இடுகைகள்

கே டிராமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொட்டால் குற்றங்களைக் கண்டுபிடித்துவிடும் இளைஞனின் அபூர்வ சக்தி!

படம்
  ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   பள்ளியில் படிக்கும் லி ஆன், அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்துபோனவர்களை சோதிக்கிறான். அவனால் இறந்துபோனவர்களை, ஒரு பொருளை, கதவு கைபிடியைக் கூட கையால் தொட்டு காட்சிகளை அறிய முடியும். இதன்படி இறந்துபோனவர்களைப் பற்றிய எண்களைக் கூறுகிறான். அது அவர்களின் உள்ளாடை அளவாக இருக்க பிணவறையில் உள்ள மருத்துவர், டிடெக்டிவாக உள்ள அவனது அக்கா ஜி சூ என இருவரும் அவனை கிண்டல் செய்கிறார்கள். கூடுதலாக அவனது அண்ணன் காங் வேறு அவன் திறமை இன்னும் தேறவில்லை என கிண்டல் செய்கிறார். இப்படித்தான் தொடர் தொடங்குகிறது.   பள்ளிக்கு பெரும்பாலும் போகாமல் வெளியில் சுற்றுபவனுக்கு பெட்ரோல் பங்க் வைத்திருப்பவரின் மகன் டாங் மட்டுமே நெருங்கிய தோஸ்த். தேர்வுகளில் மிக குறைந்த மதிப்பெண் எடுப்பதில்தான் லீ ஆனுக்கும் டாங்கிற்கும் போட்டி. இந்த நிலையில் நாயகி யூன் பாத்ரூமில் உடை மாற்றும்போது யாரோ ஒரு மாணவன் சாவி துவாரம் வழியாக பார்க்கிறான். இதை யூன் கண்டுபிடித்து அவனை பிடிக்க வரும்போது, அவனைப்போலவே ஹூடி போட்டுக்கொண்டு நடந்து செல்லும் லீ ஆ

கிராஃபிக் டிசைனரைக் காதலிக்கும் பூனை இளைஞன்! மியாவ் தி சீக்ரெட் பாய் - கே டிராமா

படம்
  மியாவ், தி சீக்ரெட் பாய் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   இந்த கொரிய தொடர், எப்போதும் கொரிய தொடர்களில் உள்ள வன்முறை, பள்ளி சித்திரவதை,  பெற்றோர் செய்யும் பாலியல் வன்முறை, அடி உதை என ஏதும் இல்லாதது. சற்று நீளமாக இருந்தாலும் நிதானமாக பார்த்தால் மெல்ல அதன் தன்மைக்கு பழகிவிடுவீர்கள். நகரத்தில் உள்ள மனிதர்களால் தாங்க முடியாத தனிமைக்கு ஆதரவாக செல்லப்பிராணிகள் இருக்கிறார்கள். உண்மையில் மனிதர்களை விட செல்லப்பிராணிகளை காதலிக்கும் தனிநபர்களே அதிகமாகி வருகிறார்கள். இதைபற்றிய கற்பனைக் கதைதான் மியாவ், எ சீக்ரெட் பாய். ஒருவர் தன்னோடு சந்தோஷத்திலும் துக்கத்திலும் இருக்கும்போது கூடவே ஆதரவாக இருக்கும் பூனை ஒன்றை காதலிக்க தொட்ங்கினால் எப்படியிருக்கும்? அந்த பூனை, வளர்ப்பவரின் உடல் மணம் கொண்ட ஏதாவது பொருள் உடலில் பட்டாலே மனித உருவம் கொள்கிறது. தன்னை வளர்ப்பவரை அதீதமாக காதலிக்கத் தொடங்குகிறது. பாதுகாக்கத் தொடங்குகிறது. தொடரில் வரும் கிராஃபிக் டிசைனர் பெண்ணான கிம் சோல் ஆ, தனியாக அறையில் வாழ்ந்து வருகிறாள். அதே நகரில் அவளது கவிஞரான அப்பா, தனியாக உட்கார்ந்து நூல்களை படித்தபடி காலத்தை கழிக்கிறார். ஆனால்,

ராணுவத்தில் உள்ள சூது செய்யும் கொலைகாரர்களை பழிவாங்கும் வழக்குரைஞர்கள்!

படம்
  மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் - கே டிராமா   மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் கொரிய டிராமா தொடர் ராக்குட்டன் விக்கி ஆப்   கொரிய ராணுவத்தில் நடைபெறும் ஊழல்கள், அதற்கான சூத்திரதாரிகளை இரு ராணுவ வழக்குரைஞர்கள் சேர்ந்து சுளுக்கெடுப்பதுதான் பதினாறு எபிசோடுகளின் கதை. நாயகன் பெயர்தான் டாபர்மேன். அப்படியல்ல டோ பே மன். அவனது எதிரிகள் அவனது பணத்திற்கான விசுவாசத்தைப் பார்த்து அவனை டாபர்மேன் என்ற அழைத்து மகிழ்கிறார்கள். ஒருகட்டத்தில் நாயகன் , தன்னைப் போலவே உள்ள டாபர்மேன் நாயை வளர்க்கிறார். தொடரின் தலைப்பு வந்துவிட்டதல்லவா? பள்ளியில் படிக்கும் டோ பே மன்னின் பெற்றோர் ராணுவத்தில் வழக்குரைஞர்களாக இருந்து கார் விபத்தில் மர்மமாக இறந்துபோகிறார்கள். அதிலிருந்து ராணுவம் , சேவை என்றாலே கசப்பாக இருக்கிறது டோவுக்கு. எனவே, ராணுவ சேவை வயது வந்தாலே தன்னை ஏதாவது குற்றங்களில் ஈடுபடுத்திக்கொண்டு பள்ளியில் இருந்து வெளியே வந்துவிடுவான். ஆனாலும் கூட வழக்குரைஞர் தேர்வில் விரைவில் வெற்றி பெற்றுவிடுகிறான். ஆனால், பள்ளி சிறுவனான அவனை எந்த நிறுவனமும் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. அப்போது அவனுக்க

கடற்கரை நகரத்தில் காதலனின் அக்காவைக்கொன்ற குற்றவாளியைக் கண்டறியும் இளம்பெண்! சம்மர் ஸ்ட்ரைக்

படம்
  சம்மர் ஸ்ட்ரைக் 2022 கே டிராமா பனிரெண்டு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்     த்ரோ தி டார்க்னெஸ் என்ற கிரைம் தொடர்பான கே டிராமா பனிரெண்டு எபிசோடுகளைக் கொண்டதுதான். கொரிய டிவி தொடர்கள், இப்போது பதினாறு எபிசோடுகளில் இருந்து பனிரெண்டாக குறையத் தொடங்கியுள்ளன. இது கொஞ்சம் நல்லவிஷயம்தான். சம்மர் ஸ்ட்ரைக்கும் அந்தவகையில் ஆறுதலைத் தருகிறது. சக மனிதர்களால் மோசடிக்கு உள்ளான இருவர், கடற்கரை குறு நகரம் ஒன்றில் சந்தித்து காதல்வயப்படுவதுதான் முக்கியமான மையப்பொருள். ஆனால், அதைமட்டுமே சுவாரசியமாக காட்டுவது கடினம். எனவே, அதில் கொலைக்குற்ற வழக்குகளை சேர்த்திருக்கிறார்கள். மோசமில்லை. இந்த தொடரைப் பார்க்க நன்றாகவே இருக்கிறது. வெறும் காதல், பொறாமை என்று இல்லாமல் நிறைய நெகிழ்ச்சியான தருணங்கள், மனிதர்களின் பொறுத்துக்கொள்ள முடியாத சுயநலம், சொத்துக்களை பெற தாழ்ந்துபோகும் மனித குணம், அத்தனையையும் தாண்டி நிற்கும் அன்பு, மனிதநேயம் என தொடர் வசீகரமாக உள்ளது. பல்வேறு பாதிப்புகளை அடைந்த துன்பங்களை அனுபவித்த மனங்கள் ஒன்றாக சேர்ந்து இன்பம் காண்கின்றன. ஒருவருக்கு நேரும் பிரச்னைகள் பிறர் அந்நியமாக கருத

கொரிய காவல்துறையில் முதல்முறையாக புரொஃபைல் செய்வதை தொடங்கும் இரு அதிகாரிகளின் போராட்டம்!

படம்
  த்ரோ தி டார்க்னெஸ் - கே டிராமா த்ரோ தி டார்க்னெஸ் கே டிராமா 12 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி   எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்வதில் உள்ள மகிழ்ச்சிக்கென அதை செய்யும் சைக்கோ, சீரியல் கொலைகாரர்கள் கொரியாவில் உருவாகிறார்கள். அவர்களை கொரிய காவல்துறை எப்படி எதிர்கொண்டது. அங்கு குற்றங்களை புரொஃபைல் செய்யும் பிரிவு எப்படி தோன்றியது, அதற்காக இரு காவல்துறை அதிகாரிகள் என்னென்ன சிரமப்பட்டனர் என்பதை கூறும் தொடரிது. தொடர் முடியும்போது, பிஹேவியர் சயின்ஸ் பிரிவை உருவாக்கியவர்களில் ஒருவரான சாங், தங்களது பழைய அலுவலக அறையை வெறுமையான விரக்தியான கண்களோடு பார்த்துக்கொண்டிருப்பார். அந்தக் காட்சியோடு தொடர் நிறைவுபெறும். த்ரோ தி டார்க்னெஸ் தொடரைப் பார்க்கும் பார்வையாளர்களும் கூட அப்படித்தான் மாறிப்போகிறார்கள். அந்தளவு குற்றம், குற்றத்தின் தீவிரம், ரத்தம், வெட்டப்பட்ட உடல், கொலை செய்த காரணம், வக்கிரமான மனங்களின் நியாயப்படுத்தல்கள், விசாரணைக் காட்சிகள் உள்ளன. அமெரிக்க புரொஃபைலரான ஜான் டக்ளஸ் எழுதிய மைண்ட் ஹண்டர் என்ற நூலின் கொரிய மொழிபெயர்ப்பை தொடரில் காட்டுகிறார்கள். அந்த நூலை அடிப்படையாக வ

புற்றுநோயால் அவதிப்படும் ஹோட்டல் அதிபரின் பேரனாக நடிக்கும் நாடக நடிகர்! - கர்டைன் கால்

படம்
  கர்டைன் கால் - கே டிராமா   கர்டைன் கால் கே டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   நாக்வோன் ஹோட்டல் தலைவரான ஜேயும் என்ற பெண்மணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாத கெடு விதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அவர் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு வந்து ஹோட்டல் வைத்து வெற்றிபெற்று பணக்காரர் ஆனவர். வடகொரியாவில் அவருக்கு கணவரும், யுன் ஜூன் என்ற ஆண் குழந்தையும் உண்டு. அவர்களை தென்கொரியாவுக்கு கூட்டி வர நினைக்கிறார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பேரன் முன் சாங்கையேனும் கூட்டி வந்து நல்ல முறையில் வாழவைக்க நினைக்கிறார். இதற்காக அவரது மேனேஜர் முன் சாங்கை தேடுகிறார். முன் ஜாங் கிடைக்கிறார். ஆனால்,   அவர் வன்முறையான பணத்திற்கு எதையும் செய்யும் அடியாளாக இருக்கிறார்.   இதனால் மிரண்ட மேனேஜர் நாடக நடிகர் ஜேனை காசு கொடுத்து பேரனாக நடிக்க ஏற்பாடு செய்கிறார். அவரும் காசுக்காக நடிக்க ஒப்புக்கொள்கிறார். அவரது நாடகஅரங்கு தோழியான யுன் ஹூய்யும் சேர்ந்து கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். இவர்கள் போலியானவர்கள் என ஹோட்டல் தலைவர் பெண்மணி, அவரது பேரன், பேத்திகள் கண்டுபிடித்தார்களா என்ப

கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!

படம்
  பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் கே டிராமா   -16 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   எல்லாவற்றையும் பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால் காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின் களேபர விளைவுகள்தான் கதை. இந்த கே டிராமா, பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின் பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக் கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள்.   இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார். டேட்டிங் ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து குழந்தை பெற்றாலே சாதனை என நினைக்கும் உண

இருபது ஆண்டுகள் கிரையோஜெனிக் கேப்சூலில் வைக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்து வந்தால்... மெல்டிங் மீ சாஃப்ட்லி

படம்
  31.5 டிகிரி தாண்டினால் ஆபத்து  மெல்டிங் மீ சாஃப்ட்லி - கே டிராமா மெல்டிங் மீ சாஃப்ட்லி கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   டிபிஓ என்ற டிவி சேனலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிப் பிரிவில் மா டோங் சான் என்ற இளைஞர் வேலை செய்கிறார். புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். இவர் கிரையோஜெனிக் மூலம் தன்னை 24 மணிநேரம் உறைய வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார். அதை டிவியில் ஒளிபரப்புவதுதான் பிளான்.   இவருடன் ஓ மிரான் என்ற இளம்பெண்ணும் காசு கிடைக்குமென பரிசோதனைக்கு சம்மதிக்கிறாரர். ஆனால், இந்த சோதனை துரதிர்ஷ்டவசமாக 20 ஆண்டுகள் வரை நீண்டுவிடுகிற்றது. 1999 தொடங்கி 2019இல் தான் இருவரும் கண் விழிக்கிறார்கள். டிவி தொடர் அவர்களது வாழ்க்கை, கொடுத்த வாக்குறுதி, குடும்பத்தினரின நிலை என பல்வேறு விஷயங்களை உணர்வுப்பூர்வமாக பேசுகிறது. கிரையோஜெனிக் அறிவியல் சோதனை, அதை முடக்கும் சர்வதேச சதிகள் என கதை சென்று சற்று ஆவலை ஏற்படுத்துகிறது. ஆனால், கதை திடீரென யூ டர்ன் போட்டு திரும்பி காதல் என்ற பைபாஸ் சாலைக்கு மாறி தேங்கி விடுகிறது. அதிலும், எந்தளவு ஆழமாக இருக்கிறது என்று ப