இடுகைகள்

உடற்பயிற்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாரடைப்பைத் தடுக்கும் புதிய வழிகள்!

படம்
                மாரடைப்பைத் தடுப்பது எப்படி ? மாரடைப்பைத் தடுக்க சிபிஆர் , டிபைபிரிலேட்டர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அப்படி இல்லாமலும் நிறைய நுணுக்கங்கள் உள்ளன . கொழுப்பைத் தடுப்பது பொதுவாக ர்த்தத்தில் உள்ள கேடு தரும் எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது . இதனை தடுக்க பிசிஎஸ்கே 9 எனும் மருந்தை பயன்படுத்தலாம் . இந்த மருந்து கல்லீரலில் உள்ள புரதத்தை முடக்கி எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பணியைச் செய்கிறது . அழற்சி இதயத்திலுள்ள ஆர்டரியில் ஏற்படும் அழற்சி , மாரடைப்பை தூண்டுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் . கனாகிநுமாப் எனும் மருந்தை ஆய்வாளர்கள் சோதித்தனர் . 2017 இல் நடைபெற்ற சோதனையில் மாரடைப்பை இந்த மருந்து 24 சதவீதம் குறைப்பது தெரிய வந்துள்ளது தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிற , விலையுயர்ந்த மருந்து என்பதால் இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை . மாரடைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கான வாசலை இந்த மருந்து பற்றிய சோதனை திறந்து வைத்துள்ளது என்று சொல்லலாம் . மாரடைப்புக்கு

உடலை இயக்கும் ஸ்பார்க் பிளக்கைக் கொண்ட இதயத்தின் செயல்பாடு!

படம்
                  உடலே நலமா ? உடலுக்கு சக்தி கிடைக்க உணவு அவசியம் . அதோடு சுவாசிக்க காற்று முக்கியம் . இதெல்லாம் இருந்தாலும் கூட உடலெங்கும் உறுப்புகள் செயல்பட ரத்தம் உடலெங்கு் செல்வதற்கு சர்குலேட்டர் அமைப்பு உதவுகிறது . இப்படி செல்லும் ரத்தத்தில் ஆக்சிஜன் , மினரல்கள் உள்ளன . இந்த ரத்தம் தலை முதல் கால் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது . இதில் தடுமாற்றம் ஏற்பட்டால் உடனே பாதிப்பு ஏற்படும் . உடலின் நரம்புகள் , ஆர்டெரி , காபிலரிஸ் என அனைத்து இடங்களிலும் ரத்தம் பயணிக்கும் தொலைவு தோராயமாக பத்தாயிரம் கி . மீ . என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் . இதய வல்லுநர்கள் பர்ஃபியூஸ் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்த விரும்புவார்கள் . இதுதான் சர்குலேட்டர் அமைப்பைக் குறிக்கிறது . இதில்தான் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் சென்று வருகிறது . இதன்மூலம்தான் சத்துகள் உறுப்புகளுக்கு சென்றுசேர்வதோடு , உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் சரியாக சுரப்பதையும் உறுதி செய்கிறது . செல்களுக்கு ஆபத்து ஏற்படுத்து்ம் கழிவுப் பொருட்களை அகற்றுவதோடு , கார்பன் டை ஆக்சைடையும் உடலிலிருந்து வெளியேற்றுகிறது . உடல் வெப்பநிலையை பர

நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னென்ன?

படம்
              சிறிய பழக்கம் பெரிய மாற்றங்கள் தாகசாந்தி செய்யுங்கள் ! அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏசி ஓடிக்கொண்டே இருப்பதால் பெரும்பாலானோர்க்கு நீர் தேவை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது . தண்ணீரை அதிகம் குடிக்காவிட்டால் உடலில் இயக்கம் குளறுபடியாகிவிடும் . எலும்புகளின் இணைப்பிற்கு உயவு எண்ணெய் போல நீர் பயன்படுகிறது . உடலின் வெப்பநிலையை கட்டுப்பாடு செய்வதற்கும் , செரிமானத்திற்கு்ம் உதவுகிறது . அடிக்கடி கடி நீர் குடிப்பதை மறந்தால் உடல் , மனம் என இணைத்தும் ஒத்திசைவாக இயங்காது . நீண்டகால நோக்கிலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் . இனிமேல் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கினால் கூட அதற்கேற்ப போனில் அலாரம் வைத்துக்கூட நீரை நேரத்திற்கு குடிக்கலாம் . இதில் ஒன்றும் வெட்கப்படவேண்டியதில்லை . நீரை அதிகமாக குடிக்கமுடியவில்லை என்றால் பழரசம் அல்லது மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் . நேரமே எழுங்கள் இது கடைபிடிப்பதற்கு கடினமான பழக்கம் . இரவில் தாமதமாக படுப்பவர்கள் எப்படி சூரிய உதயம் பார்க்கமுடியும் ? தினசரி நடவடிக்கைகளை சரியானபடி அமைத்துக்கொண்டவர்களுக்கு பெரிய பிரச்னை

இயற்கையும் பழக்கத்தை தடுக்கும்! - இயற்கை பேரிடர்கள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை மாற்றுகின்றன

படம்
              இயற்கையும் பழக்கத்தை தடுக்கும் ! தினசரி செய்யும் உடற்பயிற்சி , வாசிப்பு , வேலை என பல்வேறு விஷயங்களை தடாலடியாக மாற்றுவதில் இயற்கைக்கு பெரும் பங்கு உண்டு . வெயில் , மழை , புயல் என வரும்போது ஒருவரின் தினசரி வாழ்க்கை பட்டியல் தடாலடியாக மாறிவிட வாய்ப்புள்ளது . அமெரிக்காவின் சாண்டி புயல் ஏற்பட்டபோது அங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் மாறுதலை சந்தித்தது . அவர்களின் உடற்பயிற்சி இருமடங்கு சரிவைச் சந்தித்தது . 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதிவரை சாண்டி புயல் தாக்குதல் இருந்தது . அதற்குப்பிறகு நியூஜெர்சி , நியூயார்க் ஆகிய நகரங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்தவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக குறைந்துவிட்டது . அதேநேரம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முன்பை விட ஆரோக்கியமான உணவுகளைத் தேடி சாப்பிடத் தொடங்கிவிட்டனர் . புகைப்பிடிப்பவர்களின் அளவு இப்பகுதிகளில் கூடியது . ஏறத்தாழ 17 சதவீதம் . இயற்கை பேரிடர்கள் பொதுவாக ஒருவரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் மாற்றக்கூடியது .. தினசரி வாழ்க்கையை பல்வேறு மாற்றங்களு

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவும் சிம்பிளான சில பழக்கங்கள்!

படம்
            சிகரெட் புகைப்பதை எப்படி நிறுத்துவது ? நடக்கலாம் குதிக்கலாம் ஓடலாம் பொதுவாக சிகரெட் பிடிப்பதற்கான துடிப்பு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஏற்படுகிறது . எனவே அந்த நேரத்தில் எழுந்து நடப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்லது . இதன்மூலம் உடனே சிகரெட் பிடிப்பதற்கான எண்ணம் ஏற்படாது . தினசரி உடற்பயிற்சி செய்வது என்பது மன அழுத்தத்தைப் போக்கும் . புகைப்பதை எழுதுங்களேன் எப்போது புகைப்பிடிக்க தோன்றினாலும் உடனே அதனை நோட்டில் எழுதி வையுங்கள் . இதன்மூலம் எந்த நேரத்தில் சூழலில் புகைப்பது தொடங்குகிறது என்பதை அறியலாம் . கொஞ்சம் பழங்கால டெக்னிக்காக இருந்தாலும் சூப்பரான வெற்றி சூத்திரம்தான் . தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆலோசனை குழுவாக , தனியாக ஆலோசனை செய்யலாம் . இதன்மூலம் பிறரின் அனுபவங்கள் இழப்புகள் ஆகியவை மற்றவருக்கு பாடமாக அமையும் . போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு குழு தெரபி கூட வழங்கப்படுகிறது .. ஒருவர் டூ ஒருவர் என ஆலோசனை செய்வது புகைப்பிடிப்பதில் பெரிய பலனை அளிக்காது . இணையத்தில் பல்வேறு ஆலோசனைகள் கிடைக்கின்றன . இதற்கென தொலைபேசி எண்களும் உ

காதல் துணைவரால் பகிரப்படும் மோசமான பழக்கவழக்கங்கள்! - தடுக்க முடியுமா?

படம்
              உறவுகளை நூடுல்ஸாக சிக்கவைக்கும் பழக்க வழக்கங்கள் ! யாராவது முக்கியமான விஷயத்தை பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் இன்ஸ்டாவில் துபா புயுகிஸ்துனின் புகைப்படத்தை அல்லது பார்க் சின் ஹையின் குறும்பான போஸை ரசித்துக்கொண்டிருக்கிறீர்களா ? அப்படியென்றால் உங்கள் பெயர்தான் பப்பர் . இப்படி பேசும்போது , ஏதாவது கேள்விகளை பிறர் கேட்கும்போது ஜெல்லி சூயிங்கம்மை அசுவாரசியமாக மென்றபடி கட்டைவிரலால் போனை தேய்த்துக்கொண்டிருக்கிறீர்களா ? இப்படி செய்வது நாளடைவில் ஒருவரின் உறவுகளை பாதிக்கும் என்று ஆராய்ச்சியில் கூறியுள்ளனர் . காதலர்களாக உள்ளவர்களி்ல உள்ளவர்களில் ஒருவர் அழைப்பை ஏற்று பேசியபடியே இருப்பது , அல்லது சமூக வலைத்தளங்களில் உலாவியபடியே இருப்பது அவர்களிடையே உறவின் நெருக்கத்தை குறைக்கிறது என்றார் பேய்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் மெரிடித் . இப்படி போனை விரலால் தேய்ப்பதை ஸ்னப்பிங் என்று சொல்லலாம் . இப்படி போனை தேய்த்துக்கொண்டே இருக்கும் பழக்கம் பப்பிங் என்று கூறுகின்றனர் . இந்த ஆய்வு இரண்டு வகையானது . இதில் ஒருவர் போனை அடிக்கடி சோதிப்பது ஆகிய பழக்கமும் இடம்பெற்றது . ஆய

உடற்பயிற்சி எதற்காக?- இதயம், நுரையீரல் செயல்பாடுகளை அறிவோம்.

படம்
                உடலை எப்படி அசைக்க முடிகிறது ? உடலிலுள்ள தசைகள் ஒன்றாக இயங்கினால் மட்டுமே நமது கைகால்களை அசைத்து நகர முடியும் . தசைகள் உள்ளிழுக்கப்படும் தன்மை கொண்டவை . வெளித்தள்ளும் திறன் இல்லாதவை . தசைகள் இழுக்கப்படும்போது உடல் உறுப்பு குறிப்பிட்ட திசையில் நகரும் . இன்னொரு தசை உள்ளிழுக்கப்படும்போது இன்னொரு திசையில் உறுப்புகள் நகரும் . தசைகள் குழுவாக இயங்குவதால் நாம் உடலை அனைத்து திசைகளிலும் நகர்த்திக்கொள்ள முடியும் . வளைக்கலாம் நேராக்கலாம் . முழங்கையின் முன்பகுதி உயர்ம் குறைவாக இருக்கும் பின்பகுதி பைசெப்ஸ் அமைந்துள்ளது . பைசெப்ஸ் தசைகளை ட்ரைசெப்ஸ் தளர்த்துகிறது . முழங்கையை எளிதாக மடக்கும் இணைப்பு எலும்புகளும் இங்குள்ளன . இதனை தெளிவாக பார்க்க கைகளின் அமைப்பு அல்லது பாடி பில்டர்களின் கைகளைப் பார்க்கலாம் . உடற்பயிற்சி காரணமாக அவர்களின் தசை அமைப்புகள் தனியாக தெளிவாக தெரியும் . எதற்காக உடற்பயிற்சி ? உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகள் பெரிதாகவும் வலிமையாகவும் உருவாகும் . புதிய தசை நார்கள் உருவாகும் . எனவே தினசரி நீங்கள் செய்யும் வேலைகளைப் பொறுத்து இருப

சிறிய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் வெற்றி பெறுவது எப்படி?

படம்
              அடோமிக் ஹேபிட்ஸ் ஜேம்ஸ் கிளியர் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் சின்ன பழக்கவழக்கம் எப்படி நமது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை பல்வேறு அறிஞர்களின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமாக 250 பக்கத்தில் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர் . இதனை நான்கு எளிய தத்துவங்களின் வழியாக விளக்கியுள்ளார் . அவை என்ன என்பதை நூலை வாங்கிப் படித்து தெரிந்துகொள்ளுங்கள் . விஷயத்தை இங்கே சுருக்கமாக கூறி விடுகிறோம் . காலையில் நேரமே எழுவது , அன்றைய வேலைகளைத் திட்டமிடுவது , சமூகவலைத்தளங்களில் செலவிடும் நேரத்தை குறைப்பது , சேமிப்பைத் திட்டமிடுவது , குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது , அலுவலகத்தில் உற்பத்தித்திறனை பெருக்குவது ஆகியவற்றை எப்படி உருவாக்கிக்கொள்வது அதனை எப்படி பின்பற்றுவது , அதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன , அதனை தீர்ப்பது எப்படி என நூலாசிரியர் விவரித்துள்ளார் . நூல் பெரிதாக இருந்தாலும் வாசிக்க எளிமையாகவே உள்ளது . ஆங்கிலமு்ம் , கூறும் எடுத்துக்காட்டுகளும் நன்றாக உள்ளன . பழக்க வழக்கங்களைப் பொறுத்தவரை உளவியலும் முக்கிய பங்கு வகிக்கிறது . அதனையும் நூலில் பதிவ