இடுகைகள்

சென்னை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருடைய சிபாரிசு நீங்க? - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
3 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலந்தானே? தினகரனில் இணைந்துவிட்டேன். இங்கு சம்பளக்கணக்கு தொடங்குவதற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. தலித் முரசு இதழில் வரவேண்டிய பாக்கி 2.796 ரூபாய் உள்ளது. இதற்காக அவர்களது அலுவலகம் சென்றேன். நீங்கள் எங்கள் கணினிகளை உங்களது உபயோகத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றார் தலித் முரசு புனித பாண்டியன். இதைக் கண்டுபிடித்து சொன்னதற்காக நெடுஞ்செழியன் பெண் உட்பட பலரது பெயரையும் சொன்னார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். கொடுத்த  பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். இவர்களுக்கு வேலை ஆகவேண்டுமென்றால், என்ன சாதி என்பது வரை கேட்டுக்கொண்டு இளிப்பார்கள். தேவையில்லை என்றால் மயிரே என்று மதித்துப் பேசுவது. சமூகநீதியே இவர்களின் கரங்களில்தான் இருக்கிறது. என்னை கோபப்படுத்திப் பார்க்க முயன்றார்கள். நான் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த வில்லை. இந்த யுக்தியை எல்லாம் வேலை செய்த காலத்திலேயே பார்த்தாகிவிட்டது. முத்தாரத்தில் என்னைப் பார்த்து பேசுகிற பலரும், யாருடைய சிபாரிசு என குறுஞ்சிரிப்புடன் கேட்கிறார

சுத்தம் பார்த்தால் சோறு கிடைக்காது! - அன்புள்ள அப்பாவுக்கு...!

படம்
pexals 2 அன்புள்ள அப்பாவுக்கு, அன்பரசு எழுதுவது.  நலமாக இருக்கிறீர்களா? தங்களுக்கு தொண்டைவலி என்று அம்மா பேசும்போது சொன்னார். சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை அருந்துங்கள். சரியாகிவிடும். இங்கு அலுவலக சூழல் பரவாயில்லை. உடல்நிலை ஒத்துழைக்க வேண்டுமே என்பதுதான் இறைவனிடம் என் வேண்டுதல். கொரியர் அனுப்புவதில் நான் செய்த பிசகு, நீங்கள் இருமுறை அலைவது போல ஆகிவிட்டது. சான்றிதழ்களை வங்கிக்கு கொடுத்தால்தான் சம்பளக் கணக்கு தொடங்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட பதற்றம்தான் இப்பிரச்னைக்கு காரணம்.  சென்னையில் சமாளித்து வாழ்வதற்கான சம்பளத்தை இந்நிறுவனத்தில் நான் பெறவில்லை. தடுமாற்றம்தான். அதிலும் ஒரு மகிழ்ச்சி, நீங்கள் அனுப்பி தந்த 5 ஆயிரம் ரூபாய்தான். எனக்கு பெரும் உதவியாக இருந்தது. மதியம் தேடிப்பிடித்து வெரைட்டி ரைஸ் சாப்பிடுகிறேன். சுத்தம் என்பதை மறந்துவிட்டால் மட்டுமே இங்கு சாப்பிட முடியும். இரவு வீடு திரும்ப 8.30க்கு மேல் ஆகிறது. எதையும் கவனமாக படிக்க முடியவில்லை. சனியன்றும் அலுவலகம் உண்டு. அன்று அரைநாள் வேலை. தலித் முரசு பத்திரிகையில் எனக்கு வரவேண்டிய

சட்டங்களை காலில் மிதிக்கும் இணைய நிறுவனங்கள்!

படம்
இது சென்னை பற்றிய கட்டுரைதான். இங்குள்ள நிறுவனங்கள் சாலை கான்ட்ராக்டர்களை கையில் போட்டுக்கொண்டு இரவில் சாலைகளைத் தோண்டி இணைய கேபிள்களை புதைத்து குழிகளைக் கூட மூடாமல் சென்றுவிடுகின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மின்கம்பத்தில் தொங்கிய கேபிள்களைப் பார்க்காமல் பைக்கில் சென்றவர் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனாலும் சென்னை பெருநகர மாநகராட்சி எந்த விதிகளையும் மாற்றாமல் கள்ள மௌனம் காக்கிறது. யாருக்காக என்று இன்று மக்களுக்கும் தெரிகிறது. புகார் அளிப்பது எப்படி? சென்னையில் சாலையில் நீங்கள் குழிதோண்ட வேண்டுமெனில், அதற்கு மாநகராட்சி பொறியாளரிடம் அனுமதிக் கடிதம் பெறவேண்டும். 1913 என்ற எண்ணுக்கு அனுமதி பெறாத இதுபோன்ற செயல்பாடுகளைக் குறித்து புகார் தெரிவிக்கலாம். முறைப்படி நடவடிக்கை எடுத்தால் மாநகராட்சி உதவி பொறியாளர், அல்லது அவரின் கீழேயுள்ள பொறியாளர் அந்த இடத்தை வந்து பார்வையிடுவது அவசியம். புகார்களை நம்ம சென்னை அப்ளிகேஷன் வழியாக அளிக்கலாம். இதுகுறித்து அறிவுறுத்தல்கள் சென்னை கார்ப்பரேஷன் வலைத்தளத்தில் உள்ளது. முப்பது நாட்களுக்கு முன்பா

விழிபிதுங்கும் சென்னை! - அதிகரிக்கும் ட்ராஃபிக்

படம்
போக்குவரத்து நெரிசல் காரணம் என்ன? சென்னையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பள்ளி தொடங்கவிருக்கிறது. அப்போது இன்னும் நெருக்கடி அதிகரிக்கும். அதுகுறித்த டேட்டாவைப் பார்ப்போம். பீக் அவரில் தோராய வேகமாக செல்லும் வாகனங்களின் வேக அளவு டெல்லி - 11 கி.மீ, பெங்களூரு - 7 கி.மீ, சென்னை - 16 கி.மீ. சென்னையில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட வேண்டும். இப்போதைக்கு 2 லட்சம் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் தேவை. நகரில் ஓடும் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்தால் 4,235 கி.மீ. தூரம் கச்சிதமாக நிறுத்தமுடியும். சென்னையில் 8 லட்சத்து 47 ஆயிரம் கார்களும், 42 லட்சம் பைக்குகளும் உள்ளன. கார்களை நிறுத்த தேவைப்படும் இடம்  135 சதுர அடி. என்ன செய்யலாம்? வாகனங்களின் வேகத்தை சீராக பராமரிக்க வேண்டும். சாலை கட்டமைப்புகளை மாற்றறலாம். மெட்ரோ ரயில் சேவைகள் நகரின் கடைசி முனை வரைக்குமான போக்குவரத்துசேவைகள் பொதுப்போக்குவரத்தை மேலும் நவீனப்படுத்துதல் பார்க்கிங் நிறுத்த அமைப்புகளை சீரமைத்தல் நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா

கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம்! சென்னை கார்ப்பரேஷன் ஐடியா

படம்
IndiaSpend கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம் ! சென்னை குடிநீர் வடிகால் வாரியம் (CMWSSB) கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீர் தயாரிக்கலாம் என்ற திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்துள்ளது.  பருவமழை தவறியதாலும், முறையான மழைநீர் சேகரிப்பு வசதிகள் கடைபிடிக்காததும் சென்னையின் குடிநீர்ப் பிரச்னையை அதிகரித்துள்ளது. மழைநீர் பொய்த்ததால் சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் வற்றிவிட்டது. இந்நிலையில் எதிர்வரும் கோடையை எப்படிச் சமாளிப்பது? இதற்குத்தான் குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீரை சுத்திகரித்து தினசரி, 260 மில்லியன் லிட்டர் நீரை குடிநீராக வழங்கும் திட்டத்தை அரசுக்கு அளித்துள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. குடிநீர் கிடைக்குமா? இத்திட்டத்தின் மூலம் பெருங்குடி ஏரி, நாராயணபுரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, போரூர் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, ரெட்டி ஏரி ஆகிய நீர்நிலைகள் பயன்பெறவிருக்கின்றன. தற்போது நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல

காற்று மழை வெயில் வெளிச்சம் பகுதியில் அன்பரசின் கடிதங்கள்

கோமாளிமேடை ஊமையின் புல்லாங்குழல் காற்று மழை வெயில் வெளிச்சம் ஹெரிடேஜ் தமிழன் [2014]                       ஊமையின் புல்லாங்குழல்                     ·          அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள் ·          தொகுப்பாசிரியர் : அரசமார்      என் சகோதரர் மூலம் அன்றுதான் முருகானந்தம் ராமசாமி அவர்களைச் சந்தித்தேன். அப்போது எவ்வளவு தூரம் அபத்தமாக பேச முடியுமோ அவ்வளவு பேசினேன். அப்போது திருப்பூரார் அருகிலிருந்தார். முகவரி பெற்றுக்கொண்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. எந்த விஷயத்தையும் பேசுவதற்கு இன்றுவரையில் என் சமவயது தோழர்கள் யாரும் கிடையாது. எந்த ஒரு விஷயம் குறித்தும் தெளிவான பார்வை, தான் சார்ந்த கட்சி குறித்த நேர்மையான நிலைப்பாடு, எந்த விஷயம் குறித்தும் தயக்கமில்லாமல் முருகுவிடம் உரையாடலாம். பல விஷயங்கள் பேச்சில் வந்தாலும் நான் முடிந்தவரை கலைகள் குறித்து பல பகிர்தலை நிகழ்த்த மேற்கொள்ள முயற்சித்தேன்.                                                      22.9.2012 இரா. முருகானந்தம் அவர்களுக்கு,      அன்பரசு எழுதுவ