இடுகைகள்

மாணவர்களுக்கு சொந்தக்காசில் சீருடை வாங்கித்தரும் அப்பா ஆசிரியர்! - மாணவர்களின் ஞானத்தந்தை

படம்
பள்ளிக்கு செல்ல பயப்படும் மாணவர்களே இங்கு அதிகம். அடிப்பார்கள், படிக்க சொல்லுவார்கள் என நிறைய காரணங்களை மாணவர்கள் சொல்லுவார்கள். ஆசிரியரை அப்பா என்று பாசமாக அழைக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தன் அரசுப்பள்ளியில் உள்ள கணித ஆசிரியர்தான் அப்படி அழைக்கப்படுகிறார். சி அப்பாவு என்ற இயற்பெயரைக் கொண்டவர், மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும்போது பள்ளியில் விருந்து சாப்பாடு போடுவதோடு, ஒன்பது முதல் 12 வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி சீருடையை இலவசமாக தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுக்கிறார். கூடவே அரசு விழாக்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு இனிப்புகளையும் தனது பணத்தில் வழங்குகிறார்.  இந்த ஆண்டு 300 மாணவர்களுக்கு பள்ளி சீருடைக்காக மட்டுமே ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவழித்துள்ளார். எதற்கு இப்படி செய்கிறார்? இவரது வாழ்க்கைதான் காரணம். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர், அப்பாவு. தனியாக இருந்து தனிமையை தேற்றிக்கொண்டு படித்து ஆசிரியராகியிருக்கிறார். பிறகுதான் பள்ளி மாணவர்கள் பலர் சரியான உடைகளின்றி பள்ளிக்கு வருவது தெரியவந்திருக்கிறது. ஒன்றாம் வகுப்ப

சிகரெட் அட்டைப் பெட்டிகளில் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு- அருப்புக்கோட்டை மாணவியின் புதிய ஐடியா

படம்
  மது எப்படி ஒருவரை குடிநோயாளி ஆக்குகிறதோ, அதேபோல்தான் புகைப்பிடித்தலும். சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் சிகரெட்டுகளை ஊதி தள்ளிக்கொண்டிருப்பார்கள். வெறுமையைப் போக்க என காரணம் சொல்லுவார்கள். இதனை கைவிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது அவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நல்லது.  அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவி அஸ்மா அஹமது, புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு முயற்சிகளை செய்து வருகிறார். இதற்கு தன்னார்வ நிறுவனமான வில் அவார்ட்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கியுள்ளது. அப்படி என்ன விஷயம் செய்தார்?  மூன்று ஆண்டுகளாக ஆயிரம் சிகரெட் அட்டைகளை பொறுக்கி எடுத்து அதன் பின்பக்கத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிரான வாசகங்களை எழுதி அதனை கண்காட்சியாக்கியிருக்கிறார். அட்டைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகங்களை எழுதியிருக்கிறார். ராமனாதபுரத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தின் மூலம் ஆறாவதிலிருந்து அஸ்மா செய்யும் விழிப்புணர்வு முயற்சிகள் வெளித்தெரிந்துள்ளன. இவரது புகைப்பிடித்தலுக்கு எதிரான கண்காட்சியை அவரது பள்ளியில் உள்ள 1500 மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் அத்தனை குடும்பங்களி

அரசியல்வாதிகள் எழுதிய நூல்கள்! - காந்தி முதல் சல்மான் குர்ஷித் வரை....

படம்
  சீதாராம் யெச்சூரி தி ஸ்டோரி ஆப் மை எக்ஸ்பரிமென்ட்ஸ் வித் ட்ரூத் 1927 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஓம் புக்ஸ் 295 சத்திய சோதனை என்றாலே எழுதியது யார் என தொடக்கப்பள்ளி மாணவர் கூட சொல்ல முடியும். தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றியது முதல் இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போராட்டத்தில் இணைவது வரையிலான பயணம்தான் நூலின் பேசுபொருள். தனது வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படையாக பேசிய அரசியல்வாதி, போராளி காந்தி மட்டும்தான். இதனால் இன்றுவரையும் இவரை வலதுசாரி மதவாத கும்பல்கள் என்ன முயன்றும் புறக்கணிக்கவே முடியவில்லை.  மை ட்ரூத் 1980 இந்திரா காந்தி விஷன் புக்ஸ் 195 சிறுவயதிலிருந்து இந்திராகாந்தியின் வாழ்க்கையைப் பேசுகிற நூல் இது. கூடவே அரசியலில் உயர்வு, இறக்கம் என சொந்த வாழ்க்கையைப் பேசுவதோடு இந்தியாவின் வரலாற்றையும் உள்ளடக்கிய முக்கியமான நுல்.  ட்வென்டி ஒன் போயம்ஸ் 2001 வாஜ்பாய் பெங்குவின்  299 எண்பத்து எட்டு பக்கங்களை கொண்ட நூல்தான். வன்முறை, அதிகாரம், பாகுபாடு ஆகியவற்றைப் பற்றி பேசுகிற கவிதைகளைக் கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை பற்றிய பேச்சுகளையும் கொண்டுள்ள நூல் இது.  கபிதா பிதான் 2020 மம்தா பா

பரிணாமவளர்ச்சி பெறும் ஜோம்பிகளை போட்டுத்தள்ளும் வேட்டைக்குழு! - ஜோம்பிலேண்ட் - டபுள் டேப்

படம்
  #ஜோம்பிலேண்ட் - டபுள் டேப் ஜோம்பிலேண்ட்  டபுள் டேப் கொலம்பியா பிக்சர்ஸ் - சோனி முழு அமெரிக்காவுமே ஜோம்பிகளால் அழிந்துபோகிறது. மிஞ்சிய சிலரில் டெலிகாஸி, மேடிசன், கொலம்பஸ், விசிட்டா, லிட்டில் ராக் என மிகச்சிலரே மிஞ்சுகிறார்கள். இவர்களுக்குள் வரும் ஈகோ, காதல் தகராறுகளும் இன்ன பிற ஜோம்பிகளின் வம்பு தும்புகளும்தான் கதை.  அமெரிக்கா முழுக்கவே புல் பூண்டுகள் முளைத்து நாசமாகி கிடக்கிறது. அங்கு பெருசு டெலிகாசியுடன் இளைஞன் கொலம்பஸ், அவனது பெண் தோழி விசிட்டா, அவளது தங்கை லிட்டில் ராக் ஆகியோர்  மட்டுமே இருக்கிறார்கள். இவர்களும் முதல் காட்சியில் ஒரு டஜன் ஜோம்பிகளை தலையில் சுட்டுக் கொல்கிறார்கள். இதனை  இயக்குநர் கவித்துவமாக ஸ்லோமோஷனில் படமாக்கியிருக்கிறார். ரத்தம் பார்த்தாலே பதறும், மண்டை உடைந்தாலே வாய் அலறும் என்பவர்கள் படத்தைப் பார்க்காமல் இருப்பதே நல்லது.  படம் ரத்தம் தவிர, முறுக்கேறும் உடல் கொண்ட எல்விஸ் ப்ரெஸ்லி பார் பெண், ஃப்ரீசரில் இருந்த மேடிசன் 18 பிளஸ் காட்சிகள் உண்டு என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமான படம்தான் இது. இதை மனதில் வைத்துக்கொண்டு பாருங்கள். தமிழ் டப்பிங்கில் நம் ஆட்கள் அசத்

மனதிலுள்ள வெறுமையை கடந்து வருவது கடினமாக இருந்தது! - சூஜித் சிர்கார், இந்திப்பட இயக்குநர்

படம்
  சூஜித் சர்க்கார்  சூஜித் சர்க்கார்  இந்தி திரைப்பட இயக்குநர்.  இருபது ஆண்டுகளாக மனதில் நினைத்து வைத்திருந்த படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டார். படத்தின் பெயர் சர்தார் உத்தம் சிங். சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் விமர்சனங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது சர்க்கார் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசி தெரிந்துகொள்வோம்.  படம் நிறைவடைந்த பிறகு உங்கள் மனநிலை எப்படி இருந்தது? இருபது ஆண்டுகளாக இந்த படத்தை உருவாக்க வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அதனை உருவாக்கியபிறகு மனதில் வெறுமையாக இருக்கிறது. படத்தை உருவாக்குவது பட்ஜெட் என்றளவில் அல்லாமல் அதன் கதையே பிரமாண்டமானது. அதனால் இதனை செய்வது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தயாரிப்பாளர் ரோனியிடம் எப்போதும் என்னுடைய பட ஐடியாக்களை பற்றி பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் இந்த படம் முடிந்தபிறகு எதையும் பேச முடியவில்லை.  எப்படி வெறுமையைக் கடந்து வந்தீர்கள்? நீங்கள் எப்போதும் உங்களை கவனித்து வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்த வெறுமை என்பது மிக முக்கியமான இடம். இதில்தான் பல்வேறு மக்களும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.  இந்த நேரத்தில்

குறுகிய தேசியவாத நோக்கில் கலை வரலாற்றைப் பார்க்க கூடாது! - பிரதாம் ஆதித்யபால், எழுத்தாளர்

படம்
  பிரதாப் ஆதித்ய பால் பிரதாப் ஆதித்ய பால் கல்வியாளர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பிஹெச்டி படித்தவர். 1967ஆம் ஆண்டு போஸ்டனில் உள்ள கலை அருங்காட்சியகத்தை நிர்வகிக்குமாறு பணிக்கப்பட்டார். சிகாகோவில் உள்ள கலை கழகத்திற்கு வருகை தரும் ஆசிரியராக 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் கலை தொடர்பானவைதான்.  2009ஆம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருதுகொடுத்து கௌரவித்தது.  கலை வரலாறு பற்றிய படிப்பில் ஏன் இந்தியா பின்தங்கியுள்ளது? இந்தியாவில் கலை வரலாறு பற்றி படிப்பது பொருளாதார ரீதியாக பயன் கொடுக்குமாறு இல்லை. வசீகரமானதாகவும், பொருளாதார ரீதியாகவும் கலை வரலாறு சிறப்பாக இருந்திருக்குமானால், அசல் எது, போலி எது என அறிந்து சொல்லக்கூட கலை வல்லுநர்கள் யாரேனும் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி யாரும் உருவாகவில்லை. கலை தொடர்பாக பட்டம் பெற்றிருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் கூட கலை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் திறமை பெற்றவராக சாதித்துவிட முடியாது. இந்தியா மட்டுமல்ல. இங்கு நிறைய வேறுபாடுகள் கொண்ட கலைத்தன்மை வடிவங்கள் இருப்ப

ஆட்டிச குறைபாடு கொண்ட மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணராகும் கதை! - எ மிராக்கிள் - துருக்கி டிவி தொடர்

படம்
மிராக்கிள் டாக்டர் - துருக்கி தொடர் குட் டாக்டர் - கொரிய மூல தொடர் எ மிராக்கிள்  துருக்கி டிவி தொடர் மூலம் குட் டாக்டர் - தென்கொரிய டிவி தொடர் எம்எக்ஸ் பிளேயர் தென்கொரிய தொடரை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் பார்க்க நன்றாக இருந்தாலும் எம்எக்ஸ் பிளேயரில் விளம்பரங்கள் இப்போது அதிகம் என்பதால் செலவிடும் நேரம் அதிகமாகலாம்.  அலி வெபா என்ற ஆட்டிச குறைபாடு கொண்டவர் எப்படி துருக்கியின் பெரும் மருத்துவமனையில் தனது கனவான அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற இடத்தை அடைந்தார் என்பதுதான் மையக்கதை.  இதைச்சுற்றி ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. அவையும் தொடரை 197 எபிசோடுகள் வரை பார்க்க நமக்கு உதவுகின்றன. ஆட்டிச பாதிப்பு கொண்ட மருத்துவர் என்பதால் அவரே முழுக்க புனிதமாகவும் பிறரை குற்றவாளிகளாகவும் காட்டும்  முறையை இயக்குநர் பின்பற்றவில்லை. ஆட்டிச மருத்துவர் என்றாலும் அவரும் உணர்ச்சி வசப்பட்டு சிலதவறுகள் செய்பவர்களாகவும், அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் குழுவினர் அவரை சிறந்தவர்களாக்க முயல்வதும் தொடரில் பார்க்க முடிகிறது.  யாரும் முழுக்க நல்லவர்களுமில்லை. முழுக்க கெட்டவர்களுமில்லை என்பதை அலி வெ