இடுகைகள்

அன்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னைக் காதலிப்பவனை மணக்க நினைப்பவளின் வாழ்க்கையில் வரும் காதலே தெரியாத நல்ல ஆன்மா! மதுமாசம்

படம்
  மதுமாசம் சுமந்த், ஸ்னேகா, பார்வதி மெல்டன் இயக்குநர் - சந்திர சித்தார்த்தா தலைப்பில் தான் சொல்லிவிட்டோமே அதுதான் விஷயம்.  சஞ்சய், ஹம்சா என இருவர்  திருமணம் ஒன்றில் சந்திக்கிறார்கள். அங்கு வரதட்சணை சார்ந்து ஏற்படும் பிரச்னையை சஞ்சய் கல்யாண மாப்பிள்ளையிடம் பேசி தீர்க்கிறான். அதுவே ஹம்சாவுக்கு நல்ல அபிப்ராயத்தை தருகிறது. பிறகு நகருக்கு வந்தால், சஞ்சயின் வீட்டில் தான் ஹம்சா வாடகைக்கு தங்கும்படி சூழல் அமைகிறது.  சஞ்சய்யைப் பொறுத்தவரை சிகரெட் பிடிப்பது, மது அனைத்து அளவாட்டு உந்தி. ஆனால் ஹம்சாவுக்கு இதெல்லாம் ஆகாது. காலையில் எழுந்து கோலம்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் அவள் வழக்கம். அவளுக்கு சஞ்சய் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும்,  பிறருக்கு உதவி செய்யும் பழக்கம் பிடித்திருக்கிறது. அவளுக்கு மெல்ல சஞ்சய் மீது ஆர்வம் வருகிறது. கூடவே இருக்கும் தோழியும் உசுப்பேற்றுகிறாள்.  திருமணம் பற்றி சஞ்சயிடம் ஒருநாள் தைரியமாக சொல்லுகிறாள். சஞ்சய் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. அவனுக்கு சொத்துக்களோடு மாமா பெண் கிராமத்தில் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு ஹம்சா பற்றி பெரிய கருத்தேதும் இல்லை.  திருமண நிச்ச

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது.  இதையும் படத்தில் கிண்டல்

ஆதரவற்றோருக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும் கோவை முருகன்! - நிழல் மையத்தின் அன்னதான சேவை

படம்
  1992ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தோற்றுப்போன சோகத்தில் மூன்றுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தார் அந்த மாணவர். அனைத்தும் தோற்றுப்போன சோகத்தில் அப்படியே சாலைகளில் திரிந்தார். கோவையின் சிறுமுகைப் பகுதயில் பிச்சைக்காரர்களோடு  உட்கார்ந்திருந்தார். படிப்பில் தோற்றாகிவிட்டது. இனி என்ன எதிர்காலம் கண்ணில் உள்ளது என்றும் அவருக்கு தெரியவில்லை.  மனதில் துக்கம் இருப்பதால் வயிறு பசிக்காமல் இருக்குமா? வயிறு கபகபவென எரியத் தொடங்கியது. அங்கு வீடில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருமே சோறு கிடைக்காமல் அதற்காக அங்கு வருபவர்களிடம் கை நீட்டிக்கொண்டிருப்பவர்கள்தான். அப்போது மாணவரைப் பார்த்த கருப்பன் என்ற பெரியவர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். பிறகு அங்கிருந்து சில ஆண்டுகளில் லாரி க்ளீனராக மாறினார். 1998இல் ஆட்டோவை வாடகைக்கு வாங்கி ஓட்டத் தொடங்கினார்.   மனம் வாடி பிச்சைக்காரர்களோடு உட்கார்ந்து சோற்றுக்கு ஏங்கியபோது அந்த மாணவரின் மனதில் இருந்தது ஒன்றுதான். நாம் நல்ல நிலைக்கு வந்தால் இதுபோல வீடில்லாதவர்களுக்கு, மனநிலை தவறியவர்களுக்கு சோறு போட வேண்டும். நம்மால் முடிந்தவர

அப்பாக்களை கொண்டாடும் தினத்தில் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்கள்!

படம்
                தந்தையரை கொண்டாடும் நூல்கள் ! வரும் ஜூன் மாதம் அப்பாக்களை நினைவுகூருவதற்கான தினம் வருகிறது . 20 ஆம் தேதி வரும் இந்த தினத்தை நூல்களைப் படித்து கொண்டாடலாம் அல்லவா ? இதற்காக சில நூல்களை பார்ப்போம் வாங்க ! பெஸ்ட் சீட் இன் தி ஹவுஸ் 18 கோல்டன் லெசன்ஸ் பிரம் எ பாதர் டு ஹிஸ் சன் கோல்டன் பியர் என்று அழைக்கப்படும் ஜேக் நிக்லாஸ் என்பவரின் மகன் எழுதியுள்ள நூல் இது . அவரது தந்தையும் அம்மாவும் இணைந்த நடத்திய குடும்ப வாழ்க்கை , கடைபிடித்த விஷயங்கள் , விதிகள் , கட்டுப்பாடுகள் , பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என ஏராளமான விஷயங்கள் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் . டாட் இஸ் ஃபேட் 2013 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் , எழுத்தாளர் ஜிம் காபிகன் எழுதிய நூல் . இவர் தனது குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர் . இப்படி பிறந்தவர் எப்படி இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்தார் . தன்னை அப்பா எப்படி பார்த்துக்கொண்டார் என்பதையும் , எழுந்த பிரச்னைகளையும் நேர்மையாக எழுதியுள்ளார் . நூலின் பின்பகுதியில் காபிகனின் குடும்ப புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது வாசகர

மருத்துவத்தை வணிகமயமாக்கும் சதியைத் தடுக்கும் மக்கள் மருத்துவரின் கடைசி முயற்சி! - டாக்டர் ரொமான்டிக் 2

படம்
            டாக்டர் ரொமான்டிக் சீசன் 2 பத்து எபிசோடுகள்   இந்த முறை தலைமை மருத்துவமனையின் பவுண்டேஷன் தலைவராக டாக்டர் டூ பதவியேற்கிறார் . மூன்று ஆண்டுகள் அவமானப்பட்டபிறகு அதற்கு பழிவாங்க காத்திருக்கிறார் . அதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கிறது . டோல்டம் மருத்துவமனையை மூடிவிட்டு , அங்கு ஆடம்பர மருத்துவ சேவைகளை வழங்கும் மையத்தை கட்ட நினைக்கிறார் . ஆனால் அதற்கு தடையாக அவரே நியமித்த பேராசிரியர் பார்க் இருக்கிறார் . பார்க்கைப் பொறுத்தவரை அவர் நல்ல மனிதர் அல்ல . ஆனால் சிறந்த மருத்துவர் . எந்த நோயாளியாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தீர்மானித்துதான் ஆபரேஷன் செய்வார் . ஆனால் அவரது இந்த கொள்கை டோல்டம் வந்ததும் செமையாக அடிவாங்குகிறது . அங்கு சீப் டாக்டராக உள்ள டீச்சர் கிம் இவரை சிம்பிளாக தைரியமில்லாத துணிச்சல் இல்லாத கோழை என்று திட்டுவதோடு , பார்க்கும்போதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் கேலிசெய்து விடுகிறார் . இதனால் பார்க்கின் ஈகோ கடுமையாக காயம்படுகிறது . முக்கியமாக அவர் டீச்சர் கிம்மை விட தகுதி குறைவானவர் கிடையாது . ஆனால் கடந்த காலத்தில் முடிவெடுக்க தடுமாறியபோது , நோ

பொய் சொல்லி இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழையும் பொறியாளன், எதிரியை அன்பால் வெல்லும் கதை! - பர்சனல் டேஸ்ட் 2010

படம்
        பர்சனல் டேஸ்ட்  கொரிய தொடர் தொடரை இலவசமாக யூட்யூபில் பார்க்கலாம்.  எழுத்து  கிம் ஹி ஜூ இயக்கம் சன் ஹியூங் சுக், நோ ஜாங் சான்  கொரிய சூப்பர் ஸ்டார் லீ மின் ஹோ நடித்திருக்கிறார். தொடரில் முக்கியமான கதை,  லின் ஹோவின் எம் கட்டுமான நிறுவனத்திற்கும், மிராயே நிறுவனத்திற்கும் நடக்கும் தொழில்போட்டிதான் . லீ மின்ஹோவின் தந்தை மிராயேவில் வேலை செய்தாலும் கூட அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்கியிருந்த வீடு கூட துரோகம் செய்த நண்பரால் கைப்பற்றப்படுகிறது. அப்படி துரோகம் செய்தவர்தான் மிராயே கட்டுமான உரிமையாளர். அவரை பழிவாங்கவேண்டும் என துடிப்பாக இயங்கும் லின் ஹோவுக்கு சரியான வாய்ப்பாக டேம் ஆர்ட் கேலரி திட்டம் வருகிறது. அதில்  போட்டியிடுகிறார்.  அந்த நிறுவனத்தினர் சாஞ்ஜோ எனும் கட்டுமான அமைப்பின் படி கட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் என்ற ரகசிய செய்தி லின் ஹோவிற்கு கிடைக்கிறது. அந்த அமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பேராசிரியர் பார்க் என்ற கட்டுமானக் கலைஞரின் வீட்டுக்கு சென்று ப்ளூபிரிண்டுகளை பார்க்க வேண்டும். ஆனால் அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். கொரியாவில் அவரது

ரூல்ஸ் பேசும் பையனும், விதிகளை காற்றில் பறக்கவிட்டு அன்பாக பழகும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தால்... எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர்

படம்
              எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர் 75 எபிசோடுகள் ரூல்ஸ் பார்த் தேதான் அனைத்தும் செய்யும் பொறியாளரும் , அன்பிற்கு எதற்கு ரூல்ஸ் என அனைவரிடமும் பிரியம் காட்டி வாழு்ம பெண்ணும் ஒரே வீட்டில் இருக்கும்படி இருந்தால்…… அதுதான் ப்ரோ கதை . டெமிர் எராண்டல் ஜப்பான் நாட்டிலிருந்து துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கு வருகிறார் . அவர் வருகைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது . ஜப்பானில் இருந்தபடியே இஸ்தான்புல்லில் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார் . அந்த வீடு அவரின் கடந்த காலத்தோடு தொடர்புடையது . அதனை மனதிற்கு நெருக்கமாக நினைக்கிறார் . அதேநேரம் இஸ்தான்புல்லில் உள்ள ஆர்டிம் என்ற கட்டுமான நிறுவனத்தில் பங்குகளை வாங்கி அதன் மேனேஜராக பதவியேற்கவிருக்கிறான் .    தான் வாழும் வீட்டைப் பார்க்க வருபவனுக்கு அதிர்ச்சி . அவனுக்கு முன்னாலேயே அங்கு யாரோ குடியிருக்கிறார்க்ள . அது யார் என்று பார்க்கும்போதுதான் அவனை இளம்பெண் ஒருத்தி கட்டையாலே தலையில் அடித்து மயங்க வைக்கிறாள் . கண்விழித்துப் பார்த்தால் டெமிரை கைது செய்ய போலீஸ் நிற்கிறது . ஏன் என்று விசாரிக்கும்போதுதான் தெ

குழந்தை வளர்ப்பில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தந்தை! - டாடிஸ் டே கேர் - எடி மர்பி

படம்
                டாடி டே கேர்    Directed by Steve Carr Music by David Newman Cinematography Steven Poster எடிமர்பி நடித்த குழந்தைகளுக்கான படம் . எடி மர்பி அவரது குண்டு நண்பர் பில்லும் விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் . குழந்தைகளுக்கான உணவுகளை அவர்களை கவரும் விதமாக விளம்பரப்படுத்தவேண்டும் . ஆனால் இதில் அவர்களால் வெற்றி பெறமுடியாமல் சொதப்ப , வேலை பறிபோகிறது . வேறு வேலை தேட முயல்கிறார் . அதுவரைக்கும் வீட்டு செலவுகளை எப்படி சமாளிப்பது ? வழக்குரைஞராக இருக்கும் மனைவிதான் இப்போதைக்கு வருமான ஆதாரம் . அதுவரை சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து செலவு செய்து வேலை தேடுவதோடு , குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது . இதே நிலைதான் அவரது நண்பராக பில்லுக்கும் கூட ஏற்படுகிறது . இந்த நேரத்தில் குழந்தைகளை பிளே ஸ்கூலில் சேர்க்க அலைந்து துக்கப்பட்ட நினைவும் அதற்கான கட்டணமும் எடி மர்பிக்கு நினைவுக்கு வருகிறது . அவர் தனது நண்பர் பில்லுடன் ஆலோசித்து நாம் டே கேர் ஒன்றைத் தொடங்குவோம் . தற்காலிகமாகத்தான் . இதை வைத்து குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லுகிறார் . இதன் வ