இடுகைகள்

வைரம் திருடிய சிறுமியைக் காக்க ஒன்று கூடும் பெண்கள் படை - ஹார்லி குயின் பேர்ட்ஸ் ஆப் பிரே - மார்கட் ராபி

படம்
  ஹார்லி குயின் – பேர்ட்ஸ் ஆப் பிரே தயாரிப்பு – நடிப்பு – மார்கட் ராபி தமிழ் டப் – ரசிகர்களின் டப்பிங்   இன்று குறிப்பிட்ட காமிக்ஸ் பாத்திரம் ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அதில் நடித்து புகழும் கிடைத்தால், பிறகு அந்த நடிகர் தானே தயாரிப்பாளராக அதே பாத்திரத்தை மேம்படுத்தி நடிக்கத் தொடங்கிவிடுகிறார். இதுதான் இப்போதைய ஆங்கிலப் படங்களின் டிரெண்ட். மார்வெல்லில் ரியான் ரெனால்ட்ஸ் அப்படித்தான் நடித்து வருகிறார். ஹார்லி குயின் படத்தில் மார்கட் ராபி தானே தயாரித்து கதாநாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். கதையில் பெரிய திருப்பம் என்று ஏதும் கிடையாது. படத்தில் ஹார்லியை முட்டாள் கோமாளியான ஜோக்கர், தன் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான். இதனால் மனமுடைந்து போன ஹார்ட்லி, டாக் என்பவரின் வீட்டில் அமைதியாக மறைந்து வாழ்கிறாள். மேலும் ஜோக்கரின் மீதுள்ள காதலை மறக்க முடியாமல் தவிக்கிறாள். அதேசமயம், பார், பப் என சென்று அங்கிருப்பவர்களை எப்போதும் போல வம்புக்கு இழுக்கிறாள். இப்படியிருக்கும்   வாழ்வில்தான் சிறு திருட்டுகளை செய்யும் சிறுமி ஒருத்தி வருகிறாள். இவள் எதேச்சையாக பிக்பாக்கெட் அடிக்கும்போது

எமர்ஜென்சி -இஎம் மருத்துவத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

படம்
  அவசரநிலை மருத்துவம் அடிப்படை அறிவோம் அனைத்து நாடுகளிலும் அவசரநிலை மருத்துவம் உண்டு. இதற்கென தனி தொலைபேசி எண்ணைக் கூட கொடுத்திருப்பார்கள். அமெரிக்காவில் 911 என்றால் சீனாவில் 119, தமிழ்நாட்டில் 108, பிற மாநிலங்களிலும் இப்படி ஏதோ ஒரு எண் வரிசை இருக்கும்.   எமர்ஜென்சி என்பது அவசரமாக நோயாளியைப் பார்த்து அவரது உயிரைப் பாதுகாக்கும் நிலை என புரிந்துகொண்டால் போதும். பிற நாடுகள் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தொடக்க சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வேலை அதிகம். ஆனால் ஆட்கள் குறைவு. எமர்ஜென்சி என்று வரும் நோயாளிகளை முதலுதவி செய்துவிட்டு உடனே அருகில் உள்ள   அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிவிடுவதே வழக்கம்.   இதனால் நோயாளி பிழைப்பாரா என்றால் ஆம்புலன்ஸை ஓட்டுபவரின் திறனைப் பொறுத்தது. நோயாளியும் பிரச்னையை சமாளிக்கத்தான் வேண்டும். எமர்ஜென்சி துறை என்றே தனியார் மருத்துவமனைகள் இப்போது திறக்கத் தொடங்கிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய பிரிவுகள் உண்டு. எப்படி வேலை செய்கிறார்கள் என நீங்களே சென்று பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு.

காதலர்களை போனை மாற்றிக்கொள்ளச் சொல்லும் பெண்ணின் அப்பா! லவ் டுடே - பிரதீப், இவானா

படம்
  லவ் டுடே பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா இசை யு1 இயக்கம் பிரதீப் ரங்கநாதன்   நிகிதா, பிரதீப் என இருவரும் காதலிக்கிறார்கள்.இருவரும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கமாகித்தான் டேட்டிங் சென்று காதலிக்க தொடங்குகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதாக சொல்லிக்கொள்கிறார்கள். கல்யாணம் பற்றி பேசப் போகும்போது நிகிதாவின் அப்பா, இருவரும் ஒரு நாளுக்கு இருவருடைய போன்களையும் மாற்றிக்கொள்ளச் சொல்கிறார். இதனால் ஏற்படும் களேபரங்கள்தான் படம். படத்தை இயக்குநர் பிரதீப் குடும்ப படம் என்றாலும் முழுப்படத்தையும் குடும்ப ஆட்கள் தனித்தனியாக வந்து பார்த்துக்கொள்ளலாம். படம் அப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. 2கே கிட்ஸ்களுக்கான படம். எப்போதும் போனை கையில் வைத்துக்கொண்டே அனைத்து உறவுகளையும் அனைத்து வசதிகளையும் பெற்று நுகரும் ஆட்களுக்கு அதன் வழியாக சந்திக்கும் மனிதர்கள், அவர்களால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி பேசுகிற படம்.   நேரடியாக ஒருவரைச் சந்தித்துப் பேசுவதும், அதன் வழியாக உறவு வளர்வதும், சமூக வலைத்தளங்களின் வழியாக உறவு வளர்வதும் எப்படியானது என்பதை படத்தில் சில இடங்களில் நகைச்சு

அரசு வழக்குரைஞரை சிறையில் தள்ளி நினைவிழப்புக்கு ஆட்படுத்தும் சைக்கோ! - இன்னோசன்ட் டெஃபென்டெண்ட்

படம்
  இன்னொசென்ட் டிஃபென்டண்ட் ஜி சங், உம் கி ஜூன், ஜோ ஜே யூன் தென்கொரிய டிவி தொடர் 18 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்   பார்க் ஜூங்கு( ஜி சங்) என்பவர் அரசு வழக்குரைஞர். இவர் பெரு நிறுவனமான சோமியாங் குழுமத்தின் இயக்குநராக உள்ள சுன்கோ என்பவரின் தம்பி மின்கோவை கொலைக்குற்றத்திற்காக கைது செய்ய முயல்கிறார். ஆனால் இந்த முயற்சியால், பார்க் ஜூங்கு அவரது மனைவியை கொன்றார் என குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கூடுதலாக அவரை சிறை அதிகாரிகள் தனிமை அறையில் போட்டு சித்திரவதை செய்ய அவர் நினைவிழப்பு பிரச்னைக்குள்ளாகிறார். இதனால் வழக்கு தாமதமாகிறது. பார்க் ஜூங்கு நேர்மையான வழக்குரைஞர். எனவே, வழக்குரைஞர் துறையில் அவருக்கு எதிராக பெரும் சதிகள் நடைபெறுகின்றன. அவரது நண்பனே பணத்திற்கும், ஐ.நா கௌன்சிலில் கொரிய வழக்குரைஞர் என்ற பதவிக்கு ஆசைப்பட்டு ஜூங்குவை குற்றவாளியாக்குகிறான். மரணதண்டனை பெற்றுத் தரவும் தயங்குவதில்லை. இந்த நிலையில் பார்க் ஜூங்குவிற்காக பொது வழக்குரைஞராக இளம் பெண் வழக்குரைஞர் வாதாட வருகிறார். அவர் பார்க் ஜூங்குவிடம் ஏற்கெனவே வழக்கில் தோற்றவர். ஆனால் வழக்கில் ஏதோவொன்று ஈர்

சமூகத்தில் தனியாக வாழ்வது சாத்தியமா?

படம்
அகம் புறம்  ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கே.ஒருவர் ஏன் சமூகத்தில் வாழ வேண்டும், அவர் தனியாகவே வாழ முடியுமே? ப. உங்களால் தனியாக வாழ முடியுமா? கே.நான் சமூகத்தில் வாழ்வதற்கு ஒரே காரணம், எனது பெற்றோர் இங்கு வாழ்வதுதான்.. ப. உங்களுக்கு வேலை கிடைத்து, நல்ல வாழ்க்கை அமைந்தால் நீங்கள் சமூகத்தில் வாழ மாட்டீர்களா? நீங்கள் தனியாக வாழ முடியும் என நினைக்கிறீர்களா? நீங்கள் உண்ணும் உணவு, அணியும் உடை ஆகியவற்றுக்காக இன்னொருவரை சார்ந்திருக்கிறீர்கள். இங்கு யாரும் தனியாக வாழ்ந்துவிடமுடியாது. தனியாக இருப்பது என்பது ஒருவர் இறக்கும்போது மட்டுமே நடக்கும். வாழும்போது வாழ்க்கை என்பது உங்கள் அப்பா, அண்ணன், வணிகர், பிச்சைக்காரர் என யாராவது ஒருவரைச் சார்ந்துதான் அமையும். நீங்கள் இந்த உறவுகளுக்குள் உள்ள முரண்பாடுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்குள் எந்த முரண்பாடும் எழவில்லையென்றால், நீங்கள் தனியாக வாழ்வது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. கே. நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த சமூகத்தில் நாம் சுதந்திரமாக இருக்க முடியாதா? ப. நீங்கள் மனிதர்கள் கொள்ளும்

சமூகம் என்பது என்ன?

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. சமூகம் என்பது என்ன? ப. சமூகம் , குடும்பம் என்றால் என்ன என்று பார்ப்போம். இதை நாம் படிப்படியாக கண்டுபிடிக்க முயல்வோம். எப்படி சமூகம் உருவாக்கப்பட்டது, குடும்பம் என்றால் என்ன இதுதான் எனது குடும்பம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.   இந்த அமைப்பில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உடை, நகைகள் என தனியாக உள்ளன. இதைப்போலவே பிறரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். குடும்பம் என்பது ஒருவரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கானது. அப்பா, மகனைப் பாதுகாப்பார். அவரின் சொத்துக்களும் அப்படித்தான் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படும்.   இப்படித்தான் குடும்ப அமைப்பு செயல்படுகிறது. உங்களது குடும்பத்தைப் போலவே தான் பிறரது குடும்பமும் உள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இன்னொரு வெளி நபர் வரக்கூடாது என்பதற்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், அதிக சொத்து, அதிக வாகனங்கள்,   உடைகளை என வாழ்கின்றனர். இவர்கள் பிற குடும்பங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். மேலும், சட்டங்களை

ஒழுக்கம் போதித்தால் குழந்தைகளின் மனம் என்னவாக மாறுகிறது? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஒழுக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு   அரசியல் மற்றும் தொழில்துறை சார்ந்து ஒழுக்கம் என்பது முக்கியமானது. தற்போதையை சமூக அடிப்படையிலும் உளவியல் ரீதியாகவும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. ஒழுக்கம் என்பதை ஒருவர் கடைபிடித்தால் செயலின் இறுதியில் முடிவு எளிதாக கிடைத்துவிடும். இப்படிக் கிடைக்கும் முடிவு எளிதாக இருந்தாலும் இதற்கான அர்த்தம் என்பதை கவனிக்க வேண்டும். அதில்தான் பிரச்னை உள்ளது. ஒழுக்கம் மூலம் முடிவு கிடைத்தாலும் அர்த்தம் என்பதே செயலின் முடிவைத் தீர்மானிக்கிறது. ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில் உள்ள ஆபத்துகளில் ஒன்று, மனிதர்களை விட அமைப்பு முறை முக்கியத்துவம் பெற்றுவிடுவதுதான். ஒழுக்கத்தை பின்பற்றுபவர்களின் இதயம், அன்பை இழந்து வெறுமையாகிவிடும். சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் காரணமாக வருவ தில்லை. சுதந்திரம் என்பது ஒருவர் தன் வாழ்வில் இறுதியாக அடையும் லட்சியம் அல்லது குறிக்கோள் அல்ல. வாழ்வில் சாதிக்க நினைக்க தொலைவில் உள்ள லட்சியம் என சுதந்திரத்தை நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. சுதந்திரம் என்பது ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளும் பாராட்டு சான்றிதழ் அல்லது பிறர் புகழ்ந்து பேசும் வார்த்த