இடுகைகள்

உங்கள் கதையிலும் நான்தான் ஹீரோ - ஹிஸ்டிரியானிக், நார்ச்சிஸ்ட் பிறழ்வு மனிதர்கள்

படம்
  கல்யாண வீடு என்றால் கல்யாண மாப்பிள்ளை, சாவு வீடு என்றால் பிணம். உங்களுக்கு என்ன புரிகிறது? கல்யாண வீட்டில் பெரும்பாலும் விருந்தினர்கள் மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இழவு வீடுகளில் இறந்தவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அடிப்படை கான்செப்ட் என்ன? நிகழ்ச்சியின் நாயகன் மாப்பிள்ளை, இன்னொன்றில் இறந்துபோனவரின் உடல்.  இப்படித்தான் ஹிஸ்டிரியானிக், நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸார்டர் பாதிப்பு உள்ள நோயாளிகள் நடந்துகொள்வார்கள். பள்ளி, கல்லூரி, கிளப், விடுதி, உணவகம் என எங்குமே தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் நண்பர்களுக்கு ஒரே வேலை, நாயகனுக்கு லாலலா.. பாடுவதுதான். இல்லையென்றால் அவர்களுடன் எளிதாக நட்பை துண்டித்துக்கொள்வார்கள்.  சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் மேற்சொன்ன குறைபாடு உள்ளவர்களுக்கு பிடிக்காது. அனைத்திலும் புதிய கதைகளை சொல்லி, சில உணர்ச்சிகரமான தன்மையை ஏற்படுத்தி தன்னை அனைவரும் கவனிக்கவேண்டுமென நினைப்பார்கள். இதனால், பிறரை எளிதாக கவனிக்க வைப்பார்கள். செல்வாக்கானவர்கள் தங்களது நண்பர்கள் என காட்டிக்கொள்வார்கள். அப்படி கவனம் கிடைக்காதபோது தற்க

இரண்டு குறைபாடுகளுக்கும் இடையில் -- பார்டர்லைன் டிஸார்டர்

படம்
  நியூரோசிஸ், சைகோசிஸ் ஆகிய குறைபாடுகளுக்கும் இடையில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில்தான் பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் என பெயர் உருவானது.  இக்குறைபாட்டை உளவியல் ஆய்வாளர் சிக்மன்ட் பிராய்ட், நியூரோட்டிக் என குறிப்பிட்டார். மேலும் இதனை அந்தளவு ஆபத்தான குறைபாடாக அவர் கருதவில்லை.  பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் நோயாளிகளுக்கு, தங்களுக்கு நெருங்கியவர்கள் தன்னை விட்டுவிட்டு போய்விடுவார்கள் என்ற பயம் எப்போதும் இருக்கும். எனவே பயத்திலும், தவிப்பிலும், மன அழுத்தத்திலும் இருப்பார்கள். நண்பர்கள், தோழி, மனைவி என யாராவது வரச்சொல்லிவிட்டு காலதாமதம் செய்தாலோ அல்லது இன்னொருநாள் வருகிறேன் என்று சொன்னாலோ அதை இவர்க ளால் தாங்கிக்கொள்ள முடியாது.  தங்களை காயப்படுத்திக்கொள்வார்கள், தற்கொலை செய்துகொள்ள முயல்வார்கள். பொறுத்துக்கொள்வது என்பதே இவர்களுக்கு தெரியாத ஒரு வார்த்தை.  கஃபேயில் நண்பர்களின் நண்பர்கள் என அறிமுகமாகும் ஆட்களிடம் கூட பழகுவார்கள். சில மணி நேரத்திலேயே தனது அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்வார்கள். எதிரிலுள்ளவர் அட்டா என்னை இன்ஸ்டன்டாக நண்பராக ஏற்றுவிட்டாரே என மனம் குழைந்தால், விரைவில் அவர்

வறுமையும், பெற்றோர்களின் அன்பும் அக்கறையும் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடு

படம்
  சாலையில் செல்லும் வாகனங்களில் சிலர் உர்ரென உருமிக்கொண்டு வேகமாக சென்று அடுத்த சிக்னல்களில் நிற்பார்கள். பச்சை விளக்கு, சிவப்பு விளக்கு ஆகியவற்றை சீரியல் பல்புகளாக நினைத்து ஆக்சிலேட்டரை முறுக்கிப் பாய்வார்கள். யாரையாவது விபத்துக்குள்ளாக்கி கையில் கட்டு போட்டாலும் பெற்றோர் பைக் எடுக்க விடமாட்டேன் என்கிறார்கள் என நண்பர்களிடம் புலம்புவார்கள்.  சென்னையில் காமராஜர் சாலையில் தங்களது பைக் ஓட்டும் திறமையைக் காட்டுபவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள். வேகம் மட்டும்தான் இவர்களின் கண்களுக்குத் தெரியும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாத சம்பளக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு குடும்பம் இருக்கும் என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். அடிக்கடி காவல்துறையில் சிக்கி அபராதம் கட்டுவார்கள். எப்போதும் போல கவாஸாகி நின்ஜா போல மைலேஜ் ஹீரோ பைக்கை வடிவமைத்து சிக்னலில் முந்திச்செல்வார்கள்.  இப்படிப்பட்ட எல்லை மீறும் மனிதர்களை ஊடகங்கள், டெய்லி புஷ்பம், பூந்தி போன்ற பத்திரிகைகள் சமூக விரோதி என அழைத்தாலும் சைக்கோ பாத் என அழைத்தாலும் மருத்துவத்துறைப்படி இவர்களை ஆன்டி சோஷியல் டிஸார்டர் பாதிப்பு கொண்டவர்கள் எனலாம். இப

ஸிஸோடைபல் டிஸார்டருக்கான மருந்துகள் - மருத்துவத்துறையில் ஏற்பட்ட புரட்சி

படம்
  இக்குறைபாடு கொண்ட மனிதர்கள் ஒருவர் பேசும்போது அவர்களைப் பார்க்க மாட்டார்கள். வேறு எங்காவது பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதிகம் பேர்கூடும் மது விருந்து, அலுவலக சந்திப்பு என்பதெல்லாம் இவர்களுக்கு ஒவ்வாமைதான். பெரும் பதற்றமாக, தவிப்புடன் அமர்ந்திருப்பார்கள். உடைகளையும் சரியானதாக போட மாட்டார்கள். கறைபடிந்தவற்றை அணிந்துகொண்டிருப்பார்கள். புதியவர்களுடன் பேசுவது, சந்திப்பது என்பதை அறவே தவிர்ப்பார்கள். இவர்களது பெயரை யாரேனும் சொன்னால் கூட பதற்றமாவார்கள். பிறர் தனது பெயரைச் சொல்லி சிரிக்கிறார்கள் என கற்பனை செய்துகொள்வார்கள். உலகளவில் இந்த குறைபாடு மூன்று சதவீத பேர்களைப் பாதிக்கிறது.  ஆன்டிசைகோட்டிக் மருந்துகளை ஸிஸோய்ட், ஸிஸோடைபல் குறைபாடுகளை சரிசெய்ய பயன்படுத்துகிறார்கள். ஹாலோபெரிடால், குளோஸாபைன், ரைஸ்பெரிடன் ஆகியவை முக்கியமான மருந்துகள். இம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதற்கான வரலாற்றைப் பார்த்துவிடுவோம்.  1950ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு. இங்கு அறுவை சிகிச்சையாளர் ஹென்றி லாபோரைட் ஒரு பிரச்னையில் இருந்தார். அவர், நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவர்களை சற்று அமைதியாக வைத்திருக்க சரியான மருந்த

தனிமையோ தனிமை - ஸிஸோய்ட் மனிதர்களின் அடையாளங்கள்

படம்
ராசிகளுக்கான பொதுபலன்களைப் போல் அல்லாமல் ஸிஸோய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர் ஆட்களின் அறிகுறிகளைப் பார்ப்போமா? குடும்பம், அலுவலகம் என எங்குமே தனியாகத்தான் ஆவர்த்தனம் செய்வார்கள். இவர்களை குடும்ப நிகழ்ச்சி, சமூக குழு என எதிலும் ஒன்றாக சேர்க்க முடியாது. பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்ட மாட்டார்கள். சமூக நிர்பந்தங்கள் அதிகரித்தால் வலியை மட்டும் உணர்ச்சியாக வெளிக்காட்டுவார்கள்.  காதலியுடன் வெளியே சுற்றுவது, டேட்டிங், மெழுகுவர்த்தியுடன் பாய் ஹோட்டலில் நெய்ச்சோறு என கனவுகண்டால் நடக்காது. திருமணம் செய்துகொள்வதிலும் ஆர்வம் இருக்காது. அப்படி வற்புறுத்தினாலும், உடலுறவு சார்ந்தும் பெரிய ஈடுபாடு இருக்காது. உணர்வுரீதியாக வற்றிப்போண கேணி போல இருப்பார்கள். எனவே, காதல், கல்யாணம் என பேசுவது நோ கமெண்ட்ஸ். சிம்ப்ளி வேஸ்ட்தான்.  கடற்கரைக்கு செல்வது, அஸ்தமனச்சூரியன் பார்ப்பது, இனிப்புச்சோளத்தை நண்பனின் காசில் வாங்கி சப்பித் தின்பது என்பதை ஸிஸோய்ட் நோயாளிகள் விரும்பமாட்டார்கள். தங்களது உணர்வை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதும் மிக அரிது.  அப்படியென்றால் என்னதான் செய்வார்கள். அவர்களுக்கான பொழுதுபோக்கை உருவாக்கிக்க

அநீதி வில்லன்களை எதிர்க்கும் பொறுப்பான திருடன் - சிரஞ்சீவி, ராதா

படம்
  தொங்கா  சிரஞ்சீவி, ராதா மற்றும் பலர்  யூசுவலான பழிக்குப்பழி கதைதான். அதையே சீரியல் போல மாற்றி வள வளவென இழுத்து பிறகு சுபம் போட்டிருக்கிறார்கள்.  சிரஞ்சீவி கார்களைத் திருடுவது, பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது என செய்து பிழைக்கிறார். இன்னொரு விஷயம், அவர் தனது குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். திருடர் என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. திருடும் பணத்தில் தனது மெக்கானிக் நண்பனுக்கும், தனக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறார். எவ்வளவு நல்ல மனசு பாருங்க சாரே! ஊரில் இரண்டு பணக்கார ர்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கடத்தல், பிறரை ஏமாற்றுதல் செய்தே சம்பாதித்தது. அவர்களிடம் உள்ள சொத்துக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை கதறவிட நினைக்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான ஃபிளாஷ்பேக் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை முதலிலேயே சொல்லிவிடுவதால், கதையில் புதிய பாத்திரங்களைக் கொண்டு வந்து கதையை இழுக்கிறார்கள்.  வருமானவரித்துறை அதிகாரி விஸ்வநாதன், அடுத்து இன்ஸ்பெக்டர். விஸ்வநாதனை தூண்டிவிட்டுத்தான் ஊரின் இரு பணக்காரர்களையும் பீதி அடைய வைக்கி

சிவன் கோவிலை புனரமைக்கும் இரட்டைத் தலை நாகம் - நந்தி ரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
நந்தி ரகசியம்  இந்திரா சௌந்தர்ராஜன் மின்னூல்  இறைவனை நம்பினால் இன்னல் நீங்கும். அதற்கு மனித முயற்சியும் சிறிது தேவை என்பதை நூலாசிரியர் கூறுகிறார். கதையும், அதற்கான சம்பவங்களும் வலுவாக இல்லை என்பதே நாவலின் பெரும் பலவீனம்.  நாவலை படிப்பதை விட நூலில் உள்ள கோவில் அமைவிடம், ஏன் கோவில் குறிப்பிட்ட கன்னி மூலையில் அமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் துணுக்குகளாக வாசிக்க நன்றாக இருக்கின்றன.  ஊர் பெரிய மனிதர் உடையார். அவர் சிந்தாமணி என்ற பெண்ணை உடலுறவுக்கென காதலியாக சேர்த்துக்கொள்கிறார். இதனால் அவரை திருமணம் செய்த மனைவி திரௌபதி கணவனை விட்டு விலகுகிறாள். அதே ஊரில் தனது மனநிலை சரியில்லாத மகனுடன் தங்கியிருக்கிறாள். ஒருநாள் உடையார் இறந்துவிட, காதலி அழுதுக்கொண்டிருக்க ஊர் பெரியவர்களில் ஒருவர் உடையாருக்கு உரிய மனைவி என்பவள் திரௌபதிதான்.அவளைக் கூப்பிட்டால்தானே உடலுக்கான காரியங்களை செய்ய முடியும் என சொல்லுகிறார். இந்த நேரத்தில் சொத்து தொடர்பான வாக்குவாதம் தொடங்குகிறது. உடையாரின் வழக்குரைஞர் வாதிராஜ், அனைத்து சொத்துகளும் காதலியான சிந்தாமணிக்கு சொந்தம் என்று எழுதிய உயிலைக் காட்டுகிறார். கூடவே கட்டாந்தரையாக கிட