துப்பறியும் குழு வருகிறது . எப்படி மர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் அனிமேஷன் படத்தின் கதை . சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து சேரும் குழுவினர் , அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும்போது அங்குதான் ஓநாய் பல்வேறு நகைக்கடைகளை உடைத்து நகைகளை அள்ளிச்சென்று வருவதைக் கண்டுபிடிக்கின்றனர் . இப்படி நகைகளை திருடுவதும் குறிப்பிட்ட பேட்டர்னில் நடைபெறுகிறது . இப்படி நடைபெறும் திருட்டுகளை காவல்துறை பிடிக்கமுடியாமல் திணறுகிறது . இந்த வகையில் இன்னும் ஒரு நகை மட்டுமே திருட வேண்டியிருக்கிறது . வெல்மா , பிரெட் , டெப்னி , சேகி , ஸ்கூபி ஆகியோர் சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர் . இதனால் அவர்களே அங்கு சர்க்கஸை நடத்தவேண்டியதாகிறது . ஆளுக்கொரு வேலையை ஏற்றுக்கொள்கின்றனர் . இதில் வெல்மா தவிர பிறர் அனைவருமே சோபித்து ப

பெண்ணியம் காக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்! - பெண்களுக்காக ஆலோசனை தரும் உயிரா தமி்ழ் குழு

படம்
                பெண்களுக்காக கொடி பிடிக்கும் ஆண் ! இன்ஸ்டாகிராமில் உயிரா தமிழ் எனும் பக்கத்தை திறந்தால் முழுக்க பெண்களுக்கு ஆதரவான வாசகங்கள் தென்படுகின்றன . கெட்டப்பெண் என்று எப்படி பெண்களை வரையறை செய்கிறார்கள் என்பது முதல் இணையத்தில் பெண்களுக்கு லைக் போட்டு காதலிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் கோளாறுகள் வரை புட்டு வைக்கிறார் மனிதர் . யார் இவர் ? குடிமைத் தேர்வுகளுக்காக படித்து வருபவர் , பெண்களுக்கான உரிமைகள் , சிக்கல்கள் , சமூகம் எப்படி அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பதை எளிதாக சிறு வாக்கியங்களில் பேசி வருகிறார் . நான் ஒரு ஆண் . பெண்ணியத்திற்கு வரையறை சொல்லுவதற்காக இதனை செய்யவில்லை . நான் இந்த செயல்பாட்டில் எனது அறியாமையைத்தான் முன் வைக்கிறேன் . அதில்தான் கற்றும் கொள்கிறேன் என்று பேகிறார் ஜீவ சரவணன் . விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்தவர் சென்னைக்கு குடியேறி இப்போது சி்ந்தனையிலும் மாற்றத்தை உருவாக்கிவருகிறார் . இவரது பக்கத்தைப் பார்த்து பல பெண்கள் தங்களது வாழ்க்கை சிக்கல்களுக்கும் தீர்வு தேடி வருகின்றனர் . இப்படி பலரும் இணைந்து ஒரு குழுவே உருவாகியிருக்கிறது . இதனை

ஒரு நாட்டில் எதற்கு இருவிதமான விதிகளை மத்திய அரசு கடைபிடிக்கிறது? - ஓமர் அப்துல்லா

படம்
                  ஓமர் அப்துல்லா அரசியல் கட்சி தலைவர் காஷ்மீரில் அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் மத்திய அரசை எதிர்க்கும் ஓமர் அப்துல்லாவும் இடம்பெற்றார் . இதுபற்றி அ வரிடம் பேசினோம் . உங்களையும் , உங்களது அப்பாவையும் சிறையில் அடைத்தது இதே அரசு . இப்போது அவர் நடத்தும் கூட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள் ? மத்திய அரசுதான் எங்களை சிறையில் அடைத்தது . இப்போது அவர்களேதான் எங்களை வரவேற்பு பேசுகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் . அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியிருக்கிறார் . இதயத்திலிருந்து தொலைவாக , டெல்லியிலிருந்து தொலைவாக என்று அவர் கூறினார் . இதற்கு என்ன அர்த்தம் ? இப்படி நம்பிக்கை குறைந்துபோக என்ன காரணம் என்று அவர்தான் கூறவேண்டும் இந்த சந்திப்பில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா ? இது தொடக்கம்தான் . ஒரு கலந்துரையாடல் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைக்க முடியாது . பெரிய செயல்முறையின் சிறிய பகுதிதான் இது . 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம

தனது தொழிற்சாலை சகாக்களுக்கு காபியில் விஷம் கலந்த சைக்கோ கொலைகாரர் - கிரகாம் யங்

படம்
                கோடரிக் கொலைகள் ! பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அமெரிக்கர்கள் , பண்ணை வீட்டில் வசித்தனர் . அவர்கள் அங்கு கத்தி , கோடரி , கடப்பாரை என பல்வேறு கருவிகளை வைத்துக்கொண்டு வேலைகளை செய்துகொண்டிருந்தனர் . இதனால் அங்கு நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களிலும் கோடரி , கத்தி ஆகியவை முக்கியமான கொலை பொருட்களாக இருந்தன . இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ? இப்போதும் கூட கோபம் வரும்போது கையில் கிடைப்பதை எடுத்து பிறரை அடிப்பவர்கள் இருக்கிறார்கள்தானே ? 1836 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ராபின்சன் என்ற செல்வச் செழிப்பான குடும்பத்தில் வளர்ந்தவர் , கொலையாளியாக மாறினார் . அப்போது நியூயார்க்கில் புகழ்பெற்றிருந்த விலைமாது ஹெலன் என்பவரை கோடரி மூலம் மண்டையை பிளந்து கொன்றார் . இதனால்தான் ரிச்சர்ட் அந்த நகரில் பிரபலமானார் . முதல் உலகப்போர் காலகட்டத்தில் பெல்லா குன்னஸ் என்ற பெண்மணி , ஒரு டஜன்பேர்களுக்கு மேல் கோடரியால் வெட்டி கொன்றார் . அப்படிதான் இந்த கொலைகள் வெளியானபோது ஊடகங்கள் பேசிக்கொண்டன . 1940 களில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜாக் பேர்ட் என்பவர் , கோடரியால் ஏராளமான வெள்