இடுகைகள்

அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அளவுகோலை மாற்றி காடுகளை அதிகரித்து காட்டும் இந்திய அரசு!

படம்
  இந்தியாவில் அதிகரிக்கும் பசுமைப் பரப்பு! - உண்மை என்ன? அண்மையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவிலுள்ள காடுகளின் பசுமை பரப்பு பற்றிய அறிக்கையை(2021) வெளியிட்டது. கடந்த  ஜனவரி மாதம் 13இல் வெளியான அறிக்கை  காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியது. 2019ஆம் ஆண்டை விட காடுகளின் பரப்பு அதிகரித்து 1,540 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.  இந்திய அரசுக்காக வனத்துறை ஆய்வு நிறுவனம் (FSI), காடுகளின் பரப்பு பற்றிய ஆய்வறிக்கையை தயாரிக்கிறது. இந்த அமைப்பின் தகவல்படி, இந்திய நிலப்பரப்பில் 21.67 சதவீதம் காடுகள் உள்ளன. மொத்தமுள்ள காடுகளின் பரப்பு 7,13,789 சதுர கி.மீ. அறிக்கைப்படி, முந்தைய ஆண்டுகளை விட மாநிலங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்து வருகிறது என வன ஆய்வு அமைப்பு தகவல் கூறுகிறது. 1981ஆம் ஆண்டு வனத்துறை ஆய்வுநிறுவனம் உருவாக்கப்பட்டது.  1988ஆம் ஆண்டு முதல் காடுகளின் பரப்பு பற்றிய அறிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.  சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ”17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான

தொடக்க கல்வியில் தடுமாறுகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு தகவல்

படம்
  கல்வியில் பின்தங்கிய மாநிலமாகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு ஆய்வுத் தகவல் ஒன்றிய அரசு அண்மையில் செய்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள எழுபது சதவீத மாநிலங்களில் கல்வியில் தரம் சரியில்லை. மாணவ, மாணவிகள் பின்தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய அரசு மக்களவையில் சமர்ப்பித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கோவை, மதுரை, திருவள்ளூர், வேலூர் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.   கல்வியை கற்பதில் குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருக்கலாம். அதை சரியாக சுட்டிக்காட்டாமல் வெறும் எண்களை மட்டுமே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.  ஒன்றிய அரசு எப்படி இந்த ஆய்வை செய்துள்ளது? கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ எனும் முறையில் புதிய ஆய்வுமுறை செய்யப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட மாணவர்கள், பள்ளிகளில் சேர்ந்துள்ள சதவீதத்தை வைத்து இந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 9 அன்று  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இதனை கல்வி வல்லுநர்கள் சிலர் எதிர்த்துள்ளனர். பள்ளி க

தொடக்க கல்வியில் சறுக்கும் இந்தியா! - பிரதாம் நிறுவன அறிக்கை!

படம்
pexels தொடக்க கல்வியின் முக்கியத்துவம்!  பிரதாம் தொண்டு நிறுவனத்தின் ஏஎஸ்இஆர் (Annual Survey of Education Report) 2019 அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் மாணவர்களின் தொடக்க கல்வி பற்றி பேசப்பட்டுள்ளது. உலகளவில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில், முதல் எட்டு ஆண்டுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆறு வயதில் மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் முழுமையடைந்து விடுகிறது. எட்டு வயது வரையில் குழந்தைகளின் உணர்ச்சி, அறிவு, ஆற்றல், சமூக கலந்துரையாடல் ஆகிய தன்மைகள் வளர்கின்றன. மேலும் பல்வேறு திறன்களை பள்ளிச்சூழல் வளர்க்கிறது. பள்ளிகளின் நிலை, 4 முதல் 8 வயது வரையிலான மாணவர்களின் திறன்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்களின் பரிந்துரைகள், அனுபவங்கள் அடிப்படையில் , வெளியான கல்வி அறிக்கை, தொடக்க கல்வி பற்றிய நம்பிக்கை அளிப்பதாக அமையவில்லை. ஆய்வுக்குழுவினர், 24 மாநிலங்களிலுள்ள 24 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தனர். இங்குள்ள கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 39,730 மாணவர்களை  (4 முதல் எட்டு வயதுக்குட்பட்ட) ஆய்வு செய்தனர். இதில் 12.7 சதவீத மாணவர்கள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் நேரட